கம்போடியா ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அங்கிருந்த தோட்டத்தில் வைத்திருந்த சிலை இது! |
தேங்காயை மட்டையோடு வெட்டி உள்ளேயுள்ளதை நீக்கி அவைகளில் செடிகளை வளர்க்கிறார்கள்!அதை கம்பிகளால் பாக்கு மரத்தோடு இணைத்திருக்கிறார்கள்! |
என் கணவர் எடுத்த புகைப்படம்! ஒரு பெண் முகம் ஐந்து உடல்கள்!எத்தனை அரிதான சிற்பத்திறமை! |
கம்போடியாவிலுள்ள ஒரு கோவிலின் சிற்பம் இது! |
வியட்நாமீய புதுமணத்தம்பதி!! |
வியட்நாமில் உறங்கும் புத்தர்! |
வியட்நாமில் உள்ள ஒரு புத்த ஆலயத்தின் மேல் உள்ள சிலை! இதுவும் புத்தர் என்றே சொல்லப்படுகிறது! |
என் 2 வயது பேத்தி விஹானா பந்து வீச, மருமகள் அதை அடிக்கத் தயாராகிறார்! |
13 comments:
அனைத்துப் படங்களும் அருமை. தேங்காய் மட்டையில் சேடிகள், ஒருமுகத்தில் ஐந்து உடல்கள், ...
உறங்கும் புத்தர்.. ஆஹா... ஆனால் வெயிலில் படுத்திருக்கிறாரே என்ற எண்ணம் மனதில் வருகிறது.
வியட்நாமில் உறங்கும் புத்தர்..மிக அழகு.
அனைத்துப் படங்களும் அருமை. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விடயம் ரசிக்கக்கூடிய விதமாக இருக்கிறது. கடைசிப் படம்... வெகு அருமை அக்கா.
தென்னைமட்டை - பிடித்து வளர மண் தேவையிலாத ஆர்கிட் செடிகளை நடுவதற்கும் அந்தூரியம் வகைகளுக்கும் பயன்படுத்துவார்கள்.
படங்கள் அனைத்தும் அருமை. ஸ்ரீராம் சொல்வது போல புத்தர் வெயிலில் படுத்திருக்கிறாரே என்று நினைத்தேன். போர்வை போர்த்துவது போல மேகம் காட்சியளிப்பது அழகாக உள்ளது. கடைசிப்படம் அழகு.
வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!
வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!
அனைத்து புகைப்படங்களையும் குறிப்பாக என் பேத்தியை ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி இமா!
நீண்ட நாட்களுக்குப்பின்னான வருகைக்கும் அனைத்து புகைப்படங்களையும் மிகவும் ரசித்து பாராட்டியதற்கும் அன்பு நன்றி கீதமஞ்சரி!
வணக்கம், பல நாட்களுக்குப் பிறகு தங்களது வலைப்பூவை வாசிப்பதில் மகிழ்ச்சி.
ஒரு பெண் முகம் ஐந்து உடல்கள் பற்றிய சிற்பம் அருமை. எப்போதோ இதைப் பற்றி வாசித்ததாக ஞாபகம், இச்சிற்பம் எங்கு அமைந்துள்ளது?
அருமை... அருமை...
படங்கள் ஒவ்வொன்றும் அருமை
தங்கள் பெயர்த்தியின் படம் அருமையிலும் அருமை
வணக்கம்
படங்கள் அருமை
தேங்காய்மட்டையில் செடிகள் இங்கும் சிலர் வளர்க்கிறார்கள்.
ஒரு முகம் ஐந்து பெண் உடல்கள் அழகு! வித்தியாசமான ஒன்று.
பெரிய புத்தர் சிலை அதுவும் சயனித்து மிக அழகாக இருக்கிறார்.
உங்கள் செல்லப் பேத்தி க்யூட்! ரசித்தோம்.
துளசிதரன், கீதா
Post a Comment