Pre Rup Temple
இந்த சிவனாலயம் இரண்டாம் இராஜேந்திர வர்மனால் கி.பி 10 ஆம் நூற்றாண்டின் பிற்பட்ட காலப்பகுதியில் அதாவது 961 அல்லது 962 ஆண்டில் எழுப்பப்பட்டது. மேல் தளத்தில் பிரம்மா, இலட்சுமி, விஷ்ணு, உமை மற்றும் சிவன் ஆகியோரின் சிலைகளைக் கொண்ட ஐந்து கோபுரங்கள் உள்ள இக் கோயிலை மலைக் கோயில் என்கின்றனர். இதன் ஒவ்வொரு தளங்களுக்கும் கோபுரங்களுக்கும் ஏறுவது சவாலானது. சில கோபுரங்களுக்கு ஏறுவதை தடைசெய்துள்ளார்கள்.
இது சைவர்களின் ஆசிரமம் என்றும் கூறுகின்றார்கள். இந்தக் கோவில்தான் அரச குடும்பத்தில் இறந்தவர்களுக்கு ஈமைக் கிரிகைகள் செய்யும் இடம் என்றும் சொல்லப்படுகிறது.
சூரியன் மறையும் காட்சி -PRE RUP மேலிருந்து! |
பெரும்பாலும் சிதைவுகளும் சிதிலங்களுமாய் காட்சி தரும் இந்த சிவாலயம் ராஜேந்திரவர்மன் காலத்தில் மிகவும் புகழ் பெற்றதாய் விளங்கியது. இக்கோவில் பிரமிட் போல காட்சியளிப்பதாக சொல்லும் ஆராய்ச்சியாளர்கள் இக்கோவிலில் நூலகம் இருந்ததாகவும் சொல்கிறார்கள். இது செங்கல்கள், லாட்ரைட் என்னும் கற்களால் கட்டப்பட்டது.
இது மலைக்கோவில். மிக உயரமானது மட்டுமல்லாமல் செங்குத்தான படிகள் என்பதால் நான் மேலே ஏறிப்பார்க்கவில்லை. என் கணவர் வழிகாட்டியுடன் மேலே சென்று வந்தார்கள். மாலை மயங்கிய நேரம் என்பதால் மேலே புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை.
மறுநாள் காலை அந்த வழியே வந்தபோது மறுபடியும் புகைப்படங்கள் எடுத்தோம்.
24 comments:
சூப்பரான இடமாக இருக்குது மனோ அக்கா, படங்களும் நல்ல கிளியராக நன்றாக எடுத்திருக்கிறீங்க...
சிதிலங்கள் பார்க்கும்போது வருத்தமாக இருந்தாலும் கட்டிய காலத்தில் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என யோசிக்க வைத்தது. அழகான படங்கள்.
ஒருமுறை(யாவது) சென்று பார்க்க ஆவல்.
படங்கள் அருமை
கடந்த காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் இடத்திற்குச் சென்று வந்துள்ளீர்கள்
நன்றி சகோதரியாரே
படங்கள் தகவல்கள் அருமை அம்மா...
பார்க்கப் பார்க்க அழகு மேலிடுவதைப் போலுள்ளது. அருமையான புகைப்படங்கள்.
அழகான இடம் ...படங்களும் தகவல்களும் மிக சிறப்பு ...
படங்கள் விவரங்கள் எல்லாமே மிக அருமை.
ஒவ்வொரு கோபுரமும் சிதிலம் அடைந்திருந்தாலும் பார்க்க அழகாக இருக்கிறது.
துளசிதரன், கீதா
அழகான இடம். போக இருந்த இடமும் கூட. ஜஸ்ட் மிஸ்ஸாகிட்டுது. வியட்நாம் தான் செல்லமுடிந்தது. உங்க தகவல்கள் இனி போவதானால் கைகொடுக்கும் அக்கா. அழகா இருக்கு படங்கள் எல்லாம்.
கோபுரங்களின் வடிவமே தனித்துவமானதாக உள்ளது.
தகவல்களுடன் அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். தொடருங்கள்.
பாராட்டிற்கு நன்றி அதிரா! உண்மையிலேயே சூப்பரான, மிக அழகிய இடங்கள் எல்லாம் இனிமேல் தான் பகிர வேண்டும்!!
நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான் வெங்கட்! இப்போதே இவ்வளவு அழகாய்த்தெரியும் இந்த இடங்கள் அந்தந்த அரசனின் காலத்தில் எப்படியெல்லாம் மிளிர்ந்திருக்கும்! வருகைக்கு அன்பு நன்றி!
அவசியம் சென்று இந்த நாட்டின் அழகிய கோவில்களைப்பார்க்க முயற்சி செய்யுங்கள் சகோதரர் ஸ்ரீராம்! இது நம் தமிழ் நாட்டோடு சம்பந்தப்பட்ட நாடு!
வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்! நீங்கள் சொல்லியுள்ளது போல இவற்றையெல்லாம் பார்த்தபோது நம் தமிழக வரலாற்று பெருமைகளுக்கும் இந்த நாட்டுக்கோவில்களுக்கும் அரசர்களுக்கும் சம்பந்தம் இருப்பதை நினைத்து நினைத்து பல நாட்கள் வியப்படைந்திருக்கிறேன்!!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!
வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்! மிகப்பெரிய புகழ்பெற்ற கோவில்கள் எல்லாம் நிறைய சிதிலமடந்திருப்பதைப்பார்க்க மனம் வேதனையுற்றது. ஆனால் மிக அழகிய கோவில்கள் பற்றி இனி தான் பகிரவிருக்கிறேன்.
வாழ்த்துக்களுக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்!
வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் துளசிதரன்/கீதா!
வியட்னாம் போய் விட்டு பக்கதிலிருக்கும் கம்போடியா போகாமலிருந்து விட்டீர்களா பிரியசகி? நிறைய மிஸ் பண்ணி விட்டீர்கள்!! மறுபடியும் அந்த வழியே செல்லும்போது அவசியம் கம்போடியா செல்லுங்கள். என் குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
பாராடிற்கு அன்பு நன்றி!!
கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!
படங்களுடன் அதற்கான விவரங்களும் அருமை
கோபுரங்கள் வித்தியாசமாக இருக்கின்றன. சிதிலமடைந்திருப்பதாலோ? ஆனால் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கும் விடம் சிறப்பு.
வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சொக்கன் சுப்ரமணியன்!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!
Post a Comment