Friday 1 May 2015

வண்ணத்துப்பூச்சிகள்!!!

என் தங்கையும் அவரின் கணவரும் ஊரிலிருந்து வந்து இங்கே 10 நாட்கள் தங்கிச் சென்றார்கள். 25 வருடங்கள் இங்கிருந்து விட்டு, பெண்ணின் மருத்துவக்கல்விக்காக ஊருக்குச் சென்று விட்டார்கள். பல இடங்களை சுற்றிப்பார்க்கையில், கடந்த 14 வருடங்களின் இடைவெளியில் ஐக்கிய அமீரகம் ரொம்பவே மாறிவிட்டதை ரசித்துப்பார்த்தார்கள். சமீபத்தில் துபாய் அருகே உள்ள MIRACLE GARDEN-ஐ ஒட்டி திறக்கப்பட்ட ' வண்ணத்துப்பூச்சிகள் அரங்கத்திற்கு' அவர்களை அழைத்துச் சென்றோம்.

இந்த வண்ணத்துப்பூச்சிகள் தோட்டம் பற்றிய சில தகவல்கள்:

INDOOR BUTTERFLY GARDEN என்ற வகையில் இது உலகிலேயே பெரியதும் சிறந்ததுமாகும்.
பெரிய வண்ண‌த்துப்பூச்சிகள் தோட்டம் என்ற வகையில் இது உலகிலேயே இரண்டாவது பெரிய தோட்டமாக விளங்குகிறது. [ முதலாவது மலேஷியாவில் உள்ளது]
இதற்குள் ஒன்பது அரங்குகளும் வண்ண‌த்துப்பூச்சிகள் மியூசியமும் உள்ளன.
ஒவ்வொரு அரங்கிலும் பல நாடுகளிலிருந்தும் வர‌வழைக்கப்பட்ட 24 வகை வண்ண‌த்துப்பூச்சிகள் பறந்து கொண்டிருக்கின்றன‌.
மொத்தத்தில் ஏற்த்தாழ 35000 வண்னத்துப்பூச்சிகள் குளிரூட்டப்பட்ட இந்த அழகிய அரங்குகளில் செடிகள், கொடிகளுக்கிடையே பறந்து கொண்டிருக்கின்றன!
இந்த அரங்குகளின் அருகில் மிகப்பெரிய மலர்த்தோட்டமும் ரசிப்பதற்கு இருக்கிறது!
மாற்றுத்திறனாளிகளுக்கும் மூன்று வயது வரை குழந்தைகளுக்கும் அனுமதிக்கட்டணமில்லை.

இங்கு சென்ற் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்:



 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
என் சகோதரியின் கையில் ஒரு வண்ண‌த்துப்பூச்சி அமர்ந்திருக்கிறது!
 
 
 
 
 

24 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மனதை கவரும் படங்கள்...

ஸ்ரீராம். said...

அருமை. ரசித்தேன்.

துளசி கோபால் said...

அருமை. முன்பொருக்கில் சந்தோஸாவில் பார்த்த நினைவு. இப்போ சிங்கை விமான நிலையத்துக்குள்ளேயே ஒன்று அமைத்துள்ளனர்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு சகோதரியாரே
படங்களே இப்படியென்றால்,
நேரில் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்
நன்றி சகோதரியாரே

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வண்ணத்துப்பூச்சிகளின் அரங்கிற்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி. அழகான புகைப்படங்கள்.

கீதமஞ்சரி said...

வண்ணமயமான காட்சிகளும் வண்ணத்துப்பூச்சிகள் தோட்டம் பற்றிய தகவல்களும் அற்புதம். பகிர்வுக்கு நன்றி மேடம்.

தி.தமிழ் இளங்கோ said...

அழகான வண்ண மலர்கள் நிரம்பிய தோட்டம். சகோதரியாரே INDOOR BUTTERFLY GARDEN இல் வண்ணத்துப் பூச்சிகள் எங்கே? அரங்கத்துள் அவற்றை எடுக்க அனுமதி இல்லையா?

KILLERGEE Devakottai said...


இது எங்கு சார்ஜாவிலா ? இல்லை துபாயிலா ?

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான மிக அழகான படங்களுடன் கூடிய செய்திகளும் கேட்கவே இனிமையாக உள்ளன.

பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

Yarlpavanan said...

சிறந்த பதிவு
தொடருங்கள்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா
தகவல்கள் பிரமிக்கவைக்கிறது.. படங்கள் எல்லாம் அழகு.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மனோ சாமிநாதன் said...

ரசித்ததற்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

நானும் ச்ந்தோஸாவில் பார்த்த நினைவு இருக்கிறது துளசி! ஆனால் அவ்வளவு தெளிவாய் ஞாபகமில்லை. என் கணவர் தான் விபரமாகச் சொன்னார்கள்! சிங்கை ஏர்ப்போர்ட்டில் இருப்பது இதுவரை எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
தகவல்களுக்கும் பாராட்டிற்கும் அன்பு ந‌ன்றி!

மனோ சாமிநாதன் said...

ரசித்து பின்னூட்டம் எழுதியதற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுரைக்கு அன்பு நன்றி கீதமஞ்சரி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

வண்ணத்துப்பூச்சிகள் அரங்குகள் முழுவதும் அங்கங்கே பறந்து கொண்டிருக்கின்றன. அவைகளைத் தனியாக படமெடுக்க முடியவில்லை. இருப்பினும் என் தங்கையின் கையில் ஒரு வண்ண‌த்துப்பூச்சி அமர்ந்திருப்பதை உங்களுக்காக நான் மறுபடியும் இணைத்திருக்கும் புகைப்படத்தில் பாருங்கள்!

மனோ சாமிநாதன் said...

உங்கள் கேல்வியின் மூலம் தான் நான் இத்தோட்டம் எங்கிருக்கிறது என்பதை எழுதத் தவறி விட்டேன் என்பதை உணர்ந்தேன் சகோதரர் கில்லர்ஜி! முகப்பில் விபரத்தை எழுதி விட்டேன்.

இந்தத் தோட்டம் துபாய் அருகேயுள்ள MIRACLE GARDEN-ஐ ஒட்டி அமைந்துள்ள‌து!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் யாழ்பாவணன்!

மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

துளசி கோபால் said...

http://thulasidhalam.blogspot.co.nz/2013/05/blog-post_10.html

நேரம் இருந்தால் எட்டிப்பாருங்க:-)

நிலாமகள் said...

அழகுக் குவியல்!

Iniya said...

அழகிய பூந்தோட்டம் டுபாயில் உண்மையில் மகிழ்சிகரமான விடயம் தான் பாலைவனத்தில் பட்டாம் பூச்சிகள் ம்.ம்.ம் ரசித்தேன்.அங்கு வரவேண்டும் என்றும் ஆவலும் உண்டு. பதிவுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள் ...!