முதலாம் செய்தி:
மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி ( MUSCULAR DYSTROPHY என்பது சதை இறுகி செயல்பாடு இழக்கும் நோய். சென்னையில் இயங்கி வரும் MUSCULAR DYSTROPHY ASSOCIATION INDIA [MDA] என்ற அமைப்பு சமீப காலமாக தசை உருக்கி நோய் பற்றிய விழிப்புணர்வை ஊட்டி வருகிறது. சென்னை மாநகராட்சி உதவியுடன் 1A, MODEL SCHOOL ROAD, THOUSAND LIGHTS, CHENNAI [ PH: 9787734448] என்ற முகவரியில் தசை உருக்கி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இலவசப்பள்ளி நடத்தி வருகிறது. இவர்களுக்காகவே டிஸைன் செய்யப்பட்ட பேருந்து வசதியும் குழந்தைகளின் தேவையைப்புரிந்து கொண்டு செயல்படும் அற்புதமான ஆசிரியைகளும் அமைந்துள்ள இப்பள்ளி நல்லதொரு சேவையை செய்து வருகிறது.
இரண்டாம் செய்தி:
எங்கள் நண்பரொருவரின் குடும்பத்தில் அவரின் தாயாருக்கு மலக்குடல் கான்ஸர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மருத்துவர் கான்ஸரால் வீணாகியிருந்த பகுதியை வெட்டி நீக்கி விட்டு அந்த இடத்தில் அடி வயிற்றில் துளை போட்டு ஒரு டியூபும் பொருத்தி கழிவுகள் அதன் வழியே வெளியேற வழி செய்தார். அந்த டியூபின் நுனியில் ஒரு பை எப்போதும் இணைக்கப்பட்டிருக்கும். தசைகள் இதற்கு உதவ முடியாது என்பதால் செயற்கை முறையில் கழிவுகள் தானாக வெளியேறி அதோடு இணைக்கப்பட்டிருக்கும் பையில் சேகரம் ஆகும். இதை உணரும் நோயாளி தானாகவே அந்தப்பையை அப்புறப்படுத்தவும் மறுபடியும் வேறொரு பையை வயிற்றோடு அந்தத் துளை இருக்குமிடத்தில் கட்டிக்கொள்ளவும் பயிற்சி கொடுக்கப்படுகிறார்.
அந்த அறுபது வயது தாய் பட்ட வேதனைகளை பார்க்க முடியவில்லை. ஆனால் படிப்பறிவில்லாததாலோ என்னவோ, அவர் இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள பழகிக் கொண்டார். மகன்களிடம் இருக்க மறுத்து, தன் வயல் வேலைகளைப் பார்க்க கிராமத்துக்குக் கிளம்பி விட்டார். இப்போதும் தனியே கிராமத்தில் இருந்து கொண்டு, தன் பிரச்சினைகளையும் சமாளித்துக்கொண்டு, வயல் வேலைகளையும் தினசரி பார்த்து வருகிறார்.
குடல் அறுவை சிகிச்சையில் புகழ் பெற்ற மருத்துவரான டாக்டர் ரங்கபாஷ்யத்திடம் பணி புரிந்த சிஸ்டர் சரோஜா இதற்கு அரிய தொண்டாற்றி வருகிறார். 74 வயதைக் கடந்து விட்டாலும் இப்போதும் பல மருத்துவக்கல்லூரிகளிலும் மருத்துவ மனைகளிலும் இது தொடர்பாகச் சொற்பொழிவு நடத்தி வருகிறார். சாதாரணமாக இந்தப் பைகள் வைத்துக்கொள்ள மாதம் ரூ 500 முதல் 2000 வரை ஆகிறது. காற்று புகாத, வெளியே கசியாத, நாற்றமில்லாத பையை நோயாளியின் வசதிக்கு ஏற்ற மாதிரு உருவாக்க இவர் பெரிதும் உதவியிருக்கிரார்.
STOMA CARE எனப்படும் இதைப்பற்றிய தகவல்கள் அறிந்து கொள்ள www.stomacare.co.in என்ற வலைத்தளத்தை அணுகலாம். தொடர்புக்கு: 93833 39899
மூன்றாம் செய்தி:
இனி ஒரு மருத்துவக்குறிப்பு:
இஞ்சிப்பால்:
ஒரு வேளை ஒருவர் குடிக்கக்கூடிய அளவு:
ஆள்காட்டி விரல் பருமனில் சிறு துண்டு இஞ்சி எடுத்து சீவவும். அதை நசுக்கி முக்கால் தம்ளர் நீரில் கொதிக்க விடவும். இஞ்சியில் சாரம் தண்ணீரில் நன்கு இறங்கியதும் வடிகட்டவும். அரை கப் காய்ச்சிய பாலில் இந்த சாற்றை கலக்கவும்.தேவையான தேன் அல்லது பனங்கல்கண்டு கலக்கவும். இந்தப்பாலை காலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
நுரையீரல் சுத்தமாகும்.
சளியை ஒழித்துக்கட்டும்.
வாயுத்தொல்லை என்பதே வராது.
தேவையில்லாத கொழுப்பு கரையும்.
தொப்பை குறையும்
எடை குறையும்
இரத்தக்குழாயின் அடைப்பு கரையும்.
சினைப்பை கட்டிகள், புற்று நோயை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.
வாய்ப்புண், வயிற்றுப்புண், ஆசனவாய்ப்புண் உடையவர்கள் இதைக்குடிப்பதை தவிர்க்க வேன்டும்.

22 comments:
அக்கா!... அருமையான மருத்துவத் தகவல்கள்.
சதை இறுக்கி நோய் உடலில் எத்தனையோ அவயவங்களைப் பாதிக்கின்றது.
கை கால்களில் வரும்போது அதன் இயக்கமே குறைந்து, அற்றுப் போகிறது.
அதன் கொடுமையைக் கண்டு உருகும் உணர்வோடு வாழ்கிறேன் அக்கா...
கொடுமையானது...:( எதிரிக்கும் இந்நிலை வரக்கூடாதென்பேன்!..
நண்பியின் தாயாரின் மனோதிடம் கண்டு மலைக்கின்றேன். வாழ்த்துகிறேன்!
இஞ்சித் தகவல் இளமைக்கு இனியவரம்!
மருத்துவச் செய்திகள் அருமை! நன்றியுடன் வாழ்த்துக்கள் அக்கா!..
1] வியப்பளிக்கும் [வேதனை மிக்க] செய்தி.
2] பயனுள்ள இஞ்சிப்பால் பற்றிய செய்தி, வயிற்றில் பால் வார்ப்பதாக உள்ளது.
மேலே உள்ள முதல் செய்தியை ஜீரணிக்க இந்த இரண்டாவது இஞ்சிப்பால் உபயோகப்படும் என்பதால் இவ்விரண்டையும் சேர்த்தே வெளியிட்டுள்ளீர்கள் போலிருக்கிறது. ;)
பகிர்வுக்கு நன்றிகள்.
அருமையான மருத்துவத்தகவல். நன்றி
உங்கள் குடும்ப நண்பரின் தாயாருக்கு வேதனைதான் வாழ்க்கை என்றால் எனனவென்று சொல்வது? அந்த தாயாரின் பொறுமைதான் வாழ்க்கை போலிருக்கிறது.
வணக்கம்
அம்மா.
இஞ்சியின் மருத்துவம் பற்றி மிக எளிமையாக சொல்லியுள்ளீர்கள்... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இஞ்சித் தகவல் மிகவும் பயனுள்ளவை... நன்றி...
பயனுள்ள தகவல்கள்.....
இஞ்சிப் பால் - முயற்சித்துப் பார்க்கிறேன்.
மருத்துவத் தகவல் அருமை அம்மா...
இஞ்சிப்பால் உடனே ஸ்டார்ட் பண்ண வேண்டும்...
மருத்துவத் தகவல் அருமை
Vetha.Elanagthilakam.
அனைத்துமே நல்ல விசயங்கள் நன்றி மேடம்.
தற்போது எனது பதிவு
''தாலி''
படிக்கவும்.
பாராட்டிற்கு அன்பு நன்றி இளமதி! இந்த தசை இறுக்கி நோய் உங்கள் வாழ்விலும் பாதிப்பைத்தந்துள்ளதா? மனதிற்கு கஷ்டமாக உள்ளது. விரைவில் உங்கள் மனத்துயர் அகன்று மனம் நிம்மதியடைய விரும்புகிறேன் இளமதி!
நண்பரின் தாயாரின் மனத்திடம் இப்போதும் காணும்போதெல்லாம் வியந்து கொண்டுதான் இருக்கிறேன்!
நீங்கள் கூறிய மாதிரி, இந்த மாதிரி செய்திகளை ஜீரணம் செய்ய் இஞ்சிப்பால் உதவுமோ என்னவோ?
வருகைக்கும் கருத்துரிக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!
வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி எழில்!!
அந்தத் தாயாரைப்பார்க்கும்போதெல்லாம் உங்களுக்கு ஏற்பட்ட எண்ணங்கள் தான் எனக்குள்ளும் ஏற்படும். வாழ்க்கையே வேதனையென்றால் எப்படி அதனினின்றும் மீள்வ்து என்று தோன்றும்.
கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் இளங்கோ!!
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ரூபன்!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!!
முய்ற்சித்துப்பாருங்கள் வெங்கட்! கருத்துரைக்கு அன்பு நன்றி!!
வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி குமார்!
பாராட்டிற்கு அன்பு நன்றி வேதா!
பாராட்டிற்கு அன்பு நன்றி வேதா!
பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜீ!!
// வேதனைகளை பார்க்க முடியவில்லை. ஆனால் படிப்பறிவில்லாததாலோ என்னவோ, அவர் இந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள பழகிக் கொண்டார். //
மிக உண்மை அக்கா. படிப்பறிவு அதிகமானாதால், பயமும் அதிகமாகிவிட்டது.
Post a Comment