அழகிய முத்து:
மேஜை மலை:
மேடு பள்ளமாக உயர்ந்து நிற்கும் மலைகளிடையே விதிவிலக்காக, வித்தியாசமாக ஏறக்குறைய சமதளமான மேற்பரப்புடன் காட்சியளிக்கிறது இந்த மேஜை மலை. 1087 மீட்டர் நீளத்துடன் இந்த மலை தென் அமெரிக்காவில் தொடங்கி 'கேப் ஆப்ஃ குட் ஹோப்'பில் முடிகிறது. இம்மலையின் பெரும்பகுதி மணற்பாறையால் ஆனது. பனி படர்ந்த இம்மலையின் மேற்பரப்பைப் பார்க்கையில் வெள்ளைத்துணி போர்த்திய பெரிய மேஜை போல இருப்பதால் இந்தப் பெயர் அதற்கு வந்தது. மேலூரிலிருந்து மதுரை செல்லும்போது, மதுரையை நெருங்கும்போது இது போன்ற ஒரு நீளமான மலை வரும். அது தான் ஞாபகத்துக்கு வருகிறது இந்த மேஜை மலையைப் பார்க்கும்போது!!
அசத்திய முத்து:
கிராம்பு:
கிராம்பு மரத்தில் விளையும் ஒரு வகை பூ! ஒரு மரத்தில்ல் 80 வருடங்கள் வரை இது பூக்கிறது! உலகத்தேவையில் 80 சதவிகிதத்திற்கு மேல் ஜான்ஸிபாரிலிருந்து தான் வருகிறது. இந்தியா, இலங்கையிலும் இது விளைவிக்கப்படுகிறது.
இது பலதரப்பட்ட நோய்களை குணப்படுத்த உதவுகிறது. கிராம்புக்கு பாக்டீரியா எதிர்ப்பு சக்தி உள்ளது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதிலுள்ள அசிடைல் யூஜினால் தசைப்பிடிப்பு வலியினை போக்கும் திறன் படைத்தது. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. மூட்டு வலி, பல்வலி, தலைவலி போன்ற பல வகை வலிக்கு கிராம்பு நிவாரணமளிக்கிறது.
அறிவியல் முத்து:
IPHONE SPIDER.!!
இந்த நவீன கைபேசியை கைகளில் அணிந்து கொள்லலாம். கைபேசி உற்பத்திகளில் முன்னணியில் திகழும் ஆப்பிள் நிறுவனம் இலகுவாக பயன்படுத்தக்கூடிய இந்த நவீன கைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பரவலாக வந்து விட்டால் கைபேசியை கைகளில் தூக்கிக் கொண்டு சுமக்க வேண்டியதில்லை!!
ரசித்த முத்து:
சமீபத்தில் இலக்கியத்தின் வகைகளை பழங்களை ஒப்பிட்டு ஒரு மாத இதழில் வெளி வந்த இந்தத் தகவலை மிகவும் ரசித்துப்படித்தேன். அந்த ரசனையான தகவல் இதோ உங்களுக்கு:
இலக்கியங்களின் தரத்தை மூன்று வகைகளாகக் கூறுகிறார்கள். திராட்சா பாகம், கதலி பாகம், நாரிகேள பாகம் ஆகும்.
திராட்சா பாகம்:
திராட்சை பழத்தை சுவைக்க கடுமையான முயற்சி எதுவும் தேவையில்லை. வாயில் எடுத்துப்போட்டவுடனே அதன் சுவை தெரியும்.
உதாரணம்- கவிதை போன்ற இலக்கியங்கள்
அதனை சுவைக்கத் தொடங்கியவுடனேயே அதன் சுவையை நம் அறிவு ருசிக்கத் தொடங்கி விடும். இவ்வகையான இலக்கியங்கள் திராட்சா பாகமாகும்.
கதலி பாகம்:
கதலி பழத்தை உரித்த பின்னர் தான் அதன் சுவையை உணர முடியும். அதைப்போன்ற சிறு முயற்சியை தேட வைக்கும் இலக்கியங்களை கதலி பாகம் என்று கூறுகிறார்கள். பாரதியார், பாரதிதாசன், வள்லலார் பாடல்கள் இந்த வகையைச் சேர்ந்ததாகக் கூறப்படுகின்றன.
நாரிகேளா பாகம்:
இவை தேங்காய் போன்று மிகவும் சிரமப்பட்டு பொருள் தேட வேண்டிய இலக்கியங்கள்.
நாரிகேளம் என்பது தேங்காய். தேங்காயை சிரமப்பட்டுத்தான் அதன் மட்டையிலிருந்து பிரிக்க முடியும். இதற்கு சங்ககால இலக்கியங்கள் உதாரணங்கள். அவற்றை நாமாக சுவை உணர முடியாது. அதற்குத்தக்க பேராசிரியர்களைக்கொண்டே அதன் பொருளை உணர முடியும். எனவே தான் இவ்வகை இலக்கியங்கள் நாரிகேள பாகமென்று பிரிக்கப்பட்டுள்ளன.
குழப்ப முத்து!!
சில காலமாய் சில நண்பர்களின் வலைத்தளங்களைப் பார்வையிட முடியவில்லை. எப்போது அவற்றைத் திறந்தாலும் வலைப்பக்கங்கள் குதித்துக்கொண்டே இருக்கின்றன. அதை நிறுத்தி, படித்து ரசித்து பின்னூட்டங்கள் தர முடிவதில்லை. திருமதி.கோமதி அரசு, திரு.ஜனா –இவர்களது பக்கங்களைப்பார்வையிட முடியவில்லை. எல்லோருக்குமே இந்த பிரச்சினை இருக்கிறதா, அல்லது எனக்கு மட்டும் தானா என்றும் புரியவில்லை. சில வாரங்களுக்கு முன் இதற்கு திருமதி.ஹுஸைனம்மா ஏதோ தீர்வு எழுதியிருந்ததாக ஞாபகம்.
அனைத்து அன்பு நண்பர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

35 comments:
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய அன்பான சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அழகிய முத்து அதிசயமுத்து, அசத்தியமுத்து அருமையான மூலிகை முத்து, அறிவியல்முத்து - தொழில்நுட்பத்தின் சிகரம், ரசித்தமுத்து மூன்றும் அருமை.
அழகிய விளக்கங்கள். அத்தனை முத்துக்களும் விலைமதிக்கமுடியாதவை.
நல்ல பதிவு. பகிர்விற்கு மிக்க நன்றி மனோஅக்கா!...
அனைத்தும் அருமையான முத்துக்கள்...
அறிவியல் முத்தும், ரசித்த முத்துக்களும் சுவை கூட்டின...
நேற்று முன்தினம் Asiya Omar அவர்கள் கூட மெயில் அனுப்பி இருந்தார்கள்... (திருமதி.கோமதி அரசு தளம் மற்றும் மீரா அவர்களின் தளம்) அவர்களுக்கு கீழுள்ள தகவலை அனுப்பி விட்டேன்...
வரும் கருத்துரையாளர்கள் கீழுள்ள தளத்தில் உள்ளது போல் செய்து விட்டால் தீர்வு கிடைத்து விடும்... நன்றி...
துள்ளிக் குதிக்கும் ப்ளாக் - தீர்வு என்ன? :
விசிட் : http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
அனைத்துமே அருமை....
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
http://mathysblog.blogspot.com/ncr
மனோ, இந்த லிங்கை அடித்து வந்தால் என் வலைத்தளத்திற்கு வரலாம்.
இந்த வழி முறை ஹுஸைனம்மா சொல்லிக் கொடுத்தது.
திண்டுக்கல் தனபாலன் அவர்கள் சொல்வது நிரந்தர தீர்வு போல செய்துப் பார்க்கிறேன் கூடியவிரைவில்.
திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.
உங்கள் பகிர்வில் உள்ள முத்துக்கள் எல்லாம் அருமை.
உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
முத்து மூன்றும் அருமை.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .அறிவியல் முத்து,அசத்திய முத்து, ரசித்த முத்து, அனைத்து முத்துக்களும் அருமை மேடம். பகிர்வுக்கு நன்றி.
அனைத்து முத்துக்களும் ரசித்தேன்...
அனைத்து முத்துக்களும் ரசித்தேன்.
அந்த கைபேசி வந்தால் நிஜமாகவே நன்றாக இருக்கும். பார்க்கலாம்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம். கிராம்பு ஒரு பூ என்று இன்றுதான் அறிந்துகொண்டேன். பகிர்ந்த அனைத்து முத்துக்களும் ரசிக்கவைத்தன. நன்றி மேடம்.
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்.
அனைத்து முத்துக்களும் அருமையாக உள்ளன.
கிராம்பு பற்றியும், கைபேசி பற்றியும் கூறியுள்ளது மிகச்சிறப்பாக உள்ளன.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
ராட்சத மனிதர்கள் அமர்ந்து சாப்பிடும் டைனிங் டேபிள் போல இருக்கிறது முதல் படம். அல்லது ஆகாய மனிதர்கள் தங்கள் பயணத்தில் படுத்துறங்கப் பயன்படும் சாலையோர பெஞ்ச்!!!
பல்வலிக்கு கிராம்புத் தைலம் வைப்போமே... நம் சமயலறையில் உபயோகப் படுத்தும் பொருட்கள் எதையும் ஒதுக்காமல் அதனதன் அளவில் உபயோகித்து வந்தாலே பல நோய்கள் வராது போல.
ரசித்த முத்து பிரமாதம்.
குழப்ப முத்துக்கு DD குழப்பம் தீர்க்க உதவி செய்வார் என்று நினைக்கிறேன்.
எனது பின்னூட்டத்தை இட்டு விட்டு மற்ற பின்னூட்டங்களைப் படித்தால் DD ஏற்கெனவே தீர்வு சொல்லியிருக்கிறார். அதான் DD!
நீங்கள் எழுதியுள்ள அனைத்து முத்துகளும் பயனுள்ள முத்துக்கள் மனோ அக்கா
கோமதி அக்காவின் பதிவை என்னாலும் படிக்க முடியவில்லை,
முத்துக்குவியலில் பகிர்ந்த அனைத்து முத்துக்களும் அருமை.
விஜய ஆண்டு ஜெயமாய் இருக்கட்டும் நம் எல்லோருக்கும்!
ரசித்த முத்து வியப்பு
அழகிய முத்து ஆச்சர்யம். (அடுத்த தடவை மேலூரிலிருந்து மதுரை செல்லும் போது தெரியும் சமதள மலையையாவது பார்க்க வேண்டும்.)
அசத்திய முத்து பெருமிதம் (அரிய மூலிகைகளின் பாரம்பரியம்)
அறிவியல் முத்து சந்தோசம்.
புத்தாண்டின் முதல் பதிவு வெகு ஜோர் சகோ...
முத்துகள் அனைத்தும் ஒளிவீசி ரசிக்கவைத்தன.. பாராட்டுக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி இளமதி!
பாராட்டுக்களுக்கும் கருத்துரைக்கும் துள்ளி குதிக்கும் ப்ளாக்- ற்கான தீர்வு தந்தமைக்கும் அன்பு நன்றி தனபாலன்!
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!!
பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி கோமதி!
பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி சகோதரர் குமார்!
மேஜைமலை,அறிவியல் முத்துக்களுடன் சிறக்கின்றது பகிர்வு.
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மனம் கனிந்த ந்ன்றி ராதா!
வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ராஜலக்ஷ்மி!
பகிர்வை ரசித்ததற்கு இனிய நன்றி மேனகா!
பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் கருத்துப்பகிர்விற்கும் அன்பு நன்றி கீதமஞ்சரி!
கருத்துரைக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!
நீங்கள் சொல்வது போல திரு.திண்டுக்கல் தனபாலனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவருடைய உதவிக்கு நான் நன்றியும் சொல்லி விட்டேன்!
வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்!!
பாராட்டுக்கு அன்பு நன்றி ஆசியா!
கருத்துரைக்கும் வருகைக்கும் இனிய நன்றி ஜலீலா! திருமதி.கோமதி அரசுவின் வலைப்பக்கம் மட்டுமல்ல, அது போன்ற பிரச்சினைக்குள்ளான மற்ற வலைப்பக்கங்களையும் திறக்க திரு. திண்டுக்கல் தனபலன் சொனன் யோசனைப்படி செய்தேன். இப்போது அந்த பிரச்சினை சரியாகி விட்டது ஜலீலா! நீங்களும் செய்து பாருங்கள்!!
பகிர்வை ரசித்ததற்கும் பாராட்டியதற்கும் அன்பார்ந்த நன்றி ராஜராஜேஸ்வரி!!
ஒவ்வொரு முத்தையும் ரசித்து பாராட்டியதற்கு அன்பு நன்றி நிலாமகள்!!
திராட்சை பழத்தை சுவைக்க கடுமையான முயற்சி எதுவும் தேவையில்லை. வாயில் எடுத்துப்போட்டவுடனே அதன் சுவை தெரியும்.
உதாரணம்- கவிதை போன்ற இலக்கியங்கள்
அதனை சுவைக்கத் தொடங்கியவுடனேயே அதன் சுவையை நம் அறிவு ருசிக்கத் தொடங்கி விடும். இவ்வகையான இலக்கியங்கள் திராட்சா பாகமாகும்.
எனக்கு மேலுள்ள வரிகள் பிடித்தது. மிக அருமையான பதி,,,,வு.
வலை துள்ளும் பிரச்சனை எனக்கும் உணடு. கோமதி அரசு - நடனசபாபதி- திரு இளங்கோ - ஜனா - ரிஷபன் எங்கும் போக முடியாது துள்ளும்.
சகோதரி கூறியதாக எனக்கு ஓர இனைப்பு நை;தார் கோமதி அரசு. அதை அழுத்தி அவரிடம் போகிறேன். திரு நடன சபாபதி நிரந்தரத் தீர்விற்கு வழி கூறினார் ஓரு நேரத்தில் அதைத் தருகிறேன். இதை நான் செய்யவில்லை . தொழில் நுட்பத்தில் நான் வறியவள்.
வேதா. இலங்காதிலகம்.
Post a Comment