Banteay Samré Temple
ஆலயம் இரண்டாம் சூர்யவர்மனால் கி.பி 12 ஆம் நூற்றாண்டின் மத்தில் எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இரண்டாம் சூர்யவர்மன் கைமர் பேரரசில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேரரசர்களில் ஒருவனாகக் கொள்ளப்படுகின்றான். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon)/பர்மா (Burma) தெற்கு மலாய் தீபகற்பம் (Malay Peninsula) ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான். இறந்த பின் பரமவிஷ்ணுலோக (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான். இவ்வாலயத்தின் கட்டிடப்பணி இரண்டாம் யசோவர்மனாலேயே நிறைவுற்றது. Samré என்பது இந்தோசீனாவின் பூர்வீகக் குடிகளின் பெயராகும். முழுமையாக விஷ்ணு ஆலயமாகவே எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டிடமுறையை Angkor Wat என்னும் வகைக்குள் ஆராய்ச்சியாளர்கள் வகைபடுத்தியிருக்கின்றார்கள்.
மாலையில் படகில் சுற்றிப்பார்ப்பதும் கடைகளுக்குப்போவதுமாய் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எனக்கு ஏற்பட்ட ஒரு சிறு விபத்தால் நான் செல்ல முடியாமல் என் கணவரை மட்டும் வற்புறுத்தி அனுப்பி வைத்தேன். அவர்கள் எடுத்த புகைப்படங்கள் இவை!
எங்களின் கம்போடியா பயணம் முடிந்து மறுநாள் வியட்நாம் புறப்பட்டோம்!!!

12 comments:
சிறப்பான இ(ப)டங்கள்.
அடடா.... எத்தனை அழகான படங்கள்...
சிறு விபத்து - அடடா.... பயணத்தில் இப்படி நடந்தால் கஷ்டம் தான்.
அடுத்தது வியட்நாம் - ஆஹா... காத்திருக்கிறேன்.
தொடர்ந்து பயணித்தேன். வியட்நாம் பயணத்திற்காகக் காத்திருக்கிறேன்.
படங்கள் அருமை அம்மா....
very nice. felt i should make a visit.
வருகைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி சகோதரர் ஸ்ரீராம்!
இனிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி வெங்கட்!
வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!
வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி தனபாலன்!
வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ஸ்ரீகாந்த்! அவசியம் கம்போடியா சென்று பாருங்கள்!
நாம் இங்கு பார்க்கும் ஆலயங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அங்கோர்வாட் பாணியில் விஷ்ணுவுக்குக் கோயில். தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி.
படங்கள் அட்டகாசமாக இருக்கிறது மனோ அக்கா
அதுவும் அங்கோர்வாட் பாணி கட்டிடக் கலை பிரமிக்க வைக்கிறது. மிக மிக அழகாக இருக்கிறது.
என்ன ஆச்சு மனோ அக்கா? சிறிய விபத்து என்றால் அதுவும் பயணத்தில். அப்புறம் பிரயாணம் செய்தீர்கள்தானே?
வியாநாம் பற்றி அறிய மிக ஆவலுடன் தொடர்கிறோம்
கீதா
Post a Comment