Sunday 27 December 2015

நலம் காக்கும் முத்திரைகள்!!!-பகுதி-2

அபான வாயு முத்திரை:




ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்புறத்திலும் நடு விர, மோதிர விரல்க்ளின் நுனிக்ள் கட்டை விரலின் நுனிகளுடனும் சேரும்போது இந்த முத்திரை உண்டாகிறது. 

பலன்கள்:

இந்த முத்திரைக்கு 'மிருத்யுசஞ்சீவினி' என்ற பெயரும் உண்டு. மரணத்தின் பிடிய்லிருந்து மீட்கும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. இந்த முத்திரையில் ஆகாயத்தின் சக்தி அதிகரிப்பதால் இரத்த குழாய்கள் விரிவடைகின்றன. மண்ணின் சக்தி அதிகரிப்பதால் இதயத்தசைகள் பலமடைகின்றன. ஹார்ட் அட்டாக் வராமல் இம்முத்திரை தடுக்கிறது. உயர் இரத்த அழுத்த்ம் உள்ளவர்கள் இந்த முத்துரையை தினமும் 15 நிமிடங்கள் வைத்துக் கொண்டால்  இரத்தஅழுத்தம் சீராகி விடும்.  மூட்டு வலி, முதுகுவலி, குதிகால் வலிகளைப் போக்குகின்றது. மலச்சிக்கலை சரியாக்குகிறது. வலிகளைப்போக்குகின்றது.


சின் முத்திரை அல்லது ஞான முத்திரை:




ஆள்காட்டிவிரல் நுனி கட்டை விரல் நுனியுடன் பொருந்த வேண்டும். மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருக்க வேண்டும். மூளையைக் கூர்மையாக்கும். மேலும் தூக்கமின்மையை நீக்கும். பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகள் இயக்கம் சுறுசுறுப்படையும்

பலன்கள்:

மனம் சுறுசுறுப்படையும். நல்ல தூக்கம் வரும். நீரிழிவிற்கு சிறந்த முத்திரை. பிட்யூட்டரி, தைராய்டு, கணைய சுரப்பிகளை ஒழுங்காக சுரக்க வைக்கின்றது. மனதை ஒருமுகப்படுத்த உதவும். மன அழுத்தத்தை போக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு மண்டலம் நன்றாக செயல்படும். ரத்த அழுத்தம் சீராகும்.

பிராண முத்திரை:





மோதிர விரல், சிறு விரல் நுனிகள் கட்டை விரல் நுனியுடன் பொருந்த வேண்டும். மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருக்க வேண்டும்

பலன்கள்:

நீரிழிவிற்கு சிறந்த முத்திரை. கண் குறைபாடுகள் நீங்குகின்றன. நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கிறது.  மூச்சானது சீராகும். அது சீராக செயல்பட வைக்க உந்து சக்தியே இம்முத்திரையின் தத்துவம். பிராணாயாமம் செய்வதற்கு ஒப்பானது இது. மூளைக்கு சீரான ரத்த ஓட்டத்தையும், பிராண வாயுவையும் கொண்டு சென்று அதை நன்றாகச் செயல்பட வைக்கும். அதனால் மனமும், உடலும் நலமடைகிறது. உடலுக்கு சுறுசுறுப்பை தருகிறது.  தோல் பாதிப்புக்கள், சொறி இவற்றை சரியாக்குகிறது. வயிற்றுப்புண்கள், மற்ர வயிறு சம்பந்தமான் நோய்களை சரியாக்குகிறது. மாத விடாய் குறைபாடுகளை சரியாக்கும்.

வாத முத்திரை:





ஆள்காட்டி விரல், நடு விரல் நுனிகள் கட்டை விரல் அடிப்பகுதியிலும். கட்டை விரல் இவ்விரு விரல்கள் மீதும் பதிய வேண்டும்.

பலன்கள்:

தலைவலி, மூட்டு வலி, முதுகுவலி, குதிகால் வலிகளைப் போக்குகின்றது. மூளையின் செயல்களுக்கு பிராண சக்தியும், பிராண வாயுவும் அதிக அளவில் கிடைப்பதால், மூளை சுறுசுறுப்பாகிறது.  தோல் வெடிப்புகள், முடி உதிர்தல் இவைகளையும் சீராக்குகுறது. மலச்சிக்கலை சரியாக்குகிறது. வலிகளைப்போக்குகின்றது.

வாயு முத்திரை : காற்றிற்கான முத்திரை:




 சுட்டு விரலை கட்டை விரலின் அடிப்பகுதியிலும் கட்டை விரலால் சுட்டுவிரலின் மேல் இலகுவாகத் அழுத்தியும் மற்றைய விரல்கள் நீட்டியும் இருக்க வேண்டும்.

பலன்கள்:

 மூட்டு வாதம், ஏனைய வாத நோய்கள் தீரும்.
 கழுத்து முதுகெலும்பு அழற்சி (Cervical Spondilytis) முக நரம்பு செயலிழப்பு (facial paralysis),  வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு சரியாகும். நரம்பு மண்டலத்தை பாதுகாத்து மன அழுத்தத்தை குறைத்து, தலைவையையும் போக்குகிறது. உடலில் இருக்கும் அதிகப்படியான வாயுவை குறைக்கிறது.  மலச்சிக்கலை சரியாக்குகிறது. இந்த முத்திரை வைத்துக்கொண்ட சில நிமிடன்களிலேயே தூக்கமின்மை நீங்கி தூக்கம் கண்களை தழுவும்.

சூரிய முத்திரை:





மோதிர விரலின் நுனி கட்டை விரலின் அடியிலும் கட்டை விரல் மோதிர விரலைத் தொட்டுக்கொண்டும் இருப்பது சூரிய முத்திரை.

பலன்கள்:

 தைராய்டு சுரப்பியின் மையத்தை கூர்மையாக்கும்
 உடலில் கொழுப்பைக் கரைத்து நிறையைச் சீர் படுத்த உதவும்
பதட்டத்தைப் போக்கும்.  இதில் நெருப்பின் சக்தி அதிகரித்து சளி நீங்குகிறது
மலச்சிக்கலை சரியாக்குகிறது. இம்முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று 45 நிமிடங்கள் செய்யலாம்.
.
வருண முத்திரை:




கட்டை விரலின் நுனியுடன் சுண்டு விரல் நுனியை வைத்து சற்று அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை இரு கைகளிலும் செய்ய வேண்டும்.

பலன்கள்:

இந்த முத்திரையை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் சர்க்கரை நோய் அடியோடு கட்டுக்குள் அடங்கும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். மலச்சிக்கலை சரியாக்குகிறது.

ரத்த அழுத்த சீர் முத்திரை

இரண்டு கைகளிலும் மோதிர மற்றும் நடுவிரல் நுனிகளை உள்ளங்கையில் வைக்கவும் மற்ற விரல்கள் நீட்டியபடி இருக்கவும். இந்த முத்திரை ரத்த அழுத்தத்தை சீரமைக்க உதவுகிறது.

நீர் குறைக்கும் முத்திரை:

சுண்டு விரலின் நுனி கட்டை விரலின் அடிப்பாகத்திலும் கட்டை விரல் சுண்டு விரல் மீதும் பதிய வேண்டும்.

பலன்கள்:

கிளாகோமா கண் நோய் உள்ளவர்களுக்கு இந்த முத்திரை மிகவும் சிறந்தது. கண்ணில் அதிகப்படியான நீரை வெளியேற்றுகிறது. அளவுக்கதிகமான வியர்வையையும் குறைக்கின்றது. வயிற்றில் அளவுக்கதிகமாக சுரக்கும் அமிலங்களைக் குறைப்பதால் அசிடிடி குறைந்து, வயிற்றுப்போக்கு முதலிய தொல்லைகள் சரியாகும்.

முதுகு வலிக்கான முத்திரை:

வலது கட்டை விரலின் நுனியுடன் சிறு விரல், நடு விரல்களின் நுனிகள் பொருந்த வேண்டும். அதே சமயம் இடது கை கட்டை விரலின் முதற்கோடு ஆள்காட்டிவிரலின் நகம் மீது பதிய வேன்டும்.

பலன்கள்:

முதுகு வலிக்கான சிறந்த முத்திரை. தண்டுவடத்தின் வழியே செல்லும் நரம்புகளின் பாதிப்பால் ஏற்படும் வலியை சரி செய்யும்.

நில முத்திரை [ பூமி முத்திரை]:





மோதிர விரலின் நுனியும் கட்டை விரலின் நுனியும் சேரும்போது பூமி முத்திரை உண்டாகுகிறது.

பலன்கள்:

எலும்புகளின் அடர்த்திக்குறைவை நீக்கும். எலும்புகளுக்கும் மூட்டுக்களுக்கும் சக்தி கொடுக்கும் முத்திரை. இந்த முத்திரை வைத்துக்கொண்ட சில நிமிடன்களிலேயே தூக்கமின்மை நீங்கி தூக்கம் கண்களை தழுவும். உடலின் பலவீனத்தைப்போக்கி எடையை அதிகரிக்கச் செய்யும். இம்முத்திரையை ஒரு வேளைக்கு 15 நிமிடங்கள் என்று 45 நிமிடங்கள் செய்யலாம். தைராய்டு சுரப்பிகளின் அதிகப்படியான சுரப்பைக்குறைக்கிறது

17 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான தகவல்கள். சேமித்துக்கொண்டேன்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஒவ்வொன்றுக்கும் அற்புத விளக்கம்..கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Menaga Sathia said...

பயனுள்ள குறிப்புகள் அம்மா..

KILLERGEE Devakottai said...

தகவல் களஞ்சியம் நன்று சகோ

Asiya Omar said...

நல்ல பகிர்வு அக்கா!

middleclassmadhavi said...

கடைப்பிடிக்க ஆவலுடன் முயற்சிக்கிறேன் சகோதரி!
ஒரு சந்தேகம் - முத்திரைகளை ஒரு கையினாலோ இரு கைகளினாலோ புகைப்படத்தில் உள்ளபடி செய்ய வேண்டுமா? அதாவது சில முத்திரைகளை ஒரு கையினாலும் சில முத்திரைகளை இரண்டு கைகளினாலும் செய்ய வேண்டுமா?

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ரூபன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி மாதவி! இந்த முத்திரைகள் யாவற்ரையும் இரண்டு கைகளினாலேயும் செய்ய வேண்டும் மாதவி. இடது கையினால் செய்வது உடலின் வலது பக்கத்திற்கும் வலது கையால் செய்வது உடலின் இடது பக்கத்திற்கும் பலன்களை அளிக்கிறது. சில குறிப்பிட்ட முத்திரைகள் மட்டும் இடது கையில் ஒரு விதமாகவும் வலது கையில் ஒரு விதமாகவும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டியிருக்கும். அவற்றைப்பற்றி நான் இங்கே குறிப்பிடவில்லை. மிக முக்கியமான முத்திரைகள் பற்றி மட்டுமே சொல்லியிருக்கிறேன்.

Iniya said...

பயனுள்ள பதிவு மிக்க நன்றி! தொடர்கிறேன்!

கரந்தை ஜெயக்குமார் said...

பயனுள்ள பதிவு
நன்றி சகோதரியாரே

மோகன்ஜி said...

நின்ரைவாக இருக்கிறது உங்கள் விளக்கங்கள்.. உபயோகமானவை.

Unknown said...

ஒருவர் ஒரு நாளில் எத்தனை முத்திரைகள் பிடிக்கலாம் நன்றி

மனோ சாமிநாதன் said...

தினமும் காலையிலும் இரவிலும் எல்லா முத்திரைகளையும் நிச்சயம் செய்யலாம் ராதாமணி!! நான் வாக்கிங் போகும்போது பெரும்பாலும் இந்த முத்திரைகளை செய்வேன். சில சமயம் டிவி பார்க்கும்போது செய்வேன்.