Sunday, 19 August 2012

உயிர் காக்கும் மருத்துவம்


மறுபடியும் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை முறைகள் தொடர்கின்றன.. .. ...
பகுதி-2
இரத்தக்குழாய்களின் அடைப்புகளை கரைத்து இரத்தத்தை சீராக பாய வைக்க:
இன்னொரு நண்பரின் உண்மைக்கதை. மூன்று இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதய மருத்துவரின் பரிசோதனைகளுக்குப்பிறகு, உடனடியாக அவர் அறுவை சிகிச்சையை [ CARONARY BY PASS SYRGERY ] மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டார். அறுவை சிகிச்சை செய்து கொள்ள பயந்த அவர், ஒரு நலம் விரும்பி சொன்னதைக் கேட்டு, AMWAY’S NUTRILITE GARLIC HEART CARE- மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பித்திருக்கிறார். ஒரு மாதத்திலேயே அவரின் உடல் நலம் முன்னேற்றமடையத் தொடங்கியிருக்கிறது. ஒரு சில மாதங்களிலேயே அவருடைய இரத்தக்குழாய்களில் அடைப்புகள் சுத்தமாக நீங்கி விட்டன. மருத்துவர் மறுபடியும் அனைத்து பரிசோதனைகளையும் செய்து பார்த்து, அவருக்கு  இரத்தக் குழாய்களில் அடைப்புகள் சுத்தமாக நீங்கி விட்டன என்றும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் கூறி விட்டார்.
அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட பிறகு அவர் இது போல செய்தது தவறு என்றாலும், பொதுவாக, அனைவருமே தினம் ஒரு காப்சூல் எடுத்துக்கொள்ளுவது,  வருமுன் காப்பதற்கு சமானம்’ என்பது என் கருத்து. பூண்டின் மகிமை பற்றி மேலும் அறிய கீழுள்ள link-ஐப் படிக்கவும்.
உயர் அழுத்தம் அதிகமானால், அதைக் குறைக்க:
பொதுவாக உயர் இரத்த அழுத்தம் எல்லோருக்கும் 120/80 இருக்க வேண்டும். மேலுள்ளது SYSTOLIC PRESSURE என்பதையும் கீழுள்ளது DIASTOLIC PRESSURE என்பதையும் அனைவரும் அறிவோம். சில வருடங்கள் முன்னால், வயது ஏற ஏற, SYSTOLIC PRESSURE 140 வரை இருக்கலாம் என்று மருத்துவர்களே சொல்லி வந்தார்கள். ஆனால், பல ஆய்வுகளுக்குப்பிறகு, தற்போதெல்லாம் இளையவர்களானாலும் சரி, முதியவர்களானாலும் சரி, 120/80 என்று இருப்பது தான் சரியானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சென்ற வருட இறுதியிலிருந்து எனக்கு SYSTOLIC PRESSURE 150 வரை ஏற ஆரம்பித்தது. இதய மருத்துவர்களின் தொடர் சிகிச்சையில் மாத்திரைகளின் எண்ணிக்கை தான் உயர்ந்ததே தவிர, நார்மலுக்கு SYSTOLIC PRESSURE வரவில்லை. சென்ற மாதம் நான் தஞ்சையிலிருந்த போது, சக பதிவரும் என் சகோதரருமான திரு. ஹைஷ் தில்லியிலிருந்து பேசிய போது, என் பிரச்சினையை அறிந்து அதற்கு ஒரு யோகா சிகிச்சையைக் கற்றுத் தந்தார். இதை செய்ய ஆரம்பித்து, ஒரு வாரத்திலேயே, குறைந்த அளவு மாத்திரைகளுடன் என் SYSTOLIC PRESSURE நார்மலுக்கு வந்தது. இந்த யோகா சிகிச்சையை நான் தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் செய்து வருகிறேன். என் உயர் இரத்த அழுத்தம் 125/75 என்று இருக்கிறது. நாளடைவில் மாத்திரைகளை மேலும் மருத்துவர்கள் குறைத்து விடுவார்கள் என்றும் என் சகோதரர் சொன்னார். 90 சதவிகிதம் அனைவருக்கும் இந்தப்பிரச்சினை உள்ளது என்பதால் இணையத்தின் வாயிலாக அனைவருக்கும் இது பயன்பட வேண்டுமென்று இந்த சிகிச்சை முறையைப்பற்றி எழுதுகிறேன்.
இதற்கு நாம் வடக்கு திசை நோக்கி சம்மணங்கால் போட்டு அமர வேண்டும். கைகளை சாதாரணமாக மடியில் வைத்துக்கொண்டு, இடுப்பை இடமிருந்து வலமாக [clock wise] மெதுவாக சுற்ற வேண்டும். இது போல 21 தடவைகள் செய்ய வேண்டும். பின் வலமிருந்து இடமாக [Anti clockwise] 21 தடவைகள் சுற்ற வேண்டும். மறுபடியும் 7 தடவைகள் இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும்.
வடக்கு நோக்கித்தான் அமர வேண்டும். காலை சூரிய உதயத்திற்குப்பின்னும், மாலை சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும் இந்தப் பயிற்சியை செய்ய வேண்டும். வயிறு காலியாக இருக்க வேண்டும். தண்ணீரோ அல்லது காப்பியோ குடித்து விட்டு செய்யலாம். தரையில் உட்கார முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யலாம். முக்கியமான விஷயம், இடுப்பை மட்டும்தான் அசைத்து சுற்ற வேண்டும். அதன் கீழ் தொடைகளோ, கால்களோ அசையக்கூடாது. மிகச் சுலபமான இந்தப்பயிற்சி செய்ய ஒரு சில நிமிடங்கள்தான் தேவைப்படும்.
சர்க்கரை நோயிலிருந்து விடுபட:
இந்த விஷயத்தை மீள் பதிவாக மறுபடியும் எழுதுகிறேன், இது வரை இந்த விபரம் தெரியாதவர்களுக்கு பயன்படும் என்பதற்காக:
சட்டீஸ்கர் மாநிலத்திலிருக்கும் துர்க் என்னும் நகரத்திலுள்ள ஜும்மா மசூதியில் இதற்காக ஒரு மருந்து தருகிறார்கள். இங்கு சென்று முதல் நாளே ஒரு நபருக்கு 35 ரூபாய் என்று பணம் கட்டி முன்பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் தொகை ஒட்டகப்பாலுக்கு என்று கூறப்படுகிறது. மருந்து காலை 7.30 மணியிலிருந்து மதியம் 11 மணி வரை தருகிறார்கள்.
மறுநாள் காலை எழுந்து காலைக்கடன்களை முடித்து தண்ணீர்கூடக் குடிக்காமல் ஜும்மா மசூதி 7 மணியளவில் செல்ல வேண்டும். முன்பதிவு நம்பர்படி சுமார் 50 நபரக்ளை அழைத்து அமரச் செய்து, உள்ளங்கையில் சூரண மருந்தைக்கொட்டி அதனை ஒரு பெரிய டம்ளரில் கொட்டி அதில் ஒட்டகப்பாலை ஊற்றி சூரண மருந்து தீரும்வரை குடிக்கச் செய்கிறார்கள். குடித்த பிறகு ஒரு வாய்த் தண்ணீர் மட்டும் குடிக்க வைத்து உட்கார வைக்கிறார்கள்.
இந்த மருந்துக்கு கட்டணமாக ஒவ்வொருத்தரிடமிருந்தும் 120 ரூபாய் பெற்றுக்கொள்கிறார்கள்.
அவர்கள் கூறும் அறிவுரைகள்:
மருந்து சாப்பிட்டதிலிருந்து 4 மணி நேரம் வரை தண்ணீர், உணவு, புகை பிடிப்பது என்று எதையும் எடுத்துக்கொள்ளக்கூடாது.
4 மணி நேரம் கழிந்த பின் நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் இனிப்பு, உனவு எல்லாவற்றையும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும்.
மருந்து குடித்த பின் ஊறும் உமிழ்நீரைத் துப்பக்கூடாது.
வீட்டுக்குச் சென்ற பின் சர்க்கரை அளவு அதிகமாகத் தெரிந்தால் இரண்டு நாட்களுக்கு மட்டும் அதுவரை பயன்படுத்தி வந்த மருந்துகளை சாப்பிட்டு அதன் பின் நிறுத்தி விட வேண்டும்.30 நாட்களுக்குப்பிறகு இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தால் சர்க்கரையின் அளவு நிச்சயமாகக் குறைந்து நார்மல் அளவிற்கு வந்திருக்கும்.
இன்சுலின் எடுப்பவர்கள் மட்டும் இந்த மருந்தை இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
குறிப்பு:
சென்னை செண்ட்ரலிலிருந்து துர்க் நகரத்திற்கு கோர்பா எக்ஸ்பிரஸ் வாரம் இரு முறையும் விலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் வாரம் ஒரு முறையும் செல்கிறது.
இது சம்பந்தமான தகவல்களுக்கு:
Baba’s address: SHEIK ISMAIL, Jamia masjid Street, Jawahar Chouk, DURG
Call: 09826118991, 09424107655 between 6.00pm to 7.30 pm.
நன்னலத்துடனும் மகிழ்வுடனும் அனைவருமிருக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
பின் குறிப்பு:
இந்தத் தொடர் எழுதக் காரணமாக இருந்த என் சினேகிதிக்கு ஆஞ்சியோகிராம் செய்யவிருந்ததாக எழுதியிருந்தேன் அல்லவா? அது தான் anti climax ஆகிப்போனது. ஆஞ்சியோகிராம் செய்த பின், படபடக்கும் இதயத்துடன் இருந்த அவரின் பிள்ளைகளிடம் மருத்துவர் சொன்னது, “ எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு இரத்தக்குழாய் ஒரு இடத்தில் சிறிது வளைந்துள்ளது. அது தான் அடைப்பு போலத் தோன்றியுள்ளது!!”

25 comments:

நிலாமகள் said...

21க்கு 7 ரொம்ப‌ சுல‌ப‌மாக‌ இருக்கும் போலிருக்கிற‌தே... த‌ங்க‌ளுக்கும் ச‌கோத‌ர‌ருக்கும் ந‌ன்றி! சென்னையிலிருந்து துர்க் ந‌க‌ர் செல்ல‌ எவ்வ‌ள‌வு கால‌ அவ‌காச‌ம் ஆகும்? தோழிக்கு த‌லைக்கு வ‌ந்த‌து த‌லைப்பாகையோடு போன‌து ச‌ந்தோஷ‌ம்!

ஸ்ரீராம். said...

உபயோகமான குறிப்புகள்...

இடுப்பை மட்டும் சுழற்றுவது - செய்யும்போது நமக்கே திருப்தி இருக்காது என்று தோன்றுகிறது. நாம் செய்வது சரியா என்ற சந்தேகம் இருக்கும் என்று தோன்றுகிறது.


//2. 4 மணி நேரம் கழிந்த பின் நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் இனிப்பு, உனவு எல்லாவற்றையும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும்.//

24 மணி நேரம்?



Vijiskitchencreations said...

நல்ல பயனுள்ள பதிவு. நோய்களின் பேரை கேட்டாலே இப்பவெல்லாம் ஒரே பயமா இருக்கு அதே போல் இந்த பதிவு நல்ல பயனுள்ள தகவலோட இருப்ப்பது எல்லாருக்கும் பயன்படும்.

குறையொன்றுமில்லை. said...

நீங்க சொல்லி இருக்கும் யோகா பயிற்சி எனக்கு பயன் படும்னு நினைக்கிரேன். கீழே உக்கார முடியாது ஆர்த்தரைட்டீஸ் இருக்கே சேரில் தான் உக்காரனும்.முயற்சி செய்து பார்க்கிரேன் ஆனா எனக்கு ப்ரெஷர் நார்மலாதான் இருக்கு.

Radha rani said...

நல்ல பயனுள்ள அனைவருக்கும் உபயோகமான பதிவு மேடம் .. எனக்கு தேவையானது இந்த யோகா சிகிச்சை..யோகா சிகிச்சையை தினமும் காலை மாலை செய்யப்போகிறேன்..மிக்க நன்றி மேடம் .இந்த பகிர்வை பதிய உதவிய ஹைஷ் சகோதரருக்கு மிக்க நன்றி..

திண்டுக்கல் தனபாலன் said...

பலருக்கும் பயன் தரும் பதிவு...

பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

VijiParthiban said...

நல்ல பயனுள்ள அனைவருக்கும் உபயோகமான பதிவு....த‌ங்க‌ளுக்கும் ச‌கோத‌ர‌ருக்கும் ந‌ன்றி....

Anonymous said...

பயணளிக்கும் பதிவு:)

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் பயனுள்ள பகிர்வு. மனமார்ந்த நன்றிகள், மேடம்.

I would like to share an award with you, Madam. Please visit my blog:

http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

அன்புடன்
vgk

அம்பாளடியாள் said...

பயனுள்ள மருத்துவக் குறிப்பு .இது பலரையும் சென்றடைய
வேண்டும் என்பதே என் அவா .வாழ்த்துக்கள் தொடர்ந்தும்
இது போன்ற சிறந்த குறிப்புகளை தொடருங்கள் .மிக்க நன்றி
பகிர்வுக்கு .அத்துடன் விருது பெற்றுக் கொண்ட தங்களுக்கு
மேலும் மேலும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

V Mawley said...

High BP க்கு தாங்கள் விவரித்திருக்கும் பயிற்சியை செய்ய த்தொடங்கிவிட்டேன் ...பார்க்கலாம் .. நன்றி
மாலி .

vetha (kovaikkavi) said...

மிகப்பயனுடைய பதிவு. நன்றி சகோதரி.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

மனோ சாமிநாதன் said...

இது சுலபமான பயிற்சி தான் நிலாமகள்! உயர் ரத்த அழுத்தம் நார்மலுக்கு வந்ததும் அனுபவப்பூர்வமான உண்மை!

துர்க் சென்னையிலிருன்து சென்றால் அடுத்த‌ நாள் தான் போய்ச் சேருவோமென‌ நினைக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

இடுப்பை மட்டும் அசைத்து சுற்றுவது சிரமமாக இல்லை ஸ்ரீராம்! முதல் நாளிலிருந்தே என்னால் சுலபமாக இந்தப் பயிற்சியை செய்ய முடிந்தது.
நீங்கள் குறிப்பிட்டிருந்த எழுத்துப்பிழையை திருத்தி விட்டேன். நன்றி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி விஜி!

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கு இரத்த அழுத்தம் நார்மலாக இருந்தால் இந்தப் பயிற்சியை செய்ய வேண்டியதில்லை லக்ஷ்மிம்மா!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி ராதா! கடந்த எட்டு மாதங்களாய் எந்த மருந்துக்கும் கட்டுப்படாத என் உயர் ரத்த அழுத்தம் இந்தப் பயிற்சியை செய்ய ஆரம்பித்த போது தான் நார்மலாகியது. அத்தனை மாதங்கள் அனுபவித்த மன உளைச்சல் சரியாகியது. அதனால் தான் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பயிற்சி பற்றி எழுதினேன். நீங்கள் இந்த பயிற்சியை செய்ய ஆரம்பிக்கப் போவதாய் எழுதியிருந்தது மகிழ்ச்சியைத் தந்தது!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி விஜி பார்த்திபன்!!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice greetings Rajarajeswari!

மனோ சாமிநாதன் said...
This comment has been removed by the author.
மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice feedback as well as a beautiful award Vai.Gopalakrishnan Sir!!!!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் ஊக்குவிப்பிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி அம்பாளடியாள்!!

மனோ சாமிநாதன் said...

உயர் ரத்த அழுத்தத்திற்கான பயிற்சியைத் தொடங்கி விட்டது மிகவும் மகிழ்வைத் தருகிறது மாலி! நீண்ட நாட்களுக்குப்பின்னான வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி வேதா!