Friday, 30 September 2016

வெங்காய பக்கோடா!!

ரொம்ப நாட்கள் கழித்து ஒரு சமையல் குறிப்பு! எல்லோருக்கும் பிடித்த குறிப்பு என்பது தான் இதில் ஸ்பெஷல்! அதுவும் மற்றெல்லா சமயங்களையும் விட மழைக்கால மாலை நேரங்களில் இதை செய்யும்போது ருசி இன்னும் கூடுதலாகவே தெரியும்! அது தான் வெங்காய பக்கோடா!
இதற்கு பெரிய வெங்காயம் தான் நன்றாக இருக்கும். இனி குறிப்பிற்கு போகலாம்!




வெங்காய பக்கோடா:

தேவையான பொருள்கள்:

பெரிய வெங்காயம் நான்கு
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் 3
மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
பெருங்காயம் சிறிய கோலி அளவு
சோம்பு 1 ஸ்பூன்
நறுக்கிய கறிவேப்பிலை 2 மேசைக்கரண்டி
பொடியாக அரிந்த கொத்தமல்லி 2 மேசைக்கரண்டி
நெய் 1 மேசைக்கரண்டி
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு தேவையான அளவு

செய்முறை:



வெங்காயத்தை நீள நீளமாக, மெலிசாக அரிந்து கொள்ள‌வும்.
பெருங்காயத்தை ஒரு கிண்ண‌த்தில் போட்டு சிறிது வென்னீரை ஊற்றி வைக்கவும். இதை பல மணி நேரங்களுக்கு முன்னாலேயே செய்து கொள்ளலாம். அதனால் பக்கோடா செய்யும்போது பெருங்காயல் நன்கு இளகி இருக்கும்.

வெங்காய‌த்தையும் பச்சை மிளகாயையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கையால் நன்கு நெரித்துப்பிசையவும்.

இப்போது கடலை மாவை சலித்து வெங்காயத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு பிசிறவும். அதிகமாக போட்டு விட்டால் மெது பக்கோடா ஆகி விடும். கொஞ்சமாக போட்டால் தூள் பக்கோடா ஆகி விடும். அதனால் மாவு வெங்காய‌த்தில் நன்கு ஒட்டுமாறு தேவையான அளவு சேர்த்துப்பிசையவும். பெரும்பாலும் 2 கப் கடலைமாவு சரியாக இருக்கும். இதற்கு 1 கப் சலித்த அரிசி மாவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், சோம்பு தகுந்த உப்பு, பெருங்காய விழுது எல்லாம் கலந்து நன்கு பிசையவும்.நன்கு பிசைந்ததும் நெய்யை சூடாக்கி மாவில் ஊற்றி மறுபடியும் பிசையவும். எண்ணெயை சுட வைத்து மிதமான சூட்டில் சிறு சிறு பக்கோடாக்களாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
சுவையான வெங்காய பக்கோடா தயார்!

 

16 comments:

KILLERGEE Devakottai said...

புகைப்படமே திங்கும் ஆவலைத் தூண்டுகின்றது

Yaathoramani.blogspot.com said...

எமக்குப்பிடித்த ரெஸிபி
அதுவும் நீங்கள் சொல்வது போல்
மழையில் வெளியில் செல்ல முடியாதபோது
உடன் நினைவுக்கு வருவது இதுதான்
படங்களுடன் செய்முறை விள்க்கம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

வெங்காய பக்கோடா செய்முறையும், படங்களும், அதற்கான பொருள் அளவுகளும் என எல்லாமே ஜோர் ஜோர். பொதுவாக இது எல்லோருக்குமே பிடித்ததோர் திண்பண்டம்தான். அதுவும் மழை காலத்தில் சுடச்சுட என்றால் கேட்கவே வேண்டாம்.

நாக்கில் நீர் ஊற வைக்கும் பகிர்வுக்கு நன்றிகள்.

சாரதா சமையல் said...

வெங்காய பக்கோடா செய்முறை மிக அருமை அக்கா. என்னுடைய பாவ் பாஜியை ருசிக்க எனது வலைப்பூவுக்கு வாருங்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
எனக்குப் பிடித்த நொறுக்குத் தீனி

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் பிடித்த நொறுக்குத் தீனிதான். தூள் பக்கோடா ரொம்பவே பிடிக்கும் எங்கள் இருவருக்குமே.
மெது பக்கோடா ஒரு சுவை என்றால் தூள்பக்கோடா கர கர என்று தனி சுவை...

கீதா: மேற் சொன்ன எங்கள் கருத்துடன்... உங்கள் படம் நாவில் நீர் ஊற வைத்துவிட்டது இந்த வாரம் செய்துவிட வேண்டியதுதான்...

Yarlpavanan said...

சிறந்த வழிகாட்டல்
அருமையான உணவு

கோமதி அரசு said...

அருமையான வெங்காய பக்கோடா.

'பரிவை' சே.குமார் said...

படத்தைப் பார்த்ததும் பசிக்குதும்மா...

வெங்கட் நாகராஜ் said...

சுவையான குறிப்பு. பகோடா எனக்கும் பிடிக்கும்.....

kowsy said...

உண்ணத் தான் மனம் தேடுதே. படம் நாவில் எச்சில் ஊற வைக்கின்றது

துரை செல்வராஜூ said...

மிகவும் பிடித்தமான வெங்காய பக்கோடாவைப் பார்த்ததும் மகிழ்ச்சி..

மனோ சாமிநாதன் said...

அழகிய பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டிற்கு இனிய நன்றி சாரதா!