இன்றைய மருத்துவ முத்துக்களில் மூன்று சிறந்த மருத்துவர்களையும் அவர்களின் சாதனைகளையும் குறிப்பிட்டிருக்கிறேன். நோயால் வாடும் யாருக்கேனும் இந்த மருத்துவர்களின் வைத்தியம் கிடைத்து அவர்கள் குணமானால் அதுவே இந்தப்பதிவை எழுதியதற்கான நிறைவைத்தந்து விடும்!
DR.MOHAN RAO
தெரிந்த 2 நண்பர்கள் சொன்ன விபரம் இது. அவர்களின் நண்பர்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு கால்கள், கைகள், பேச்சு செயலிழந்த நிலையில் இந்த மருத்துவரிடம் சென்று அதுவும் ஒரு மாதங்கழித்து யாரோ சொன்னதன் பேரில் சென்று வைத்தியம் பார்த்ததில் நடக்கவும் பேசவும் முடிவதாக சொன்னார்கள். பக்கவாத தாக்குதல் ஏற்பட்டு கூடிய விரைவில் சென்றால் அவர் முழுவதும் குணப்படுத்தி விடுவதாகவும் சொன்னார்கள். என்னிடம் அந்த மருத்துவரைப்பற்றிய நோட்டீஸ் ஒன்றைக்கொடுத்தார்கள். அதில் வைத்தியரிடம் மூன்று முறை திரவ ரூபத்தில் கொடுக்கப்படும் மருந்தை சாப்பிட வேண்டும் என்றும் நோயாளிகள் வரும்போது ஒரு கிலோ சாப்பாட்டு புழுங்கலரிசி எடுத்து வர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். சில சமயம் இரவில் தங்குவதற்கும் ஆயத்தமாக வர வேன்டும் என்று நோட்டீஸில் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் நண்பர்கள் அன்று மாலையே மருந்து கொடுத்து அனுப்பி விட்டார்கள் என்று கூறுகிறார்கள். இதற்கு கடும் பத்தியம் இருக்கிறது. 15 நாட்கள் வரை அசைவம், இனிப்பு, வெற்றிலை பாக்கு உபயோகிக்கக்கூடாது.
2 மாதம் வரை தக்காளி, தேங்காய், நெய், பால், தயிர், மீன் கேழ்வரகு, உளுத்தம்பருப்பு [ இட்லி,தோசை கூடாது ] சாப்பிடக்கூடாது. ஆந்திர அரசு இந்த வைத்தியசாலைக்கு தனி பஸ் விட்டிருக்கிறதாம்.
மருத்துவர் மோகன்ராவ் குடும்பம் நூறு வருடங்களாக இந்த வைத்தியம் செய்து, பக்கவாதத்தை குணப்படுத்தி வருகிறது! மூன்று வேளைகள் மருந்து கொடுத்து கையிலும் மருந்துகள் கொடுத்து நோய்க்கு ஏற்ப 15 அல்லது 20 நாட்கள் கழித்து மருத்துவர் மோகன்ராவ் வரச்சொல்கிறாராம். மருந்துகளுக்கு மட்டும் ரூ.500 வாங்கிக்கொள்கிறாராம்!!
இந்த வைத்தியரின் விலாசம்:
DR.C.MOHAN RAO,
Marati C Ranoji Paralysis Vydyam) , Virupakshi Puram Village, Near ChappidipallePost
Palamaner, Chittoor - 517408, ,
CELL: 9440459200/PHONE: 08579 200347.
DR.JAYALAKSHMI.
டாக்டர் திருமதி ஜயலக்ஷ்மி பற்றி நிறைய பேர் அறிந்திருப்பார்கள். தொலைக்காட்சி, யு டியூப், வார பத்திரிகைகள், மாதப் பத்திரிகைகள் முதலியவற்றில் இவரது தொடுசிகிச்சை பற்றிய தகவல்களை அடிக்கடி அளித்து வருகிறார். அக்குபங்க்சர், அக்குப்பிரெஷர் சிகிச்சை மூலம் பல நோய்களை சரியாக்குகிறார் இவர்.
பல வருடங்களுக்கு முன் என் கணவருக்கு தோள்பட்டை வலி மிக அதிகமாக இருந்தது. அலோபதி வைத்தியம், நாட்டு வைத்தியம் எதனாலும் சரியாகவில்லை. முதன் முதலாக இவரைப்பற்றி கேள்விப்பட்டு சென்னைக்கு இவரிடம் காண்பிக்கச் சென்றோம். காதருகில் 2 இடங்களிலும் தோள்பட்டை அருகிலும் அக்குபங்சர் செய்தார். 10 நிமிடங்கள் கழித்து கையை உதறச் சொன்னார். சுத்தமாக வலி போய் விட்டிருந்தது. எங்களால் அதை நம்பவே முடியவில்லை! இன்று வரை அந்த வலி இல்லை. அதனால் எனக்கு எந்த உடல்நலப்பிரச்சினையென்றாலும் இவரிடம்தான் சென்று வருகிறேன். மருந்தில்லா வைத்தியம் என்பதால் என்ற பிரச்சினைகள் இல்லை.
இவர் விலாசம்: no:19, door no:C-5, woodbridge apartment, Venkatraman street, T.NAGAR, CHENNAI-17. Phone: 044 - 28151832, 9840095385
ஞாயிறன்றும் புதனன்றும் இவர் வைத்தியம் பார்ப்பதில்லை. மற்ற நாட்களில் மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை மட்டுமே நோயாளியைப்பார்க்கிறார், இப்போதெல்லாம் புதன்கிழமை கூட இவரது உதவியாளர்கள் பார்ப்பதாக தற்போது டாக்டர் சொன்னார்கள்.
DR.PRATHEEP NAMBIYAR
டாக்டர் பிரதீப் நம்பியார் இந்தியாவின் மிகச்சிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணரில் ஒருவர். இதயம், நுரையீரல், நெஞ்சுப்பகுதி என்று கிட்டத்தட்ட 7000 அறுவை சிகிச்சைகள் தனது 25 வருட அனுபவத்தில் செய்துள்ளார்.
அதில் நுண்ணிய இதய அறுவை சிகிச்சைகளும் அடங்கும். ' நம்பியார் டெக்னிக் ' என்று அவர் பெயரில் தற்போது டெல்லியில் மட்டும் ஒரு நுண்ணிய பை பாஸ் அறுவை சிகிச்சை இதயத்தில் செய்யப்படுகிறது! இதைப்பற்றி டாக்டர் பிரதீப் குமார் " இதில் பின்ஹோல் சர்ஜரி மூலம் நோயாளியின் இடது மார்புக்குக்கீழே 2 அங்குல அளவு கிழிக்கப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று இரத்தக்குழாய்களில் பிளாக் இருக்கும்போது பைபாஸ் செய்வதற்கு மார்புக்குள்ளிலிருந்து மார்பின் உள் தமனி உபயோகப்படுத்தப்படுகிறது. கால் நரம்புகளை வைத்து பைபாஸ் செய்யும்போது அது சாதாரணமாக 10,12 வருடங்களுக்குத்தான் செயல்படுகிறது. இந்த சர்ஜரி 25,30 வருடங்களுக்கு நிலைத்து நிற்கக்கூடியது. நோயாளி 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். 10 நாட்களில் அவர் நார்மலாக தன் வேலைகளில் ஈடுபடலாம். மேலும் தொற்று ஏற்படுவதும் தழும்பு வருவதும் மற்றும் ரத்தம் ஏற்ற வேண்டிய அவசியம் இவை அனைத்துக்குமான அபாயம் இந்த சர்ஜரி முறையில் குறைவு "என்றார்.
இந்த அறுவை சிகிச்சை தற்போது டெல்லியில் மட்டுமே செய்யப்படுகிறது.
டாக்டர் பிரதீப் நம்பியார் தற்போது ஹரியானாவில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் இருக்கிறார்.
HOSPITAL ADDRESS
Columbia Asia Hospital, Block F, Gol Chakkar,
Palam Vihar
Gurgaon Haryana 122017
India

17 comments:
நல்ல செய்திகள்.
இரண்டாவது செய்தி இப்போதைய நிலையில் எனக்கு உதவலாம்.
//காதருகில் 2 இடங்களிலும் தோள்பட்டை அருகிலும் அக்குபங்சர் செய்தார்//
தோள்பட்டையருகே மற்றும் காதருகே பங்க்சரா?!!! ஊசி குத்தினால் வலிக்குமே...!!!!
போற்றுதலுக்கு உரியவர்கள்
நல்ல தகவல்கள் அம்மா... நன்றி...
அவசியம் டாக்டர் ஜெயலக்ஷ்மியை சென்று பாருங்கள் சகோதரர் ஸ்ரீராம்! உங்கள் பிரச்சினை சரியாகி விடும். என் கணவருக்கு ஒரே நாளிலேயே சரியாகி விட்டது. ஒவ்வொருத்தருக்கும் தனி ஊசியை உபயோக்கிக்கிறார்கள். ஊசி உடலினுள் ரொம்பவும் இறங்காது. இலேசாகத்தான் இறங்கும். வலி சாதாரணமாக இருக்காது. செல்லும்போது LAB REPORT, SCAN REPORT ஏதேனும் இருந்தால் அவற்றையும் எடுத்துச்செல்லுங்கள். அவர்கள் அனைத்தையும் குறித்துக்கொள்வார்கள்.
நிச்சயம் போற்றுதல்களுக்குரியவர்கள் தான் சகோதரர் ஜெயக்குமார்! கருத்துரைக்கு அன்பு நன்றி!!
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்!
அன்புடையீர் ,உங்கள் பதிவுகளை நான் போன் மூலம் படித்து இருக்கிறேன். ஆனால், போன் மூலம் டைப் பண்ணி கருத்து சொல்வது கடினம். அதனால் இது வரை செய்தது இல்லை. இனிமேல் நேரம்கிடைக்கும் போது வந்து படித்து கருத்து சொல்கிறேன் இப்போது நான் ஒரு புதிய லேப் டாப் வாங்கி இருக்கிறேன் அதன் மூலம் என் உயிர் தமிழா https://enuyirthamizha.blogspot.com/ என்ற வலைத்தளத்தை ஆரம்பித்து இருக்கிறேன். என்னையும் உங்களில் ஒருவனாக நினைத்து ஆதரவு தாருங்கள், நன்றி
நன்றி
பாராட்டப்படவேண்டியவர்களை அறிமுகப்படுத்திய விதம் அருமை. பயனுள்ள பதிவு.
பயனுள்ள செய்திகள்..
பகிர்ந்துள்ள விதம் அருமை...
வாழ்க நலம்..
நல்ல செய்திகள். பாராட்டுக்குரிய மருத்துவர்கள்.
மூன்று டாக்டர்களும் போற்றுதலுக்குரியவர்கள். அதிலும் ஜெயலெக்ஷ்மி அவர்கள் வலி நீக்கியது மிக ஆச்சர்யமாக இருந்தது. அனைவருக்கும் பாராட்டுகள்.
வருகைக்கு அன்பு நன்றி நாகேந்திர பாரதி!
வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!
வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!
இனிய கருத்துரைக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி தேனம்மை!
Post a Comment