Monday, 30 March 2015

முத்துக்குவியல்-35!

படித்து ரசித்த முத்து:

திருமணத்தில் எதற்காக கல்கண்டும் சந்தனமும் மலர்களும் வைக்கப்படுகின்றன?

கசக்கினாலும் மணப்பேன்என்று சொல்வதற்கு மலரும்,



கடித்தாலும் இனிப்பேன் என்று சொல்வதற்கு கல்கண்டும்



கரைந்தாலும் நறுமணம் தருவேன் என்று சொல்வதற்கு சந்தனமும்



வைக்கப்படுகின்றனவாம்.  இப்படி இறையன்பு சொல்லியிருக்கிறார்!

தகவல் முத்து

மாமியார் கிணறு மருமகள் கிணறு!



 விசித்திரமான பெயருடன் அழைக்கப்படும் ஒரு பெரிய கிணறு மண்ண‌ச்சநல்லூர் அருகே திருவள்ளாரை என்ற கிராமத்தில் உள்ளது. ஸ்வஸ்திக் சின்ன வடிவில் நான்கு புறமும் படிக்கட்டுக்கள்  அமைக்கப்பட்டு கிணற்றின் தரைம்மட்டம் வரை இறங்கிச் செல்ல இந்தக் கிணற்றில் வசதி உள்ள‌து. நான்கு திசைகளிலும் படிக்கட்டுகள் இருப்பதால் மாமியார் ஒரு பக்கம் போனால் மருமகள் இன்னொரு பக்கம் அவருக்குத் தெரியாமல் போகலாமாம். மாமியார் குளிப்பது மருமகளுக்குத் தெரியாது. மருமகள் குளிப்பது என்று கிராம மக்கள் வேடிக்கையாகப் பேசுகிரார்கள். உண்மையில் இதுபோல் ஸ்வஸ்திக் வடிவ குளம் தமிழ் நாட்டில் வேறெங்குமில்லை. பல்லவ மன்னன் நந்திவர்மன் ஆட்சிக்காலத்தில் கம்பன் அரையன் என்ற குறுநில மன்னனால் கட்டப்பட்டது முழுவதும் கல்லால் ஆன இந்தக் கிணறு. தற்போது குளத்தில் தண்ணீர் இல்லையென்றாலும் கிணற்ரைச் சுற்றிலும் அழகான மரங்கள் வளர்க்கப்பட்டு, தொல்பொருள் இலாகாவினரால் சுற்றிலும் வேலி போடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது

மருத்துவ முத்து:

ப்ளூ பெரி பழம் ரத்தக்கொதிப்பிற்கு சிறந்த நிவாரணி. இந்தப்பழத்தில் அதிகமக இருக்கும் நைட்ரிக் ஆக்ஸைடு ரத்த நாளங்களை விரித்து ரிலாக்ஸ் பண்ணுவதே இதற்குக் காரணம்.
பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர்க்குழாய்களில் வருகிற‌ தொற்று நோய்க்கு காரணம் சிறுநீரகப்பாதையில் ஈ கொலி என்னும் பாக்டீரியா அதிக அளவில் இருப்பது தான் இதற்குக்காரணம். இந்தப்பழம் சிறந்த‌ ஆன்டிபயாடிக் மருந்தாக செயல் பட்டு இந்த பாக்டீரியாவை அழித்து விடுகிறது.
அதனால் ப்ளூ பெரி பழங்களை தினமும் ஒரு கைப்பிடி சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

அசத்திய முத்து:

கோயமுத்தூர் மக்கள் பெரும்பாலானவர்களுக்கு கோவை சிங்கா நல்லூரில் அமைந்திருக்கும் சாந்தி கேண்டீன் அல்லது சாந்தி பெட்ரோல் பங்க் பற்றி தெரியாமல் இருக்காது.

அதைப் பற்றிய மேலும் பல முக்கியத் தகவல்கள் இங்கே
.
கோவையில் எவ்வளவோ வழிகளில் பொதுமக்களின் பணத்தைப் பல வழிகளில் , தொழில் தர்மத்துக்குப் புறம்பாக அபகரிக்கும் பல நிறுவனங்கள், தனி நபர்கள் , மருத்துவர்கள், உணவகங்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியவர்களுக்கு இடையே, தான் சம்பாதித்த பணம் முழுக்க பொது மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படும் சில நம்பிக்கை மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவரான‌ சாந்தி கியர்ஸ் திரு. பி.சுப்பிரமணி அவர்கள் தன் மனைவியின் நினைவாக "சாந்தி சோஷியல் செர்வீசெஸ்" என்ற மக்களுக்கான பொது நல அமைப்பை நிறுவியவர்.

அவர்கள் மேற்கொண்டிருக்கும் நற்காரியங்களில் சில :

1.கோவையில் அதிக விற்பனை மற்றும் தரம் நிறைந்த எரிபொருள் விநியோகிக்கும் பெட்ரோல் பங்க். (இதன் சிறப்பு, எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் விலை ஏற்றம் இருப்பினும், முற்றும் முழுதாக அவை இங்கே தீரும் வரை பழைய விலை தான்.)

2. 24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம். எம்.ஆர்.பி. யில் இருந்து 20 சதவிகிதம் தள்ளுபடி இங்கே கிடைக்கிறது.. (மேலும் விற்பனை விலை மீதான அறக் கட்டளையால் ஏற்றுக் கொள்ளப் படுகிறது, 15 முதல் 20 கிலோமீற்றுக்கு உள்ளாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி.)

3. சாந்தி மருத்துவக ஆய்வகத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் எடுக்கப் படும் ஸ்கேன் , எக்ஸ்.ரே , உள்ளிட்ட பல விதமான முக்கியமான டெஸ்டுகளுக்கு மற்ற இடங்களில் இருந்து 50 இல் இருந்து 70 சதவிகிதம் வரை விலை குறைவு.

4. சாந்தி மருத்துவமனை - மருத்துவருக்கான கட்டணம் 30 ரூபாய்

5.டயாலிசிஸ் - முழுக்க முழுக்க அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் கொண்டு செயல்படும் இங்கே, ஒரு முறை டயாலிசிஸ் செய்து கொள்ள கட்டணம் வெறும் 500 ரூபாய்.
மேலும், 750 ரூபாய்க்கு மின் மயானம், ஒரு நாளிக்கு 10000 பேர் தற்போது உபயோகிக்கும் உணவகம், ரேடியாலஜி செண்டர் , ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி, அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவைகளைச் செய்து வருகிறார்கள்.

இதுவரை இந்த அறக்கட்டளைக்காக பொது மக்களிடம் அல்லது வேறு எங்கும் ஒரு ரூபாயாகக் கூட நிதி வசூலித்ததில்லை.
http://www.shanthisocialservices.org/index.html

46 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா
பூ,கல்கண்டு.சந்தனம் என்பவற்றின் தகவலை அறிந்தேன்.அத்தோடு. பகிர்ந்த ஏனைய தகவல் எல்லாம் நல் முத்துக்கள் அம்மா பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதலில் சொல்லியுள்ள படித்து ரஸித்த முத்து, சிந்திக்க வைக்கும் மிகச்சிறப்பான முத்தாக உள்ளது.

இதைச் சொல்லியுள்ள திரு. இறையன்பு அவர்களுக்கும், அதைப் பகிர்ந்துகொண்டுள்ள தங்களுக்கும் பாராட்டுக்கள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

தகவல் முத்து மிக அருமை.

//உண்மையில் இதுபோல் ஸ்வஸ்திக் வடிவ குளம் தமிழ் நாட்டில் வேறெங்குமில்லை.//

திருச்சிக்கே இது ஒரு பெருமை :)

//பல்லவ மன்னன் நந்திவர்மன் ஆட்சிக்காலத்தில் கம்பன் அரையன் என்ற குறுநில மன்னனால் கட்டப்பட்டது முழுவதும் கல்லால் ஆன இந்தக் கிணறு.//

நல்லதொரு சரித்திரத்தகவல்.

//தற்போது குளத்தில் தண்ணீர் இல்லையென்றாலும் கிணற்றைச் சுற்றிலும் அழகான மரங்கள் வளர்க்கப்பட்டு, தொல்பொருள் இலாகாவினரால் சுற்றிலும் வேலி போடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது//

கேட்கவே பசுமையாகவும் நிம்மதியாகவும் உள்ளது.

>>>>>

KILLERGEE Devakottai said...


மாமியார் - மருமகள் கிணறு தகவல்கள் அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மருத்துவ முத்து பலருக்கும் பயன் படக்கூடும்.

அசத்திய முத்து படிக்கப்படிக்க மனதுக்கு இதமாக உள்ளது.

இன்னும் மனித நேயம் உள்ள மக்கள் ஆங்காங்கே சிலர் உள்ளனர் என்பதை நினைக்கையில் + கேள்விப்படுகையில் சற்றே மனதுக்கு ஆறுதலாக உள்ளது.

தொடரட்டும் அவர்கள் சேவை + கருணை உள்ளம்.

Thenammai Lakshmanan said...

சாந்தி கியர்ஸ் பத்தி என் கணவரும் சொல்லி இருக்காங்க மேம். அருமையான பகிர்வு.

ஸ்வஸ்திக் கிணறு அழகா இருக்கு :)

நாவல் பழம் எப்போதும் கிடைப்பதில்லை. பகிர்வுக்கு நன்றி :)

UmayalGayathri said...

திருமண வரவேற்பு பொருட்களின் விளக்கம் அறியத்தந்தீர்கள்..

கிணறு ஸ்வஸ்திக் வடிவம் அழகான ஆச்சரியம்...!!!

ப்ளு பெரிப்பழம் டிரையாகவும் கிடைக்கும் தானே..? நல்ல தகவல்

அதிசயமுத்து அதிசயம் தான்..!!!

நன்றி அக்கா முத்துக்களுக்கு...

வெங்கட் நாகராஜ் said...

அனைத்துமே அருமையான முத்துகள்.... பகிர்வுக்கு நன்றி.

துளசி கோபால் said...

புதிய தகவல்கள். அனைத்தும் அருமை!

ஸ்வஸ்திக் குளத்தைச் சுட்டுக்கிட்டேன். நன்றி.

ஸ்ரீராம். said...

படித்தேன், ரசித்தேன். கிணறு செய்தியும், கோவைச் செய்தியும் ஏற்கெனவே படித்திருந்தாலும் ரசிக்க முடிந்தது. கோவைச் செய்தி முன்பு எங்கள் பாஸிட்டிவ் செய்திகளில் பகிர்ந்திருந்த நினைவு இருக்கிறது.

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்தல் முத்து - பலருக்கும் பயன்தரும் முத்து... நன்றி...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா

த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

priyasaki said...

எல்லாமே அருமையான தகவல்கள். நன்றிகள்.

ADHI VENKAT said...

அத்தனை முத்துக்களுமே அருமை.

கல்கண்டு, சந்தனம், பூ தெரிந்து கொண்டேன்.

ஸ்வஸ்திக் கிணறு - திருவெள்ளறையில் இந்த கிணறு கோவில் பிரகாரத்துக்கு வெளியே சற்று நடந்து போனால் இருக்கும். வெயிலின் கொடுமையால் நடக்க முடியாமல் பார்க்காமல் வந்து விட்டோம்.

சாந்தி கியர்ஸில் என் தோழி உமாவும், அவளது அம்மாவும் பல வருடங்கள் பணிபுரிந்திருக்கின்றனர்.நல்லவிதமாகவே சொல்லியிருக்கின்றனர். டிப்ளமோ முடித்த கையுடன் வேலைக்காக நானும் விண்ணப்பித்திருந்தேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சிதறல்கள் அருமை. ஸ்வஸ்திக் சின்ன வடிவில் கிணறு உள்ள இடம் திருவள்ளாரை அல்ல, திருவெள்ளறை. ஸ்வஸ்திக் குளம் என்றும் சக்கரக்குளம் என்றும் அழைக்கப்படும் இக்குளம் தமிழகத்தில் கட்டுமானத்திலும், கலை அழகிலும் சிறப்பு பெற்றது. அருகில் உள்ள வைணவக்கோயிலும், குறிப்பாக கோயிலின் நுழைவாயிலும் பார்க்க மிகவும் அழகாக இருக்கும்.

துரை செல்வராஜூ said...

ஸ்வஸ்திக் வடிவ குளத்தைப் பற்றிய தகவல் அருமை..

அனைத்தும் அழகான முத்துக்கள்..
சிறப்பான பதிவு..

RAMA RAVI (RAMVI) said...

முத்தான தகவல் முத்துக்கள்..அருமை.

மோகன்ஜி said...

முத்துக்கள் ஒவ்வொன்றும் முத்துமுத்தாய் இருந்தது மேடம்

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் சுவையான அருமையான முத்துக்கள். திரு இறையன்பு அவர்களின் விளக்கம் மிக மிக அருமை!!! அந்தக் கிணறு மிக அழகான வடிவமைப்பு புதிய தகவல். அதுவும் மாமியார், மருமகள் சுவாரஸ்யமாக இருக்கின்றது. ப்ளூ பெர்ரி ஆம் அந்தப் பழத்தைப் பற்றி அறிந்ததுதான் ஆனால் இங்கு நம் ஊரில் அந்தப் பழம் யானை விலை குதிரை விலை விற்கின்றதே! உலர் பழங்களும் தான்....ம்ம்ம் ப்ளூபெர்ரி, நாவற்பழம் வேறு வேறுதானே?!!

மருத்துவ முத்து உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது. மிக மிக நல்லதொரு விசயம்

கே. பி. ஜனா... said...

அசந்து போனோம் கோவை சிங்கானல்லூரில் சாந்தி சோஷியல் செர்வீசெஸ் பற்றிப் படித்து. வாழ்க அவர்கள் சேவை...

சரிதா said...

முத்து குவியல் மூலம் அரிய தகவல்களை அள்ளி கொடுத்துள்ளீர்கள்,
"சாந்தி சோஷியல் செர்வீசெஸ்" நான் அங்கு பல முறை சென்றுள்ளேன். அவர்களுடைய சேவை அனைத்தும் வியப்பாக இருக்கும்...
இந்த காலத்தில் இப்படியும் மனுசங்க இருக்காங்கனு தோணும் ...
நல்ல பகிர்வு ...நன்றி...

வாழ்க வளமுடன்....

கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான தகவல்கள் சகோதரியாரே
மனச்சநல்லூர் வழியாக பலமுறைசென்றிருக்கிறேன்
அடுத்த முறை அவ்வழி செல்லும் போது அவசியம் அக்கிணற்றினைக் காண்பேன்
நன்றி சகோதரியாரே

saamaaniyan said...

ஆஹா... மிக அருமையான விளக்கம் !

குளத்தின் அமைப்புக்கு சமயம் சார்ந்த காரணாம் இருக்கலாம் என தோன்றினாலும்... இந்த குளத்தில் குளிக்கும் மாமியாரை மருமகளோ அல்லது மருமகளை மாமியாரோ தள்ளிவிடுவதற்கு வாய்ப்பே இல்லை !!!

ஈ கொலி பாக்டீரியாவை தொழில் நிமித்தமாய் அறிந்தவன் என்ற முறையில் இது பற்றிய சில தகவல்களை கொடுக்க விரும்புகிறேன்... மாடு மற்றும் ஆட்டிரைச்சியிலும் இருக்க வாய்ப்புள்ள இந்த பாக்டீரியா மனித உடலுக்குள் செல்லும்போது வயிற்று போக்கு எற்பட வாய்ப்புள்ளது. சமைக்கப்படும்போது இரைச்சியின் வெப்பநிலை 70 டிகிரியை தாண்டிவிட்டால் இந்த பாக்டீரியா அழிந்துவிடும் என்பது ஆறுதலான விசயம் !

எத்தனை செயற்கை முத்துக்கள் வந்தாலும் அசத்தக் கூடிய நல்முத்துக்கள் சமூகத்தில் இருக்கின்றனதான் !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr



சாரதா சமையல் said...

அனைத்து முத்துக்களும் அருமை.

கீதமஞ்சரி said...

எல்லா முத்துக்களுமே எனக்குப் புதியவை. ரசித்தேன். ஸ்வஸ்திக் கிணறு வியக்கவைத்தது. சாந்தி சோஷியல் சர்வீஸ்கள் அனைத்தும் நெகிழ்த்துகின்றன. பணத்தையே பிரதானமாகக் கொண்டு வாழும் பலருள் இவர்களுடைய சேவை நிச்சயம் பாராட்டுக்குரியது. பகிர்வுக்கு நன்றி மேடம்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ரூபன்!

மனோ சாமிநாதன் said...

ரொம்ப நாட்களுக்குப்பிறகு உங்களின் விரிவான பின்னூட்டம் மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு ந்ன்றி சகோதரர் கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

ப்ளூ பெர்ரி நாவல் பழமில்லை தேனம்மை! செர்ரி பழம் போன்ற சிறிய பழம் இது! வெளிநாடுகளில் பரவலாகக் கிடைக்கும் இது சாதாரணமாக விலை அதிமாகவே இருக்கும்! வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

விரிவான, அழகான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி உமையாள் காயத்ரி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டி ரசித்ததற்கும் அன்பு நன்றி துளசி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

ஸ்வஸ்திக் கிணற்றை நீங்கள் நேரிலேயே பார்த்திருப்பதறிந்து மகிழ்ச்சியாக இருந்தது ஆதி! பாராட்டிற்கு இனிய நன்றி!

மனோ சாமிநாதன் said...

என் பதிவினைப்பாராடியதோடு, அதில் சில திருத்தங்களும் மேலும் அதைப்பற்றிய பல தகவல்களையும் எழுதியதற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டுக்களுக்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் துரை செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ராம்வி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி மோகன்ஜி!!

மனோ சாமிநாதன் said...

விரிவான பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி துளசிதரன்! ப்ளூ பெரி நாவல் பழம் அல்ல. இங்கும் அது யானை விலை, குதிரை விலை தான்!

மனோ சாமிநாதன் said...

இனிய பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி ஜனா!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் அறிந்திருந்த தகவலைச் சொன்னது சாந்தி கியர்ஸ் மேல் இன்னும் கூடுதல் நம்பிக்கையை வரவழைக்கிறது சரிதா! அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

ஸ்வஸ்திக் கிணறை பார்த்து விட்டு உங்கள் பாணியில் அழகிய பதிவொன்றை தாருங்கள் சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

ஈ கொலி பாக்டீரியா பற்றி நான் அறியாத தகவலைச் சொன்னதற்கு அன்பு நன்றி சாமானியன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சாரதா!

மனோ சாமிநாதன் said...

பதிவை ரசித்ததற்கும் பராட்டியதற்கும் அன்பு நன்றி கீதமஞ்சரி!