இந்த மார்ச் 15ந்தேதி எனது ‘ முத்துச்சிதறலுக்கு’ இரண்டு வயது பூர்த்தியாகிறது. இதுவரையில் 122 பதிவுகள் மட்டுமே போட இயன்றிருக்கிறது. தொடர்ச்சியான பயணங்களும் அலைச்சல்களும் பதிவுகள் போடும் வேகத்தைக் குறைத்திருப்பதோடு, அன்புத் தோழமைகள் அனைவருக்கும் அவ்வப்போது பின்னூட்டமிடும் வேகத்தையும் குறைத்திருக்கின்றன. இனி பின்னூட்டங்களை அதிகரிக்க வேண்டும். கூடிய மட்டிலும் ஒவ்வொரு பதிவும் தரமான முத்தாக இருப்பதற்கு முயற்சி செய்திருப்பது மட்டும் உண்மை! என்னைத் தொடர்ந்து உற்சாகப்படுத்தி, அன்பான, அசத்தலான பின்னூட்டமிட்டு நெகிழ்வடையச் செய்யும் அன்புள்ளங்கள் யாவருக்கும் என் மனங்கனிந்த நன்றியை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி இன்றைய பதிவு....!
முதுமையில் இளமை!!
இளமைப்பருவமென்பது வசந்த காலம். ஆயிரம் கனவுகளும் காதலும் அசத்தலான நட்பு வளையங்களும் கொண்ட ஒரு இனிமையான காலம். பொறுப்புக்கள் குறைவான, சில சமயம் பொறுப்புக்கள் என்றால் என்னவென்றே தெரியாத கவலையற்ற பருவம்.
அடுத்த பருவம் திருமணமான பருவம். பொறுப்புக்களை உள்வாங்கி, உற்ற துனையுடன் புரிதலும் தொடங்கும்போது அந்த மகிழ்ச்சியுடனேயே வாழ்க்கையில் முதன் முதலாக குழப்பங்கள், தடுமாற்றம், கோபம், உத்வேகம், முயற்சி எல்லாமே பக்கத்துணைகளாக கூடவே வரும்.
40 வயதிலிருந்து 50 வயது வரை பொறுப்புக்களின் சுமைகள் தலையை சுற்ற வைக்கும். வாழ்க்கையின் துரோகங்களும் வலிகளும் புலப்பட ஆரம்பிக்கும். அதன் பலனாய் உடல் உபாதைகள் திடீர் திடீரென்று புதிது புதிதாய் முளைக்க ஆரம்பிக்கும். அதுவரையில் கற்ற பொறுமை ஆட்டம் காணும். மெதுவாக முதுமை படர ஆரம்பிக்கையில் எது உண்மையான நட்பு, எது உண்மையான சொந்தம் என்ற உண்மை நிலை புரிபட ஆரம்பிக்கும். வளர்த்த குஞ்சுப்பறவைகள் அவரவர் கூட்டுக்குப் பறந்து சென்ற பிறகு வாழ்க்கையின் யதார்த்தம் முகத்தில் அறையும்.
உடலும் மனமும் முதிர ஆரம்பிக்கும் நிலை தான் முதுமை! ஆயிரம் ஆயிரம் அனுபவங்கள், சுமைகள், கடமைகள் எல்லாவற்றையும் முடித்து நிமிரும்போது, ஒவ்வொருத்தரும் எதிர்நோக்கும் நிலை இது! அலைக்கழிக்கும் உடல் நோய்கள், அதுவரை இருந்த முக்கியத்துவங்கள் குறைந்து அதனால் ஏற்படும் மனச்சோர்வு, மோசமான அனுபவங்களிலிருந்து பீடிக்கும் மனத்தளர்வு-இவை எல்லாவற்றையும் சமாளிக்க மனத்தெம்பை மறுபடியும் முழுபலத்தோடு கொண்டு வரவேண்டிய நிலை இது!!
உடம்பு எப்படியிருந்தாலும் மனசை இளமையாக வைத்துக்கொண்டால் மட்டுமே மிச்சமிருக்கும் நாட்களை அமைதியாக கழிக்க இயலும். உடலுக்கு மட்டும்தான் முதுமை. வாழ்க்கையில் மறந்து போன அழகான விஷயங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து ரசிக்கவும் அனுபவிக்கவும் தயாராகும்போது மனமும் என்றுமே இளமையாக இருக்க ஆரம்பிக்கிறது.
‘ மனிதனுக்கு வயதாவதேயில்லை அவன் எதையாவது மகிழ்வோடு தேடிக்கொண்டேயிருந்தால்’ என்கிறது ஒரு பழமொழி. உண்மைதான்! இதுவரை இயந்திர கதியாக உழைத்துக்கொண்டிருந்த மனதுக்கும் உடலுக்கும் ஓய்வு கிடைத்திருப்பதை அனுபவித்து ரசிக்க வேண்டும். காலை நேரத்தில் நடைப்பழக்கம் வைத்துக்கொள்வது சுற்றிலும் உள்ள தூய்மையான காற்றை சுவாசிக்க வைப்பதுடன் வைகறையின் அழகை ரசிக்க வைக்கிறது.
உங்கள் பேரனையோ, பேத்தியையோ கொஞ்சி மகிழ்ந்து பாருங்கள். அந்த சிறு குழந்தையின் மென்மையான அசைவுகளையும் மழலையையும் ரசித்துப் பாருங்கள். இதுவரை புலப்படாத அழகின் தரிசனம் கிடைக்கும். மனது சிறு குழந்தையின் உலகிற்குச் சென்று வரும்.
இளம் வயது சிறுவர்களை அவர்கள் உலகிற்குச் சென்று ரசியுங்கள். உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும், உங்கள் அறிவுரைகள் அவர்களுக்குத் தேவை தான். ஆனால் அதை அவசியமான சமயத்தில் மட்டுமே உபயோகியுங்கள். மற்ற நேரங்களில் அவர்களுக்கு உற்ற தோழனாக இருங்கள்.
மனதை அமைதியாக்கும் சக்தி கலைகளுக்கு உண்டு. இதுவரை வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களினால் மறந்து போன உங்கள் கலைத்தாகங்களுக்கு உயிர் கொடுங்கள். இசை, ஓவியம், கவிதை- இப்படி எத்தனையோ வடிகால்கள் மனதை அமைதிப்படுத்த காத்திருக்கின்றன.
உங்களை முதுகில் குத்தி, மனதில் சிலர் கடந்த காலத்தில் ரத்தக்காயங்களை உண்டு பண்ணியிருக்கலாம். அதையே நினைத்து நினைத்து மருகுவதை தவிர்த்து விடுங்கள். ‘ இதுவும் கடந்து போகும்’ என்று நினைத்து அவற்றை ஒதுக்கி வையுங்கள். கோபத்தை நீக்குவதும் நாவடக்கமும் இந்த வயதில் மிக முக்கியம்.
இந்த வயது வரை நினைத்ததை சாப்பிட்டு ரசித்து உண்டு நாட்களை கழித்தாகி விட்டது. இனியேனும் ஆசைக்கும் பற்களுக்கும் வயிற்றுக்கும் ஓய்வு கொடுங்கள். இது மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியத்தைத் தள்ளி வைக்கும். இந்த நாவடக்கமும் வாழ்க்கையில் மிகத் தேவையான ஒன்று!
இறுதியாக பொருளாதார பலம். வாழ்க்கையில் அடுத்தவர்களுக்கான தியாகங்களும் தானமும் நிச்சயம் நமக்கு மன நிறைவைத் தரும்தான். கருணையும் அன்பும் வாழ்க்கையில் முதலாவதான அருமையான விஷயங்கள்தாம்! ஆனால் நம் முன்னோர்கள் ‘ தனக்குப்பின் தான் தான தர்மம்!’ என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள்! முதுமையில் யாசகம் என்பது மிகக் கொடுமையான விஷயம். உங்களுக்கென்று இறுதிக்காலம் வரை யாருடைய கையையும் எதிர்பாராத வகையில் ஒரு சேமிப்பு உங்களையும் உங்களின் தேவைகளையும் நிம்மதியாய் வைத்திருக்க அவசியம் தேவை!!
என் தாயாருக்கு 93 வயதாகிறது. சர்க்கரை வியாதியும் உண்டு. என் தந்தையின் பென்ஷன் பணத்தில் யாருடைய தயவையும் மறுத்து தன் மருத்துவச் செலவிற்கு தானே செலவு செய்து கொள்வதுடன் தன் சாப்பாட்டுக்கும் என் சகோதரியிடம், அவர்கள் மறுத்தாலும் பணத்தைக் கட்டாயமாகக் கொடுத்து விடுகிறார்கள். என் வீட்டுக்கு மாடிப்படியேறி வரவேண்டும். நான் போகும்போதெல்லாம் மாடிப்படி ஏறும்போது, யாராவது கையைப் பிடித்தாலும் தட்டி விட்டு மறுத்து விடுவார்கள். தானே தான் ஏறி வருவார்கள். என் தந்தையின் சேமிப்பும் பென்ஷன் பணமும் தான் இறந்த பிறகு எப்படி பங்கு பிரிக்கப்பட்டு தன் குழந்தைகளுக்குத் தர வேண்டுமென்பதற்கு உயிலும் எழுதி வைத்து விட்டார்கள். இந்த சுய கெளரவம், தைரியம், எல்லாமே பொருளாதார பலத்தினால் வந்தது தான்!!
முதுமையில் இளமை இருக்கிறது!! அதை அனுபவிக்க மனசு மட்டும்தான் வேண்டும்!!
40 comments:
/முதுமையில் இளமை இருக்கிறது!! அதை அனுபவிக்க மனசு மட்டும்தான் வேண்டும்!!/
அருமையான பதிவு.
இரண்டு ஆண்டு நிறைவுக்கு இனிய வாழ்த்துகள்!
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
இரண்டாம் வருடத்திற்கு வாழ்த்துகள் மனோக்கா.
முதுமை குறித்து நீங்கள் கூறீய அத்தனையும் உண்மை. அருமையான ஆலோசனைகள். நல்ல பதிவுக்கு நன்றிக்கா.
அருமைப்பதிவு வாழ்த்துகள்.
//
உடம்பு எப்படியிருந்தாலும் மனசை இளமையாக வைத்துக்கொண்டால் மட்டுமே மிச்சமிருக்கும் நாட்களை அமைதியாக கழிக்க இயலும். உடலுக்கு மட்டும்தான் முதுமை. வாழ்க்கையில் மறந்து போன அழகான விஷயங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து ரசிக்கவும் அனுபவிக்கவும் தயாராகும்போது மனமும் என்றுமே இளமையாக இருக்க ஆரம்பிக்கிறது.//
மிகவும் அருமையான, நான் ரஸித்துப்படித்த வரிகள் இவைகள்.
இரண்டாம் ஆண்டு பிறந்த நாளுக்கு என் அன்பான வாழ்த்துகள்.
அன்புடன் vgk
கடந்து வந்த பாதையைப் பகிர்ந்து முதுமையை வரவேற்கும் மனப்பக்குவத்தைக் கையாளும் உத்தியைக் கூறிய விதம் அழகு.
இரண்டாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள் அம்மா....
//முதுமையில் இளமை இருக்கிறது!! அதை அனுபவிக்க மனசு மட்டும்தான் வேண்டும்!!//
அருமையான வரிகள். நல்ல பகிர்வு.
இரண்டாம் ஆண்டு நிறைவிற்கு இனிமையான வாழ்த்துக்கள்.மேலும் பல நல்முத்துக்கள் எங்களை வந்தடையச் செய்யுமாறு வேண்டுகிறேன்.
//வாழ்க்கையில் மறந்து போன அழகான விஷயங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து ரசிக்கவும் அனுபவிக்கவும் தயாராகும்போது மனமும் என்றுமே இளமையாக இருக்க ஆரம்பிக்கிறது//
மிகச் சரியே
mika arumai mano akkaa
vaazththukkaL
manoo akkaavin oovvoru pathivum muthtu kuviyalkal thaan
2 ஆம் வருடத்திற்க்கு வாழ்த்துக்கள் அம்மா!! மிகவும் அருமையான பதிவு!!
அம்மா அருமையான பதிவு .
இரண்டு ஆண்டு நிறைவுக்கு இனிய வாழ்த்துகள்!
தொடருங்கள்... தொடர்கிறோம்.
இன்னும் இளமையாக வாழ்த்துக்கள்
//முதுமையில் இளமை இருக்கிறது!! அதை அனுபவிக்க மனசு மட்டும்தான் வேண்டும்!! // உண்மை....
நல்ல பகிர்வு... இரண்டாம் வருட நிறைவுக்கு நல்வாழ்த்துகள்....
இரண்டு ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள். நீங்க சொல்லி இருப்பதுபோல முதுமையில் இளமையாக இருக்கமுடியுமென்பது உண்மைதான் அதை நானும் அனுபவத்திலேயே உணர்ந்து வருகிரேன்
இரண்டு வயது நிறைவுக்கு வாழ்த்துகள்...
மிக அருமையான அலசல். குறிப்பாக நாற்பதுக்குப் பின் என்று வரும் வரிகள் அனைத்துமே...
தவிர்க்க முடியாமல் எழுத்தாளர் சுஜாதா நினைவுக்கு வருகிறார். கடைசி வரை இளமை குன்றாமல் எழுதிக் கொண்டிருந்த அவருக்கு வயது எழுபதுக்கு மேல், அவருக்கும் வியாதி இருந்தது என்பதை எல்லாம் ஜீரணிக்கக் கஷ்டமாக்கியவை அவர் எழுத்துகள். தனக்கு மிஞ்சிதான் தானம் என்பதும் நிச்சய நிஜம். என் அனுபவத்திலும் ஏராள உதாரணங்கள்!
உங்கள் தாயாருக்கு எங்கள் நமஸ்காரங்கள்.
வாழ்த்துக்கள் மனோ அக்கா.முத்தான பகிர்வுகளை தொடர்ந்து தாருங்கள்.
//உடம்பு எப்படியிருந்தாலும் மனசை இளமையாக வைத்துக்கொண்டால் மட்டுமே மிச்சமிருக்கும் நாட்களை அமைதியாக கழிக்க இயலும். உடலுக்கு மட்டும்தான் முதுமை. வாழ்க்கையில் மறந்து போன அழகான விஷயங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து ரசிக்கவும் அனுபவிக்கவும் தயாராகும்போது மனமும் என்றுமே இளமையாக இருக்க ஆரம்பிக்கிறது.‘ //
மிக அருமையான பகிர்வு.
‘ மனிதனுக்கு வயதாவதேயில்லை அவன் எதையாவது மகிழ்வோடு தேடிக்கொண்டேயிருந்தால்’ என்கிறது ஒரு பழமொழி. உண்மைதான்!
இரண்டாம் ஆண்டு நிறைவிற்கு மனம் நிறைந்த இனிமையான வாழ்த்துக்கள்.
நல்ல தன்னம்பிக்கையூட்டும் வார்த்தைகள். மனத்திற்கு முதுமை கிடையாதுதான்.
இரண்டாம் ஆண்டு நிறைவுக்கு
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
தங்களது பதிவுகள் அனைத்துமே பயனுள்ளதாய்
தரமானதாய் உள்ளதால் எண்ணிக்கை ஒரு
விஷயமில்லை என்பது எனது தாழ்மையான கருத்து
வாழ்த்துக்கள்
பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!
பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி ஹுஸைனம்மா!
பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் அன்பான நன்றி சேகர்!
ரசித்துப்பாராட்டியதற்கும் வாழ்த்துக்கள் சொன்னதற்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!!
வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி கே.பி.ஜனா!
மிக அழகாக பின்னூட்டம் தந்ததற்கு மனமார்ந்த நன்றி சத்ரியன்!
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி ஆதி!
வாழ்த்துக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி ராஜி!
இரண்டு ஆண்டுகள் நிறைவுக்கு இனிய வாழ்த்துகள்!
முதுமையடைந்தாலும் இளைமையோடு இருக்கிறதே எழுத்துக்கள். அதற்கே தனியான வாழ்த்துகள்.
என்றும் இளமையோடு இருக்கட்டும் எழுத்துக்கள் அதுக்கேது முதுமையென்னு நரைகள்.
பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் அன்பு நன்றி ஜலீலா!
பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் அன்பார்ந்த நன்றி மேனகா!
பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி குமார்!
வருகைக்கும் வாழ்த்திற்கும் அன்பு நன்றி சூர்ய ஜீவா!
பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!!
உங்கள் ஆழ்ந்த அனுபவங்கள் பலவற்றுக்கும் பிறகும் உங்களின் எழுத்து உங்களை இளமையாகத்தான் காட்டுகிறது சகோதரி லக்ஷ்மி! வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி!!
மிக விரிவான அருமையான பின்னூட்டத்திற்கும் என் தாயார் பற்றிய கருத்துக்கும் என் அன்பு நன்றி SRIRAM!!
அனுபவங்கள் தான் இங்கே அலசலாக வெளி வந்திருக்கின்றன!
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அன்பு நன்றி ஆசியா!
மனம் நிறைந்த வாழ்த்துக்கும் அன்பான பின்னூட்டத்திற்கும் இனிய நன்றி ராஜராஜேஸ்வரி!
அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி விச்சு!!
இனிய பாராட்டுக்களுக்கும் நிறைந்த வாழ்த்துக்களுக்கும் அன்பான நன்றி சகோதரர் ரமணி!!
Post a Comment