Tuesday, 3 April 2012

துபாயில் ஒரு உலகப் பொருட்காட்சி!!

இரண்டு நாட்களுக்கு முன் இங்கே துபாயில் இருக்கும் குளோபல் வில்லேஜ் [ GLOBAL VILLAGE ] சென்றிருந்தேன். ஷார்ஜாவிலிருந்து துபாய் 15 கிலோ மீட்டர்தான் என்றாலும் அதன் பின் இந்த துபாய் லாண்டிற்கு 30 நிமிடங்கள் பயணம் செல்ல வேண்டும். 120 கி.மீ வேகத்தில் 40 நிமிடங்களில் இந்த குளோபல் வில்லேஜிற்கு சென்றடைந்தோம்.
வரவேற்பு முகப்பு
துபாய் நகரைத்தாண்டி இந்த பிரம்மாண்டமான பொருட்காட்சி நகரை துபாய்லாண்ட் என்ற இடத்தில் அரசு நிர்மாணித்திருக்கிறது. ஒவ்வொரு தடவையும்  பல நாடுகள் பங்கேற்கும் இந்த பொருட்காட்சி மிகவும் சிறப்பாக இருக்கும்.
ஏமன் நாட்டு அரங்க முகப்பு
ஒவ்வொரு நாடும் அதன் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பண்பாடை பிரதிபலிக்கும். வருடா வருடம் நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் முடிய இந்த பொருட்காட்சி நடக்கிறது.
ஸ்பெயின் நாட்டு அரங்க முகப்பு
ஒவ்வொரு நாட்டு ஸ்டாலும் அதன் கலாச்சாரப் பின்னணியில் அமைந்திருக்கும். இந்தியாவிலேயே பல கலாச்சாரங்கள் புதைந்திருப்பதாலும் பல மொழிகள் இணைந்திருப்பதாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக, ஒரு முறை திப்பு சுல்தான் கோட்டை, ஒரு முறை ஆக்ரா கோட்டை- இப்படி பல விதமாக இந்திய அரங்கம் நிர்மாணித்து அசத்தும்.
இந்திய அரங்க முகப்பு
இந்திய கலை நிகழ்ச்சி
இந்திய அரங்கினுள் இருக்கும் கடைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாநிலத்தில் கிடைக்கும் சிறப்பான பொருள்களைக் கொண்டு அமைந்திருக்கும். மாலை 4 மணியிலிருந்து இரவு 12 மணி வரை இந்த பொருட்காட்சி திறந்திருக்கும்.
எகிப்து நாட்டு அரங்க முகப்பில் உள்ள ஓவியம்
திங்கட்கிழமை ஆண்கள் தனியாக அனுமதிக்கப்படுவதில்லை. பெண்களுக்கும் குடும்பத்துடன் கூடிய ஆண்களுக்கும் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது.
தாய்லாந்து அரங்க முகப்பு க்ரீக் அருகே
கடந்த 15 வருடங்களாக இந்த பொருட்காட்சி வெவ்வேறு இடங்களில் நடந்தாலும் 2006-லிருந்து துபாய்லாண்ட் என்ற இந்த இடத்தில் நிரந்தரமாக நிர்மாணிக்கப்பட்டு சிறப்பாக நடந்து வருகிறது.

உணவு ஸ்டால் ஒன்றில் உருளைக்கிழங்கை ஸ்பைரலாக அடுக்காக வெட்டி எண்ணெயில் வறுத்துத் தருகிறார்கள்.
பல்வேறு விளையாட்டுக்கள், பல நாடுகளின் அழகு அணிவகுப்புகள், கலை நிகழ்ச்சிகள், பல்வேறு நாடுகளின் உணவகங்கள் போன்ற சிறப்புகள் உண்டு.
இந்த முறை  45 நாடுகள் கலந்து கொண்டதாகவும் 4 மில்லியனுக்கு மேல் இங்கிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் மக்கள் வருகை தந்ததாயும் 2 மில்லியனுக்கு மேல் வருமானம் வந்துள்ளதாயும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
அத்தனை புகைப்படங்களையும் இங்கே இணைக்க முடியவில்லை. ஒரு சில புகைப்படங்கள் மட்டும் இனைத்திருக்கிறேன்.

27 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

Very Attractive & Beautiful Post, Madam. Thanks for sharing.

Yaathoramani.blogspot.com said...

உலகப் பொருட்காட்சியை தங்கள் பதிவின் வாயிலாகக்
கண்டு மகிழ்ந்தோம்.படங்களுடன் விளக்கமும் அருமை
நம் இந்திய அரங்கு மிகச் சிறப்பாக இருந்தது
ப்கிர்வுக்கு மனமார்ந்த நன்றி

ஸாதிகா said...

அக்கா.அரியபடங்க்ள்.நான் நேரில் கண்டு களிக்க விரும்பும் பொருட்காட்சி.படத்துடன் பகிர்ந்துள்ளீர்கள்.இன்னும் இருக்கும் படங்களை இரண்டாவது பதிவில் பகிரலாமே?

வெங்கட் நாகராஜ் said...

நல்ல படங்களும், சுவையான தகவல்களையும் எங்களுடன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

Asiya Omar said...

மனோ அக்கா வருடாவருடம் தவறாமல் போய் வருவதுண்டு.நானும் படங்களுடன் பதிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.மிக நல்ல பகிர்வு.

கே. பி. ஜனா... said...

அத்தனை படங்களும் அழகு!

மகேந்திரன் said...

நான் இங்கே சென்று பார்த்திருக்கிறேன் அம்மா.
பார்த்த நிமிடங்கள் இன்னும் என் கண்களில்
ஆச்சர்யமாக உறைந்திருக்கிறது...

vanathy said...

படங்கள், விளக்கம் எல்லாமே அருமை.

ராஜி said...

செலவில்லாம எங்களையும் பொருட்காட்சிக்கு கூட்டி போய் வந்துட்டீங்க. நன்றிங்க

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

On seeing all photos and the information I feel proud of to be an Indian...

Thanks a lot for sharing

ஸ்ரீராம். said...

//திங்கட்கிழமை ஆண்கள் தனியாக அனுமதிக்கப்படுவதில்லை. பெண்களுக்கும் குடும்பத்துடன் கூடிய ஆண்களுக்கும் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது.//

ஏன் அபபடி?

ADHI VENKAT said...

அருமையான பகிர்வும்மா. இங்கிருந்தே எல்லா நாட்டின் அரங்கையும் பார்க்க முடிகிறதே...... இந்திய அரங்கு பிரமாதமாக உள்ளது.

பாக்கி உள்ள படங்களையும் பதிவிடுங்கள்.

குறையொன்றுமில்லை. said...

உலகப் பொருட்காட்சியை தங்கள் பதிவின் வாயிலாகக்
கண்டு மகிழ்ந்தோம்.படங்களுடன் விளக்கமும் அருமை
நம் இந்திய அரங்கு மிகச் சிறப்பாக இருந்தது
ப்கிர்வுக்கு மனமார்ந்த நன்றி

மனோ சாமிநாதன் said...

பாராட்டுதலுக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கும் பாராட்டுதலுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி! ஒவ்வொரு தடவையும் இந்த பொருட்காட்சிக்குச் செல்லும்போது, இந்திய அரங்கின் அழகு எப்போதுமே பெருமை கொள்ள வைக்கும்.

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஸாதிகா! இந்தப் படங்களைப்போடுவதற்குள் மிகவும் அவஸ்தைப்பட்டு விட்டேன். என் கணினியில் ஏதோ கோளாறு சில மாதங்களாகவே. இனி மேல் தான் சரி செய்ய வேண்டும். அதனால் தான் இன்னும் ஓரிரு படங்கள் கூட அதிகமாகப் போட முடியவில்லை.

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி ஆசியா! நீங்கள் ஏன் இன்னும் இதைப்பற்றி ப்திவிடாமல் இருக்கிறீர்கள் என்று நானும் நினைத்தேன்.

மனோ சாமிநாதன் said...

பாராட்டுதலுக்கு அன்பு நன்றி சகோதரர் கே.பி.ஜனா!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் இங்கே வந்து இந்த பொருட்காட்சியைப்பார்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது மகேந்திரன். அடுத்த முறை வரும்போது அவசியம் சந்திப்போம்!!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ராஜி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுதலுக்கு இனிய நன்றி வானதி!!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice comment Mr.Raamamoorthy! I always feel the same whenever I see the Indian Pavilion here!

இராஜராஜேஸ்வரி said...

பல விதமாக இந்திய அரங்கம் நிர்மாணித்து அசத்தும்.

அசத்தலான படங்களுடன் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

mm முன்பு போனது இப்ப போக முடியல
உங்கள் பதிவு மூலம் பார்த்துக்க வேண்டியது தான்

ஜலீலா

கீதமஞ்சரி said...

அழகான முகப்புகள் ஆவலைத் தூண்டி வரவேற்கின்றன. அதிலும் இந்திய முகப்பு அதி அற்புதம். தங்கள் தகவல்களுடன் படங்களும் இணைந்து மிகவும் சுவாரசியம் கூட்டுகின்றன. பகிர்வுக்கு நன்றி மேடம். சுருள் உருளை வறுவல் ஒரு ஆச்சரியம்.

Anonymous said...

துபாய்கே வந்து பார்த்தது போல் இருந்த்தது. படங்கள் அனைத்தும் அருமை. இந்திய அங்கும் ஒளிர்கிறது , பெருமையாய் இருக்கிறது