Thursday, 7 February 2013

துபாயில் உலகக் கண்காட்சி!!

சென்ற வருடம் இங்கே துபாயில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் அகில உலகக் கண்காட்சி ப‌ற்றிக் குறிப்பிட்டிருந்தேன். புகைப்படங்களையும் இணைத்திருந்தேன்.

ஒவ்வொரு வருடம் அக்டோபர் இறுதியிலிருந்து மார்ச் வரை இது நடைபெறுகிறது.

அனைத்து நாடுகளும் அவர்களின் அரங்கங்களை அசத்துமாறு ஒவ்வொரு வருடமும் அமைத்திருப்பார்கள். இது அமைந்திருக்கும் இடத்திற்கு குளோபல் வில்லேஜ் என்று பெயர். பொதுவாய் இந்திய அரங்கம் பிரம்மாண்டமாய் இருக்கும். ஆனால் அதில் பெரும்பாலும் தமிழ்நாடு, கேரள மாநிலங்கள் கடைகள் போடுவதில்லை. வட இந்திய மாநிலங்களின் கடைகள் தான் ஆக்ரமித்திருக்கும்.

அலங்காரங்களும் விளையாட்டுக்களும் உணவ‌கங்களுமாய் சிறப்பாய் நடந்து வரும் இந்தக் கண்காட்சியைப்பார்க்க உலகத்தின் பல நாடுகளினின்றும் மக்கள் வந்த வண்னம் இருப்பார்கள். நூற்றுக்கணக்கான நவீன ஹோட்டல்கள் எல்லாம் நூறு சதவிகிதம் நிரம்பி வழியும். இந்தியாவில் இந்த கண்காட்சிக்கு வருவதற்கென்று விசா செலவு, டிக்கட் செலவு எல்லாம் அந்த சமயத்தில் குறைவாக இருக்கும். நிறைய ஏஜென்சிகள் இந்த பயண‌ ஏற்பாடுகளைச் செய்து தருகின்றன!

நீங்கள் ரசிக்கவென்று சில புகைப்படங்கள்!!











 

26 comments:

கோமதி அரசு said...

ரசித்த முத்துக்கள் அருமை.
படங்கள் எல்லாம் அழகாய் இருக்கிறது.

//இந்தியாவில் இந்த கண்காட்சிக்கு வருவதற்கென்று விசா செலவு, டிக்கட் செலவு எல்லாம் அந்த சமயத்தில் குறைவாக இருக்கும். நிறைய ஏஜென்சிகள் இந்த பயண‌ ஏற்பாடுகளைச் செய்து தருகின்றன!//

அடுத்தமுறை டிக்கட் எடுத்து விட வேண்டியது தான் இந்த சமயத்தில்.
அக்காள் மகள் அங்கு இருக்கிறாள் அழைத்துக் கொண்டே இருக்கிறாள்.

ஸாதிகா said...

வாவ்..அருமையான தெளிவான படங்கள்.இன்னும் புகைப்படங்கள் வைத்திருந்தால் விளக்கங்களுடன் பகிரவும்.குளோபல்விலேஜ்க்கு போகத்தான் இயலவில்லை.உங்கள் பதிவிலவது பார்க்கிறோம்.

RAMA RAVI (RAMVI) said...

சுவாரசியமான தகவல்.படங்கள் மிக அழகு.

Anonymous said...

அருமையான பகிர்வு.
படங்கள் அசத்துது.

திண்டுக்கல் தனபாலன் said...

புகைப்படங்கள் அருமை...

இளமதி said...

மனோ அக்கா... உலகத்தில் அதிசயப்படவும் ரசிக்கவும் அனுபவிக்கவுமென எத்தனை எத்தனை விடயங்கள்... இங்கு நீங்கள் காட்டும் படங்களும் அதன் பிரமாண்டமும் பிரமிக்க வைக்கிறதே...:)
அருமை. நல்ல பகிர்வு.

எமக்கும் பார்த்து ரசிக்கப் பதிவிட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

RajalakshmiParamasivam said...

நமது தேசியக் கோடி அங்கு துபாயில் பட்டொளி வீசி பறக்கக் காணும் போது பெருமையாக இருக்கிறது.

புத்தகத் திரு விழா நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அதைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான செய்திகள்,.
அற்புதமான படங்கள். ;)

பகிர்வுக்கு நன்றிகள்.

தி.தமிழ் இளங்கோ said...

துபாய் உலகக் கண்காட்சி!! புகைப் படங்கள் அருமை!

ADHI VENKAT said...

புகைப்படங்கள் அனைத்துமே அருமை....தங்கள் பதிவு மூலம் எங்களாலும் பார்க்க முடிந்தது.

உஷா அன்பரசு said...

கண் கவர் கண்காட்சி !

நிலாமகள் said...

அரங்கங்களின் புற அழகே கண்ணை நிறைக்கிறது!

Anonymous said...

புகைப்படங்கள் அனைத்துமே அருமை.
சுவாரசியமான தகவல்.
மனமார்ந்த நன்றி.
Vetha.Elangathilakam.

மனோ சாமிநாதன் said...

ரசித்த முத்துக்களைப் பாராட்டியது மகிழ்வை அளித்தது கோமதி! அவசியம் அடுத்த வருடம் இந்த நிகழ்ச்சியை கண்டு ரசிக்க வாருங்கள்! நாமும் சந்திக்கலாம்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கு அன்பு நன்றி ஸாதிகா! கொஞ்சமாகத்தான் இந்த முறை படங்கள் எடுத்தேன். அடுத்த முறை நிறைய படங்களுடன் பகிர்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ரமா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி ஸ்ரவாணி! படங்களை ரசித்தது மகிழ்வாக இருந்தது!

மனோ சாமிநாதன் said...

வாருங்கள் தனபாலன்! ரொம்ப நாட்களாகக் காணோமே என்ற‌ கவலையை நான் சென்ற மாதம் வலைச்சர ஆசிரியராய் இருந்த போது பகிர்ந்திருந்தேன்.
பாராட்டுக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

படங்களைப்பார்த்து ரசித்து எழுதியதற்கு உளமார்ந்த நன்றி இளமதி!!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ராஜலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் இளங்கோ!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு இனிய நன்றி உஷா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ஆதி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி நிலா!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி வேதா!