குறிப்பு முத்துக்களில் மறுபடியும் அழகுக் குறிப்புகளைத் தரலாமெனத் தோன்றியது. அதுவும் இந்த மாதிரி கோடை காலத்தில் தலையில் சூடு ஏறாமல் குளிர்ச்சியாக எப்போதும் வைத்துக்கொள்வதும் முடியைப்பராமரிப்பதும் மிகவும் அவசியம். அதனால் முடியை பராமரிக்கவும் பாதம், முகத்தைப் பராமரிக்கவும் சில குறிப்புகளை இங்கே தந்துள்ளேன்.
1. பேன்கள் தொல்லை நீங்க:
மருதாணிப்பூக்களை சுத்தம் செய்து தலயணை உறைக்குள் வைத்து அதன் மீது தலை வைத்துத் தூங்கினால் பேன்கள் தலைமுடியை விட்டு நீங்கி விடும்.
2. சீதாப்பழக்கொட்டைகளை 2 நாட்கள் நன்கு வெய்யிலில் காயவைத்து பொடி செய்து தேங்காயெண்ணையில் கலந்து வைத்து இரவில் தலைக்குத் தடவி காலையில் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் பேன்கள் தொல்லை ஒழியும்.
3. முக்கியமாகச் செய்ய வேண்டியது- பேன் தொல்லை அதிகமாக உள்ளவர்கள் அருகில் ஒரு நாள் கூட படுக்காமல் இருத்தல். தனியான சீப்பை உபயோகிக்க வேண்டும். அடிக்கடி சோப்பும் டெட்டாலும் கலந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து கழுவ வேண்டும்.
4. பொடுகு நீங்க:
2 ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து அரை கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு மையாக அரைக்கவும். அதோடு 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலைக்குத் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் விரைவில் பொடுகு தொல்லை நீங்கும்.
5. வசம்பை நசுக்கி சிறிது நல்லெண்னையில் மெதுவான தீயில் கருக வறுத்து, பொடித்து அதைத் தேங்காய் எண்னெயில் கலந்து தடவி வர பொடுகுத் தொல்லை நீங்கும்.
6. வேப்பம்பூவையும் வெல்லத்தையும் கலந்து நல்லெண்னையில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி, அதை தலைக்குத் தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.
7. முகம் வசீகரமாக ஆக:
புதினா, எலுமிச்சை இலை இரண்டையும் ஒரு கைப்பிடி எடுத்து கொதிக்கும் வென்னீரில் போட்டு ஆவி பிடித்து வந்தால் முகம் பொலிவடைந்து வசீகரமாக மாறும். வாரம் இரு முறைகளாவது இவ்வாறு செய்ய வேண்டும்.
முகம் சிகப்பாக மாற:
8. முதல் நாள் இரவு சிறிது பாலில் 1 ஸ்பூன் கசகசாவை ஊறவைக்கவும். மறு நாள் காலை முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவவும். இதைத் தொடர்ந்து செய்தால் முகம் நாளடைவில் சிவக்க ஆரம்பிக்கும்.
9. காரட்டையும் தக்காளியையும் சேர்த்து அரைத்து தினமும் பூசி வந்தாலே நாளடைவில் முகம் வெளுக்க ஆரம்பிக்கும்.
10. பாளம் பாளமாக வெடிப்புடன் இருக்கும் பாதம் சரியாக:
கடைகளில் திரவ மெழுகு கிடைக்கும். அதை வாங்கி வந்து சுத்தமான மஞ்சள் தூளுடன் கலந்து வைக்கவும். தினமும் இரவில் உப்பு கலந்த சற்று சூடான நீரில் பாதங்களை 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு இந்த மருந்துக் கலவையை பாதங்களில் பூசி படுக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வெடிப்புக்கள் முழுவதுமாக நீங்கி பாதங்கள் பளபளக்கும்!
24 comments:
அருமையான குறிப்புக்கள்...
அனைத்தும் சூப்பர்ர் குறிப்புகள்!!
நல்ல குறிப்புகள்..!!
Thank you for these useful tips.
ப்யனுள்ள குறிப்புகள். நன்றி.
வாழ்க வளமுடன்
அருமையான பயனுள்ள குறிப்புகள் மேடம். நன்றி!
சகோதரி நல்ல பயனுள்ள குறிப்புகள்.
மனோ மேடம்...
ஏதோ பூந்திக்கொட்டைன்னு இருக்காமே... அதை விழுதாக அரைத்து தலையில் தடவி குளித்தால், தலைமுடி சாஃப்டா ஆகும்னு யாரோ எப்போவோ சொன்ன ஞாபகம்...
அது உண்மையான்னு சொல்லுங்கோ...
//7. முகம் வசீகரமாக ஆக:
புதினா, எலுமிச்சை இலை இரண்டையும் ஒரு கைப்பிடி எடுத்து கொதிக்கும் வென்னீரில் போட்டு ஆவி பிடித்து வந்தால் முகம் பொலிவடைந்து வசீகரமாக மாறும். வாரம் இரு முறைகளாவது இவ்வாறு செய்ய வேண்டும்.
முகம் சிகப்பாக மாற:
8. முதல் நாள் இரவு சிறிது பாலில் 1 ஸ்பூன் கசகசாவை ஊறவைக்கவும். மறு நாள் காலை முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவவும். இதைத் தொடர்ந்து செய்தால் முகம் நாளடைவில் சிவக்க ஆரம்பிக்கும்.
9. காரட்டையும் தக்காளியையும் சேர்த்து அரைத்து தினமும் பூசி வந்தாலே நாளடைவில் முகம் வெளுக்க ஆரம்பிக்கும்.//
**********
இதை தொடர்ந்து இன்னொரு டிப்ஸ்...
எண்ணெய் வடியும் சருமத்திற்கு “முல்தானி மட்டி”யை பன்னீரில் குழைத்து தொடர்ந்து பூசி வர எண்ணெய் வடிவது வெகுவாக குறைந்து பலன் கிடைக்கும்...
எல்லாமே பயன் உள்ள தகவல்கள். பதிவுக்கு நன்றி அக்கா....
மனோ அக்கா, அனைவருக்கும் பயன்படும் குறிப்புக்கள். மிக எளிய முறைகள் சொல்லியுள்ளீங்கள். மிகவும் நன்றி. இன்னும் இதுபோல் குறிப்புக்களை எதிர்பார்க்கிறேன்.
பாரட்டிற்கு அன்பு நன்றி ஆஸியா!!
பாராட்டி பதிவெழுதியதற்கு ஜெய்லானி அவர்களுக்கு அன்பு நன்றி!!
பதிவெழுதி உற்சாகம் கொடுப்பதற்கு அன்பு நன்றி மேனகா!
முதல் வருகைக்கும் பாராட்டுப்பதிவிற்கும் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்த அன்பு நன்றி!!
Thanks a lot for the nice words Chithra!
அன்பு சகோதரர் அப்துல் காதர் அவர்களுக்கு அன்பு நன்றி!!
பாராட்டுதலுக்கு சகோதரர் தூயவன் அவர்களுக்கு அன்பு நன்றி!!
அன்பு சகோதரர் கோபி அவர்களுக்கு!
ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்களை இங்கே கண்டதில் மிக்க மகிழ்ச்சி!!
நீங்கள் சொல்வது சரிதான். பூந்திக்கொட்டையை சீயக்காய்களுடன் அரைத்து வைத்துக்கொண்டு தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைமுடி ஷாம்பூ போட்ட மாதிரி மிருதுவாக இருக்கும். ஷாம்பூ அதிகம் புழக்கமில்லாத அந்தக்காலத்தில் இப்படித்தான் ஆரோக்கியமான வழிமுறைகளை வைத்து தலைமுடியை பராமரித்தார்கள்!
இந்த குறிப்பிற்கும் முல்தானி மட்டி பற்றிய அழகுக் குறிப்பிற்கும் அன்பு நன்றி!!
அன்புப்பதிவிற்கு நன்றி, ஜெயா!
பாராட்டுக்கு என் அன்பு நன்றி அதிரா! இந்தக்குறிப்புகள் நிச்சயம் அடிக்கடி தொடரும்!
excellent tips madam...please keep posting
Thank you very much for the nice compliement and encouragement krishnaveni!
Post a Comment