தீபாவளிக்கு ஒரு இனிப்பு செய்முறையை எழுதலாம் என்று நினைத்தபோது, பழம்பெரும் குறிப்பு ஒன்று நினைவுக்கு வந்தது. அது தான் அவல் வெல்லப்புட்டு. பொதுவாய் சீனியை வைத்து செய்யப்படும் இனிப்புகளை விடவும் வெல்லம், பனங்கல்கண்டை சேர்த்து செய்யப்படும் இனிப்பு வகைகள் நல்லது. இதில் பருப்பு, தேங்காய் போன்ற சத்துள்ள பொருள்களும் அட்ங்கியிருக்கின்றன. இனி அவல் புட்டு செய்முறையைப் பார்க்கலாம்.
அவல் புட்டு
தேவையான பொருள்கள்:
அவல் ஒரு கப்
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
துவரம் பருப்பு அரை கப்
தேங்காய்த்துருவல் அரை கப்
வெல்லம் ஒன்றரை கப்
சிட்டிகை உப்பு
ஏலப்பொடி அரை ஸ்பூன்
செய்முறை:
அவலை வெறும் வாணலியில் சிறு தீயில் வறுக்கவும்.
அவல் இலேசாகப்பொரிய ஆரம்பித்ததும் இறக்கி ஆறவைத்து பொடிக்கவும்.
பருப்பை இலை இலையாக வேக வைக்கவும்.
அவல் மாவில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கவும்.
பருப்பு வெந்த வெதுவெதுப்பான நீர் விட்டு பிசிறவும்.
அவலைப்பிடித்தால் உருட்டும் வடிவம், விட்டால் உதிரும் வண்ணம் இருக்க வேன்டும்.
இது தான் சரியான பதம்.
வெல்லத்தை அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டுக் காய்ச்சவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் வடிகட்டவும்.
பாகை மறுபடியும் முதிர்ப்பாகு நிலை வரும்வரை காய்ச்சவும்.
சில சொட்டுக்கள் பாகை தண்ணீரில் ஊற்றி விரலால் எடுத்து உருட்டிப்பார்த்தால் மெழுகுப்பதம் வர வேன்டும்.
அந்த நிலையில் பாகை எடுத்து அவல் மாவில் ஊற்றி நன்கு கிளறவும்.
பின் தேங்காய்த்துருவல், ஏலப்பொடி, பருப்பு சேர்த்து கிளறவும்.
பின் அதை அப்படியே அமுக்கி வைத்து, அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
அதன் பின் எடுத்து கிளறிப் பார்த்தால் புட்டு போல உதிர் உதிராய் வரும்.
இப்போது சுவை மிகுந்த அவல் புட்டு தயார்!
இனிப்புக்களுடனும் அகமகிழ்வுடனும் அனைவரும் தீபாவளியைக்கொண்டாடி மகிழ என் மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள்!!

15 comments:
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என்/எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
>>>>>
இனிப்பு அவல் புட்டு படமும் செய்முறையும் மிக அருமையாக உள்ளன. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் VGK
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
அழகிய பீங்கான் தட்டில் இருக்கும் வறுத்த முந்திரி,கொண்டைக் கடலை ஆகியவற்றுடன் அவல் புட்டைப் பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது. வெல்லத்தில் செய்தாலே தனி தித்திப்புதான்.
எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
அருமையான அவல் புட்டு.
இனிய தீபாவளி வாழ்த்துகள் மனோ மேடம் :)
பார்க்கும்போதே சாப்பிடத் தோன்றுகிறது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.
அவல் புட்டு சாப்பிட்ட இனிமையுடன் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மனோக்கா. அவல் புட்டு வித்தியாசமான குறிப்பு.
இந்த தீபாவளி திருநாளில் உலகெங்கும் மனிதநேயத்தின் ஒளி பரவட்டும் !
நன்றி
சாமானியன்
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் !
அவல் வெல்லப் புட்டு பார்க்க பிரமாதமாய் இருக்கிறது...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
மிக அருமையான பதார்த்தம்!
இனிப்பாகத் தந்தீர்கள் வாழ்த்துடன்!
நன்றி அக்கா!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
வணக்கம் அம்மா...
தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
அலுவலகம் சென்றதால் காலையில் தெரிவிக்க இயலவில்லை.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.
வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_26.html
நன்றி
ரொம்ப ஈசியாக இருக்கே.அருமை.
Post a Comment