Friday 23 August 2019

முத்துக்குவியல்- 54!!!

ஆச்சரிய முத்து:

இங்கே அமீரகத்தில் இந்த பாலைவன நாட்டில் நல்ல மழை!  இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா? பசும் சோலையாக இருந்த நம் பூமி வரண்டு சூட்டுக்காற்றில் தவிக்கிறது. பாலைவனமாய் சுட்டுப்பொசுக்கிய இந்த பூமி இப்போது மழையால் குளிர்கிறது, அதுவும் ஏப்ரல் மாதத்தில்!



அதிக மழையைப் பெறுவதற்காக இங்கே ' கிளவுட் சீடிங் ' முறையில் விமானங்கள் மூலம் வானில் ரசாயனப்பவுட்ர்கள் தூவப்படுகின்றன. செயற்கை முறையில் ரசாயனப் பவுடர் தூவப்பட்டு ஒரு சில வாரங்களில் அதிக மழைப்பொழிவைப் பெற முடியும். கடந்த ஆண்டு ஒரு வாரத்தில் நான்கு நாட்களுக்கு கிளவுட் சீட்ங் செய்யப்பட்டது. இதன் பலனாக கூடுதலாக 20 சதவிகிதம் சென்ற ஆண்டு மழைப்பொழிவு கிடைத்தது. இந்த ஆண்டு ஆண்டின் தொடக்கத்திலிருந்து இது வரை 88 தடவை கிளவுட் சீடிங் செய்யப்பட்டுள்ளது.

இசையின்ப முத்து:

தியாகராஜ சுவாமிகள் பற்றி கர்நாடக சங்கீதம் அறிந்த அனைவரும் அறிவார்கள். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட இவர் பிறந்தது திருவாரூர் என்றாலும் வளர்ந்ததும் இசையறிவு கொண்டதும் சமஸ்கிருதம் கற்றதும் திருவையாற்றில்! பல அபூர்வமான ராகங்களில் கீர்த்தனைகள் இயற்றியிருப்பதும் ஒரே ராகத்தில் பல கீர்த்தனை இயற்றியிருப்பதும் இவரின் அரிய திறமை. தன் தாய்மொழியான தெலுங்கிலும் வடமொழியிலும் மட்டுமே கீர்த்தனைகள் இயற்றிருக்கிறார்.



இந்த திறமையை கேள்விப்பட்டு தஞ்சை மன்னர் சரபோஜி தன் அரண்மனைக்கு வந்து தன்னைப் புகழ்ந்து பாட வேண்டுமென்று ஆசை கொண்டார். ஆனால் தியாகராஜர் அதை மறுத்து ' ' நிதிசால சுகமா ' என்ற கல்யாணி ராக கீர்த்தனையை உருவாக்கி இசைத்தார். ' செல்வம் சுகம் தருமா அல்லது ராமன் சன்னதியில் சேவை செய்வது சுகமா?' என்ற அர்த்தத்தில் தொடங்கும் இந்த கீர்த்தனை!

இவரின் 'எந்தரோ மஹானுபாவலு' அழியாப்புகழ் பெற்றது! அதன் அர்த்தமோ அதையும்விட புகழ் பெற்றது! ' அன்பால் உயர்ந்த பக்தர்களுக்கு முன்னால் இந்த அடியேன் எங்கே? ' என்பது தான் இந்த வரியின் அர்த்தம்! இந்த கீர்த்தனை பல பாடகர்கள் குரலில், இனிமை வழிந்தோட கேட்டு ரசித்திருக்கிறேன். வயலினின் உருகலில் நானும் உருகியிருக்கிறேன். புல்லாங்குழலின் தேடலில் மெய்மறந்திருக்கிறேன். ஆனால் சமீபத்தில் நாதஸ்வர இசையில் ஸ்ரீராக ராகம் குழைந்து மயங்கியதை ரசித்தபோது மனமும் அந்தக்குழைவில் மயங்கிப்போனது. நீங்களும் ரசிக்க இணைத்திருக்கிறேன் இங்கே! கேட்டு ரசியுங்கள்!


மருத்துவ முத்து:

பொதுவாய் பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் சிலர் அவற்றை ஒழிக்க சீத்தாபழ விதைகளை அரைத்துத் தலையில் தடவுவதுண்டு.



நிச்சயம் பேன் தொல்லை ஒழிந்து விடும். ஆனால் அவ்வாறு சீத்தா பழ விதைகளை அரைத்து தலையில் தடவுவது ஆபத்து என்று அறிவித்திருக்கிறது மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகம். கண் வலி, கருவிழி பாதிப்பு, கண்ணீர் வடிதல், உறுத்தல், பார்வை மங்குதல் போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படுவதாகவும் சொல்லியுள்ளது நிர்வாகம்.

ரசித்த முத்து:

அறுபது சொல்வது அனுபவ நிஜம்.
அதை இருபது கேட்டால் ஜெயிப்பது நிஜம்.
மனிதன் சொல்ல இறைவன் கேட்பது திருவாசகம்.
இறைவன் சொல்ல மனிதன் கேட்பது கீதை.
மனிதன் சொல்ல மனிதன் கேட்பது குறள்.
ஞானி சொல்ல ஞானிகள் கேட்பது திருமந்திரம்.
மகன் சொல்ல மகேசன் கேட்பது பிரணவம்.
நல் மனைவி சொல்ல கணவன் கேட்பது வாழ்க்கை.

அமைதி முத்து:

சென்னையில், தி.ந‌கரில் உள்ள ஒரு நான்கு நட்சத்திர விடுதியில் வரவேற்பு பகுதியில் இருந்த சிலை இது. பார்க்கும்போதே மனதில் அமைதி பிறந்தது.


26 comments:

Thenammai Lakshmanan said...

சீதாப்பழ விதையை அரைக்க முடியுமா ??

தியாகராஜர் பற்றிய தகவல் அருமை. அதே போல் க்ளவுட் சீடிங்கும் :)

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் மனோ அக்கா

அழகான முத்துக்கள். மழை களவுட் சீடிங்க் அறிந்ததுண்டு. அக்கா அது கெமிக்கல் கலந்து வருவது இயற்கைக்கு முரண் இல்லையா? நல்லதா அக்கா? அதைப் பற்றி இரு விதக் கருத்துகள் உலவுகின்றன.

தியாகபிரம்மம் குறித்து வாசித்ததும் மனம் நெகிழ்ந்து கண்ணில் என்னை அறியாமல் நீர் வந்துவிட்டது. இக்கதை அறிவேன் என்றாலும் மீண்டும் வாசித்த போது கண்ணில் கண்ணீர்...
நாதஸ்வரத்தில் ஸ்ரீராகம் கேட்கிறேன் அக்கா.

மருத்துவ முத்து புதிய தகவல்.

ரசித்த முத்தை நாங்களும் ரசித்தோம்

அமைதி முத்து அழகு.

கீதா

ஸ்ரீராம். said...

க்ளவுட் சீடிங் ரொம்ப காஸ்ட்லி என்றும், அதை நடைமுறைப்படுத்த இயற்கையான மேகங்கள் கூட்டமும் இருக்கவேண்டும் என்றும் படித்திருக்கிறேன். பாலைவனப்பகுதியில் அதிக மழை பொழிவு சிறப்பு.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் முத்துக் குவியல்... அனைத்தும் சிறப்பு.

இசை மிகவும் ரசித்தேன்.

KILLERGEE Devakottai said...

க்ளவுட் சீடிங் புதிய தகவல் சகோ.
முத்துக்கள் எல்லாமே அருமை.

முற்றும் அறிந்த அதிரா said...

மனோ அக்கா நலம்தானே.. நீங்கள் இப்போ வெளிநாட்டிலோ இல்லை உள் நாட்டிலோ இருக்கிறீங்க எனத் தெரியவில்லை.

கிளவுட் சீடிங்.. முறையால் அதிக மழை கொட்டியதோ?... அதிசயம் ஆனால் உண்மை என்பதுபோல இருக்கு. மேகங்களையும் ஏமாற்றத் தொடங்கிட்டினமே ஹா ஹா ஹா. ஆனா அது பூமிக்கு ஆரோக்கியமானதோ தெரியவில்லையே...

முற்றும் அறிந்த அதிரா said...

சீதாப்பழ விதை அரைத்துப் பூசுவது.. நான் கேள்விப்பட்ட்டதில்லை. பழம் சாப்பிட்டிருக்கிறேன்.

புத்தர் சிலை அழகு.. உண்மையில் மனதுக்கு அமைதியைத் தருகிறது.

கரந்தை ஜெயக்குமார் said...

முத்துக்கள் அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து அருமை...

இன்றைய சூழ்நிலையில், இங்கு இந்தியாவில்... புத்தரே சரணம்...

ராமலக்ஷ்மி said...

க்ளவுட் சீடிங் முறையில் முயன்று மழையைப் பெற்றது பாராட்டுக்குரியது.

சிறப்பான தொகுப்பு.

கோமதி அரசு said...

நானும் நேற்று ஒரு உணவு விடுதியில் இருந்த புத்தர் சிலையை படம் எடுத்து வந்தேன். அமைதி தவழும் அவர் முகம் நமக்கு அமைதியை தர வேண்டும்.
அனைத்து முத்துக்களும் அருமை.

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி தேனம்மை! சீத்தாப்பழ விதைகளை அரைக்க முடியும்போலத்தானென்று தோன்றுகிறது. ஏனென்றால் பள்ளி மாணவிகள் தான் இதை அதிகம் உபயோகிப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது.

மனோ சாமிநாதன் said...

வணக்கம் கீதா!

கிளவுட் சீடிங் முறைப்படி மழை பெறுவதில் எந்த சிக்கலுமில்லை என்று தான் இங்கே கூறுகிறார்கள். ஆனால் எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது. இந்த ரசாயன பவுடரை மனிதர்கள் வசிக்காத தொலை தூரத்தில்தான் தூவுகிறார்கள். இருப்பினும் அது காற்றில் பரவாதா கொஞ்சமேனும்? பரவினால் சுவாசித்தால் சுவாச மண்டலம் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் இசையை ரசித்ததற்கும் அன்பார்ந்த நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி கில்லர்ஜீ!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் அதிரா! நான் நலம் தான் அதிரா! இப்போது துபாயில் தான் இருக்கிறேன். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தமிழ்நாடு செல்வேன்.

கிளவுட் சீடிங் முறையில் மழை வருவிப்பது மிக அதிக வெப்பத்தால் தகிக்கும் இந்த பாலைவன பூமிக்கு தேவைப்படுகிறது. அதிக உழைப்பாளிகள் இருக்கும் இந்த நாட்டில் அதிக வெப்பத்தால் தீய்ந்து போகிறவர்கள் அதிகம். அதற்காக உபயோகப்படுத்தப்படும் ரசாயன பவுடர் தூவும் முறையால் பாதிப்பு கிடையாது என்பதால் தான் இந்த ஆண்டு 80 தடவைக்கும் மேலாக தூவி மழையை வரவழைத்திருக்கிறார்கள்.

Yarlpavanan said...

அருமையான படைப்பு

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பார்ந்த நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் சகோதரர் தனபாலன்! இன்றைய சூழ்நிலையில் இந்தியாவிற்கு மட்டுமல்ல, எங்குமே புத்தர் தான் தேவை! இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

priyasaki said...

எல்லா முத்துக்களுமே அருமை அக்கா. நான் இந்த மழை முறை பற்றி அறிந்திருக்கவில்லை. தகவல் புதுசு. அதேமாதிரி சீத்தபாழவிதை முத்தும் புதிதாக இருக்கு. நாங்க ஊரில் சாப்பிட்டுக்கோம். இங்கும் இப்போ கிடைக்கிறது.
நான் மியூசிக் படிக்கும்போது இக்கீர்த்தனை மிக விரும்பி படித்த உண்டு. உங்க பதிவில் கேட்டு மகிழ்ந்தேன்.

இராய செல்லப்பா said...

அமெரிக்கா வரும், போகும்போதெல்லாம் துபாய் வழியாகத்தான்வருகிறேன். ஒருமுறை கூட மழையைப் பார்த்ததில்லை. அதாவது ஏர்போர்ட்டின் உள்ளே!

Kasthuri Rengan said...

நேர்த்தியான பதிவு

'பரிவை' சே.குமார் said...

முத்துக்கள் அழகு அம்மா.