தேவையானவை:
பாஸ்மதி அரிசி- 300 கிராம் [ 2 கப்]
தேங்காய் எண்னெய்- 1 மேசைக்கரண்டி
நெய்- 5 மேசைக்கரண்டி
சன்னமாக அரிந்த சின்ன வெங்காயம்- 1 கப்
உரித்த சிறிய பூண்டிதழ்கள்- 2 மேசைக்கரண்டி
முருங்கைக்காய்கள்-4
முருங்கைக்கீரை- 1 கப்
நீளமாகவும் சற்று மெல்லியதாயும் அரிந்த பிஞ்சு கத்தரிக்காய்- 2 கப்
சன்னமாக அரிந்த தக்காளி- 2 கப்
சிறு துண்டுகளாய் அரிந்த குடமிளகாய்- 1
சீரகம்- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- 3 கொத்து
சன்னமாக அரிந்த கொத்தமல்லி- அரை கப்
தேவையான உப்பு
மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி
கீழ்க்கண்ட பொருள்களை 2 ஸ்பூன் எண்ணெயில் பொன்னிறமாக வறுத்துப் பொடிக்கவும்.
தனியா- 1 ஸ்பூன், கடலைப்பருப்பு- 1 ஸ்பூன், கசகசா- அரை ஸ்பூன்,
வற்றல் மிளகாய்-5, மிளகு- அரை ஸ்பூன், கிராம்பு-1, பட்டை- 1, சோம்பு- 1 ஸ்பூன்
செய்முறை:
1. அரிசியை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
2. சிறிது நெய்யில் வதக்கி பின் தேவையான உப்பும் சேர்த்து 4 கப் நீர் சேர்த்து புலவு போல உதிர் உதிராக சாதம் செய்யவும்.
3. வாணலியை அடுப்பில் வைத்து சூடு செய்து எண்ணையையும் 3 மேசைக்கரண்டி நெய்யையும் ஊற்றவும்.
4. சீரகம் சேர்த்து அவை பொரிய ஆரம்பித்ததும் சின்ன வெங்காயத்தையும் பூண்டையும் சேர்த்து வதக்கவும்.
5. பிறகு தக்காளி, முருங்கைக்கீரை, கத்தரிக்காய், குட மிளகாய், சிறிய துண்டுகளாய் அரிந்த முருங்கைக்காய்கள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து சிறு தீயில் சமைக்கவும்.
6. முருங்கை நன்கு வெந்து, மசாலா கெட்டியாகி, எண்ணெய் மேலே தெளிய ஆரம்பித்ததும் வறுத்த பொடியைச் சேர்த்து, மீதமிருக்கும் நெய்யையும் சேர்த்து சிறு தீயில் சற்று வதக்கவும்.
7. இந்த காய்கறி கலவையில் சாதத்தைக் கொட்டி சிறு தீயில் சில நிமிடங்கள் கிளறவும்.
8. தேவையானால் சிறிது நெய் சேர்க்கவும்.
9. முருங்கை கத்தரிக்காய் சாதம் தயார்!
பொருத்தமான பக்க உணவுகள்:
உருளைக்கிழங்கு வறுவல்,
தயிர் பச்சடி
முதலியவை ஆகும்.
32 comments:
பொருத்தமான பகக் உணவு சூப்பர், ஆனால் படம் மட்டும் தானா?
ரோஸ் அழகா இருக்கு
ஆஹா.. முருங்கை காய் , அல்லது கீரையில் எது செய்தாலும் ரொம்ப பிடிக்கும்...ஆல்டே ஃபேவரிட்.. (( ஒரு வேளை முன் ஜென்மத்தில் வேதாளமா இருந்திருப்பேனோ ? ))
வித்தியாசமான சாதம்.படத்தில் காட்டி இருக்கும் தயிர் பச்சடி செய்முறையை தாருங்களேன். //Jaleela Kamal said...
பொருத்தமான பகக் உணவு சூப்பர், ஆனால் படம் மட்டும் தானா?
ரோஸ் அழகா இருக்கு//அது தக்காளியில் செய்யப்பட்ட ரோஸ்.இல்லையாக்கா?
15 June 2010 13:23
மிக புதுமையான ருசியான சத்தான குறிப்பு.அருமை.
இந்த சாத வகை பற்றி, முதன் முறையாக அறிகிறேன்.... முருங்கை பூ சேர்ப்பது நல்லது.
பக்க உணவுகளின் படங்களும், நாவில் நீர் ஊற செய்கிறது. அருமை.
மிக மிக வித்தியாசமான சாதம்.உடனே செய்ய வேண்டும் போல் இருக்கு....அருமை!!
மனோ அக்கா... சாதமும் அருமை, பக்க உணவுகளும் சூப்பர்.... மேலே எழுதியுள்ளதைப்போலவே, வித்தியாசமான குறிப்பாகவே இருக்கு.
அருமையாக இருக்கின்றது...மிகவும் வித்தியசமாக இருக்கின்றது..இங்கு எனக்கு முருங்கைக்கீரை கிடைக்காது...அதனை தவிர்த்து செய்தாலும் சுவை அப்படியெ இருக்குமா...பகிர்வுக்கு நன்றி...இந்த லின்கினை பார்க்கவும்...http://geethaachalrecipe.blogspot.com/2010/06/bittergourd-podimas.html...உங்களுடைய குறிப்பில் இருந்து நான் பார்த்து செய்த பாகாற்காய் பொடிமாஸ்...நன்றி...
அக்கா, அருமையாக இருக்கிறது இந்தக் குறிப்பும் படங்களும்.
வித்தியாசமான சுவை நன்றாக உள்ளது.
சகோதரி எங்கே நம்ம தளத்தின் பக்கம் காணமுடியவில்லை.
அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி, ஜலீலா! பக்க உணவு புகைப்படங்களுக்கு என் சமையல் தளத்தில் விரைவில் குறிப்பு போடுவேன்!!
ஜெய்லானி கூறுவது:
“ஆஹா.. முருங்கை காய் , அல்லது கீரையில் எது செய்தாலும் ரொம்ப பிடிக்கும்”
உங்களுக்குப் பிடித்தமான உணவுப்பதார்த்தத்தையே இங்கே பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது! இல்லத்தரசியை செய்து பார்க்க சொல்லவும்!!
அன்பான பின்னூட்டத்திற்கு என் நன்றி, ஸாதிகா!
அது கீரை தயிர் பச்சடி. என் சமையல் தளத்தில் விரைவில் பதிவு செய்கிறேன். அது தக்காளியில் செய்த ரோஸ். என் மகன் செய்தது. இதெல்லாம் அவர் ஸ்விட்சர்லாந்தில் படித்த பாடங்களில் ஒரு பகுதி!
ரசனையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி, ஆஸியா!!
உண்மையில் பார்க்கப்போனால் இந்த சாதத்திற்கு பக்க உணவுகளே தேவையில்லை. இது ஒரு முழுமையான உணவு, சித்ரா!
அன்பார்ந்த பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி,!!
அன்புப் பின்னூட்டத்திற்கு இதயங்கனிந்த நன்றி, மேனகா!!
ரசித்து பின்னூட்டமும் அளித்ததற்கு அன்பு நன்றி, இமா!!
ரசனையான பதிவிற்கு என் மனமார்ந்த நன்றி, அதிரா!!
அன்பு பின்னூட்டத்திற்கும் என் குறிப்பை செய்து பார்த்ததற்கும் அன்பு நன்றி, கீதா!
முருங்கைக்கீரை சேர்ப்பதால் கூடுதல் ருசி என்பது உண்மை. இருந்தாலும் அது இல்லாமல் செய்தாலும் ருசியான சாதமாகவே அமையும்.
அன்புள்ள தூயவன் அவர்களுக்கு!
அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி!
தங்கள் தளத்திற்கு வந்து பதிவு போட்டதை கவனித்திருப்பீர்களென நினைக்கிறேன்
வித்யாசமான ரெசிப்பி..அருமையாக இருக்கு!
முருங்கை கத்தரிக்காய் சாதம் படம் பார்க்கும் போதே தெரிகிறது சுவையாக இருக்கும் என்று. கோழி வறுவல் செய்முறையும் எதிர் பார்க்கிறேன் அக்கா. பதிவுக்கு நன்றி மனோ அக்கா.....
interesting recipe...looks so beautiful. must be delicious. super side dishes. great Madam
படங்களுக்கும் குறிப்புக்கும் நன்றிங்க. செய்யும் ஆவல் ஏற்படுகிறது. செய்து பார்க்கிறேன்.
பாராட்டிற்கு அன்பு நன்றி மகி!
அன்புப்பதிவிற்கு மனமார்ந்த நன்றி ஜெயா! விரைவில் கோழி வறுவலுக்கான குறிப்பையும் போடுகிறேன். இங்கில்லா விட்டாலும் என் சமையல் தளத்தில் போட்டு விடுவேன்.
Thanks a lot for the nice compliments Krishnaveni!!
பாராட்டிற்கு நான்தான் மகிழ்வையும் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவிக்க வேண்டும் ராமலக்ஷ்மி!!
மனோ மேடம்...
உங்களின் நிறைய சமையல் குறிப்பில், நீங்கள் சுவைக்காக சேர்க்க சொல்லும் ஒரு பொருள் “கசகசா”... ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் இது தடை செய்யப்பட்ட உணவுப்பொருள் ஆயிற்றே...
இந்தியாவிலிருந்து எடுத்து வர முடியுமா என்று விளக்கவும்.....
அன்புள்ள கோபி அவர்களுக்கு!
நீங்கள் சொல்வது உண்மைதான். கசகசா அமீரகத்தில் தடை செய்யப்பட்ட விஷயம். அதனால் இங்கு அது எங்கேயும் விற்பதில்லை. ஊரிலிருந்தும் கொண்டு வர முடியாது.
அம்மா,இந்த சாதத்தை செய்தேன்,மிக நன்றாக இருந்தது.முருங்கைக்காய் பிரியையான என் மகள் விரும்பி சாப்பிட்டாங்க..மேலும் நான் சாதாரண பொன்னி அரிசியிலேயே செய்தேன்.சுவையான குறிப்புக்கு மிக்க நன்றிம்மா.விரைவில் என் தளத்தில் பகிர்கிறேன்...
Post a Comment