பதினைந்து நாட்களுக்கு முன், பொங்கல் முடிந்த அடுத்த சில நாட்களில் என் மருமகளுக்கு உடல் வலி அதிகம் ஏற்பட்டது. அடுத்த நாளிலேயே மகனுக்கும் அதே மாதிரி உடம்பு முழுவதும் வலி வந்ததும் என் மகன் காரை எடுத்துக்கொன்டு கொரோனா சென்டருக்குச் சென்று பரிசோதனை செய்து வந்தார். அடுத்த நாளிலேயே பாஸிடிவ் என்ற ரிசல்ட் வந்து விட்டது. அன்றைக்கே சற்று அதிகமாக பணம் கட்டியதும் வீட்டிற்கே வந்து அனைவருக்கும் சாம்பிள் எடுத்துச்ச் என்றார்கள். அடுத்த நாளே எங்கள் எல்லோருக்கும் பாஸிடிவ் என்ற தகவலுடன் அரசு சுகாதார அமைப்பிலிருந்து செய்தி வந்தது. அன்றிலிருந்து அடுத்த பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளும்படியாக தகவல் வந்தது. உடனேயே வேலை செய்யும் பெண்ணை தற்காலிகமாக நிறுத்தினோம். பேப்பர் பிளேட்டுகள், தம்ளர்கள், அத்தியாவசிய உணவுப்பொருள்கள் என்று வாங்கினோம். அடுத்த நாளிலிருந்து காய்ச்சல், உடல் வலி, குளிர், சளி, இருமல், ஒவ்வாமை என்று அனைவருக்கும் தீவிரமாக உடலை படுத்தி எடுக்க ஆரம்பித்து விட்டது. எங்களுக்கு தெரிந்த தமிழ் மருத்துவரிடம் தேவையான ஆலோசனைகள் பெற்றோம். தினமும் விட்டமின்கள் C, D, ZINC எடுப்பதுடன் காய்ச்சலுக்கும் தீவிர சளி பிடித்தலுக்கும் மருந்துகளை வாட்ஸ் அப்பிலேயே எழுதி அனுப்பினார். மிகவும் கவனமாக இருக்கும்படியும் அதிகமான ஓய்வெடுக்கும்படியும் உடலை வருத்தி வேலைகளை செய்தால் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகுமென்றும் சொன்னார். வீட்டிலுள்ள இரு சிறு குழந்தைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாமென்று சொல்லி அவர்களுக்கு ஒரு டானிக் போல தரச்சொன்னார்.
கடந்த 15 நாட்கள் வீடே ஒரு க்ளினிக் போல ஆகியது. மிகுந்த உடல் பிரச்சினைகளுக்கிடையே ஒவ்வொரு நாளும் போராட்டமாக நகர்ந்தது. காய்ச்சலால் உடல் தள்ளாமை. வலி மாத்திரையைப்போட்டுக்கொண்டு, வலுக்கட்டாயமாக ஏதேனும் உணவு தயாரித்தாலும் யாருக்குமே சாப்பிட முடியாமை, வெளியிலிருந்து உணவு வாங்கினாலும் அதே நிலைமைதான். வெளியே துபாய் குளிர் 15 டிகிரிகளுக்கு இரவு நேரத்தில் இறங்கியது. ஒவ்வொரு நாளும் சிறு சிறு முன்னேற்றங்களுடன் நாள் நகர்ந்து சென்றது. 11 நாட்கள் முடிவில் அரசாங்கத்தின் சுகாதார அமைப்பிலிருந்து ' நீங்கள் வெற்றிகரமாக கொரோனா பாதிப்பை கடந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். இனி நீங்கள் மகிழ்வுடன் இருங்கள்' என்று தகவல்கள் வந்தன. அப்படியும் மெதுவாக சிறு சிறு வலிகளுடன் நாட்கள் கடந்து கடந்த இரண்டு நாட்கள்தான் எல்லோரும் கொஞ்சம் சாப்பிட ஆரம்பித்திருக்கிறோம். குவாரன்டைன் நாட்கள் பதினான்கையும் கடந்து வந்து விட்டோம். இப்போது தான் வீடு மெதுவாக இயங்கத்தொடங்கியிருக்கிறது. வேலைக்காரப்பெண் வேலை செய்ய வந்து விட்டது. கொஞ்சம் அப்பாடா என்றிருக்கிறது. இன்னும் சிறிது இருமல், தொண்டையில் பாதிப்பு என்று இன்னும் உள்ளே மருந்துகள் போய்க்கொண்டிருக்கின்றன. இழந்த தெம்பு திரும்பி வர இன்னும் மூன்று மாதங்களாகும் என்று மருத்துவர் சொல்லி, சத்தான உணவு வகைகள், அசைவம் என்று சாப்பிடச் சொல்லியிருக்கிறார். இன்னும் சோர்வு இருக்கிறது. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன!!!
13 comments:
சிரமமான நாட்களை வெற்றிகரமாகக் கடந்து விட்டீர்கள். இதன் பாதிப்பு (உடல் அசதி, இருமல், வலி) இன்னும் சில நாட்கள் கூட இருக்கக்கூடும். கவனமாக இருங்கள்.
அனைத்தும் நலமாக அமையும் அம்மா...
கவனமாக இருங்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் விரைவில் பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
உடமபை கவனித்துக் கொள்ளுங்கள்.
உடல் அசதியிலிருந்து மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.
கவனமாக இருங்கள்.
அன்பு மனோ,
கேட்கவே சங்கடமானது.
சமயத்தில் நல்ல உதவியாக் அரசு கவனிப்பு கிடைத்தாலும் அவதிப் பட்டதேன்னவோ
நீங்கள் அனைவரும்.
மீண்டு வந்ததற்கு இறைவனே காரணம்.
பத்திரமாக இருங்கள்.
ஸ்ரீராம் வீட்டில் அனைவரும் சிரமப்பட்டது இன்னும் நினைவில்.
கடினமான நாட்களைக் கடந்து விட்டீர்கள். இறை அருளால் பூரண குணம் பெறப் பிரார்த்தனைகள். தொடர்ந்து எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள்.
Thank God and glad to know you passed the period. Please take care when you go out as there is always a chance of recurrence. 🙏🏻
கடவுள் தான் காப்பாற்றி இருக்கிறார்...
தாங்களும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இருந்து சிரமங்களைக் கடந்திருக்கின்றீர்கள்.. எனினும் எப்போதும் எச்சரிக்கையாகவே இருங்கள்..
இறைவன் துணை என்றும் உண்டு...
பூரணமாக குணமடைய கவனமாக சத்தான உணவுகலை சாப்பிடுங்கள்.இவ்வளவும் கடந்து வந்தமைக்கு கடவுளுக்கு நன்றி. பாதுகாப்பாக,பத்திரமாக இருங்கள் அக்கா.கவலைவேண்டாம். எல்லாம் சரியாகிவிடும்.
கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வந்தது அறிந்து மகிழ்ந்தேன் சகோதரி
தொடர்ந்து அனைவரும கவனமாக இருக்கவும்
குடும்பத்தில் அத்தனை பேருக்கும் கொரோனாவா? கடவுளே! நல்ல விதமாக மீண்டது குறித்து மகிழ்ச்சி! விரைவில் முற்றிலும் சரியாகி, பழைய நிலைக்கு திரும்புவீர்கள். ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.
மிகுந்த ஆறுதலும் மன தைரியமும் நம்பிக்கையும் கொடுத்து பதிவிட்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் இனிய நன்றி!
தங்களது இன்றைய பதிவைப் பார்த்த பிறகே இந்தப் பதிவுக்கு வருகிறேன். அனைவரும் சிரமமான காலக் கட்டத்தைத் தாண்டி கொரானா பாதிப்பிலிருந்து மீண்டு வந்து விட்டீர்கள். கடவுளுக்கு நன்றி.
Post a Comment