மெக்கோங் டெல்டா
நிறைய குட்டி குட்டி தீவுகளும் புதைகுழிகளும் ஆறுகளும் மிதக்கும் வணிகப்படகுகளும்
புத்த கோவில்களும் கிராமங்களுமாய் நெற்கதிர்கள் சூழ்ந்திருக்கும் வளமான பகுதியாய்
தெற்கு வியட்நாமில் உள்ளது. மெக்கோங் ஆறு திபேத் அருகே இந்தியாவிற்கும்
சீனாவிற்கும் நடுவேயுள்ள சீனத்தைச் சார்ந்த இமயமலைப்பகுதியிலிருந்து உருவாகி திபேத், மியன்மார் [ பர்மா ], தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம் முதலிய ஐந்து
நாடுகளை வளமாக்கி ஆறாவது நாடான வியட்நாமில் நுழைந்து இரண்டாக முதலில் பிரிந்து
அதன் பின் பல கிளைகளாகப்பிரிந்து இறுதியில் தெற்கு சைனா கடலில் கலக்கிறது. அதனால்
இந்த ஆறு இங்கே nine dragons என்று அழைக்கப்படுகிறது.
மெகோங் டெல்டா-கூகிள் மூலம் எடுத்த புகைப்படம்!
இங்கே வியட்நாமிற்குத்
தேவையான அரிசி கரும்பு மீன் வகைகள் பழங்கள் தேங்காய் எல்லாமே விளைகின்றன. நாட்டின்
உபயோகத்திற்குப் போக் மீதமுள்ளவை பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. தேனீ
பண்ணைகள் இறால் பண்ணைகள் இங்கே ஏராளமாக இருக்கின்றன. பட்டுப்புழுக்கள் வளர்ப்பு சாக்லேட்
தயாரிப்பு தேங்காயில் இனிப்புகள் செய்வது பொம்மைகள் தயாரிப்பு போன்ற குடிசைத்தொழில்கள்
இங்கே அதிகம்!
நானும் எங்கள் வழிகாட்டியும்!!
இந்த மெக்கோங் டெல்டா
ஹோ சி மின் நகரிலிருந்து 2 மணி நேர தூரத்தில் உள்ளது. ஒரு சிறு கிராமம். அங்கு நிறைய
படகுத்துறைகள்! முன்னரேயே ஏற்பாடு செய்திருந்த மோட்டார் படகில் ஏறி பயணத்தை ஆரம்பித்தோம்.
படகு ஒரு குட்டித்தீவிற்குச் செல்கிறது!!
ஒரு குட்டித்தீவில் கொடுத்த தேன் கலந்த சர்பத், பதப்படுத்தி சீனிப்பாகில்
பிரட்டிய அன்னாசிப்பழத்துண்டங்கள், வாழைப்பழ சிப்ஸ்!!
13 comments:
படங்களும் பகிர்வும் அருமை சகோதரியாரே
அழகிய இடம்.படங்கள் அருமை.
தகவல்கள் அருமை அம்மா...
அழகான இடம்.
படங்கள் அழகு
உங்களுடன் அமர்ந்து வியட்நாம் சுற்றி பார்த்த உணர்வை தருகின்ற படங்கள் ...
மிக அருமை மா
படங்கள் தெளிவு. தேனடையை தைரியமாக கையில் பிடித்திருக்கிறாரே அந்தப்பெண்.... தொடர்கிறேன்.
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!
வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி மாதேவி!
இனிய கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி தனபாலன்!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கோமதி அரசு!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!
தேங்காய் வாழைப்பூ எல்லாமே வித்தியாசமாக இருக்கிறதே.
நாடு மிக மிக வளமுடைய செழிப்பான நாடு போல இருக்கிறது. கொஞ்சம் கேரளத்தையும் இந்திய வட கிழக்கு மாநிலங்களையும் நினைவுபடுத்தியது.
மலைப்பாம்பை தோளிள் போட்டு இருக்கிறாரே பயமில்லாமல்...வெயிட்டும் ஜாஸ்தியாக இருக்குமே. அது போல தேனடை...பிரமிப்பாக இருக்கிறது
படங்கள் எல்லாம் வெகு அழகு
துளசிதரன், கீதா
Post a Comment