Sunday, 5 February 2017

பென்சில் ஓவியம்!!!

புத்தக அலமாரியில் அலசிக்கொண்டிருந்த போது கிடைத்த  பழைய நோட்டில் இந்த ஓவியம் இருந்தது. வெறும் பென்சிலாலும் கூர்மையான கருப்பு ஸ்கெட்ச் பேனாவாலும் வரைந்தது.



1995ல் வரைந்திருக்கிறேன். வரைந்து பத்து வருடங்க‌ளுக்கு மேல் ஆகி விட்டன!

17 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...


//1995ல் வரைந்திருக்கிறேன். வரைந்து பத்து வருடங்க‌ளுக்கு மேல் ஆகி விட்டன!//

பத்து வருடங்கள் மட்டுமா ? இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன போலிருக்குதே.

இருப்பினும் படத்தில் இன்னும் ஜீவன் உள்ளது.

பாராட்டுகள் + வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

>>>>>

பிலஹரி:) ) அதிரா said...

வாஆஆஆஆவ்வ்வ் என்னா சூப்பரா இருக்கு மனோ அக்கா... மிக அழகு, இப்பவும் ட்றை பண்ணலாமே.

இராய செல்லப்பா said...

கணக்கு தவறுகிறதே! 1995 இல் வரைந்த படம் என்றால் இப்போது 22 வருடங்கள் அல்லவா ஆகிறது? எத்தனை வருடங்கள் ஆனால் என்ன, அந்த அழகியின் இளைமை குறைந்தாவிடும்? (இப்போதெல்லாம் வரைவதில்லையா நீங்கள்?)

-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் சகோதரியாரே
படம் அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! அருமை அம்மா...

கோமதி அரசு said...

அழகான ஓவியம்.

Angel said...

ரொம்ப அழகா இருக்குக்கா ..மகள் தான் இப்போ படம் வரைகிறாள் அவளுக்கு ஒரு பாடம் ஆர்ட் என்பதால் .அவள்கிட்ட காட்டணும் இந்த பென்சில் டிராயிங்கை
இந்த படத்தின் கண்கள் முகம் விழி தலை முடி எல்லாம் கொள்ளை அழகு ..frame போடுங்கக்கா

மனோ சாமிநாதன் said...

20 வருடங்கள் என்றெழுதுவதற்கு பதில் 10 வருடங்கள் என்று எழுதி விட்டேன். வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்னன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அதிரா! இப்போதெல்லாம் இரண்டு மணி நேரம் கூட சேர்ந்தாற்போல உட்கார நேரம் கிடைப்பதில்லை. அதோடு உள்ளூற ஒரு நெருப்புப்பொறி இருக்க வேன்டும் தன்னை மறந்து வரைவதற்கு! ரொம்ப வருடங்களாக அது காணாமல் போய் விட்டது. சென்ற வாரம் தாம் ரொம்ப வருடங்களுக்கு பிறகு தூரிகைகள், வண்ண‌ங்கள் வாங்கி வந்தேன். விரைவில் வரைய ஆரம்பிப்பேன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் செல்லப்பா யக்யஸ்வாமி!

22 வருடங்கள் என்றெழுதுவதற்கு பதில் 10 வருடங்கள் என்று தவறுதலாக எழுதி விட்டேன். நான் ஓவியம் வரைந்து ரொம்ப வருடங்களாகின்றன. சமீபத்தில் சகோதரர் கில்லர்ஜிக்காக ஒரு ஓவியம் வரைந்து கொடுத்தேன். அவ்வளவு தான்! இனி தான் வரைய ஆரம்பிக்க வேண்டும்!

மனோ சாமிநாதன் said...

இனிய வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டிற்கு மகிழ்வான நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

மனந்திறந்து பாராட்டி என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியதற்கு அன்பு நன்றி ஏஞ்சலின்!

ஸ்ரீராம். said...

படம் மிக நன்றாயிருக்கிறது.

Anuprem said...

ரொம்ப அழகா வரைந்து இருக்கீங்க..

angelin சொன்ன மாதரி ..கண்களும், முடியும், உதடுகளும் ..ஆஹா..சூப்பர்..

கீதமஞ்சரி said...

அந்தக் கண்களில்தான் என்னவொரு ஈர்ப்பு... அபாரம்.. பாராட்டுகள் மேடம்.