Saturday, 21 June 2014

முத்துக்குவியல் 28!!!

ரசித்த முத்து:

மறுபடியும் ஒரு சிறந்த பாடல்:

ஒளவையாரின் புகழ் பெற்ற பாடல் இது. இதன் பொருள் எத்தனை அருமையாக இருக்கிறது!

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்

பொருள்:

வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும்.
மருத்துவ முத்து:

கால் ஆணிக்கு:
ஒரு மஞ்சள் கிழங்கு, ஒரு துண்டு வசம்பு, 10 கிராம் கற்பூரம், மருதாணி இலைகள் ஒரு கை இவற்றை நன்றாக அரைத்து கால் ஆணி உள்ள‌ இடத்தில் வைத்து 10 நாட்கள் தொடர்ந்து கட்டு போட்டு வந்தால் குணமாகும்.

சந்தேக முத்து:

இளநீர் குடித்து, அதைத்தொடர்ந்து நொங்குகள் சாப்ப்பிடுவது வயிற்றுக்கு ஆகாது என்று நெருங்கிய நண்பர் சொன்னார். அது உணமையா?

சிறந்த முத்து:

" சிறு பிள்ளைகளைப்போல தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே மிகப்பெரியவர் ஆவார்"
-  இயேசுநாதர்-

தகவல் முத்து:

நூல்கோல் அதிகம் அடிக்கடி சாப்பிடுவது இன்சுலின் அதிகம் சுரக்க உதவும்.

அருமையான முத்து:

உயிரினங்களை ஆறு வகையாக தொல்காப்பியர் பிரித்திருக்கிறார்:

ஓரறிவு   உள்ளவை:   புல், மரம் போன்றவை நகராது.
ஈரறிவு    உள்ளவை:   சிப்பி சங்கு போன்றவை நகரும்.
மூவறிவு  உள்ளவை:  கரையான், எறும்பு பறக்க முடியாது.
நாலறிவு  உள்ளவை:  வண்டு பறக்கும்.
ஐந்தறிவு  உள்ளவை:  மிருகம்.  கண்டு, கேட்டு, உன்டு வாழும். ஆனால் பேச முடியாது.
ஆறறிவு  உள்ளவை:   மனிதன்.  கண்டு, கேட்டு, உண்டு வாழ்வதோடு, நன்மை எது, தீமை எது  என்று தெரிந்து கொள்ளக்கூடிய பகுத்தறிவு உள்ள‌வன்.

36 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்தும் பயனுள்ள முத்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

ரூபன் said...

வணக்கம்
அம்மா

எல்லோரும் அறியவேண்டிய நல்ல விடயத்தை விடயத்தை பகிர்ந்தமைக்கு நன்றிகள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ராமலக்ஷ்மி said...

அத்தனையும் அருமை.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அனைத்தும் அருமை..சந்தேக முத்திற்கு விடை காண மீண்டும் வருவேன்..நன்றியம்மா.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை சகோதரியாரே
நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான முத்து - சிறப்பான முத்து...

கீத மஞ்சரி said...

கால் ஆணிக்கான மருந்து பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி மேடம். சந்தேக முத்து எனக்கும் சந்தேகமாகத்தான் உள்ளது. அறிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நானும் அறிந்துகொள்வேன். பகிர்ந்த அனைத்து முத்துக்களுக்குமாய் மிகவும் நன்றி.

தங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரம் அமையும்போது தொடரவும். நன்றி.

http://geethamanjari.blogspot.com.au/2014/06/blog-post_22.html

சே. குமார் said...

அனைத்தும் பயனுள்ள முத்துக்கள் அம்மா.

Jaleela Kamal said...

அனைத்து முத்துகளும் மிக அருமை மனோ அக்கா

இளமதி said...

அக்கா!..

கொத்தெனக் கொட்டிய கோடிபெறும் முத்துக்கள்!
சொத்தெனக் கொள்வோமே சேர்த்து!

மிக அவசியமான அறிவுபூர்வமான பகிர்வுகள்!

என் நன்றியுடன் வாழ்த்துக்களும் அக்கா!

இராஜராஜேஸ்வரி said...

ஆக்கபூர்வமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

priyasaki said...

எல்லா முத்துக்களும் மிக அருமையான
முத்துக்கள்.ஒளவையாரின் பாடல் மறக்கமுடியுமா.நல்லதொரு பகிர்வு மனோஅக்கா.

Usha Srikumar said...

மிகவும் பயனுள்ள,சுவாரசியமான முத்துக்கள்.நன்றி.

தி.தமிழ் இளங்கோ said...

எல்லாமே நல் முத்துக்கள்!

Anonymous said...

பயனுள்ள முத்துக்கள்.
பகிர்ந்தமைக்கு நன்றி.
Vetha.Elangathilakam-

Ramani S said...

அற்புதமான முத்துக்கள்
இணைத்துப் பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

கோமதி அரசு said...

அருமையான முத்துக்கள்.
வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பார்ந்த நன்றி ரூபன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி ரூபன்!

மனோ சாமிநாதன் said...

அன்பு பாராட்டிற்கு இனிய நன்றி கிரேஸ்! என் சந்தேகத்திற்கு யாரேனும் பதில் சொல்ல மாட்டார்களா என்று தான் நானும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். பார்ப்போம்

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டிற்கு மனம் நிறைந்த நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

விரிவான இனிய பின்னூட்டத்திற்கு மகிழ்வான நன்றி கீதமஞ்சரி!
தொட்ரபதிவிற்கும் அழைத்ததற்கு கூடுதலானா நன்றி! விரைவில் தொடர்கிறேன்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி குமார்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு இனிய நன்றி ஜலீலா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கவிதைக்கும் வாழ்த்துக்களுக்கும் மகிழ்வான நன்றி இளமதி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

அழகிய பாராட்டிற்கு அன்பான நன்றி பிரிய சகி!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி உஷா ஸ்ரீகுமார்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு இனிய நன்றி சகோதரர் இளங்கோ!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி வேதா!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் நல்வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி கோமதி!

வெங்கட் நாகராஜ் said...

அனைத்தும் நல்முத்துகள்... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

KILLERGEE Devakottai said...

அனைத்து விசயங்களுமே அருமை அம்மா.