Wednesday, 1 June 2011

நலன் தரும் நல்லதொரு சிகிச்சை!

வாழ்க்கையில் கடுமையான பிரச்சினைகளாயிருந்தாலும் சரி, தீர்க்க இயலாது என்று தீர்மானிக்கப்பட்ட நோய்களாயிருந்தாலும் சரி, திடீரென்று எதிர்பாராத விதமாக யாருடைய யோசனையின் பேரிலோ, உதவியினாலோ தீர்வதுண்டு. அத்தனை நாட்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மின்னலாய் மறைந்து போகையில் மனசு அசந்து போகும்.


அது போல எனக்கும் அனுபவம் ஏற்பட்டிருக்கிறது.


பல வருடங்களுக்கு முன்னால் மருந்துகளின் பக்க விளைவால் எனக்கு இதயத்துடிப்பு அதிகரித்த அளவில் எப்போதும் இருந்து கொண்டிருந்தது. இதற்கு நேரம் காலம் எதுவும் கிடையாது. உறங்கும் வேளையில் திடீரென அதிக அளவில் இதயம் துடிக்க ஆரம்பிக்கும். சாதரணமாக 76ல் இருக்க வேண்டிய நாடித்துடிப்பு 120க்கு மேலே செல்லும். 20 நிமிடங்கள் வரை கூட தொடர்ந்து நீடிக்கும். அதன் பின் நாடித்துடிப்பு நார்மல் நிலைக்கு வரும்போது இதயத்தின் உள்ளே அதிர்வது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். கணவரும் மகனும் மாறி மாறி நாடித்துடிப்பை கவனித்துக்கொண்டே இருப்பதுவும் எனக்கு ஆறுதல் சொல்வதுவும் வழக்கமாக இருந்தது. இந்த மாதிரி சமயங்களில் உடல் மனது இரண்டுமே அதிக அளவில் சோர்ந்து விடும்.


அலோபதி, சித்த வைத்தியம், அக்கு பங்க்சர், அக்கு பிரஷர், ஆயிர்வேதம், யுனானி வைத்தியம் என்று பல வித சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லாத நிலையில் நண்பர் ஒருத்தர் யோசனைப்படி இயற்கை வைத்தியத்தையும் எடுத்துக்கொண்டேன். இயற்கை வைத்திய நிலையத்தில் சேர்ந்து அங்கே முதன் முதலாக யோகா கற்றுக்கொன்டேன். உணவு வகைகளில் எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டேன். சில குறிப்பிட்ட வழக்கங்கள்கூட சில சமயங்களில் பிரச்சினைகளைத் தருபவையாக இருக்கலாம். பொதுவாகவே உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் மனம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் சுய அலசல் அவசியம் தேவை. உணவுப் பழக்க வழக்கங்கள், யோகாசனம், சுய அலசல், இவற்றினால் ஏற்பட்ட மாறுதல்கள் என்னை அசர வைத்தது. பல வருடங்களாக என்னைத் துன்புறுத்திக்கொன்டிருந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. சில குறிப்பிட்ட யோகாசனங்கள் எந்த அளவிற்கு உடலின் பல விதக்கோளாறுகளுக்கு நிவாரணங்கள் அளிக்கக்கூடியனவை என்பதையும் அங்கே தான் கற்றுக்கொண்டேன். அவற்றைப்பற்றி பகிர்ந்து கொள்வதுதான் இந்தப்பதிவின் நோக்கம். இந்தப் பதிவு, நோய்களும் பிரச்சினைகளும் உள்ள ஒரு சிலருக்காவது விழிப்புணர்ச்சியையும் உதவியையும் தருவனவாக அமைந்தால் நான் மகிழ்ச்சியடைவேன்.


இதில் முக்கிய விஷயமாக கவனிக்க வேண்டியது:


யோகாசனங்களை அதை முழுமையாக கற்றுத் தெரிந்த நிபுணரிடம்தான் கற்க வேண்டும்.


நாமாகப் புத்தகங்களைப் படித்து யோகாசனங்களைச் செய்ய ஆரம்பிக்ககூடாது. யோகாசனங்ககள் நம் உடலுக்கு ஏற்படுத்தும் நல்ல மாறுதல்களைப்பார்த்ததும் ஆர்வக்கோளாறினால் நாமே கூடுதலாக எதையும் படித்துப் பார்த்து செய்ய ஆரம்பிக்கக் கூடாது.


வயிறு காலியாக இருக்கும் காலைப்பொழுதில் இரு தம்ளர் தண்ணீர் அல்லது ஏதாவது இலேசான பழச்சாறு அருந்திய பிறகு தொடங்குவது நல்லது. எப்போதுமே கால்கள், கைகளுக்கு சிறு சிறு பயிற்சிகளை முதலில் ஆரம்பித்து, உடலை சற்று தளர்வாக்கிக் கொண்டு யோகாசனங்களை ஆரம்பிப்பது நல்லது. காற்றோட்டமான இடத்தில் நல்ல கனமான விரிப்பு அல்லது ஜமுக்காளத்தின் மீது அமர்ந்து யோகாசனங்களைச் செய்ய வேண்டும். தளர்வான உடைகள் பயிற்சிகளை இலகுவாக்கும். பொதுவாகவே தனிமையில் யோகாசனங்களைச் செய்யும்போது, உடல் தன்னிச்சையாக பயிற்சிகளைச் செய்யுமே தவிர, மனம் என்னவோ தனிப்பாதையில் பல சிந்தனைகளில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும் . இதைத் தவிர்க்க, மெல்லிய இசை நாடாக்களைக் கேட்டுக்கொண்டே யோகாசனங்களைச் செய்வது நல்லது.
யோகாசனத்தில் பல வித நிலைகள் உண்டு. நான் இங்கே எழுதியிருப்பது சில பயிற்சி முறைகள் மட்டும்தான். இவற்றை மட்டுமே தினமும் 20 நிமிடங்கள் செய்து வந்தால் போதும். பல விதமான நீண்ட நாட்கள் பிரச்சினைகள் சரியாகும்.



முதலில் உடல் தளர சில பயிற்சிகள் முதலில் கழுத்துக்கும் கைகளுக்கும் செய்ய வேண்டும். கழுத்தை மேலும் கீழுமாக, பிறகு பக்கவாட்டில் என்று மெதுவாக சில தடவைகள் திருப்புவது, கால்களை அகட்டி நின்று கொண்டு கைகளை மெதுவாக உயரத் தூக்கிக் இரு கரங்களையும் சேர்த்துக் குவிப்பது போன்ற பயிற்சிகளை முடித்த பின் மெதுவாக தரையில் படுக்க வேண்டும்.


ஏகபாத உத்தானாசனம்:



படுத்த நிலையில் கைகளை இரு பக்கத்திலும் குவித்து கீழே வைத்து உடலைத் தளர வைத்துக்கொண்டு மெதுவாக வலது காலை 45 டிகிரி வரை தூக்க வேண்டும். சில நொடிகளுக்குப்பின் மெதுவாக காலை இறக்க வேண்டும். இது போல இடது காலையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு காலையும் ஐந்து தடவைகள் முதலில் பழக்கி பிறகு தினமும் 10 தடவைகள் செய்வது நல்லது.


பலன்கள்:


வயிற்றிலுள்ள ஜீரண உறுப்புக்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. கால் நரம்புகள் வலிமை பெறுகின்றன. இடுப்பு வலியைப் போக்குகிறது. தொடைகள் கால்களிலுள்ள தொளதொளத்த தசைகள் கரைந்து வலிமை பெறுகின்றன. மூல நோயால் கஷ்டப்படுபவர்கள் இந்த ஆசனத்தைச் செய்ய ஆரம்பித்தால் மெல்ல மெல்ல நோயின் கடுமை நீங்கி பூரண நலம் கிடைக்கும்.


பவன முத்தாசனம்:




படுத்தவாறே ஒரு காலை மடக்கி இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு கூடியவரை கால் முட்டியை முகம் அருகே கொண்டு வர வேண்டும். பின் மெதுவாக காலை கீழே இறக்க வேண்டும். இடது காலையும் அது போல செய்ய வேண்டும். ஒவ்வொரு கால் பக்கமும் ஐந்து முறைகள் செய்யலாம். பின் இரு கால்களையும் இரு கரங்களாலும் பிடித்துக்கொண்டு இதே பயிற்சியை செய்ய வேண்டும். யோகா முறைப்படி இந்த பயிற்சிச் செய்யும்போது படத்தில் உள்ளது போல கழுத்தையும் உயர்த்தி இந்த யோகாசனத்தைச் செய்ய வேண்டும். ஆனால் கழுத்தில் வலியோ பிரச்சினைகளோ உள்ளவர்கள் கழுத்தை உயர்த்தாமல் இந்த யோகாசனத்தைச் செய்தால் போதும். இந்தப்பயிற்சி செய்யும் போது இடுப்பை வலது, இடது புறமாக மெதுவாக படகு போல ஆட்டுவது நல்லதென தற்போது பிஸியோதெரபி வல்லுனர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதுவுமல்லாமல் இந்த மாதிரி படுத்த நிலையிலேயே மூச்சை அடக்கி இடுப்பை கூடிய வரை மேலே தூக்கச் சொல்கிறார்கள். பின் மூச்சை விட்டாவாறே இடுப்பை கீழே இறக்க வேண்டும். இந்தப் பயிற்சிகள் இடுப்பு வலி, முதுகு வலி நீங்கச் சொல்லிக்கொடுக்கப்படுக்கிறது.


யோகா சிகிச்சை மீண்டும் தொடரும்.. .. .. . .


படங்களுக்கான உதவியும் நன்றியும்: கூகிள்

33 comments:

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.


Share

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள பதிவு
மிகச் சரியாக விளக்கிப் போகிறீர்கள் என்றாலும்
படங்களுடன் இருப்பது கொஞ்சம்
எளிதாக புரிந்து கொள்ள இயலும்
என நினைக்கிறேன்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து

தினேஷ்குமார் said...

வணக்கம் அம்மா

நல்லதொரு பதிவு அனைவரின் நலன் கருதி பகிர்ந்தமைக்கு நன்றி அம்மா

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ரமணி அவர்களுக்கு!

அன்பான கருத்துக்கு நன்றி!
புதிய கணினிக்கு மாறி இருப்பதால் படங்கள் பதிவிடுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டன. இப்போது அவற்றை சரியாக்கி விட்டேன். தங்களின் அக்கறைக்கு அன்பு நன்றி!!

கூடல் பாலா said...

தரமான யோசனைகள் சகோதரி

வை.கோபாலகிருஷ்ணன் said...

பட விளக்கங்களுடன் அனைவருக்கும் எளிதில் புரியக்கூடிய வகையில் அமைந்த மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி. தொடருங்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

மக்களுக்கு பிரயோஜனமான பதிவு...

நிரூபன் said...

யோகாசனத்தின் பயன்பாடு, ஒவ்வோர் ஆசனங்களைச் செய்யும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள், அதன் பிரதி பலன்கள் என அனைத்தையும் இலகு நடையில் விளக்கமாக எழுதியுள்ளீர்கள். உங்கள் பணிக்கு நன்றிகள் சகோ.

A.R.ராஜகோபாலன் said...

யோகாசனம் என்பது உடலை வளைத்து கடினமாக செய்ய வேண்டிய முறை என்று நினைத்திருந்தேன் , உங்களின் பதிவை பார்த்து அது தவறென உணர்ந்தேன் , நன்றி அம்மா உங்களின் பதிவுக்கு தொடருங்கள் காத்திருக்கிறோம்

முனைவர் இரா.குணசீலன் said...

தங்கள் அறிவுறுத்தல் பலருக்குப் பயனளிப்பதாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

Menaga Sathia said...

பகிர்வுக்கு நன்றி அம்மா!!

அப்புறம் என் வலைத்தளப்படத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ள எழுத்துக்களின் கலரை மாற்றமுடியவில்லை.இனி கவனமாக இருக்கிறேன்,நன்றி அம்மா!!

அன்புடன் மலிக்கா said...

அனைவருக்கும் புரியும்படியான நல்ல தகவல்கள் மிக விளக்கமாக எழுதியுள்ளீர்கள்.. வாழ்த்துகள் மேடம்..




[நீரோடையில்: http://niroodai.blogspot.com/2011/05/blog-post_31.htmlசிக்கித்தவிக்கும் சனநாயகம்..]

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நல்ல பதிவு மனோ.

middleclassmadhavi said...

நீங்கள் பெற்ற இன்பத்தை - பலனை -நாங்களும் பெற - உங்கள் பகிர்வுக்கு நன்றி!

athira said...

மிக நல்ல பதிவு மனோ அக்கா. அடுத்த பதிவையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி சரோ!

மனோ சாமிநாதன் said...

நீன்ட நாட்கள் கழித்து வருகை தந்ததற்கும் அன்பான கருத்திற்கும் இனிய நன்றி தினேஷ்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்திற்கு அன்பு நன்றி சகோதரர் கூடல் பாலா!

மனோ சாமிநாதன் said...

விரிவான பாராட்டுரைக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

கருத்திற்கு அன்பு நன்றி சகோதரர் நாஞ்சில் மனோ!

மனோ சாமிநாதன் said...

விரிவான பாராட்டுரைக்கும் முதல் வருகைக்கும் அன்பு நன்றி சகோதரர் நிரூபன்!

மனோ சாமிநாதன் said...

விரிவான பாராட்டுரைக்கும் ஊக்குவிப்பிற்கும் அன்பான நன்றி சகோதரர் ராஜகோபாலன்!

மனோ சாமிநாதன் said...

அன்பான வருகைக்கும் கருத்துக்கும் இனிய நன்றி சகோதரர் குணசீலன்!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்கு நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுரைக்கு அன்பு நன்றி மலிக்கா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி வித்யா!

ஸ்ரீராம். said...

நல்லதொரு உபயோகமான பதிவு...

பத்மநாபன் said...

யோகசனமும் உணவுப் பழக்கமும் கொண்டு பல நோய் அண்ட விடாமல் செய்யலாம்...யோகாசனங்களை பற்றி தெளிவான விளக்கங்கள் .. தொடருங்கள்..

ரிஷபன் said...

யோகாசனங்களை அதை முழுமையாக கற்றுத் தெரிந்த நிபுணரிடம்தான் கற்க வேண்டும்.

உண்மையான வார்த்தை. ஏனெனில் கூடவே மூச்சுப் பயிற்சியும் கலந்து வரும். தப்பாக செய்து விட்டால் வேறு பிரச்னைகள் வரக் கூடும்.

Vijiskitchencreations said...

very useful and lot of information.
thanks.

இராஜராஜேஸ்வரி said...

மிகப் பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்

குறையொன்றுமில்லை. said...

உங்களை வலைச்சரத்தில்
அறிமுகப்படுத்தி இருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது
பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html

Asiya Omar said...

மனோ அக்கா,வேலைப்பளுவின் நடுவில் உங்களை எல்லாம் பார்த்து விட்டு செல்லலாம்னு வந்தேன்,நலமா? இடுகைகளை நேரம் கிடைக்கும் பொழுது வாசிக்கிறேன்.