Wednesday 15 November 2017

வாட்ஸ் அப் எச்சரிக்கைகள்!!!!!

சமீபத்தில் டெங்கு ஜுரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக தஞ்சாவூர் இருந்தது. என் தங்கை வீட்டு மாடியில் குடியிருந்த 25 வயது இளம் பெண் படிப்பில் தங்க மெடல் கல்லூரியில் வாங்கியவர், முதுகலைப்பட்டங்கள் வாங்கியவர் ஜுரம் வந்த நாலே நாளில் இறந்து போனார். என் தங்கை அதிர்ச்சியில் உறக்கத்தைத் தொலைத்தார். தஞ்சையிலிருக்கும் பிரபல மருத்துவ‌ மனையில் நோயாளிகளுக்கான படுக்கை அறைகள் நிரம்பி வழிந்த நிலையில் வரவேற்பறையில் இருந்த நாற்காலிகளை அகற்றி  அங்கே நோயாளிகளைப் படுக்க வைக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தது. டெங்கு காய்ச்சலிலிருந்து நம்மைப்பாதுகாக்க ' வாட்ஸ் அப்'பில் வந்த குறிப்புகள் இதோ!!
டாக்டர் பரூக் அப்துல்லா என்பவர் இந்த அவசியமான எச்சரிக்கைக் குறிப்புக‌ளைக் கொடுத்திருக்கிறார்.




இது தான் டெங்கி காய்ச்சலோட போக்கு 

முதல் மூணு நாள் நல்லா உடம்பு சுடும். 

அடுத்த மூணு நாள் ஜில்லுனு உடம்பு குளிர்ந்திடும். 

ஆனா அதுக்கப்பறம் தான் பிரச்சனை ஆரம்பிக்குது பாருங்க... 

ரத்தக்கசிவு நடக்க ஆரம்பிக்கறதே 4,5,6 நாட்கள்ல தாங்க.. 

காய்ச்சலோட போக்க பாருங்க. 

முதல் மூன்று நாள் 103-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டுனு குறையுது , ரெண்டு நாள் குறையுற காய்ச்சல் திடீர்னு 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏறுது.. 

ஆக, நாம் ஜாக்கிரதையா இருக்க வேண்டியது 4,5,6 நாட்கள் தான் 

முதல் மூன்று நாட்கள்ல , உடல் உஷ்ணத்தால உடம்புல இருக்குற நீர் சத்து குறையுது ... 

நா வரண்டு போறதும் , சிறுநீர் சரியா போகாம இருக்குறது , இதெல்லாம் முதல் மூன்று நாட்கள் இருக்கும். 

அடுத்த மூன்று நாட்கள் தான் நமக்கு போர் காலம் ... 

இதுல தான் ரத்த கசிவு நடக்க வாய்ப்பு இருக்கிறது. ரத்த கசிவு வெளியே பல்லில் ஈறுகளில் இருந்து வெளியேறலாம் .. மலம் கருப்பாக வெளியேறுவது இதெல்லாம் இந்த 4,5,6 நாட்களில் தான் நடக்கும் . 

ரத்த டெஸ்ட் களில் முதல் மூன்று நாட்கள் எந்த பாதிப்பும் வெளியே தெரியாது ஆனால் 4 ஆம் நாளின் தொடக்கத்தில் இருந்து தட்டணுக்கள் சரிவதை கண்டுபிடிக்கலாம் , 5 ஆம் நாளும் 6 ஆம் நாளும் அதனினும் குறைந்து பிறகு மீளும்.

ஆகவே டெங்குவை தெரிஞ்சுக்க ஈசியான மூணு ரூல்ஸ். 

ரூல் நம்பர் ஒண்ணு.

டெங்கி ஜுரம் அடிக்கிறது முதல் மூனு நாள். நாலாவது நாள் சட்டுனு குறைஞ்சுச்சுனா அலர்ட் ஆயிடணும்

ரூல் நம்பர் டூ 

நீர் சத்துதான் டெங்கிவோட டார்கெட் , அதனால் முடிஞ்ச அளவு தண்ணீர் ,  இளநீர், மோர்னு குடிச்சுட்டே இருக்கணும்.  

ரூல் நம்பர் 3 

இதுதான் முக்கியமான விசயம்.

காய்ச்சல் அடிச்சா இந்த முக்கியமான முதல் மூணு நாள கவுண்டர்ல மருந்து சாப்புட்டு வீணாக்கிட்டு, 4,5,6 ஆவது நாள் ரத்தக்கசிவு நடக்கும் போதும் கண்டுக்காம இருந்தா, எந்த ஆஸ்பத்திரில சேந்தாலும் காப்பாத்துறது சிரமம் . 

இந்த மூணு ரூல்ஸயும் தெரிஞ்சிருந்தா டெங்கி போட்ற ஸ்கெட்ச்ல சிக்காம ஈசியா தப்பிச்சுறலாம்.

   *******************************************************************

அடுத்த எச்சரிக்கை வரவிருக்கும் சுனாமி பற்றி! 

இதைப்பற்றி ' ஜுனியர் விகடனில்கூட' இதே விபரங்களைத்தாங்கி கட்டுரை வந்திருக்கிறது.

இப்போது ' வாட்ஸ் அப்'பில் வந்த விபரங்கள்....

கடும் எச்சரிக்கைகக்கான பதிவு இது.. 




🔴" மீண்டும் சுனாமி - 2017, டிசம்பர் 31க்குள் ". சரியான தேதி மட்டும் குறிப்பிடப்பட வில்லை... ஆனால் இந்தமுறை முன்பை விட "பலமடங்கு" அளவில் பெரியது என்பது தான் அதிகாரப் பூர்வமான தகவல் 🔴

🔴இது 11 நாடுகளை கடுமையாக பாதிக்கக் கூடியதாம், குறிப்பாக ❗தமிழ்நாடும், கேரளாவும்தான்❗ 
ஏனென்றால் இந்தமுறை சுனாமி ஆக்ரோஷமாக ஆரம்பிப்பதே நம் இந்தியப்பெருங்கடலில் இருந்து தானாம்...🔴

🔴இது தொலைவில் உள்ள வடகிழக்கில் தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும், வடமேற்கில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வரை இதன் வீச்சு பாதிக்கும் என்றால்... இந்தியப்பெருங்கடல் அருகிலேயே உள்ள நம் "தமிழ்நாடு"  மற்றும் கேரளாவின் நிலையை சற்றே நினைத்துப் பாருங்கள்...🔴

🔴இந்த தகவலைத் தெரிவித்தவர் Thiruvandrum Forest Wala, Tamilnadu Border, B.K.Research Association - Director Mr.BabuKalayil, என்பவர்... இவர்தான் 2004-லும் சுனாமி வருவதற்கு முன்பாகவே தகவல் தெரிவித்தவர்... அப்போது இந்தியாவே அறிந்திராத சுனாமி என்பதால் யாரும் கவனம் கொள்ளவில்லை... ஆனால் சுனாமிக்குப் பின்னரே இவர், முன் அறிவிப்பு கொடுத்தற்காக பாராட்டுப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது... 

இவர்தான் தற்போது "வருமுன் காப்பதே சிறந்தது" என்பதற்காக இந்த தகவலைத் தெரிவித்ததுடன், அதை  Pரிமெ Ministerக்கும், தமிழ்நாடு Cஹிஎஃப் Ministerக்கும் கடந்த 20.09.2017 அன்றே அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தி உள்ளார்... 

இதை படிக்கும் நீங்களும் இச்செய்தியை உறுதிசெய்து கொள்ள விரும்புவோராயின், தொடர்புக்கான எண் (திரு.பாபுகளைல் - 
  +91 9400037848)... மேலும் Google-ல் Babu Kalayil என்று Search செய்தால், இதற்கான அத்தனை ஆதாரங்களையும் நீங்களே பார்த்துக் கொள்ளலாம்... 🔴

🔴இது எங்கோ! எப்போதோ? அல்ல... இன்னும் 1மாதத்தில் கடலோர மக்கள் மட்டுமின்றி, நாம்  அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இயற்கை பேரழிவு என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவோம்...🔴

🔴இயற்கை சீற்றத்தை மனிதனால் தடுக்க முடியாது... ஆனால் தகுந்த முன்னறிவிப்பு இருந்தால் நிச்சயம் தற்காத்துக் கொள்ள முடியும்...🔴

🔴இந்த இயற்கை சீற்றம் பற்றி தெரிந்து 41 நாட்கள் ஆகியும், இதுவரை எந்த ஒரு மீடியாவும் அழுத்தமாக பதிவு செய்யவில்லை... ஆனால் இந்த இயற்கை சீற்றம் நடந்த பின்னர் அத்தனை மீடியாக்களும், அதன் பாதிப்புகளையும், மக்களின் கண்ணீர்களையும், TV-ல் தொடர்ந்து காட்டிப்பணம் சம்பாதித்துக் கொள்வார்கள்🔴

🔴ஆகவே நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள (முடியும்)வேண்டும்...🔴

🔴இது நம்முடைய
ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் சம்பந்தப்பட்டது என்பதால்... இதை யாரும் அலட்சியமாக பொருட்படுத்தாமல், தயவுசெய்து நம் மக்களை முடிந்தவரை பாதுகாப்பதற்காகவே பகிர்வோம்...🔴

🔴நம்முடைய இந்த பகிர்வு அரசாங்கத்தையும் அரசாங்க அதிகாரிகளையும் முடிக்கிவிடப்பட்டு, அத்தனை மீடியாக்களால் வற்புறுத்தி சொல்லப்பட்டு, கடைகோடி மனிதர்கள் வரை விழிப்புணர்வை ஏற்படுத்தி, அது நம் கடலோர மக்களைக் காக்கவேண்டி தகுந்த முன்னேற்ப்பாடுகள் செய்யப்படுத்தப்பட வேண்டும்...🔴

🔴தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று அரசியலுக்காக பேசும் அத்தனை "வாய்களும்" இக்கணம் முதல் விழிப்புணர்வுக்காக பேசி,  விலைமதிப்பில்லாத மனித உயிர்களுக்கு தகுந்த முன் ஏற்பாடுகளை செய்து தர வழி வகுக்கட்டும்...🔴

🔴ஒரு ஜல்லிக்கட்டில் இணைந்த நம்முடைய What's Up பலத்தால், நாம் நம் காளை மாடுகளின் உயிர்களைக் காப்பாற்றினோம்... அதை விடத் துரிதமாய் செயல்பட்டு அத்தனை சமூக வலைதளங்களிலும் பரப்பி, நம்முடைய கடலோர மக்களின் உயிர்களையும் காப்பாற்றுவோம்...🔴

பொதுநலன் கருதும் தமிழக இளைஞர்களில் ஒருவன்... நன்றி...




22 comments:

முற்றும் அறிந்த அதிரா said...

படிக்கவே நடுங்கும் தகவல்கள்.. பகிர்ந்தமைக்கு நன்றி மனோ அக்கா.

ஸ்ரீராம். said...

​டெங்கி பற்றிய உபயோகமான தகவல்கள்.

சுனாமி எந்த நாளில் வரும் என்றே தெரியாமல் எத்தனை பேர் எங்கே ஓடமுடியும்? தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் உட்பட இவற்றை முன்கூட்டியே கணிக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்கள். உள்ளுணர்வை நம்பி அரசாங்கம் என்ன முன் எச்சரிக்கை செய்யமுடியும்? விதிப்படி நடக்கட்டும்!​

:)))

middleclassmadhavi said...

Useful information, thanks for sharing

வெங்கட் நாகராஜ் said...

முதல் எச்சரிக்கை - பலரும் அலட்சியமாக இருந்து விடுகிறார்கள் - பிறகு அவதிப் படுகிறார்கள்.

இரண்டாம் எச்சரிக்கை - இன்னுமொரு சுனாமியா? நம் நாடு தாங்காது!

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றிசகோதரியாரே

KILLERGEE Devakottai said...

ஒவ்வொரு விடயங்களும் மக்களை பீதியை கிளப்பிக் கொண்டு இருக்கிறது.

நிச்சயமாக இது பலருக்கும் பயனுள்ள தகவல்கள்தான் நன்றி சகோ.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தேவையான எச்சரிக்கைகளுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

பயனுள்ள தகவல்களின் பகிர்வு.

இயற்கையின் சீற்றம் தணியப் பிரார்த்திப்போம்.

துரை செல்வராஜூ said...

பதிவில் வழங்கியுள்ள செய்திகளை எத்தனை பேர் கேட்டு நடந்து கொள்வார்கள்?..

இன்னொரு சுனாமி வந்தாலும் அதனுடன் செல்பி எடுத்துக் கொள்ளவதற்குத்தான் ஆர்வமாக இருப்பார்கள்..

பூ விழி said...

இரண்டிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்ற பதிவு நன்றி

Anuprem said...

டெங்கு பற்றிய செய்திகள் மிக சிறப்பு...

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் க்ருத்துரைக்கும் அன்பு நன்றி அதிரா!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்! நிச்சயமில்லாத ஒன்றை எதிர்பார்த்து எதுவும் செய்ய முடியாது தான். ஆனால் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும். மக்களும் அந்த நேரத்தில் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கலாம்!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice feedback Madhavi!

மனோ சாமிநாதன் said...

அழகான கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி பூவிழி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்!!