தஞ்சையில் பெரிய கோவிலான பிரகதீஸ்வரர் கோவிலுக்கு நிகரான மிகவும் புகழ் பெற்ற கோவில் இது. அம்மனுகென்றே ஒரு ஆலயம் என்பதால் எப்போதுமே கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கும். பல சரித்திர நிகழ்வுகள், அசாதாரண உண்மைகள் அடங்கிய கோவில் இது.
தஞ்சையை தலைநகராய் ஆட்சி செய்து வந்த வெங்கோஜி மன்னர் ஒரு சமயம் சமயபுரம் மாரியம்மனை வழிபட்டு இரவு தங்கினார். கனவில் வந்த அம்பிகை தஞ்சையருகே புன்னை வனத்தில் புற்று வடிவில் இருக்கும் தன்னை வந்து வணங்கும்படி சொல்லி மறைந்தார். வெங்கோஜி மன்னர் புற்று இருந்த இடத்தை சீரமைத்து கூரை அமைத்து அப்பகுதிக்கு புன்னை நல்லூர் என்று பெயரிட்டு 1680ம் ஆண்டு அவ்வூரை ஆலயபராமரிப்பிற்காக வணங்கினார்.
தஞ்சையை ஆண்ட சோழப்பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வமாக நிர்மாணித்தார்கள். தஞ்சைக்கு கிழக்கே காவல் தெய்வமாக அவர்கள் அமைத்ததே புன்னை நல்லூர் மாரியம்மன் என்று சோழ சம்பு என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலப்போக்கில் புன்னை வனமாக மாறி விட்ட அந்த இடத்தைத்தான் வெங்கோஜி மீட்டெடுத்திருக்கிறார்.
1763
1787ல் தஞ்சையை ஆண்டு கொன்டிருந்த துளஜேந்திரராஜா என்னும் மன்னனின் மகள் வைசூரியால் பாதிக்கப்பட்டு அவளது கண் பார்வையும் பாதிக்கப்பட்டது. இத்தலத்திற்கு வந்து வழிபட்டதும் மகளின் கண் குறைபாடு நீங்கியதால் மனம்மகிழ்ந்து மன்னன் ஒரு சிறிய கோவிலும் கட்டினான். இம்மன்னனே சிறந்த ஞானியான சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளை வரவழைத்து புற்று வடிவிலிருந்த அம்மனுக்கு சிலை வடிவில் நான்கு கரங்களுடன் மாரியம்மன் உருவம் அமைத்தான்.மேலும் சிவனை வழிபட கைலாச நாதர் என்னும் கோவிலையும் கட்டினான். 0739லிருந்து 1763 வரை ஆண்ட பிரதாப சிங்க மகாராஜா அருள்மொழிப்பேட்டை என்னும் கிராமத்தை மான்யமாக அளித்ததோடு, பெருமாளையும் வணங்கும் பொருட்டு இந்தக்கோவிலுக்கு வடதிசையில் அருள்மிகு கோதண்டராமர் கோவிலையும் கட்டி மான்யங்களையும் வழங்கினார். நேபாள மன்னரால் அந்த நாளில் பரிசாக வழங்கப்பட்ட சாளக்கிராமம் என்னும் கல்லினால் ஆனவை இக்கோவிலினுள்ள ஸ்ரீராமர், சீதா தேவி, லக்ஷ்மணர், சுக்ரீவர் மூர்த்தங்கள்!
பின்னாளில் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் இக்கோயிலுக்கு கோபுரம், மகாமண்டபம், வெளி மண்டபம், நர்த்தன மண்டபம், இரண்டாம் பிரகாரம் முதலியவற்றைக் கட்டுவித்தார். மராட்டிய மன்னரான வீர சிவாஜி இக்கோவிலுக்கு மூன்றாம் திருச்சுற்றை அமைத்துக்கொடுத்தார். அமைத்துக்கொடுத்தார். 1892ல் சிவாஜி மகாராஜாவின் பட்டமகிஷி ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டிக்கொடுத்தார். பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்து 1950ம் ஆண்டு குடமுழுக்கும் செய்தார்.
விஷ்ணு துர்க்கைக்கும் உற்சவ மூர்த்தத்திற்கும் தினந்தோறும் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. உள்ளே அம்பாள் சன்னதியின் வலப்புறம் பேச்சியம்மனுக்கு தனி சன்னதி இருக்கிறது. நான் சென்ற சமயம் தீபார்த்தனைக்குப்பிறகு, குங்குமத்திற்கு பதிலாக விபூதி கொடுத்தபோது, ஆச்சரியமாக இருந்தது. குருக்கள் விபூதி வழங்கப்படும் ஒரே அம்மன் சன்னதி இது மட்டும்தான் என்று கூறினார். மேலும் உக்கிரமான முத்து மாரியம்மன் மருமகள் என்றும் சாந்தமான பேச்சியம்மன் மாமியார் என்றும் கூறினார்.
தஞ்சையிலிருந்து நீடாமங்கலம் போகும் வழியில் 6 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. தல விருட்சம் வேப்ப மரம். தீர்த்தம் வெல்லக்குலம். தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 கோவில்களுள் இதுவும் ஒன்று. காலை ஐந்து மணி முதல் இரவு 9 வரை திறந்திருக்கும் இந்தக்கோவில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அதிகாலை 3 மணிக்கே திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை திறந்திருக்கிறது. புற்
புற்று வடிவில் உள்ளதால் அம்மனுக்கு அபிஷேகம்
இங்கு உள்தொட்டி நிரப்புதல் என்ற பிரார்த்தனை இருக்கிறது. அம்மை வார்க்கும் சமயத்தில் அம்மனுக்கு அருகிலுள்ள உள்தொட்டியிலோ அல்லது வெளித்தொட்டியிலோ அருகிலுள்ள குளத்திலிருந்து நீர் கொன்டு வந்து நிரப்பினால் அம்மன் குளிர்ச்சியடைந்து அதன் காரணமாக தங்களுக்கு வந்துள்ள அம்மையையும் ஓரிரு நாட்களில் மறைந்து விடுகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. கண் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலுக்கு வந்து நேர்ந்து கொண்டு கண் பார்வை சரியானதும் கண்ணில் மாவிளக்கு ஏற்றுகிறார்கள்.
அது போல வயிற்று வலியாலும் கட்டிகளாலும் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குணமானதும் வயிற்றில் மாவிளக்கு போடுகிறார்கள். உடம்பில் கட்டி வந்து பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் குணமானதும் வெல்லக்கட்டிகள் வாங்கி குளத்தில் கரைத்து தங்கள் நேர்த்திக்க்டனை செலுத்துகிறார்கள்.
கோயிலின் உள்ளே ஒரு குளமும், வெளியே ஒரு குளமும் உள்ளன. அம்பாளுக்கு ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் பூச்சொரிதல், தேரோட்டம், முத்துப்பல்லக்கு, தெப்ப உற்சவம் போன்ற திருவுழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
17 comments:
நிறைய தடவை பார்த்து இருக்கிறோம்.
உங்கள் பதிவின் மூலம் தரிசனம் செய்து விட்டேன் மீண்டும்.
ஆச்சர்யமான தகவல்கள் பகிர்வுக்கு நன்றி
சிறுவயதில் ஓரிருமுறை பார்த்திருக்கிறேன். சதாசிவ பிரம்மேந்திரர் வந்து சென்றிருக்கிறார் என்பது புதிய, சுவாரஸ்யமான தகவல். நான் பார்த்தபோது கோவில் இவ்வளவு ஆடம்பரமாக இருந்த நினைவில்லை. நல்லதொரு பகிர்வு.
அறியாத ஒரு கோயிலைப் பற்றி அறிந்து கொண்டோம். விவரணம் மற்றும் படங்கள் எல்லாம் மிக அருமை. எத்தனை வரலாறுகள் ஒவ்வொரு கோயிலுக்கும்..
கீதா
ஒரு முறை இங்கே சென்றதுண்டு. நினைவுகளை மீட்டெடுக்க உதவியது உங்கள் பதிவு. நன்றி.....
படங்களும் பகிர்வும் அருமை சகோதரியாரே
தல வரலாறு, வீபூதி, அழகான படங்கள் என அனைத்தும் அருமை...
ஊரின் பெயரே மாரியம்மன் கோயில் இங்கு மட்டும்தான் என்று சொல்வதைக் கேள்விப்பட்டுள்ளேன். பல முறை சென்றுள்ளேன். தமிழகத்திலுள்ளோர் குறிப்பாக தஞ்சை மாவட்டத்திலுள்ளோர் பல முறை சென்றுவரும் கோயில்களில் இதுவும் ஒன்று.
அழகிய கோயில். கோயில்கள் பார்த்து முடிவதில்லை.. எக்கோயிலுக்குப் போனாலும் புதுமையாகவே இருக்கும்.
மாவிளக்குப் போடுவதற்கென்றே தனி இடம் உண்டோ? ஏன் அங்கு மாவிளக்கு புகழ்பெற்றதோ?..
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!
கோவில் முன்பிலிருந்து அப்படியே தானிருக்கிறது சகோதரர் ஸ்ரீராம்! பார்க்கப்போனால் தினமும் கூடும் அவ்வளவு கூட்டத்திற்கு வெளிப்புறத்தில் அத்தனை சுத்தமில்லை!
பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கீதா!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!
தகவலுக்கு மிகவும் நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்! நீங்களே மாரியம்மன் கோவிலில் வசிப்பவர் அல்லவா?
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி அதிரா! இங்கே பலவகையான நேர்த்திக்கடன்களை மக்கள் எப்போதும் செய்து கொண்டே இருப்பார்கள். அவற்றில் மாவிளக்கும் ஒன்று!
Post a Comment