Wednesday, 17 November 2010

வீட்டுக்குறிப்புகள்

உப‌யோக‌முள்ள‌‌ வீட்டுக்குறிப்புகள் நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய சமயங்களில் பலன் கொடுக்கின்றன. அவற்றில் சிலவற்றை கீழே தொகுத்து எழுதியிருக்கின்றேன். யாருக்கேனும் தக்க சமயத்தில் இவை கை கொடுத்தால் மகிழ்வாக இருக்கும்!

 1. டிவி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ரெஃப்ரிஜிரேட்டரில் கம்ப்ரெஸ்ஸரும், டிவியில் பிக்சர் ட்யூபும் ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகி விடும். நிறுத்திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தியாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங்கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.


2. குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும்போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வன்டுகள் உள்ளே நுழையாது.3. கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகி விடும்.


4. சர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.

 5. சில வகை தண்ணீரில் துணிகள் துவைக்கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்கும்போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.


6. ம‌ர‌ச்சாமான்க‌ளை பாலீஷ் செய்வ‌த‌ற்கு, முத‌லில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிற‌குதான் பாலீஷ் பூச வேண்டும்.

 7. மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டிலின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள் செய்து தூவலாம்.


8. தோல் பொருள்க‌ளின் நிற‌ம் ம‌ங்காதிருக்க‌, அவ‌ற்றின் மீது லின்ஸிட் ஆயில் என‌ப்ப‌டும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க‌ வேண்டும்.
 9. ஈக்க‌ள் அதிக‌ம் உள்ள‌‌ இட‌த்தில் தூவக்காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவினால் ஈக்கள் பறந்து விடும்.


10. மெழுகுவ‌ர்த்தி அதிக‌ வெளிச்ச்ச‌ம் த‌ர‌, அதை ஒரு பாத்திரத்தில் நிற்க வைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரிய விடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரிய விடலாம்.
49 comments:

LK said...

நல்ல உபயோகமான தகவல்கள் . நன்றி

ஹைஷ்126 said...

மிகவும் உபயோகமான குறிப்புகள். மிகவும் நன்றி அக்கா.

வாழ்க வளமுடன்

புவனேஸ்வரி ராமநாதன் said...

மிகவும் உபயோகமான குறிப்புகள். மிக்க நன்றி.

அமைதிச்சாரல் said...

நல்ல குறிப்புகள்.. இதில் தண்ணீரில் மெழுகுவத்தியை எரியவிடுவதை, இங்கே தீபாவளி சமயத்தில் பார்த்திருக்கேன்.

துளசி கோபால் said...

வெள்ளிச்சாமான்களுக்கு சுண்ணாம்பு வேணாங்க. நம்ம கையைப் பதம் பார்த்துரும். கொல்கேட் டூத் பவுடர் போடுங்க. பளபளன்னு மினுங்கும். ஆபத்தில்லாதது.

ஜெய்லானி said...

எல்லாமே அருமையான டிப்ஸ் (( முதல் குறிப்பில் குறைந்தது 3 நிமிட இடை வெளி தேவை ))

சே.குமார் said...

உபயோகமான குறிப்புகள்.

வித்யா said...

நல்ல டிப்ஸ்:)

கக்கு - மாணிக்கம் said...

Very useful hints. and seems funny too :))))

Mrs.Menagasathia said...

பயனுள்ள டிப்ஸ்கள்!!

ராமலக்ஷ்மி said...

பயனுள்ள குறிப்புகள். நன்றி.

vanathy said...

nice tips.

GEETHA ACHAL said...

superb tips...Try your last tips when burning Candles......

Jaleela Kamal said...

arumaiyaana tips .mano akkaa

ஸாதிகா said...

மிகவும் உபயோகமான குறிப்புக்கள் அக்கா.தொடருங்கள்.

நிலாமதி said...

தங்கள் பயனுள்ள் தகவலுக்கு நன்றி

kavisiva said...

உபயோகமான குறிப்புகள் மனோம்மா! அரிசியில் வண்டு வராதிருக்க ஏதும் டிப்ஸ் இருக்கா? இங்கே காற்றில் ஈரப்பதம் அதிகம். சீக்கிரம் வண்டு வந்து விடுகிறது. எப்படி தடுக்கிறதுன்னே தெரியலை.

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி சகோதரர் எல்.கே!

மனோ சாமிநாதன் said...

மனமார்ந்த நன்றி அன்புச் சகோதரர் ஹைஷ்

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி புவனேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி அமைதிச்சாரல்! எனக்கு இந்த குறிப்பு சமீபத்தில்தான் தெரிந்தது! உபயோகப்படுத்திப் பார்த்த விதம் பற்றி நீங்கள் எழுதியிருந்தது மகிழ்வாக இருந்தது!

Kousalya said...

தெரிந்து கொள்ள வேண்டிய நல்லா டிப்ஸ்கள். நன்றி அக்கா

சே.குமார் said...

அம்மா... வெளியிடப்பட்ட கருத்துக்கள் இங்கு திறக்க முடியவில்லை. எனக்கு மட்டுமா இல்லை எல்லாருக்குமா? சரி பாருங்கள்.

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் புதிய கருத்துக்கும் மகிழ்வான நன்றி துளசி கோபால்!
தங்க நகைகளுக்கு பற்பசையால் பாலீஷ் போட்டால் பளீரென மினுமினுக்கும் என்று முதலிலேயே எழுதியிருக்கிறேன். இதுகூட கையில் க்ளவுஸ் அணிந்து சுண்ணாம்பால் பாலீஷ் போடலாமே?

மனோ சாமிநாதன் said...

பின்னூட்டத்திற்கும் சிறிய குறிப்புக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெய்லானி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் குமார்!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி வித்யா!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி சகோதரர் சுக்கு மாணிக்கம்!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி வானதி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டிற்கு இனிய நன்றி மேனகா!

துளசி கோபால் said...

மனோ,

நியூஸியில் சுண்ணாம்புக்கு எங்கே போவேன்!!!!!!!!!!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice appreciation Geetha!

மனோ சாமிநாதன் said...

Thank you very much for the nice comment Jaleela!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி ஸாதிகா!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் அன்பு நன்றி நிலாமதி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி கவிசிவா!

அரிசியில் வண்டு வராதிருக்க நிறைய வழிகள் உள்ளன.
1. அரிசியில் காய்ந்த கறிவேப்பிலைகள் சில போட்டு வைக்கலாம்.
2. ஒரு வசம்புத்துண்டை ஒரு சுத்தமான மெல்லிய துணியில் வைத்து முடிச்சு போட்டு வைக்கலாம்.
3. காய்ந்த வற்றல் மிளகாய்கள் சிலவற்றைப் போட்டு வைக்கலாம்.
4. இரண்டு கைகளிலும் விளக்கெண்ணய் தடவிக்கொண்டு கைகளால் அரிசி முழுவதும் தடவி வைத்தாலும் அரிசியில் வண்டுகள் உருவாகாது.

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் குமார்!

இப்போது வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களைப் பார்க்க முடிகிறதா? எனக்கு சரியாக இருக்கிறது இப்போது. இன்று மதியம் டைப் அடித்துக்கொண்டிருந்தபோது அவசரமாக வெளியே போக நேர்ந்தது. பக்கத்தை விட்டு வெளியேறாமல் அப்படியே வைத்து விட்டுச் சென்று விட்டேன். அதனால் இந்த பிரச்சினை வந்திருக்குமா? வெளியே போய் திரும்ப வந்து பிறகுதான் திறந்திருந்த பக்கத்தை மூடினேன். இப்போது சரியாக உள்ளதா என்று எழுதவும்.

asiya omar said...

நல்ல பயனுள்ள பகிர்வு,சூப்பர் அக்கா.

ஹுஸைனம்மா said...

அரிசி - வண்டு, கட்டில் - மூட்டைப்பூச்சி, ஈ - கிராம்பு டிப்ஸ்கள் புதிது. புரசம் பூ என்றால் பூவரசம் பூவா இல்லை வேறா?

வெள்ளிக் கொலுசுக்கும் பேஸ்ட் போட்டுக் கழுவலாமா? (சுண்ணாம்பு கிடைக்காது)

நானானி said...

நல்ல நல்ல தகவல்கள். எல்லோருக்கும் பயன் தரும்

வெள்ளி சாமானுக்கு நான் வீபூதி கொண்டு பாலீஷ் செய்வேன்.

தங்க நகைகளை சிறிது சோப் பவுடர், மஞ்சள்தூள் கலந்து அடுப்பில் சிறிது நேரம் கொதிக்க வைத்து பிறகு டூத்பிரஷ் கொண்டு தேய்த்தால் இண்டு இடுக்குகளில் உள்ள அழுக்குகள் வெளீயேறிவிடும்.
இத்தனை நாள் எப்படி உங்க பதிவைப் பார்க்கவில்லை?
இனி.....!

kavisiva said...

அரிசியில் வண்டு வராமல் இருக்க குறிப்புகள் கொடுத்ததற்கு நன்றி மனோம்மா. இப்போ காய்ஞ்ச கறிவேப்பிலை போட்டு வச்சிருக்கேன்.

Vijisveg Kitchen said...

நல்ல பயனுள்ள குறிப்புகள்.
என் பாட்டியின் குறிப்பை ஒன்று சொல்லி கொள்கிறேன். எஙக வீட்டில் பூஜை சாமன்கள் வெள்ளில் தான் இருக்கும். அதை ஒவ்வொரு வாரமும் வியாழன் அன்று தேய்த்து வைப்பது வழக்கம். என் பாட்டி தீருநீரை வைத்து துடைத்தெடுப்பார்கள் சூப்பரா புதிய பொருள் போல் இருக்கும்.
டூத் பேஸ்டும் நாங்க கொலுசு அணியும் காலத்தில் உபயோகித்துள்ளோம்.
தங்க நகைகளுக்கு பூலாங் கொட்டை, ஷாம்புவில் ஊறவைத்து எடுத்தாலும் புதியது போல் இருக்கும்.

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி ஆசியா!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள‌ ஹுஸைனம்மா!

புரசம்பூ என்பது சிகப்பாக இருக்கும் என்பார்கள்.
வெள்ளி நகைகளையும் சாமான்களையும் பற்பசையைக் கொண்டு சுத்தம் செய்யலாம்.

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கும் புதிய குறிப்புகளுக்கும் அன்பு நன்றி விஜி!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கு மனமார்ந்த நன்றி நானானி!
புதிய குறிப்புகளுக்கும் பாராட்டிற்கும்கூட!!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்கு அன்பு நன்றி கெளசல்யா!

மனோ சாமிநாதன் said...

இப்பதிவை இண்ட்லியில் இணைத்து பிரபலமாக்கிய அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு அன்பு இதயங்கனிந்த நன்றி!
கூடவே இணந்து ஓட்டளித்த புவனேஸ்வரி, மேனகா, ஜெய்லானி, அனு பகவான், கார்த்திக், ராமானந்தகுருஜி, பனித்துளி சங்கர், ஸ்வாசம், தருண், கார்த்தி, விளம்பி, ஜகதீஷ், அமல்ராஜ், வடிவேலன், ஸ்பைஸ், அப்துல் காதர், அஷோக், யுவராஜ், நிலாமதி, ரசாக், கெளசல்யா, MRVS அனைவருக்கும் என் இனிய நன்றி!!