சில மாதங்களுக்கு முன் ஒரு மாத நாவலில் பின் பகுதியில் நான் ரசித்துப் படித்த ஒரு அழகான சிந்தனையை, நிதர்சனத்தைத்தான் இன்றைய பதிவாக நான் இங்கே வெளியிடுகிறேன். போகிற போக்கில் படிக்கிற விஷயமில்லை இது. இன்றைய வாழ்வின் எதார்த்தம் இது தான் . ஒவ்வொரு மகனும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அனுபவிக்கிற, நினைக்கிற விஷயங்கள் தான் இவை. இறுதியில் வருகின்ற வார்த்தைகளை நான் மிகவும் ரசித்தேன்.
ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?
4 வயதில்-
என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.
6 வயதில்-
என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்.
10 வயதில்-
என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..
12 வயதில்-
ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்.
14 வயதில்-
என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.
16 வயதில்-
அப்பா அந்த காலது மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை.
18 வயதில்-
அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்?
20 வயதில்-
அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ?
25 வயதில்-
என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே?
30 வயதில்-
என் மகனை சமாளிப்பது பெரியகஷ்டம்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன்?
40 வயதில்-
ஹும்! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்!
45 வயதில்-
குழந்தைகளை-அதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ?
50 வயதில்-
எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை.
55 வயதில்-
என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. தனித்துவம் மிக்கவர்.
60 வயதில்-
என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை!
முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள் பிடித்திருக்கிறது. நல்ல வேளையாக உங்களுக்கு அத்தனை வயது ஆகவில்லையெனில், ஏன் தாமதிக்கிறீர்கள்? உடனடியாக உங்கள் அப்பாவுக்கு ஒரு ஃபோன் செய்து அவரை நீங்கள் மிகவும் நேசிப்பதாகச் சொல்லுங்கள்.
புகைப்படத்திற்கு நன்றி: கூகிள்
38 comments:
உண்மைதான் அழகாகச் சொல்லியிருக்கிறீங்க... ஒன்றின் ஆரம்பம் மற்றொன்றின் முடிவுபோல.. இது சுற்றிக்கொண்டே இருக்கும் சங்கிலிதான்.
மிக்வும் அழகிய பதிவு.
மிகவும் ரசித்துப் படித்தேன்.
உண்மை தான்.
எழுதியவருக்கும்,
பகிர்ந்த தங்களுக்கும்
மிக்க நன்றிகள். vgk
அத்தனையும் நிதர்சனமான சொற்றொடர்கள் அம்மா..
உணர்வுகள் மற்றும் வயது சார்ந்த சூழல்களின் நிமித்தம்
மனநிலை மாறுபாட்டை அற்புதமாய் வடித்திருக்கிறீர்கள்.
உலகம் உருண்டை, ஆரம்பித்த இடம் திரும்பவும் வரும்
எனபது எத்தனை உண்மை....
அருமையான பதிவு
குறைந்த வயதில் தந்தை குழந்தைகளின் எதிர்காலத்திற்காக
ஓடி ஓடி சம்பாதிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்
என்வே அதிகம் நெருக்கமாக இருக்க முடியவில்லை
தாய்க்குத் தான் குழந்தைகளுடன் இருக்கும்
சந்தர்ப்பமும் நெருக்கமும் அதிகம் கிடைக்கிறது
பிள்ளைகள் தந்தையை மிகச் சரியாக
புரிந்துகொள்ளுகிற காலங்களில்
பணிச்சூழல் அவர்களை அதிகத்
தூரத்தில் பிரித்துவைத்து விடுகிறது
என்ன செய்வது ?
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அருமை மேடம்.இது ஒரு ஆணின் பார்வை.
ஒரு பெண் எப்படி தன் அப்பாவை பார்க்கிறாள் என்பது பற்றி ஏதாவது கூறமுடியுமா மேடம்?
நல்ல முத்துக்கள்.இளமையின் முடிவு முதுமை. முதுமையின் முடிவு இளமை.சுழல்வதுதானே உலகம்.நன்றி சகோதரி,வணக்கம்.
முன்பு ஈமெயிலில் பார்த்திருந்தாலும் திரும்பவும் ரசிக்கும் படி உள்ளது.
அருமையான பகிர்வு.
உண்மை...
அழகாகச் சொல்லியிருக்கிறீங்க...
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
அருமையான பகிர்வு.
:-))
மிகச் சரியான உண்மை மேடம்
@RAMVI
ஒரு பெண்ணின் பார்வையில் தந்தை சிறு வயதில் ஆதர்ச ஆண்மகனாக இருப்பார்.வயதாகும் பொழுது அவளுடைய குழந்தை போல் நினைக்கப் படுவார்.இது நான் பார்த்தும் அனுபவித்தும் அறிந்தது என் பார்வையில்.
"அப்பா " பற்றிய அருமையான பகிர்வு .
உண்மை தான். எனக்கே என் அப்பாவை நினைச்சா பிரமிப்பா இருக்கும் பல நேரங்களில். நல்ல பதிவு.
Brilliant!! :)
என் தம்பியின் திருமண மலரில் , இதை நாங்கள் வெளியிட்டோம்.
அனுபவம் தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்துகிறது. உணர்ந்து தெளிவதற்குள் காலம் கடந்து விடுகிறது.
படித்தது...படித்ததில் பிடித்தது...ஆனால் எத்தனை தரன் படித்தாலும் அலுக்காது..
மிகவும் அருமையான பதிவு ஆணின்மனதில் அப்பாவைபற்றி சொன்னதுபோல பெண்ணின் மனதில் அம்மாவைப்பற்றியும் இன்னொரு பதிவுபோடுங்க.
உங்களின் முந்தைய பதிவு பார்த்தேன் .நல்ல பகிர்வு. நானும் உங்க ஊர்க்காரன்தான் மேடம் கொஞ்சம் கவனிங்க:)
அன்பான கருத்துரைக்கு நன்றி அதிரா! இன்றைக்கு என்ன விதைக்கிறோமோ அது தான் நாளைக்கு செடியாக வளரும் என்ற உண்மை கூட இதற்கு பொருந்தும்!
பதிவை ரசித்துப் படித்து பாராட்டியதற்கு என் அன்பு நன்றி சகோதரர்.வை.கோபாலகிருஷ்ணன்!
//உலகம் உருண்டை, ஆரம்பித்த இடம் திரும்பவும் வரும்
எனபது எத்தனை உண்மை....//
அருமையான கருத்து சகோதரர் மகேந்திரன்!
அழகிய பின்னூட்டத்திற்கு நன்றி!!
அழகிய விரிவான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி!
உங்கள் கருத்தை மிகவும் ரசித்தேன். சிறு வயதில் பிரியம் மட்டுமே தெரிந்த மகனுக்கு தந்தை ஒரு ரோல் மாடலாகிறார். வயது ஏற ஏற, தனக்கான சிந்தனைகள் வந்த பின், அவை தான் நியாயமானது என்ற உணர்வும் வந்த பின், தந்தையின் கண்டிப்பு அடக்கு முறையாகிறது. அதே நிலையை பின்னால் அனுபவிக்கும்போது தான், தந்தையின் கண்டிபிற்குப் பின்னால் உள்ள நியாயம் தெரிகிறது அவனுக்கு! அன்றும் இன்றும் வரும் தொடர்கதைதான் இது!
மிக மிக சத்தியம் மனோ. எனக்கு அன்றும் சரி, இன்றும் சரி, என் அப்பாதான் பெஸ்ட்.
ஹாஹாஹா அருமை..:)
அட, எல்லாமே உண்மைதான். நம் பிள்ளைகளை வளர்க்கும்போதுதான் நம் பெற்றோரின் அருமை பெருமையெல்லாம் தெரியவருகிறது. காலத்துக்கும் பொருந்தி வரும் கருத்துக்கள்.
நிரம்பவே ரசித்தேன்னக்கா.ஆனால் இது உண்மைதானே?
பாராட்டிற்கு அன்பு நன்றி ராம்வி!
பொதுவாகவே பெண்களுக்கு தன் தந்தை தான் முதல் ஹீரோ! அந்தப் பெருமிதம் அவளுக்கு வாழ்க்கையின் கடைசி வரை இருக்கும்!! ஆனால் இப்போதைய வாழ்க்கையில் காட்சிகள் எல்லாம் மாறுகின்றன! பெண்களும் புகுந்த வீடு சென்றதும் தன் பெற்றோரைத் தூக்கி எறிபவர்களாகவும் இருக்கிறார்கள். இந்தப் பதிவின் வாசங்கள் தற்போதைய சூழ்நிலையில் பெண்களுக்கும் பொருந்தும்போலத் தான் தெரிகிறது!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் எழிலன்!
அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி ஆசியா!
பாராட்டிற்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!
அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி சகோதரர் குமார்!
வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் முதல் வருகைக்கும் இனிய நன்றி சகோதரர் போத்தி!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி நிலாமகள்!!
உங்களின் கருத்து அருமை ராஜி!
பாராட்டுக்கு அன்பு நன்றி ஏஞ்சலின்!
அப்பாவின் அருமையை என்றுமே உணர்ந்தவன் நான்! ஆனாலும் அப்பாவைப் பற்றி இன்னும் இன்னும் நினைக்க வைத்தது பதிவு.
Post a Comment