Sunday 15 September 2013

அழகு மலர்கள்!!


எங்கள் குடும்ப நண்பர் சில மாதங்களுக்கு முன்னர் சில புகைப்படங்களை அனுப்பியிருந்தார். அவற்றைப்பார்க்க ஆரம்பித்ததும் தான் தெரிந்தது, அவை மலர்களால், அதுவும் முக்கியமாக டாலியா என்ற பூக்களால்  உருவான உருவங்கள் என்று! அசந்து போகிற அளவிற்கு அழகான கலைச் சிற்பங்கள் அவை! சில ஒயர்கள், ஆணிகள், அட்டைகள், பல கோடி மலர்களால் ஆனவை இவை என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
 
ஹாலந்து நாட்டின் ஒவ்வொரு நகரமும் கிராமமும் அதையொட்டிய பெல்ஜியம் நாடும் ஒவ்வொரு வசந்த காலத்திலும் ஏப்ரல் மாதம் முழுவதும் மலர்களால் ஆன இந்த அணிவகுப்பப நடத்துகின்றன. கிட்டத்தட்ட 30 கிலோமீட்டருக்கும் மேல் பயணிக்கும் இந்த அணிவகுப்பைப் பார்க்க ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகெங்கிலிருந்தும் வந்து கூடுகிறார்கள்! இந்த அணிவகுப்பு செப்டம்பர் மாதம் வரை நடக்கிறது. இந்த அணிவகுப்புகள் மக்கள் தங்கள் கலைத்திறமையை ஆர்வத்துடன் வெளிப்படுத்தும் போட்டிகளாகவே நடக்கின்றன. ஹாலந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமிலுள்ள கல்வாய்களில் மிதக்கும் படகுகளும் கூட மலர்களால் ஆன இந்த அணிவகுப்பை சிறப்பாக நடத்துகின்றன! ஆம்ஸ்டர்டாமின் ‘ ரோஜா அணிவகுப்பு’ உலகப் புகழ் பெற்றது!!
 
அவற்றை நீங்களும் ரசிக்க இதோ சில புகைப்படங்கள்!! 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
 
 
 
 
 

41 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்துமே மிகவும் அழகான படங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

ஒன்றை ஒன்று மிஞ்சுவதாக உள்ளது. மகிழ்ச்சி.

'பரிவை' சே.குமார் said...

அழகான புகைப்படங்கள் அம்மா...
பகிர்வுக்கு நன்றி...

'பரிவை' சே.குமார் said...

அழகான புகைப்படங்கள் அம்மா...
பகிர்வுக்கு நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

அழகுமலர்கள் ..
உள்ளம் கொள்ளை கொண்டன..
பாராட்டுக்கள்..!

கோமதி அரசு said...

ஆம்ஸ்டர்டாமின் ‘ ரோஜா அணிவகுப்பு’ உலகப் புகழ் பெற்றது!!//

அழகு மலர்களால் ஆன அணி வகுப்பு அருமை, அழகு.
பகிர்வுக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை சகோதரியாரே அருமை
வியக்க வைக்கும் படங்கள்
படமாய் பார்ப்பதற்கே
வியப்பாயிருக்கின்றதே
நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்-
நன்றி

aavee said...

மிக பிரம்மாண்டமாக இருக்கும் போலிருக்கே.. படங்கள் அருமை அம்மா..

திண்டுக்கல் தனபாலன் said...

அணிவகுப்பு அசர வைக்கிறது...

வெங்கட் நாகராஜ் said...

மிகவும் அருமை.....

அப்பா என்ன ஒரு கலை நுணுக்கம்.....

பகிர்வுக்கு நன்றி.

ஸாதிகா said...

படங்கள் பிரம்மிக்க வைக்கின்றது.

Menaga Sathia said...

அழகான புகைப்படங்கள்...

இளமதி said...

படங்கள் அத்தனையும் அருமை!
இங்கு நான் வசிக்கும் ஜேர்மனியிலும் உயிர்த்த ஞாயிறிற்கு 45 நாட்களுக்கு முன் ஒரு ஊர்வலம் செய்வார்கள்.
மிகப் பிரம்மாண்டமாக இருக்க்கும்..:)

அதில் பூக்கள் என்றில்லாமல் பலதரப்பட்ட விடயங்களும் அடங்கியிருக்கும்!..

பகிர்வினுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் அக்கா!

ஹுஸைனம்மா said...

இதெல்லாம் செய்றதுக்கு எவ்ளோஓஓஓஓ... பூக்கள் தேவைப்பட்டிருக்கும்??!! மேலும், செய்யத் தொடங்குவதிலிருந்து ஊர்வலம் முடியும் வரை அவை வாடாமலிருக்கச் செய்ய வேண்டுமே!! அதற்கு என்ன செய்வார்கள் என்று தெரிந்துகொள்ள ஆர்வம்..

”தளிர் சுரேஷ்” said...

அழகான புகைப்படங்கள்! ரசிக்க வைத்தன! நன்றி!

கே. பி. ஜனா... said...

அத்தனையும் மலர்களா?பிரமித்து விட்டோம் படங்களைப் பார்த்து!

VijiParthiban said...

அனைத்துமே மிகவும் அழகான படங்கள் அம்மா. பகிர்வுக்கு நன்றிகள்.அருமை...அருமை அம்மா...

கீதமஞ்சரி said...

அனைத்துமே மலர்களால் ஆக்கப்பட்டவையா? ஆச்சர்யம்! நேர்த்தியாய் வடிவமைத்த கலைஞர்களுக்கு நம் பாராட்டுகள் உரித்தாகட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி மேடம்.

enrenrum16 said...

பிரம்மாண்டமான வேலைப்பாடுகள். பகிர்வுக்கு நன்றி.

அக்கா...நீங்கள் என் பழைய பதிவு ஒன்றில் சில தகவல்கள் கேட்டிருந்தீர்கள்.. தகவல் திரட்ட கொஞ்ஞ்ஞ்சம் தாமதமாகிவிட்டது :)

அத்தகவல் இங்கு:
http://enrenrum16.blogspot.ae/2013/03/3-30.html

நிலாமகள் said...

பிரம்மாண்டமான உழைப்புடனான அழகு! சேமித்துக் கொண்டேன். நன்றி சகோ...

ஸ்ரீராம். said...

ஒன்றை ஒன்று மிஞ்சும்வண்ணம் அனைத்துமே அற்புதமாக உள்ளன.

Kanchana Radhakrishnan said...


அழகான புகைப்படங்கள்.
பகிர்வுக்கு நன்றி.

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி கோமதி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி அனந்த ராஜா!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பாராட்டுக்கும் இனிய நன்றி சகோதரர் வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பார்ந்த நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பார்ந்த நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி இள‌மதி!

மனோ சாமிநாதன் said...

கோடிக்கணக்கான பூக்களின் உதவியுடன் பொறுமைதான் இதற்கு அதிகம் தேவை ஹுஸைனம்மா! நானும் இதையெல்லாம் பார்த்து வியந்த போது பூக்களெல்லாம் இந்த அணிவகுப்பின்போது எப்படி வாடாமலிருக்கும் என்று யோசித்தேன். ஏதேனும் பாதுகாப்பு திரவங்கள், ஸ்ப்ரேக்கள் உபயோகித்திருக்கலாமென்று தான் தோன்றியது!

மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பாராட்டியதற்கு இனிய நன்றி சுரேஷ்!

மனோ சாமிநாதன் said...

வியந்து பாராட்டியதற்கு அன்பு நன்றி சகோதரர் ஜனா! உங்கள் த‌ளம் ஆடுவதால் என்னால் எதையும் படிக்க முடிவதேயில்லை.

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி விஜி!

மனோ சாமிநாதன் said...

மனந்திறந்த‌ பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி கீத மஞ்சரி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் தகவலுக்கும் அன்பு நன்றி என்றென்றும் நீ!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி நிலா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி காஞ்சனா! உங்கள் த‌ளம் ஆடுவதால் என்னால் எதையும் படிக்க முடிவதேயில்லை. விரைவில் சரி செய்யுங்கள்

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு இனிய நன்றி ஸ்ரீராம்!