Wednesday 13 January 2021

பொங்கலோ பொங்கல் !!!

 

துன்பங்கள் யாவும் விலகிச்சென்று, மகிழ்வும் நன்னலமும் அனைத்து வளங்களும் அனைவரது இல்லங்களிலும் பொங்கித்ததும்ப‌அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!

மறுபடியும் துபாயில் பொங்கல்! தமிழ் உணவகங்கள் எல்லாம் நாளை பொங்கல் விருந்து தரும் இங்கு. ஏற்கனவே தமிழ் சந்தை, தமிழ் மார்ட் போன்ற தமிழ்க்கடைகளில் இஞ்சிக்கொத்து, மஞ்சள் கொத்து, வாழையிலை, வாழைப்பழங்கள் எல்லாம் அமோக விற்பனை!!! எங்கள் உணவகங்களும் 22 உணவு வகைகளுடன் விருந்து படைக்கின்றன!!‌!! பொங்கல் கோலங்களும் பொங்கல் வாழ்த்து அட்டைகளும் தான் இப்போதெல்லாம் இருப்பதில்லை! வாட்ஸ் அப் வருவதற்கு முன்னால் பொங்கல் வாழ்த்து அட்டைகள் அமோகமாய் விற்கும் கடைகளில் நுழைந்தால் கை நிறைய வாங்கிக்கொண்டு தான் வருவோம். அதுவும் 15 நாட்களுக்கு முன் வாங்கினால் தான் ஒவ்வொரு வாழ்த்திலும் வீட்டிலுள்ள அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்டு ஏர் மெயிலில் அனுப்ப வசதியாக இருக்கும். 

காலையிலேயே பொங்கல் வைத்து விடுவேன். அப்போது தான் மதியம் பொங்கல் விருந்து சாப்பிட எங்கள் உணவகங்களுக்கு செல்ல வசதியாக இருக்கும்! தலைவாழை இலை போட்டு பணியாளர்கள் பரிமாறும் காட்சி மிக அழகாய் இருக்கும். எங்கிருந்தோ தொலைதூரத்திலிருந்தெல்லாம் ஃபோன் பண்ணி சொல்லி விட்டு தம்ழ் மக்கள் சாப்பிட வருவார்கள். எங்கள் உணவ விருந்து லிஸ்ட் இதோ!



சென்ற பொங்கலன்று எங்கள் குடும்ப உறவினர்கள் அனைவரும் கூடி கிராமத்தில் பொங்கலிட்டார்கள்.  கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப்பிறகு! நாங்கள் மட்டும் கலந்து கொள்ள முடியவில்லை.  

அந்த புகைப்படங்களும் இங்கே இணைத்திருக்கிறேன்.

மாட்டுப்பொங்கலன்று!




கீழே துபாய்ப்பொங்கல்!!





7 comments:

ஸ்ரீராம். said...

மாட்டுப்பொங்கல் படம் அருமை.  நினைவுகளைக் கிளறுகிறது.  அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்...

துரை செல்வராஜூ said...

பொங்கும் மங்கலம்
எங்கும் தங்கிடட்டும்...

அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

முற்றும் அறிந்த அதிரா said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மனோ அக்கா. கிராமத்துப் பொங்கல்ப் படங்கள் அழகோ அழகு.

வெங்கட் நாகராஜ் said...

கிராமத்து பொங்கல் படம் அழகாக இருக்கிறது. உங்கள் உணவகத்தில் உங்களுக்கான உணவு பட்டியல் வாவ்... மனம் நிறைந்த பொங்கல் நாள் நல்வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். எங்கும் செழிப்பும், மகிழ்ச்சியும் பொங்கட்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழர் திருநாள் வாழ்த்துகள்