Wednesday, 30 June 2010

செராமிக் மலர்கள்

இந்த செராமிக் பூக்கள் பார்க்கும்போதே நிஜமான பூக்களைப்பார்ப்பதுபோல பிரமிப்பை உண்டாக்கும். அந்த அளவிற்கு இவற்றை கலை நுணுக்கத்துடன் வடிவமைக்கலாம். முதல் முறை செய்யும்போது விரல்களுக்கு சிறிது தடுமாற்றமிருக்கும். அதன் பின் விரல்கள் பழகி வளைந்து கொடுக்கும்.

இதற்குத் தேவையான பொருள்கள்:

1. செராமிக் பவுடர் [ இது கைவினைப்பொருள்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.]

2. Glue bottle [இதுவும் இதே கடைகளில்-செராமிக் பவுடரில் கலக்க என்று கேட்டால் கிடைக்கும்]

3. Dyes- [ பல வண்ணங்களில்]

4. சின்னதும் பெரியதுமான மெலிசான கம்பி போன்ற ஒயர்கள்

5. Cutters [ பல வடிவங்களில், சைஸ்களில்]

6. மகரந்தப்பூக்கள் பல வண்ணங்களில்

7. scrapper

8. கம்பியைச் சுற்ற மெல்லிதான துணி போன்ற பச்சை பேப்பர்கள்.

செய்முறை:

செராமிக் பவுடர் இரண்டு பங்கு, கோந்து 1 பங்கு என்று எடுத்துக்கொண்டு சப்பாத்தி மாவு போல நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். எந்த கலர் வேண்டுமோ அந்த dye-ஐக் கலந்து மாவை பிசைய வேண்டும்.
பின் மாவை ஒரு அரை நெல்லியளவு உருட்டி ஒரு பென்சிலால் உள்ளே சிறு துவாரம் செய்யவும். பின் கத்தரிக்கோலால் 6 இடங்களில் கட் செய்யவும். அவை ஆறு இதழ்களாகும். ஒவ்வொரு இதழையும் ஆள்காட்டி விரலாலும் பெரு விரலாலும் பிடித்து தட்டையாக்கினால் மெல்லிய இதழ்கள் உண்டாகி பூ உண்டாகும். பின் ஒரு பச்சைக்கம்பியை எடுத்து நுனியில் பசை தடவி மேலிருந்து உள்ளே நுழைத்து பின் பசை மேல் மகரந்தம் வைக்கவும். 


செய்து முடித்த பின் பூ இப்படி இருக்கும்.

சற்று பெரிய பூக்களுக்கு இதழ்களைத் தனியே செய்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ரோஜா பூக்களை செய்யும்போது
 5 சிறிய இதழ்களும் 6 பெரிய இதழ்களும் கட் செய்து scrapper-ன் அடிபாகத்தால் மெலிசாக்கவும்.

ஒரு கம்பியில் செராமிக் கலவையில் ஒரு சிறு உருண்டை எடுத்து மொட்டுபோல அந்தக் கம்பி நுனியில் பதிக்கவும். பின் முதல் இதழை மட்டும் முழுவதுமாக பசை தடவி அந்தக்கம்பியைச் சுற்றிலும் ஒட்டவும். பின் ஒவ்வொரு இதழிலும் அதன் கீழ்ப்பக்கம் மட்டும் பாதியளவில் பசை தடவி ஒவ்வொன்றாக கம்பியைச் சுற்றி ஒட்டிக்கொண்டே வரும்போது அழகிய ரோஜாவாக அது உருப்பெறும்.

கார்னேஷன் போன்ற மலர்களுக்கு அதற்கென்றே தனித்தனியாக cutters உள்ளன. அவற்றை வைத்து கட் பண்ணி இதே செய்முறையையும் நம் கற்பனைகளையும் சிறிது கலந்து மலர்களை உருவாக்கலாம். நான் உருவாக்கிய செராமிக் மலர்க்கொத்து இதோ!!

46 comments:

ஸாதிகா said...

கொள்ளை அழகு அக்கா!

GEETHA ACHAL said...

ஆஹா...எவ்வளவு பொருமை...எவ்வளவு அழகு...ஓவ்வொரு பூக்களும் உங்கள் கைத்திறனில் ஜொலிக்கின்றது...சூப்பராக பூக்கொத்து...இதில் இருந்து ஒரு பூவினை எடுத்து கொண்டேன்....

Ahamed irshad said...

Super....

ஹுஸைனம்மா said...

அழகா இருக்குக்கா!!

athira said...

மனோ அக்கா.. சூப்பராக இருக்கு பூக்கள். எனக்கு இப்படிப் பூக்கள் செய்வதில் விருப்பம் அதிகம்.

நேரம் கிடைக்கும்போது முயற்சி செய்கிறேன்.

ஹைஷ்126 said...

ஊட்டி மதுரா கோட்ஸ் மலர் கண்காட்சியில் பார்த்து போலவே இருக்கிறது. சூப்பர்.

பி.கு: ஊட்டி செயற்கை மலர் கண்காட்சி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது:)

Menaga Sathia said...

வாவ்வ் ரொமப் அழகாயிருக்கு,பாராட்ட வார்த்தையில்லை....

selvieam said...

aunty simply superb.

vanathy said...

Akka, very very beautiful. I will try to do these cute flowers.

Chitra said...

SUPERB! Awesome! :-)

ஜெய்லானி said...

இது மிகவும் பொருமையாளர்களுக்கே வரும் கலை. அசல் எது போலி எதுன்னே கண்டு பிடிக்க முடியல ரியலா இருக்கு.
சூப்பர்...
வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

பூத்த பூக்களாக இருந்தாலும் சரி, செய்த பூக்களாக இருந்தாலும் சரி. அழகு அழகு தான்.

இமா க்றிஸ் said...

அக்கா, அற்புதம் உங்கள் கைவண்ணம்.

Asiya Omar said...

மனோ அக்கா அழகோ அழகு.பாராட்டுக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

சூப்பரா இருக்குங்க.ரொம்ப பொறுமையா செஞ்சுருக்கீங்க.

மங்குனி அமைச்சர் said...

நல்ல திறமை உங்களுக்கு

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

ரசித்துப் பாராட்டியதற்கு ஒரு பூவென்ன, பூங்கொத்தையே எடுத்துக்கொள்ளுங்கள் கீதா!!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி இர்ஷாத்!

மனோ சாமிநாதன் said...

மனமார்ந்த நன்றி ஹுஸைனம்மா!

மனோ சாமிநாதன் said...

செய்து பாருங்கள் அதிரா! ரசனையுணர்ச்சி தான் ரொம்பவும் முக்கியம். அதுவும் ஆர்வமும் இருந்தால் தன்னாலேயே பூக்கள் அழகாக விரல்களில் வந்து விடும்!!

மனோ சாமிநாதன் said...

அன்பு சகோதரர் அவர்களுக்கு!

பாராட்டிற்கு இனிய நன்றி!!
ஊட்டி செயற்கை மலர்க் கண்காட்சி விபரம் புதியதாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் நடக்குமா இந்தக் கண்காட்சி?

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு இதயங்கனிந்த நன்றி மேனகா!!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice compliment Selvi!

மனோ சாமிநாதன் said...

Thank you for the nice words Vanathy! Do try these flowers when you get enough time!!

மனோ சாமிநாதன் said...

thank you very much for the appreciation Chithra!!

மனோ சாமிநாதன் said...

அன்பு சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு!
இனிய பாராட்டிற்கு என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்பு சகோதரர் தமிழ் உதயம் அவர்களுக்கு!
‘அழகு அழகுதான்’ என்று ரசித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

ரசித்து மனந்திறந்து பாராட்டிய அன்பு வார்த்தைகளுக்கு நன்றி இமா!!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி ஆஸியா!!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் அன்புப் பாராட்டிற்கும் இனிய நன்றி, அமைதிச்சாரல்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி அமைச்சர் அவர்களே!

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் .> ஜெய்லானி <
################

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு!

எனக்கு விருது கொடுத்துள்ளமைக்கு என் மகிழ்வையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்!

Krishnaveni said...

Amazing art work....gorgeous flowers...lovely Madam

'பரிவை' சே.குமார் said...

அழகான பதிவு அம்மா. ரொம்ப நல்லாயிருக்கு.

ஜெயா said...

அழகான கை வண்ணம்...

தூயவனின் அடிமை said...

ஒவ்வொருவரும் ஒரு கை தொழிலை கற்று கொள்வது நன்று. அருமையாக உள்ளது சகோதரி.

மனோ சாமிநாதன் said...

Dear krishnaveni!

Thank you very much for the nice compliement!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள குமார் அவர்களுக்கு!

அன்பான பதிவிற்கு மனமார்ந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுப்பதிவிற்கு அன்பு நன்றி ஜெயா!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள தூயவன் அவர்களுக்கு!

ரசித்துப் பாராட்டியதற்கு அன்பு நன்றி!!

Mahi said...

நிஜ பூக்கள் போலவே இயற்கையா இருக்கு! அருமை..பொறுமையா செய்திருக்கீங்க.

மனோ சாமிநாதன் said...

ரசித்தப் பாராட்டியதற்கு அன்பு நன்றி மகி!!

Kanchana Radhakrishnan said...

சூப்பரா இருக்கு.ரொம்ப பொறுமையா செஞ்சுருக்கீங்க

இமா க்றிஸ் said...

உங்கள் இந்த இடுகையைப் பார்த்த நாள் முதல் செராமிக் பொடி தேடுகிறேன். கிடைக்கவேயில்லை.