Wednesday 23 July 2014

சித்தர் குரு நமச்சிவாயர்!!

சித்தர்களின் வாழ்க்கையைப்பற்றிய வரலாறுகளைப் படிக்கும்போது ஆச்சரியம் மேலிடுகிறது. முன்பு தேரையர் என்ற சித்தர் விளைவித்த ஆச்சரியங்களைப்பற்றி  படித்து, அவற்றைப் பகிர்ந்து கொன்டேன். இப்போது எழுதவிருப்பது மற்றொரு சித்தரைப்பற்றி!

' குரு பிதா குருர் மாதா குருதேவா பரசிவா
  சிவருஷ்டரே குருஸ்த்ராதா குரோருஷ்டேண காஷ்சன்'

[ குருவே தந்தை: குருவே தாய்: குருவே இறைவன்: கடவுளுக்கு கோபம் வந்தால் குரு காப்பாற்றுவார். ஆனால் குருவிற்கு கோபம் வந்தால் நம்மைக் காப்பாற்றுபவர் யாரும் இல்லை.]

' குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேஸ்வரந‌
  குரு சாஷாத் பரம் தத்வம் தஸ்மாத்குரும் உபாஸ்ரயேத்நந'

[ குருவே பிரம்மா; குருவே விஷ்ணு; குருவே மகேஸ்வரன்; குருவே பரப்ரம்ம சொரூபனாகவும் இருக்கிறார். குருவை முழுமையாகச் சரணடைதல் அனைத்திலும் உயர்ந்தது.

இப்படி வேதங்களிலும் உபநிஷத்துக்களிலும் கூறப்பட்டிருக்கிறது.

ஒரு நல்ல குரு அமைந்தால் சீடனுக்குப் பெருமை. ஒரு நல்ல சீடன் அமைந்தால் குருவிற்குப் பெருமை. அதன் படி சீடனாக வந்து குருவிற்குத் தொன்டு செய்து, குருவிற்கு குருவாகவே உயர்ந்தவர் நமச்சிவாயர்.
இயல்பிலேயே ஞானம் வாய்க்கப்ப‌ட்டிருந்த இவர் ஒரு நல்ல குருவைத்தேடி காடு மேடெல்லாம் அலைந்து கடைசியில் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். அங்கே பிரம்மத்தில் லயித்த பார்வையுடன் புற உணர்வுகளை மறந்த தவத்தில் திருவண்ணாமலை வீதிகளில் அலைந்து கொண்டிருந்த குகை நமச்சிவாயத்தைக்கண்டதும் இவரே நம் குரு என முடிவு செய்து அவர் பின்னாலேயே போக ஆரம்பித்தார். ஆனால் அவரோ இவரைத் திரும்பியும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. குகை நமச்சிவாயருக்கு பசித்தால் இல்லங்கள் முன் நின்று 'நமச்சிவாயம்!' என்பார். உள்ளிருப்பவர்கள் வெளியே வந்து அவரின் குவிந்த கரங்களில் கஞ்சியையோ அல்லது கூழையோ ஊற்றுவார்கள். அதனை உறிஞ்சிக்குடித்த பின் குகை நமச்சிவாயர் அகன்று விட, அவர் கரங்களினின்றும் கீழே வழிந்து விழும் மிகுதியான கஞ்சியை கையேந்திக் குடிப்பார் இளைஞர் நமச்சிவாயர். தன்னை சீடராக குகை நமச்சிவாயர் ஏற்றுக்கொள்ளா விட்டாலும் அவர் உறங்கும் மலைப்பகுதி சென்று உறங்கும் அவரின் பாத‌ங்களைப் பிடித்து விட்டு, அவர் உறங்கிய பின்பே தானும் உறங்கச் செல்லுவார்.
ஒரு நாள் குருவின் பாதங்களை மெல்லப்பிடித்து விட்டுக்கொண்டிருந்த சீடர் திடீரென்று பெருங்குரலில் சிரிக்க ஆரம்பித்தார். குகை நமச்சிவாயர் கோபமடைந்து காரணம் கேட்க, ' ஒன்றுமில்லை குருவே, திருவாரூர் தியாகராஜர் சன்னதியில் நடனமாடிக்கொன்டிருந்த பெண்ணொருந்தி திடீரென்று கீழே விழுந்து விட்டாள். அதைப்பார்த்து மக்களெல்லாம் சிரிக்கவே, எனக்கும் சிரிப்பு வந்து விட்டது என்றார். அதைக்கேட்ட குருவானவர் ஆச்சரியமுற்று, ' ' இவன் இருப்பது இங்கே, ஆனால் காட்சியை உணர்வது அங்கே' என்று நினைத்தவர் ' அப்பா, நீ இன்றடைந்த நிலையே வேறு! இன்று முதல் என் சீடனாகி விட்டாய்' என்றார்.

மற்றொரு நாள் குரு அருகே பவ்யமாக நின்று கொன்டிருந்த சீடர், திடீரென்று எரிந்து கொன்டிருந்த தீயை அணைப்பது போல பாவனை செய்து தன் வேஷ்டி நுனியைத் திருகினார். குரு காரணம் கேட்க, ' குருவே, தில்லை கோவிலில் திரைச்சீலை தீப்பற்றி எரிந்தது. அதைக் கோயில் குருக்கள் அணைத்தார். அதனால் நானும் அந்தத் தீயை அணைத்தேன்' என்றார். குரு ஆச்சரியத்துடன் எழுந்து நின்று, ' நமச்சிவாயம்! நீ இன்றிருப்பது மிக மிக உயர்ந்த நிலை' என்று வாழ்த்தினார்.

ஒரு நாள் தான் உண்ட உணவு செரிக்காமல் திடீரென்று உமிழ்ந்தார் குரு. உடனேயே சீடர் நமச்சிவாயம் அதை அருகிலிருந்த மண் கலயத்தில் தாங்கிப்பிடித்தார். குரு சீடரை நோக்கி ' இதனை மனிதர் காலடி படாத இடமாகப்பார்த்துக்கொட்டி வா' என்றார். சீடரும் மண் கலத்தை சுமந்து வெளியே சென்று சற்று நேரத்தில் திரும்பி வந்தார். வந்தவரிடம் குரு கேட்டார், ' மனிதர் காலடி படாத இடம் பார்த்து கொட்டினாயா?' சீடர் மிகவும் பணிவாக ' மனிதர் காலடி படாத இடம் ஏது என் வயிற்ரைத்தவிர? அதனால் நானே அதை விழுங்கி விட்டேன்' என்றார் மிக இயல்பாக!

குரு அப்படியே திகைத்துப்போனார். எத்தனை மன உறுதி இருந்தால், எந்த அளவு உயர்ந்த சிந்தனை இருந்தால், எந்த அளவு குருவிடம் பக்தி இருந்தால் தான் உமிழ்ந்ததை கொஞ்சம் கூட அறுவறுப்பு இல்லாமல் அதை விழுங்கியிருப்பார்?

கண்களில் கண்ணீர் பெருக சீடரைத்தழுவினார். ' அப்பா, நீ இனி சீடன் இல்லை. குரு நமச்சிவாயர். ஆத்மஞானத்தைப்பொறுத்தவரை மிக உயர்ந்த நிலை அடைந்து விட்டாய் இனி நீ சிதம்பரம் சென்று தில்லை கோவிலில் இருப்பாயாக. அங்கே உன்னால் ஆக வேண்டிய வேலைகள் இருக்கின்றன. இனி நீ இங்கே இருப்பது சரியில்லை. ஒரே கம்பத்தில் இரண்டு யானைகளைக்கட்டுவது சரியில்லை. அப்படி கட்டுவதும் முறையில்லை" என்றாராம்.

குரு வாக்கிற்கு மறுவாக்கில்லை என்பதால் குரு நமச்சிவாயர் சிதம்பரம் புறப்பட்டார். வழியில் பசி அதிகமானதால்

"அண்ணா மலையா ரகத்துக் கினியாளே
உண்ணா முலையே உமையாளே- நண்ணா
நினைதொறும்போற்றிசெயநின்னடியாருண்ண
மனை தொறும் சோறுகொண்டு வா"

என்று அம்பிகையை நினைத்துப்பாடவே, அம்பிகை அருணாசலேஸ்வரர் ஆலயத்திலிருந்து உணவு வகைகளை எடுத்து வந்து அயர்ந்து கிடந்தவருக்கு கொடுத்து பசியாற்றினாராம். இப்படி வழி நெடுக அவரின் பசி தீர்க்க இறைவியை அன்னம் கொண்டு வரும்படி அவர் பாடல் பாட, இறைவியே நேரில் உணவெடுத்து வந்து அவர் பசியாற்றியதாக வரலாறு.

குரு நமச்சிவாயர் தில்லை கோவில் சென்று தங்கி பாமாலைகள் பாடினார். அதன் அருகே உள்ள திருப்பாற்கடல் என்னும் தலத்தில் தவமியற்ற ஆரம்பித்தார். அவர் அடி தொழுத அடியவர் அளித்த பொன்னையும் பொருளையும் கொண்டு ஆலயத்திருப்பண்னிகள் செய்தும் ஏழைகள் துயர் துடைத்தும் பலருக்கும் நன்மைகள் செய்தும் பாமாலைகள் இயற்றியும் புகழ் பெற்று வாழ்ந்தார்.

இவர் இயற்றிய ' அண்ணாமலை வெண்பா' மிகவும் புகழ் பெற்றது.
இவ்வாறு ஒரு சீடராக, குருவாக, பக்தராக, ஆலயப்பணியாளராக, புலவராக, ஞானியாக பல காலம் வாழ்ந்த குரு நமச்சிவாயர் திருப்பாற்கடல் அருகேயுள்ள‌ திருப்பெருந்துறையில் மகா சமாதி அடைந்தார்.
 

26 comments:

ஸ்ரீராம். said...

புதிய விவரங்கள்.

Anonymous said...

இதை வாசித்த எனக்கும் பண்ணியம் உண்டாகட்டும்.
பக்திமயமான பதிவு.
மனம் அப்படியே இலயிக்கிறது.
நன்றி சகோதரி.
இறையருள் கிடைக்கட்டும்.
வேதா. இலங்காதிலகம்.

ADHI VENKAT said...

சித்தர்களின் வாழ்க்கை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். குரு நமச்சிவாயர் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

”தளிர் சுரேஷ்” said...

குரு நமச்சிவாயர் குறித்த தகவல்கள் மெய்சிலிர்க்க வைத்தது! அருமையான பகிர்வு! நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அண்ணாமலை வெண்பா இயற்றிய சித்தர் குரு நமச்சிவாயர் பற்றி பல அரிய பெரிய செய்திகளை அறிய முடிந்தது.

பகிர்வுக்கு நன்றிகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மையிலேயே வியப்பில் ஆழ்த்தும் சித்தர் வாழ்பு
நன்றி சகோதரியாரே

unmaiyanavan said...

எனக்கு எப்பவுமே சித்தார்களைப் பற்றி படிக்க பிடிக்கும்.
தங்களால் இன்று குரு நமச்சிவாயர் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

வியப்பான தகவல்கள்... நன்றி...

தி.தமிழ் இளங்கோ said...

நமச்சிவாய என்ற சொல்லை அடிக்கடி கேட்டு இருக்கிறேன். (நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!) அந்த நமச்சிவாயம் என்ற பெயர் கொண்ட ஒரு சித்தரைப் பற்றி உங்கள் பதிவின் மூலம்தான் தெரிந்து கொண்டேன். நன்றி!

கோமதி அரசு said...

அருமையான தகவல்கள் குரு நமச்சிவாயர் பற்றி.
வாழ்த்துக்கள்.
வாழ்க்கையில் எப்போதும் குருவின் வழி காட்டல் வேண்டும்.

இளமதி said...

அக்கா.. அரிதான பல தகவல்கள்.
இப்படி உங்கள் பதிவு கிட்டியிராவிடில் குரு நமச்சிவாயர் அவர்களைப் பற்றி அறிந்தே இருக்கமாட்டேன்!
மிக்க நன்றி அக்கா!

வாழ்த்துக்கள்!

இராஜராஜேஸ்வரி said...

குருநம்ச்சிவாயர் பற்றி சிறப்பான பகிர்வுகள்.

KILLERGEE Devakottai said...


ஆச்சர்யமான விசயங்கள்.

மனோ சாமிநாதன் said...

வ்ருகைக்கு அன்பு ந்ன்றி ஸ்ரீராம்!!

மனோ சாமிநாதன் said...

இனிய வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வேதா!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஆதி!!

மனோ சாமிநாதன் said...

ருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சுரேஷ்!!

மனோ சாமிநாதன் said...

வருக்கைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சொக்கன் சுப்ரமண்யன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

விரிவான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

அன்பு வருகைக்கும் இனிய கருத்துக்கும் அன்பு நன்றி இளமதி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி கில்லர்ஜி!!