இந்த முறை குறிப்பு முத்துக்களில் தினசரி வீட்டு உபயோகத்துக்கான சில நல்ல குறிப்புகள் கொடுக்கலாமென்று தோன்றியது. சிறிய விஷயங்கள்தான் என்றாலும் அவை பெரிய அளவில் சில சமயங்களில் பலன் தருகின்றன! ‘ சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்ற பழைய பழமொழியே இருக்கின்றது! சில நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடுகின்றன.
1. அலமாரி, பீரோ இவற்றை துடைக்கும்போது, சிறிது வேப்பெண்ணையை தொட்டு துடைத்தால் பூச்சிகள் எப்போதும் அண்டாது.
2. புதிதாக வீடு கட்டுபவர்கள் ‘ concealed wiring’ செய்யும்போது சுவற்றுக்குள் பைப்பைப் பொருத்தி, ஆண்டெனாவிலிருந்து வரும் ஒயரை இதற்குள் விட்டு தொலைக்காட்சிப்பெட்டியில் பொருத்தினால் பார்க்க அழகாக இருப்பதுடன் ஒயர்கள் சுவற்றில் வெளியில் நீளமாகத்தொங்காது. கதவு, ஜன்னல்களை மூட முடியாமல் கஷ்டப்படுவதையும் தவிர்க்கலாம்.
3. கொசுத்தொல்லைக்கு இயற்கை வைத்தியமுறையில் ஒரு மண் சட்டியில் காய்ந்த தேங்காய் நார், மாம்பூக்கள், வேப்பிலைகளைப்போட்டு எரியூட்டினால் கொசுக்கள் விட்டுக்குள் நுழையவே நுழையாது.
4. உடம்பில் எங்காவது எறும்பு கடித்தால் வலி உள்ள இடத்தில் உப்பு கலந்த நீரால் தடவினால் வலி உடனேயே நீங்கும்.
5. துணிகளில் கறை படிந்தால், கறை படிந்த இடத்தில் மட்டும் தண்ணீரால் நனைத்து, அதன் மீது ஒரு ப்ளாட்டிங் அட்டையை வைத்து அதன் மேல் இஸ்திரி செய்தால்[ iron செய்தால்] கறை நீங்கி விடும்.
6. வெள்ளைத்துணிகளுக்கு நீலம் போடும்போது, சொட்டு நீலத்துடன் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து போட்டால் நீலம் திட்டு திட்டாகப் படியாது ஒரே சீராக இருக்கும்.
7. உடம்பில் ஒத்தடம் கொடுக்க Hot pack-ல் வெந்நீரை நிரப்புமுன் சிறிது கிளிசரினை ஊற்றி அதன் பின் வெந்நீரை ஊற்றினால் ரொம்ப நேரத்திற்கு வெந்நீரின் சூடு குறையாமல் இருக்கும்.
8. பற்பசையை கடைசி வரை டியூபிலிருந்து எடுக்க வேண்டுமானால், அதை வெந்நீரில் போட்டு எடுத்து அமுக்கினால் மிச்சமிருக்கும் பற்பசை எல்லாம் உடனேயே வந்து விடும்.
9. காலியான சிலிண்டரை எப்போதுமே உபயோகப்படுத்தும் சிலிண்டரின் அருகில் வைக்க வேண்டாம். காலி சிலிண்டரில் வாயு நீங்கியிருந்தாலும் திரவப்பொருள் அப்படியே உறைந்திருக்கும். எனவே விபத்து ஏற்பட்டால் இரண்டு சிலிண்டர்களும் அருகருகே இருப்பது மிகப் பெரிய ஆபத்தில் முடியும்.
10. இரும்பு ஆணிகள், ஸ்க்ரூ டிரைவர்கள் இவைகளைப் போட்டு வைத்திருக்கும் பெட்டியில் ஒரு பெரிய கற்பூர வில்லையைப் போட்டு வைத்தால் என்றுமே இந்த பொருள்கள் துருப்பிடிக்காமலிருக்கும்.
42 comments:
அருமையான குறிப்புகள்.தொடருங்கள் அக்கா!
நீங்கள் கொடுத்துள்ள குறிப்புகள் அனைத்தும் அருமை அக்கா.
முத்தான குறிப்புகள்
குறிப்புகள் அருமை.சிலது புது தகவல்.
பயனுள்ள குறிப்புகள்.
பலதும் அன்றாடம் பயனளிக்கும் தகவல்கள். நன்றி அக்கா.
இம்முறை ஊருக்குப் போயிருந்தபோது, யூனிஃபார்முக்காக பாம்பே டையிங்கில் வெள்ளைத் துணி வாங்கிவிட்டு, “துணி வெளிறிவிடாதில்லையா?” என்று கேட்டபோது அவர்கள் சொன்னார்கள், புது வெள்ளைத் துணிக்கு ஒரு வருடம் வரையிலாவது நீலம் போடக்கூடாதாம். அப்பத்தான் பளீர் வெண்மை நிற்குமாம். (ஞாபகம் வந்தது, எழுதினேன் அக்கா..)
வணக்கம் அம்மா
நல்ல பதிவுமா எங்களைப்போன்ற தனிமரங்களுக்கு தகுந்த பதிவு பயன்படுத்தி கொள்கிறேன் அம்மா
நன்றி..........
நல்ல டிப்ஸ் மனோம்மா! எறும்பு கசித்தால் உப்புத் தண்ணீர் தடவுவது புதுசா கேள்விப்படறேன். ஞாபகம் வச்சுக்கறேன் :)
ஹி ஹி எறும்பு கடித்தால்... என்று எழுதியிருக்கணும்.
அனைத்து டிப்ஸ்களும் அருமை!!
கொசு கடித்த இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவினால் அரிப்பு வராது...சொரிந்து அந்த தடிப்புடன் இருந்தாலும் மறைந்துவிடும்...
நல்ல குறிப்புகள்..
wow, great tips, thanks madam
அனைத்து டிப்ஸ்களும் அருமை!!
பயனுள்ள குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி.
முத்து சிதறல் சூப்பர்
அருமையான குறிப்புகள்
அனைத்து டிப்ஸ் சும் முத்துக்கள் அக்கா
பயனுள்ள குறிப்புகள் அக்கா.. நலமா..
பயனுள்ள குறிப்புகள்.
பாராட்டுக்கு அன்பு நன்றி ஸாதிகா!
அன்புப் பாராட்டுக்கு இனிய நன்றி இமா!
அன்பு நன்றி ஜலீலா!
அன்பு நன்றி ஆசியா!
அன்பு நன்றி புவனேஸ்வரி!
‘நீலம்’ போடுவது பற்றிய தகவல் புதுசு ஹுஸைனம்மா! புதுத் துணிக்கு மட்டும் தானா? பனியனுக்குப் போடலாமா?
அன்பான பதிவுக்கு இனிய நன்றி தினேஷ்குமார்!
பாராட்டுக்கு அன்பு நன்றி கவி! இதைப்படித்து விட்டு என் கணவரும் மொசுக்கட்டைக்குக்கூட கிராமத்தில் இதே வைத்தியம்தான் செய்வார்கள் என்று சொன்னார்கள்!!
பாராட்டுக்கு அன்பு நன்றி மேனகா! கொசு கடித்த இடத்தில் தேங்காய் எண்ணெய் தடவும் டிப்ஸ்-க்கு மறுபடியும் நன்றி!!
அன்பு நன்றி அமைதிச்சாரல்!
Thanks a lot for the nice appreciation krishnaveni!
அன்புச் சகோதரர் குமார்!
பாராட்டுக்கு அன்பு நன்றி!!
அன்பான பாராட்டுக்கு இனிய நன்றி! ராமலக்ஷ்மி!
அன்புப்பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி தியா!
இனிய பாராட்டுக்கு அன்பு நன்றி சினேகிதி!
அன்பு நன்றி இர்ஷாத்!
நலமே. நீங்கள் நலமா? இமாவின் வலைத்தளத்தில் உங்களுக்கு உடல் நலக்குறைவு என்று படித்தேன். இப்போது நலமாகி விட்டீர்களா?
அன்பு நன்றி காஞ்சனா!!
வழக்கம் போல நான் கடைசியா வந்துவிடுவேன்.
எல்லா டிப்ஸும் சூப்பர். அதிலும் கறை படிந்த இடத்தில் ப்ளாட்டிங் பேப்பர் சுப்பரான டிப்.
என் பசங்க க்ரேயான், மார்க்கர் இதெல்லாம் சில சமயம் நல்ல லைட் கலர் ட்ரஸ்ஸில் அங்கங்கே இருக்கும். அவசியம் இந்த மெத்தடில் செய்து பார்க்கிறேன்.
அருமையான குறிப்புகள்...இதில் நிறைய விஷயங்களுக்கு இயல்பான தீர்வுகள்.. சலிப்படைந்து தடுமாறும் சில விஷயங்களுக்கு சுலப தீர்வுகள்..
அவ்வப்பொழுது இப்படி குறிப்பு இடுங்கள்--உபயோகமாக இருக்கிறது....
அன்பு விஜி!
பாராட்டுக்கு அன்பு நன்றி!
இதை உபயோகித்தவர்கள் சொன்னபோது நானும் இது மாதிரிதான் செய்ய வேண்டும் இனி என்று நினைத்துக்கொண்டேன். நம் ஊரில் ப்ளாட்டிங் பேப்பர் சுலபமாக கிடைக்கும். இங்கே தேடிப்பார்க்க வேண்டும்.
அன்புச் சகோதரர் பத்மநாபன்!
இனிய பாராட்டிற்கு இதயங்கனிந்த நன்றி!!
தங்களின் ஊக்குவிப்பு மிகவும் உற்சாகத்தைத் தருகிறது!!
இப்பதிவினை இண்ட்லியில் இணைத்து ஓடும் போட்ட சகோதரி கவிசிவாவிற்கு என் மனமார்ந்த நன்றி!
இனைந்து ஓட்டளித்த தோழமைகள் பனித்துளி சங்கர், இர்ஷாத், ராமலக்ஷ்மி, ஜெய்லானி, Shruvish அனைவருக்கும் என் அன்பு நன்றி!!
ஒரு முக்கியமான சிறுதும்பை அறிமுகப் படுத்தியதற்கு. நன்றி மனோ.
இப்பொழுதே காலி சிலிண்டரை வேறு இடத்தில் மாற்றி வைக்கிறேன்.
அன்பார்ந்த பதிவிற்கு மனமார்ந்த நன்றி கோமா!
Post a Comment