திருச்சியில் அரசு மருத்துவ மனையின் நோயாளிகளுக்கு தினமும் காலை கஞ்சியும் மதியம் உணவும் வழங்கி வருகிறவரைப்பற்றிக்கூறும் நிகழ்ச்சி இது! அதுவும் கடந்த 26 வருடங்களாக!
ஒரு ஏழைத்தாயின் கண்ணீர்க்குமுறல் இது! இவரின் வார்த்தைகள் நெஞ்சை சுடுகிறது! பாசத்தை மறக்கும் பிள்ளைகளுக்கு தண்டனை வேண்டும் என்கிறார் இவர்!
கல்லிலே மட்டும்தானா கலைகளை வடிக்க முடியும்? ஒரு மனிதனுக்கு முடி வெட்டுவது கூட சிறந்த கலை தான்!
அம்மியும் கீத்து வண்டியும் டயரை வைத்து விளையாடும் சிறுவர்களும் குடிசை வீடும் ரேடியோவும்- இன்னும் எத்தனை எத்தனை பழைய இனிய நினைவுகள்!!!
ஒரு இளம் பெண்ணுக்கு இதை விடவும் அழகாக எப்படி புத்திமதி சொல்ல முடியும்? முத்தான வரிகள் ஒவ்வொன்றும்!!
இந்தப்பெண்மணியின் ஒவ்வொரு வார்த்தையும் மனசை பாதிக்கிறது! கண்களிலிருந்து கண்ணீர் வழிவதை தவிர்க்கவே முடியவேயில்லை!
7 comments:
அனைத்து வீடியோக்களும் அருமை தொகுத்து வழங்கியதற்கு பாராட்டுக்கள்
சமீபத்தில் நான் மிகவும் ரசித்த வீடியோ "அடிக்காம, திட்டாம குணமா சொல்லணும்.." செம வைரல் ஆகிவிட்டது அந்த வீடியோ! பொதுவாக நான் வீடியோ என்றால் வாட்ஸாப்பில் டவுன்லோடே செய்ய மாட்டேன்.
தேர்ந்தெடுத்துத் தொகுத்த விதம் அரூமை.
அனைத்தும் அருமை...
>>> அடிக்காம, திட்டாம குணமா சொல்லணும்..<<<
சென்ற வாரம் அந்தக் குழந்தையின் அழுகுரலோடு காணொளி வந்தது..
என்ன ஒரு நெஞ்சழுத்தம்... குழந்தையை அழ வைத்து படம் பிடிப்பது!..
மனம் தாளவில்லை.. உடனே அழித்து விட்டேன்...
ஆனால் அது ஊர் உலகம் முழுதும் பரவி...
ஆனந்த விகடன் ஆராய்ய்சி செய்யும் அளவிற்குப் போயிருக்கின்றது...
ஜெயஸ்ரீ அவர்களின் அறிவுரைகள் அருமை..
வாழ்க நலம்..
அனைத்தும் அருமை சகோதரியாரே
சிறப்பான தொகுப்பு.
சில ஏற்கனவே வாட்ஸப்பில் எனக்கும் வந்தன.
Post a Comment