Monday 24 October 2011

இனிய தீபாவளிக்கு அன்பு வாழ்த்துக்களும் சுவையான இனிப்பும்!!

அன்பார்ந்த தோழமைகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!








தீபாவளிக்காக, பதிவில் போட, வழக்கமான இனிப்புப்பலகாரங்களான பாதுஷா, லட்டு, ஜாங்கிரி, மைசூர்பாக் தவிர்த்து, என்ன இனிப்பு வித்தியாசமாக செய்யலாம் என்று நினைத்தபோது காரட் அல்வா, அதுவும் மைக்ரோவேவ் அவனில் செய்யலாம் என்று தோன்றியது. இதற்கு ஆகும் நேரம் ஏழே நிமிடங்கள் தான்! நெய்யும் குங்குமப்பூவுமாக காரட் அல்வா இதோ உங்களுக்கு!!



மைக்ரோவேவ் காரட் அல்வா

தேவையான பொருள்கள்:

காரட் துருவல்- 2 கப்
நெய்- 2 மேசைக்கரண்டி
சீனி- 5 மேசைக்கரண்டி
பால் பவுடர்- 3 மேசைக்கரண்டி
ஏலக்காய்-6
குங்குமப்பூ- சில இழைகள்
அலங்கரிக்க சீவிய சில பிஸ்தா இழைகள்

செய்முறை:

ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி, அதன் மீது காரட் துருவலையும் போட்டு 2 நிமிடங்கள் HIGH-ல் சமைக்கவும்.

பிறகு பாத்திரத்தை வெளியே எடுத்து, ஒரு கரண்டியால் நன்கு கலக்கி மறுபடியும் 2 நிமிடம் HIGH-ல் சமைக்கவும்.

சீனியை ஏலத்துடன் பொடிக்கவும்.

பாத்திரத்தை வெளியே எடுத்து, சீனி, பால் பவுடர், குங்குமப்பூ சேர்த்து நன்கு கலக்கி மறுபடியும் 2 நிமிடங்கள் HIGH-ல் சமைக்கவும்.

மறுபடியும் பாத்திரத்தை வெளியில் எடுத்து நன்கு கிளறி, மீதமுள்ள நெய்யைச் சேர்த்து 1 நிமிடம் HIGH-ல் சமைக்கவும்.

மொத்தத்தில் ஏழு நிமிடங்களில் நெய் மணக்கும் சுவை மணக்கும் காரட் அல்வா தயார்!!

வாழ்த்துப்படங்களுக்கு கூகிளுக்கு நன்றி!!


40 comments:

ராமலக்ஷ்மி said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

சுவையான குறிப்புக்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

முதல் இனிப்பு...

MANO நாஞ்சில் மனோ said...

உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்...

Vidhya Chandrasekaran said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா...

baleno said...

எனது தீபாவளி வாழ்த்துக்கள்.
சுலபமான மைக்ரோவேவ் காரட் அல்வா செய்முறைக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...

CS. Mohan Kumar said...

Wish you a happy Diwali Madam

ஸாதிகா said...

ரொம்ப சுலபமாக செய்து காட்டி விட்டீர்கள் கேரட் ஹல்வாவை!!

அக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

குடந்தை அன்புமணி said...

தங்களின் வலைத்தளத்தில் இடம்பெறும் படைப்புகளை பதிவர்களுக்கென்றே வெளிவரும் பதிவர்தென்றல் இதழில் பயன்படுத்திக் கொள்ளலாமா? தங்களின் அனுமதி தேவை. பயன்படுத்தலாம் என்றால் எனது மெயிலுக்கு தெரியப்படுத்தவும்.
thambaramanbu@gmail.com
thagavalmalar.blogspot.com

குடந்தை அன்புமணி said...

தங்களுக்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துகள்!

RAMA RAVI (RAMVI) said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மேடம்.

காரட் அல்வா செய்முறைக்கு நன்றி.
உடனே செய்து பார்த்துவிடுகிறேன்.

Menaga Sathia said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!

Angel said...

wish you a happy Diwali .
thanks for the yummy recipe

வெங்கட் நாகராஜ் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

இங்கே காஜர் ஹல்வா ஸ்பெஷல் ஆச்சே.... :)))

முற்றும் அறிந்த அதிரா said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மனோ அக்கா. இம்முறை உங்கள் பேரனுக்கு முதல்தீபாவளியோ?

சூப்பர் அண்ட் சிம்பிள் கரட் அல்வா. நானும் ட்ரை பண்ணப்போறேன்.

ஸ்ரீராம். said...

சுலபமாகவும், சீக்கிரம் செய்யக் கூடியதாகவும் இருக்கிறது. நன்றி.

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

Asiya Omar said...

கேரட் அல்வா சூப்பர் அக்கா,நிச்சயம் உங்கள் முறையில் செய்து பார்ப்பேன்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

தீபாவளி வாழ்த்துக்கள் மனோ.

Chitra said...

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

vetha (kovaikkavi) said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

சுவையான குறிப்புக்கு நன்றி
Vetha.Elangathilakm.
http://www.kovaikkavi.wordpress.com

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் ருசியான இனிமையான பதிவு.
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
vgk

R.Gopi said...

வலைத்தோழமைகள் அனைவருக்கும், அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...

http://edakumadaku.blogspot.com/2011/10/blog-post_23.html

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......

Jaleela Kamal said...

ரொம்ப ஈசியாக இருக்கே
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

காந்தி பனங்கூர் said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா.

மாய உலகம் said...

தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...

கே. பி. ஜனா... said...

தீபாவளி வாழ்த்துக்கள்!

கே. பி. ஜனா... said...

தீபாவளி வாழ்த்துக்கள்!

ஜெய்லானி said...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!! :-)


ரொம்பவும் ஈஸியா செயல்முறை விளக்கம் . இனி கேரட்டை பார்த்தாவே அல்வாதான் :-)

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்கள் அளித்த அன்பின் இனிய தோழமைகள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!

Matangi Mawley said...

Thamaso Maa Jyothir Gamaya...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்... :)

கீதமஞ்சரி said...

அடுப்பில் வேகவைத்து, அடிபிடிக்காமல் கிண்டும் வேலை மிச்சம். சுவையான பகிர்வுக்கு நன்றி. விரைவில் செய்துபார்க்கிறேன்.

விச்சு said...

கேரட் அல்வா படிக்கும்போதே நாக்கில் நீர் ஊறுது. சுவையான குறிப்புக்கு நன்றி.

Unknown said...

கேரட் அல்வாவை மைக்ரோவேவில் கூட செய்யலாம் என்று செய்து காட்டியிருப்பது இல்லத்தரசிகளுக்கு (மற்ற சமையலில் ஆர்வம் உள்ளவர்களுக்கும்) மிகவும் உதவியாகவே இருக்கும்

மனோ சாமிநாதன் said...

இனிய வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி மாதங்கி!

மனோ சாமிநாதன் said...

அவசியம் செய்து பாருங்கள் கீதா! ரொம்பவும் சுலபமான காரட் அல்வா செய்முறை இது! வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

முதல் வ‌ருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் விச்சு!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வியபதி!