Thursday 13 November 2014

முத்துக்குவியல் -32!!

தகவல் முத்து:

காஸ்  சிலிண்டருக்கும் எக்ஸ்பைரி டேட் உண்டு. சிலிண்டரின் மேல் வ்ட்டமான கைப்பிடியைத்தாங்கிக்கொன்டிருக்கும் மூன்று பட்டியான கம்பிகளில் தான் நம் காஸ் சிலிண்டரின் எக்ஸ்பைரி டேட் போடப்பட்டிருக்கும். ஒரு வருடம் நான்கு காலாண்டுகளாய் பிரிக்கப்பட்டு அதற்கு ஒரு குறியீடும் இருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரை A என்றும் ஏப்ரல் முதல் ஜுன் வரை B என்றும் ஜுலை முதல் செப்டம்பர் வரை C என்றும் D அக்டோபர் முதல் டிசம்பர் வரை என்றும் குறிப்பிடப்படுகிறது. உதாரண்த்துக்கு காஸ் சிலிண்டரில் A 14 என்று இருந்தால் அந்த காஸ் சிலிண்டரை 2014ம் வருடம் மார்ச் வரை தான் உபயோகப்படுத்த முடியும் என்று அர்த்தம். காஸ் சிலிண்டர் வாங்கும்போது இதையும் கவனித்து வாங்க வேன்டும் என்பது முக்கியம்.

இலக்கிய முத்து:

கீரனின் சொற்பொழிவிலிருந்து:
வாழை, தென்னை, பனை எல்லாமே அவைகளாகவே மட்டையையும் ஓலையும் கொடுக்கும். ஈச்ச மரங்கள் மட்டும் அவைகளாகவே மட்டையையோ, ஒல்லையையோ தராது. அரிவாளைத்தூக்கினால் தான் மட்டையைக் கொடுக்கும். அதுபோல, கஞ்சர்கள் நல்ல காரியத்திற்கு பண உதவி செய்ய மாட்டார்கள். அரிவாளைத்தூக்கும் போக்கிரிகளுக்குத்தான் பணத்தை கொடுப்பார்கள்.

அசத்தல் முத்து:

எண்ணங்கள் பற்றி கவனமாக இருங்கள்
அவை வார்த்தைகளாக உருவாகுகின்றன.
வார்த்தைகளில் கவனமாக இருங்கள்
அவை செயலாக உருப்பெறுகின்றன!
செயல்களில் கவனமாக இருங்கள்
அவை பழக்கமாக உருவாகுகின்றன!
பழக்கங்களில் கவனமாக இருங்கள்
அவை ஒழுக்கமாக உயர்வு பெருகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள்!
அது தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்குகின்றன!!


சமையல் முத்து:

உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது, ரோஸ்ட் செய்ததற்கான அழகிய நிறம் வர, வாணலியில் எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் சீனி போடவும். காயும் எண்ணெயில் சீனி உருகி, கரைந்து பழுப்பு நிறமாகி நுரைத்து புகைய ஆரம்பிக்கும். இது தான் ச்ரியான பதம். உட்ன்டியாக உருளைக்கிழங்கு வறுவல் செய்ய ஆரம்பிக்கலாம். சீனி போட்டத்தையே கண்டு பிடிக்க முடியாது என்பதோடு, சீக்கிரம் அழகிய தோற்றம் வந்து விடும்.

மருத்துவ முத்து:

திடீரென்று வயிற்றின் இடது புறம் சூட்டு வலி ஏற்பட்டால் 1 ஸ்பூன் சீரகம், சிறிது கல் உப்பு இரண்டையும் வாணலியில் போட்டு வறுத்து நன்றாக வெடித்து ஓரளவு கருகியதும் எடுத்து அம்மியில் பொடித்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனேயே சூட்டு வலி மறையும்.

ரசித்த முத்து:

இது அவ்வையார், மனிதன் தன் வயிற்றை விளித்துப் பாடுவது போல அமைந்த பாடல்.
"ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும்
என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அறிது."

மனிதன் தன் நாக்கைக்கட்டுப்படுத்தாமல் செய்யும் தவறுக்கு எதற்கு தன் வயிறை குறை சொல்ல வேன்டும் என்று நினைத்த ரமண மகரிஷி, வயிறு மனிதனை நோக்கிப் புலம்புவது போல பாடலை மாற்றிப் பாடினார்.
'' ஒரு நாழிகை வயிறு எற்கு ஓய்வு ஈயாய் நாளும்
  ஒரு நாழிகை உண்பது ஓயாய்
  ஒரு நாளும் என் நோவு அறியாய் இடும்பை கூர் என் உயிரே
  உன்னோடு வாழ்தல் அரிது''

பாடலின் பொருள் இதுதான்:
''மனிதனே! வயிறாகிய எனக்கு நீ ஒரு நாழிகை கூட ஓய்வு அளிப்பதில்லை. ஒரு நாழிகைகூட நீ சாப்பிடுவதை நிறுத்துவதில்லை. ஒரு நாளும் என் துன்பம் உனக்கு தெரிவதில்லை. எனக்குத் தொல்லை தரும் என்னுயிரே! உன்னோடு வாழ்தல் அரிது.''
அவ்வையார் எழுதிய் பாடலின் பொருளை விடவும் ரமண மகரிஷி எழுதியது தானே அர்த்தம் மிகுந்திருக்கிறது?

32 comments:

Menaga Sathia said...

அனைத்து முத்துக்களும் அருமை அம்மா!!

Chitra J said...

Awesome! I vote with Ramana Maharishi. though Avvai's point is philosophical, Maharishi's view depicts the daily toil of persons and the very core reason that people suffer in life. Pasithiru vizhithiru is the best principle to be followed right now.

UmayalGayathri said...

ஆறு முத்துக்களும் அறுசுவை தருகின்றன..
நன்றி சகோதரி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்து முத்துக்களும் மிகவும் பயனுள்ளவைகளாக உள்ளன.

பகிர்வுக்கு நன்றிகள்.

இளமதி said...

மூழ்கி எடுத்தநல் முத்துக்கள் தந்தீரே!
வாழ்த்தி மகிழ்ந்திட்டேன் வந்து!

அக்கா! அத்தனையும் அருமையான செய்திகள்!

அதில் இலக்கிய முத்தும், ரசித்த முத்தும் என்னை ஈர்த்தது!

நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள் அக்கா!

KILLERGEE Devakottai said...


முத்துக்குவியல்தான் மாற்றமில்லை அருமை.
எமது மதுரை விழா பதிவு
http://www.killergee.blogspot.ae/2014/11/blog-post.html

unmaiyanavan said...

அனைத்து முத்துக்களும் அருமை. அதுவும் அந்த காஸ் முத்து தெரியாத ஒன்று.

தி.தமிழ் இளங்கோ said...

முத்துக்கள் வரிசையில், சிலிண்டர் பற்றிய விவரங்கள் எனக்கு புதியவை. தகவலுக்கு நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

முத்துக்கள் அருமை சகோதரியாரே

ஸ்ரீராம். said...

கேஸ் விஷயம் கேள்விப் பட்டிருக்கிறேன்.

கீரன் முத்து ​ :))

அசத்தல் முத்து அந்தாதி முத்து!

சமையல் முத்து - வாசனை காட்டிக் கொடுக்காதோ?

ம.மு, ர.மு - இரண்டுமே அருமை.

priyasaki said...

எல்லமே அருமையான பயனுள்ள முத்துக்கள்.பகிர்விற்கு நன்றி மனோக்கா

'பரிவை' சே.குமார் said...

முத்துக்கள் அனைத்தும் அருமை...

இராஜராஜேஸ்வரி said...

அனைத்து முத்துக்களும் அருமை

கே. பி. ஜனா... said...

மூழ்கி எடுத்த முத்துக்கள் அத்தனையும் அருமை...

நிலாமகள் said...

அசத்தல் அசத்தியது. ரசித்ததை நானும் ரசித்தேன்.

ஹுஸைனம்மா said...

எண்ணெயில் சீனி போட்டு, பின் உருளையைப் போட்டால் சரியாக வெந்துவிடுமா அக்கா? சீனி மேலும் புகைந்து கசப்பு வந்து விடாதா அக்கா?

மனோ சாமிநாதன் said...

Dear Chitra!

Welcome to my blog! And thanks for the lovely comment! I have already known Avvaiyar's paadal. But when I have read Ramana Maharishi's point of view recently, I was fascinated by it and posted here! As You have said, 'Pasithiru, vizithiru' is the truth behind Ramana Maharishi's paadal! Thanks again for your wonderful feedback!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி உமையாள்!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

அருமையான கருத்துரைக்கு அன்பு நன்றி இள‌மதி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி! தங்களின் பதிவிற்குச் சென்று அனைத்துப்புகைப்படங்களையும் ரசித்து, பின்னூட்டமும் அளித்து விட்டேன்!!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சொக்கன் சுப்ரமணியம்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

அருமையான பின்னூட்டம்! அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்ப் நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி ஜனா!

மனோ சாமிநாதன் said...

ரசித்து எழுதியதற்கு அன்பு நன்றி நிலாமகள்!

மனோ சாமிநாதன் said...

இது செய்து பார்த்து எழுதியது தான் ஹுஸைனம்மா! பொதுவாய் இஞ்சிக் கருக்கல் செய்வார்கள் சளி பிடித்ததற்கு! அதே போலத்தான் இதுவும்! சீனியைக் கருக்கிய பிறகு [இலேசான பிரெள‌ன் நிறம் வரும்போதே] மசாலா தடவிய உருளைக்கிழங்கை போட்டு எண்ணெய் விட்டு சுருள சுருள‌ வதக்கினால் சரியாக வரும்!