மறு நாள் எங்கள் ஹோட்டலில் காலை உணவை முடித்த பிறகு, இண்டர்லாக்கன் என்ற நகர் வழியாக ஜுங்ஃப்ரா என்ற மலையின் உச்சியிலுள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு பயணத்தை ஆரம்பித்தோம்.
பொதுவாகவே ஸ்விட்சர்லாந்து நாட்டில் கடல் மட்டத்திற்கு 13000 அடிக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குன்றுகள் இருக்கின்றன. பெரும்பாலான மலைகளில் கேபிள் கார்கள், ரயில்கள் வசதிகள் இருக்கின்றன. பனிச்சறுக்குதல், மலை ஏறுதல் பொதுவாக எல்லா மலைகளிலும் எப்போதுமே வெளிநாட்டுப் பயணிகளால் புகழ் பெற்றிருக்கின்றன.
இண்டர்லாக்கன் [INTERLAKEN ] நகரம் அழகிய ஏரிகளாலும் ஓடைகளாலும் நீர்வீழ்ச்சிகளாலும் சிறு மலைகளாலும் சூழப்பெற்றது. கவிஞர்களாலும் ஓவியர்களாலும் பாடகர்களாலும் அலங்கரிக்கப்பட்டது இந்த மலைப்பிரதேசம்!
குட்டி குட்டி கடைகள் அங்கங்கே ஷாப்பிங் செய்ய இருக்கின்றன. அதனருகே உள்ளது ஐரோப்பாவின் புகழ்பெற்ற மலை ஜுங்ஃப்ரா.[ JUNGFRAU]. கடல் மட்டத்திலிருந்து 3454 மீட்டர் [13647 அடி] உயரமான இந்த மலை Valais, Bern என்ற இரு நகரங்களுக்கிடையே ஆல்ப்ஸ் மலைத்தொடரில் கம்பீரமாக நிற்கிறது. இது ஐரோப்பாவின் சிகரம் என்றழைக்கப்படுகிறது. இந்த மலை உச்சியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் ஐரோப்பாவின் மிக உயர்ந்த ரயில்வே ஸ்டேஷனாகும். இரண்டு பகுதிகளாக இதற்கு பயணம் வகுக்கப்பட்டிருக்கிறது.
முதல் பகுதி பனி படர்ந்த புல்வெளி, பின் பசுமையான குன்றுகளிடையே பயணிக்கிறது. பின் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அடுத்த ரயிலில் பயணிக்க வேண்டும். இது முழுவதுமாக பனி மூடிய சிகரங்களிடையே உச்சிக்குச் செல்கிறது.
எங்கள் ஹோட்டல் அறையின் ஜன்னலிலிருந்து
|
ஹோட்டலின் உள்ளே பார்த்து ரசித்த, பிரமித்த சில ஓவியங்கள்!
|
இண்டர்லாக்கன் [INTERLAKEN ] நகரம் அழகிய ஏரிகளாலும் ஓடைகளாலும் நீர்வீழ்ச்சிகளாலும் சிறு மலைகளாலும் சூழப்பெற்றது. கவிஞர்களாலும் ஓவியர்களாலும் பாடகர்களாலும் அலங்கரிக்கப்பட்டது இந்த மலைப்பிரதேசம்!
இண்டர்லாகன் நகரை நெருங்கும்போது
|
குட்டி குட்டி கடைகள் அங்கங்கே ஷாப்பிங் செய்ய இருக்கின்றன. அதனருகே உள்ளது ஐரோப்பாவின் புகழ்பெற்ற மலை ஜுங்ஃப்ரா.[ JUNGFRAU]. கடல் மட்டத்திலிருந்து 3454 மீட்டர் [13647 அடி] உயரமான இந்த மலை Valais, Bern என்ற இரு நகரங்களுக்கிடையே ஆல்ப்ஸ் மலைத்தொடரில் கம்பீரமாக நிற்கிறது. இது ஐரோப்பாவின் சிகரம் என்றழைக்கப்படுகிறது. இந்த மலை உச்சியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் ஐரோப்பாவின் மிக உயர்ந்த ரயில்வே ஸ்டேஷனாகும். இரண்டு பகுதிகளாக இதற்கு பயணம் வகுக்கப்பட்டிருக்கிறது.
ஜுங்ஃப்ராவிற்கு முதல் கட்ட ரயில் பயணத்தின்போது எழில் கொஞ்சும் பசுமை!
|
முதல் பகுதி பனி படர்ந்த புல்வெளி, பின் பசுமையான குன்றுகளிடையே பயணிக்கிறது. பின் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அடுத்த ரயிலில் பயணிக்க வேண்டும். இது முழுவதுமாக பனி மூடிய சிகரங்களிடையே உச்சிக்குச் செல்கிறது.
ஜுங்ஃப்ராவிற்கு இரண்டாம் கட்ட ரயில் பயணத்தின்போது பனி படர்ந்த மலைகள்!
|
அதிசய வைக்கும் ஐஸ் குகை!
|
ஐஸ் குகையில் அழகிய ஐஸ் சிற்பம் அருகே என் மகனுடன் என் கணவரும் பேரனும்!!
மலை உச்சியில் இறங்கியதும் ஐரோப்பாவிலேயே உயரமான ரயில்வே ஸ்டேஷன் ஒரு நான்கு மாடி கட்டிடமாக நம்மை வரவேற்கிறது. சிறிய உணவகம், காப்பி, தேனீருக்கென தனி ஸ்டால், அதன் பின்னர் சிறு சிறு கடைகள், தொடர்ந்து ஜுங்ஃப்ரா நிர்மாணம் ஆன விபரங்கள், ஐஸ் குகை, ஐஸ் சிலைகள் என்று ஒரு தனி வழிப்பாதைப்பயணம் என்று அசத்துகிறது!
தொடரும்.. ..!!
23 comments:
சரிந்திறங்கும் புல்வெளியும் தூரத்து வெள்ளி மகுட மலைகளும் அப்புறம் அந்த ஓவியங்களும் அழகோ அழகு!
படங்கள் மிக மிக அழகாக இருக்கிறது!!!!!!!!பகிர்வுக்கு மிக்க நன்றி....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
அசத்தல் படங்களுடன் அற்புதமான பதிவு. மீதி பகுதிகளையும் பார்த்துவிடுகிறேன்.
படஙுகள் அனைத்தும் அருமை!
அட்டகாசமான படங்கள்... மிக்க நன்றி...
படங்களும் பகிர்வும் அருமை. நாங்களும் இப்பதிவின் மூலம் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி.
படங்களின் அழகு பதிவை மெருகூட்டுகிறது. ஐஸ் குகை அதிசயிக்கச் செய்கிறது உண்மையாகவே. பகிர்வுக்கு நன்றி!
எழில் கொஞ்சும் பசுமை!நிறைந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டியின் சிறப்பு தினமும் பதிவர் பேட்டி
தினபதிவு திரட்டி
பனி படர்ந்த மலைகளும், ஐஸ் குகையும், ஐஸ் குகையின் உள்ளே சிற்பமும், ஹோட்டலில் உள்ளே வைக்கப்பட்ட ரசிக்கவைத்த ஓவியங்களும்... ஜன்னலில் இருந்து பார்க்கும்போது தெரிந்த குட்டி குட்டி கார்களும் ரோடும்.... பசுமையான புல்வெளியும் ரசனையாக எடுக்கப்பட்ட படங்களும் அதனுடனே அருமையான விவரங்களும் பார்க்கும் எங்களையும் உங்களுடனே அழைத்துச்சென்றது போல இருந்தது மனோம்மா... அருமை அருமையான பகிர்வு...
மனம் நிறைந்த அன்புநன்றிகள் மனோம்மா...
படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன. பகிர்வுக்கு நன்றி அக்கா.
ரசனையான பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜனா!
அன்பார்ந்த பாராட்டிற்கு இனிய நன்றி ரமா!
இனிய பாராட்டிற்கு அன்பார்ந்த நன்றி சகோதரர் ராமானுசம்!
அன்பான பாராட்டிற்கு அன்பார்ந்த நன்றி சகோதரர் தனபாலன்!
நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்து, ரசித்துப் பாராட்டியதற்கு அன்பார்த்த நன்றி இமா!
அன்பார்ந்த பாராட்டுக்கு இனிய நன்றி ஆதி!
அன்பார்ந்த பாராட்டுக்கு இனிய நன்றி ஆதி!
இனிய பாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி நிலாமகள்!
இனிய பாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி!!
தினப்பதிவிற்கு இனிய நன்றி!
ரசித்து அருமையான பின்னூட்டம் கொடுத்திருக்கும் மஞ்சுவிற்கு நெஞ்சம் நிறைந்த நன்றி!!
அருமையான ஓவியங்கள்.அழகான இயற்கை காட்சிகள் என்று அட்டகாசமான பகிர்வு.இது மாதிரி காட்சிகள் ரகிக்க தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
Post a Comment