Wednesday, 3 April 2019

இரண்டாம் நாள் மாலை- தொடர்ச்சி!!!!!

இத்த‌னை நாள் அதிகமான சிதிலங்கள் உள்ள கோவில்களைத்தான் பார்த்தோம். ஆனால் கம்போடியா வரலாற்றில் இவை மிகவும் சரித்திரப்புகழ் பெற்றவை என்பதால் சுற்றிப்பார்க்க வேண்டிய கோவில்களில் இவையே முதலிடம் பெற்றதாய் எங்களுக்காக அட்டவணை போட்டிருந்தார்கள். இனி பார்க்கப்போவது சிதிலங்கள் குறைவான ஆனால் அழகிய கோவில்களை!

Ta Prohm Temple, Angkor, Cambodia.  

ஏழாம் ஜயவர்மன்  அண்டை நாடான வியட்நாமின் தாக்குதல்களில் பல வருடங்கள் ஆக்ரமிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டுக்கிடந்த கைமெர் பேரரசை அழிவினின்றும் 1181 ஆண்டு வாக்கில் கம்போடியாவை மீட்டெடுத்தான். அதன்பின் இந்த கோவிலை ஏழாம் ஜயவர்மன் கட்டினான் என்று சொல்லப்படுகிறது.



தன் தாயாரின் நினைவாக , கடவுள் சிலையை தன் அன்னையின் முகச்சாயலில் கட்டியுள்ளான். இக்கோவில் ' ராஜவிஹாரம்' என்றழைக்கப்பட்டது. தந்தைக்காக அர்ப்பணிக்கப்பட்ட இன்னொரு கோவிலும் கம்போடியாவில் உள்ளது.




கம்போடிய நாட்டில் மண்ணிலும், காடுகளிலும் புதைந்து போன ஆலயங்களில் இவ்வாலயம் மோசமான பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றது என்பதை இப்போது எஞ்சியிருக்கும் சிதைவுகளும் சிதிலங்களும் சாட்சியங்களாக கண்முன் காட்டி நிற்கின்றன.


எங்கள் கம்போடிய வழிகாட்டி!
கம்போடிய நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக புதையுண்டு போய் மரஞ் செடி கொடிகளால் சூழப்பட்டிருந்த இந்த‌ ஆலயம் மீட்கப்பட்டு இப்போது ஒரு பகுதி மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்காக ஓரளவு திருத்தம் செய்யப்பட்டு காட்சி தருகின்றது. 





இங்கே பதிந்திருக்கும் கல்பலகை இங்கே 18 மத குருக்கள், 615 நடனமாதர்கள் உள்பட 12500 பேர்கள் வசித்ததாகவும் தங்கமும் முத்துக்களும் பட்டுமாக இறைந்திருந்த செல்வத்தை அவர்கள் பாதுகாத்து வந்ததாகவும் சுற்றியிலும் இருந்த கிராமங்களில் வசித்த 80000 பேர்கள் இவர்க‌ளுக்கான உணவு மற்றும் தேவைப்பட்ட பொருள்களை வினியோகிக்கவும் அனைத்து சேவைகளையும் செய்ததாகவும் கூறுகிறது.


வடக்கு, தெற்குப்பகுதி கோவில்கள் அரச குரு ஜயமங்களார்த்தனுக்கும் அரசனின் மூத்த சகோதரனுக்காகவும் அமைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. நாடு முழுமையும் இருந்த மருத்துவ மனைகளுக்கு இந்தக்கோவிலிலிருந்து தான் உணவும் தேவைப்பட்ட பொருள்களும் வினியோகம் செய்யப்பட்டதாம்!!! ஒரு காலத்தில் பாசமும் செல்வமும் கலைத்திறனும் அபிரிதமாக பொங்கி வழிந்த நாடு என்பது புரிகிற்து.



வலிமையான வைரம் பாய்ந்த‌ மரங்கள், சிதைந்து விழப்போன கட்டிடத்தை தாங்கி இறுகத் தம் கிளைகளால் பற்றி முறுக்கியிருப்பது எங்குமே காண முடியாத ஒரு அதிசயம்.   இவை என்ன மரங்கள் என்பது சரியாக தெரியவில்லை. சிலர் பருத்தி மரங்கள் என்கிறார்கள். சில ஆல மரங்கள் என்கிறார்கள்! ஆனால் இத்தனை பிரம்மாண்டமான மரங்களை வேறெங்கும் பார்த்ததாக நினைவில்லை! 

13 comments:

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள்.

சிதிலமடைந்த கோவில்கள் - அன்றைய பாரம்பரிய கட்டிடக் கலையை பறைசாற்றுகின்றன. அழிவிலிருந்து காப்பாற்ற முடியாமல் போனது வருத்தம் தந்தது...

தொடர்கிறேன்.

ஸ்ரீராம். said...

படங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. அதிலும் அந்தக் கடைசிப் படம்....

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

கம்போடியாக் கோயில் எனக் கேள்விப்பட்டதுண்டு... ஆனா இவ்ளோ பழமையாக இவ்ளோ அழகாகப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கு.

அந்த ஆலமரம் வளர்ந்திருக்கும் விதம் அருமையோ அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

மரம் தன் விரல்களால் கட்டிடத்தைக் காத்து நிற்கும் அழகே அழகு

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அருமையான புகைப்படங்களால் எங்களை களத்திற்கு அழைத்துச்சென்றுவிடுகின்றீர்கள். நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் அத்தனையும் அட்டகாசமாக இருக்கிறது. அப்படியே கட்டிப் போடுகின்றன. அத்தனையும் அழகு.

துளசிதரன், கீதா

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

ரசித்து பாராட்டியதற்கு அன்பு நன்றி அதிரா!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்க‌ம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி சகோத‌ரர் துளசிதரன்/கீதா!

ராமலக்ஷ்மி said...

அருமையான படங்கள். விவரங்களுக்கு நன்றி.

வேர் பிடித்தாற் போல் கட்டிடங்களின் மேல் கிளை பரப்பி நிற்கும் மரங்கள் ஆச்சரியம் அளிக்கின்றன.