Sunday, 19 September 2010

பதிவுலகில் நான்!

திருமதி. விஜி சத்யா என்னைத் தொடர்பதிவிற்கு அழைத்து விட்டாலும் முதலில் எழுதுவதற்கு சிறிது தயக்கமிருந்தது. ஆனாலும் அவர்களின் அன்பை மதிப்பது பெரிதாகப்பட்டதால் இந்த தொடர்பதிவில் எழுத ஆரம்பிக்கிறேன்.

திருமதி. .விஜிக்கு என் அன்பார்ந்த நன்றி!


1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

இதே பெயர்தான் - மனோ சாமிநாதன்.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?.

இதுதான் என் உண்மைப் பெயர்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

தமிழ் வலைப்பூ உலகில் காலடி எடுத்து வைத்ததைப் பற்றி சொல்லுமுன், பொதுவான வலைத்தளங்களில் முதல் அடி எடுத்து வைத்ததைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

என் ஒரே மகன் ஸ்விட்சர்லாண்டில் படிப்பை முடித்து, பயிற்சிக்காக அமெரிக்கா செல்ல ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தபோது, என் தனிமையைப்போக்குவதற்காக, வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கி, இண்டர்நெட் தொடர்பை முதன்முதலாக ஏற்படுத்தியதுடன் மட்டுமல்லாது, என் சமையல் திறன் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் என் மகன் 2003-ல் ஆரம்பித்து வைத்ததுதான் www.mayyam.com/hub என்ற பிரபலமான வலைத்தளத்தில் Indian food பிரிவில் Mrs.Mano’s Tamilnadu delicacies என்ற தொடர். இது தற்போது 10 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களையும் தொடர்ந்து பாராட்டுக்களையும் எனக்குப் பெற்றுத்தந்து என் தொடரின் மூன்றாம் பாகத்திலும் நுழைய வைத்துள்ளது. இதுதான் வலையுலகத்தில் என் முதல் நுழைவு. பிறகு இதைப்பார்த்து அழைத்த ‘அறுசுவை ‘ வலைத்தள நிறுவனரின் வேண்டுகோளுக்காக, அங்கே சில வருடங்கள் பங்கேற்பு. இடையில் மகனின் திருமண முயற்சியின் காரணமாக சில வருடங்களின் தொடர் அலைச்சலினால் வேறு சில வலைத்தளங்களின் அழைப்பையும் புறக்கணிக்க வேண்டியதாகியது. இவ்வளவுக்கும் இடையில் எனக்கென தனி வலைப்பூ ஆரம்பிக்க வேண்டுமென்ற ஆசை பல வித கடமைகளில் கனவாகவே பல வருடங்கள் தொடர்ந்து இப்போதுதான் நனவாகியுள்ளது. இதற்காக ஆரம்பத்தில் எனக்கு ஊக்கம் கொடுத்து சில யோசனைகளும் சொன்ன தங்கை ஸாதிகாவிற்கும் பின்னால் சில குறிப்புகள் கொடுத்த தங்கை ஜலீலாவிற்கும் இங்கே என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிற வலைத்தளத் திரட்டிகளில் இணைவதுதான் பிரபலமடைதல் என்றால் அதற்கான யோசனைகளைத் தானாகவே முன்வந்து சொல்லி விளக்கிய சகோதரர் இர்ஷாத் தான் பெரிதும் காரணமானவர். அவருக்கும் இங்கே என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மற்றபடி நம் வலைத்தளம் பிரபலமாவதென்பது நம் எழுத்தில்தான் இருக்கிறது என்பது என் எண்ணம்!

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என் அனுபவங்களையும் பிறர் அனுபவங்களையும் சில சமயங்களில் பகிர்வதுண்டு. அவற்றை எழுதுவதே, யாருக்கேனும் அவை ஏதாவது ஒரு விதத்தில் உதவியாக இருக்குமென்ற நோக்கத்தில்தான். இதனால் நல்ல விளைவுகள் கடந்த காலத்தில் நிகழ்ந்துமிருக்கின்றன.

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நிச்சயம் இதை பொழுது போக்கு என்று சொல்ல முடியாது. பெரும்பாலான குடும்பங்களில் பெண் என்பவள் குடும்பத்தைப் பேணி காப்பதிலும் சமைப்பதிலும் தன் பொழுதைக் கழிக்கிறாள். இளமையில் தன் கணவனிடமும் முதுமையில் தன் பிள்ளைகளிடமும் தன் மனதிலுள்ள அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாமலும் தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியாமலும் அவளின் நேரம் இயந்திர கதியில் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிறது. விசு ஒரு திரைப்படத்தில் தன் மனைவியிடம் சொல்வார், ‘ஆண்களுக்காவது ரிட்டயர்மெண்ட் இருக்கிறது. ஆனால் உங்களுக்கெல்லாம் சமையலிலிருந்து ஓய்வே இல்லையே?” என்று!! இந்த வலைப்பூவில் எழுதுவது என்பது எல்லா பெண்களுக்கும் ஒரு வடிகால் என்றுதான் சொல்வேன் - எனக்கும் சேர்த்துத்தான்!! மற்ற வலைப்பூக்களைப் பார்த்தால் தெரியும் எத்தனை பெண்கள் சமையலிலும் கலைகளிலும் கவிதைகளிலும் சிந்தனைகளிலும் எப்படியெல்லாம் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள் என்று!

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஆங்கிலத்தில் மட்டும் சமையலுக்கென்று ஒரு வலைப்பூ உள்ளது.

http://www.manoskitchen.blogspot.com/

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?.

தன்னிறைவும் மனப்பக்குவமும் இருந்தால் கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகளுக்கு இடமேயில்லை.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.

பகிர்ந்ததும் பாராட்டியதும் என் கணவர்தான். என்னுடைய அத்தனை திறமைகளையும் இந்த நிமிடம் வரை ஊக்குவித்து வளர்த்து வரும் அவரைப்பற்றி விவரிக்க என்னிடம் வார்த்தைகளில்லை.

10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

சினேகமும் புரிதலும் அன்புமாக கணவர், கரிசனமும் பிரியமும் தோழமையுமாக மகன், மகளாக மருமகள், பொக்கிஷமாக பேரன் என்ற அன்பு மயமான குடும்பம். உண்மை, நேர்மை, உழைப்பு, அன்பு, கருணை-இவைதான் வாழ்க்கையின் தாரக மந்திரங்கள்!

சின்னஞ்சிறு வயதில் கர்நாடக சங்கீதம் பயின்று, அரங்கேற்றம் நடந்தது ஒரு பகுதி. தண்ணீர் ஊற்றாமலேயே தன்னால் வளரும் காட்டுச்செடி போல எந்த விதப்பயிற்சியுமின்றி வளர்ந்த ஓவியத்திறமை இன்னொரு பகுதி..


ஓவியம் வரைய ஆனந்த விகடனின் துணை ஆசிரியர் திரு.பரணீதரனால்.அழைக்கப்பட்டதும் கதாசிரியையாய் அதே விகடனிலும் சாவியிலும் எழுத ஆரம்பித்ததும் வாழ்வின் நடுப்பகுதி.

இவை அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி முதலில் குடும்பக் கடமைகளுமாய் இப்போது வலைப்பூவுமாய் தொடர்வது இன்றைய பகுதி!

இன்றைய பெருமிதம் வலையுலக நட்புகள்!

இன்றைய வேண்டுதல் அனைவரும் மகிழ்வுடனும் நலமுடனும் இருக்க வேண்டுமென்பது!

இந்த தொடர் பதிவில் பங்கேற்க நான் அழைக்கும் தோழமைகள்:

திருமதி. மேனகா

திருமதி. ஆசியா ஓமர்

திரு.ஹைஷ்

திரு.கோபி

50 comments:

ஹைஷ்126 said...

அன்பு மனோ அக்கா, நீங்கள் எளிமையாக எழுதி விட்டீர்கள். ஆனால் என் நிலை அப்படி இல்லை!

இதற்கு முன் அன்பு தங்கை அதிரா, வலை பூவிலேயே எனக்கு தெரிந்த அம்மா நிலையில் உள்ள ஓரே ஒருவர் செபா அம்மா (இமாவின் அம்மா) இருவரும் அழைத்தும் நான் கொடுத்த பதில்...

///ஹைஷ்126 சொன்னது…

//இந்தத் தொடரைத் தொடருமாறு நான் அன்புடன் அழைப்பது திரு. ஹைஷ் அவர்களை. மறுக்க மாட்டார் என்று நம்புகிறேன்/// சூப்பர் மாட்டி:)), இதன் பின்னே பெரிய கதையே இருக்கு:))).//

அன்பு செபா அம்மா இதை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, இந்த வலைதளத்திலேயே உலக அனுபவங்களில் மிக பெரியவர் ஒருவர் என்னை மதித்து அழைப்பதை நினைத்து, உங்களின் அன்புக்கும் பாசத்திற்கும் தலை வணங்குகிறேன்!

சில தவிர்க முடியாத காரணங்களால் தற்சமயம் இத்தொடரை தொடர முடியாத நிலையில் இருக்கிறேன்! இலை மறை காய்மறையாக பலர் அறிந்ததே, இத் தொடரை எழுதினால் அதன் பின் நான் வலைதளத்துக்கு வரமுடியாத நிலையாகிவிடும். அதனால் பொய்யாக பாதி விடைகளை மட்டும் எழுத விருப்பம் இல்லை, எனக்கு சுதந்திரம் கிடைத்தவுடன் அனைத்தையும் எழுதுகிறேன்.

அன்பு தங்கை அதிராவும் என் பெயரை குறிப்பிட்டு மெயில் அனுப்பி இருந்தார் எப்படியோ குச்சிமிட்டாய், பல்லி முட்டாய், சொக்கா, குருவி ரொட்டி எல்லாம் கொடுத்து, லிஸ்ட்டில இருந்து என் பெயரை எடுக்கும்படி சொல்லி எடுக்கவைத்தேன்..... இப்போ நீங்கள் அழைத்திருக்கிறீங்க..,உங்களிடம் இந்த் குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் செல்லாதே:) எனக்கு எப்போது எழுத அனுமதி கிடைத்தாலும் கண்டிப்பாக உங்களுக்கு சொல்லி விட்டு தான் எழுதுவேன். இதுதான் அதிரா சொன்ன பெரிய கதை:)

வாழ்க வளமுடன்

21 ஆகஸ்ட், 2010 9:06 AM
seba சொன்னது…

அன்புள்ள ஹைஷ்,
உங்களின் நிலை எனக்கு விளங்குகிறது. உங்களுக்கு முடிகிறபோது எழுதுங்கள்.
அன்புடன் செபா.///

தங்களின் அன்புக்கும் கரிசனத்திற்கும் மிகவும் நன்றி. அனுமதி கிடைக்கும் போது கண்டிப்பாக உங்களுக்கு தெரிவித்துவிட்டு எழுதுகிறேன். இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவை :(

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

http://seba-jeyam.blogspot.com/2010/08/blog-post_18.html

ராமலக்ஷ்மி said...

உங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவியது இப்பதிவு. வாழ்த்துக்கள்!

ஜெய்லானி said...

தெளிவான விளக்கம் அருமையா சொல்லியிருக்கீங்க..!! :-)

ஸாதிகா said...

அக்கா,உங்களுக்கே உரித்தான எழுத்து முதிர்ச்சி மிளிர அழகுற பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி அக்கா.இன்னும் நீங்கள் நிறைய எழுதவேண்டும் அனைவரும் பயன் பெறும் வகையில் தொடர்ந்து...

Chitra said...

உங்களின் ஒவ்வொரு பதிலும் பிரமிக்க வைத்தது. உங்கள் மேல் உள்ள மதிப்பை மேலும் கூட்டியது. வாழ்த்துக்கள்!

Asiya Omar said...

அக்கா ,இந்தப்பகிர்வின் மூலம் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டே்ன்.
உங்கள் அருமையான எழுத்தில் உள்ள கம்பீரம் எப்பொழுதும் என்னை வியப்பில் ஆழ்த்தியதுண்டு.

தன் மனதிலுள்ள அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாமலும் தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியாமலும் அவளின் நேரம் இயந்திர கதியில் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிறது.

அக்கா,இந்த வரிகள் எத்தனை உண்மை.

உங்களை நேரில் சந்தித்த பொழு்து சின்ன பெண் போன்ற உங்கள் தோற்றத்திற்கு காரணம் உங்கள் கணவர்,மகன்,மருமகள்,பேரன் தான் காரணம்னு இப்ப தெரிஞ்சிகிட்டேன்.

என்னையும் எப்பவும் நீங்கள் நினைவு வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
அழைப்பிற்கு நன்றி அக்கா.

thiyaa said...

இப்பதிவு, உங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவியது
நன்றி

இமா க்றிஸ் said...

அன்பு மனோ அக்கா,
உங்களைப் பற்றி ஏற்கனவே கொஞ்சம் தெரிந்திருந்தாலும் இப்படி உங்கள் எழுத்தில் படிப்பது நிறைவாக இருக்கிறது.

ஹுஸைனம்மா said...

அக்கா, உங்களின் அனுபவமும், பெருந்தன்மையும், மேன்மையும் சொல்கிறது இப்பதிவு. உங்களை நானும் அறிந்தவள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

உங்களின் பக்குவமான வார்த்தைகளைப் படிப்பதில் எப்பவும் ஒரு மகிழ்ச்சி அக்கா.

Menaga Sathia said...

உங்களைப் பற்றி மேலும் அறிந்துக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அம்மா...என்னையும் அழைத்ததற்க்கு மிக்க நன்றி!! நான் ஏற்கனவே கவிசிவா அழைத்ததன் பேரில் இப்பதிவை எழுதிவிட்டேன்..மீண்டும் தங்கள் அன்புக்கு நன்றிம்மா!!

தினேஷ்குமார் said...

அம்மா
தங்கள் தொடர் பதிவை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவில்லை அம்மா.....
தங்க கடிகாரம் தானிருக்க
தன் நிழலில் மணிபார்க்க
யார் இருக்கார்.........

தகரம்தான் வார்க்க - தகரத்
தழயில் தங்கம் சூடேற
உருப்பெற்று உயிர்பெற்று
உணர்வாய் இன்று.......

தவறு ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும் அம்மா என் மனசுக்கு தோனிற்று அம்மா..........

அன்புள்ள
தினேஷ்

Krishnaveni said...

Nice answers , All the very best madam

Mahi said...

அனுபவம் தெறிக்கிறது உங்கள் ஒவ்வொரு வார்த்தைகளிலும் மனோ மேடம்! வலைப்பூவில் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்!

R.Gopi said...

மனோ மேடம்....

பதிவின் ஒவ்வொரு வரிகளிலும் உங்கள் அனுபவம் பளிச்சிடுகிறது....

எழுத்துக்களில் ஒரு நளினமும், சொல்ல வந்த விஷயத்தை படீரென சொல்லும் அந்த வித்தையும் தெரிகிறது...

தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு நன்றி...

ஏற்கனவே நம் வலைத்தோழமைகள் பலர் இதே பதிவை எழுத அழைத்துள்ளனர்...

விரைவில் பதிவிட முயற்சிக்கிறேன்....

என்னுடன் இந்த தொடர் பதிவை எழுத இருக்கும்


திருமதி. மேனகா

திருமதி. ஆசியா ஓமர்

திரு.ஹைஷ்

ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்...

Asiya Omar said...

அக்கா உங்கள் ஏழாவது கேள்வியின் பதிலை சரிபார்க்கவும்.

GEETHA ACHAL said...

சூபப்ராக எழுதி இருக்கின்றிங்க...

அஸ்மா said...

அன்பு மனோ மேடம்! நலமா? பேசி நாளாச்சு! உங்கள் அறிமுகம் எனக்கு ஏற்கனவே கிடைத்திருந்தாலும், இந்த பதிவின் மூலம் மேலும் தெரிந்துக்கொள்ள முடிந்தது.

உங்கள் மகனுக்கு திருமணமான புதிதில் அறுசுவையில் உங்களுக்காக ஒரு பதிவு தயார் பண்ணி, அதை போஸ்ட் பண்ணாமலே போய்விட்டது. அதில் நான் குறிப்பிட்டு எழுதி வைத்திருந்தது, "உங்களை மாமியாராக அடைந்ததில் உங்கள் மருமகள் ரொம்ப கொடுத்து வைத்த பெண்" என்பது! அதை உங்கள் ப்ளாக்லேயே சொல்ல வாய்ப்பு கிடைத்தது சந்தோஷம் :)

ஆசியாக்கா சொன்ன மாதிரி உங்கள் ஏழாவ‌து பதிலில் கொடுத்திருக்கும் லிங்க்கை சரி பாருங்க மேடம்!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஹைஷ்!

தங்கள் உணர்வுகளை நான் பெரிதும் மதிக்கிறேன். எப்போது உங்களை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்களோ அப்போது வெளி வந்தால் போதும்.

தங்களின் அன்பான விளக்கத்திற்கு என் நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்கு என் மகிழ்வு கலந்த நன்றி ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஜெய்லானி!

தங்களின் பாராட்டிற்கு அன்பார்ந்த நன்றி!

மனோ சாமிநாதன் said...

தங்களின் ஊக்குவித்தலும் பாராட்டும் மனதிற்கு மகிழ்வை தருகிறது ஸாதிகா! தங்களுக்கு என் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

உங்களின் அன்பான கருத்திற்கு என் இதயங்கனிந்த நன்றி சித்ரா!

மனோ சாமிநாதன் said...

அன்பு ஆசியா!

உங்களிடம் தொலைபேசியில் பேசியதை நான் என்றுமே மறந்ததில்லை. நேரில் சந்தித்தபோதுதான் அதிகம் பேச முடியவில்லை.

பாராட்டுக்கு என் அன்பும் மகிழ்வுமான நன்றி ஆசியா!
என் தவறை அக்கறையோடு சுட்டி காட்டியதற்கு தனியான நன்றி! இப்போது திருத்திவிட்டதை கவனித்தீர்களா?

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கு என் மகிழ்வையும் அன்பான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் தியா!!

மனோ சாமிநாதன் said...

அன்பான கருத்துக்கு என் மகிழ்வான நன்றி இமா!

மனோ சாமிநாதன் said...

உங்களின் பாராட்டுக்கும் கருத்துக்கும் என் அன்பார்ந்த நன்றி ஹுஸைனம்மா!

மனோ சாமிநாதன் said...

அன்பானக் கருத்துக்கு மிக்க நன்றி மேனகா!

இலா said...

மனோ ஆன்டி! உங்களைபற்றி அருசுவை மூலமும் வலைப்பூ முலமும் அறிந்து கொண்டிருந்தேன். இந்த இடுகை மூலம் உங்களை பற்றி அறிய செய்தமைக்கு நன்றி!

சந்தர்ப்பம் வரும் போது நேரில் பார்க்க நினைக்கும் நபர்களில் நீங்களும் ஒருவர்... காலம் வரட்டும் அதுவரை வலைபூவில் தொடரட்டும் :)

Kanchana Radhakrishnan said...

//தன் மனதிலுள்ள அனைத்தையும் பகிர்ந்து கொள்ள முடியாமலும் தன் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியாமலும் அவளின் நேரம் இயந்திர கதியில் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிறது.//

True.வாழ்த்துக்கள்.

Vijiskitchencreations said...

மனோ மேடம் உங்களுக்கு முதலில் என் நன்றி. நான் அழைத்து நிங்க வந்து எழுதியது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும்,பெருமையாகவும் இருக்கு.
இலா சொல்வது போல் நேரில் நான் பார்க்க விரும்பும் ஒருவரில் நிங்களும் நானும் அதேநாடகளுக்காக காத்திருக்கேன். கண்டிப்பா வரும்.
உங்களின் நட்பு எனக்கு கிடைத்ததை நான் ரொம்ப பெருமையாக நினைக்கிறேன்.

www.mayyam.com/hub இதில் நானும் 3 வருடங்களுக்கு முன் நிறய்ய உங்களின் ரெசிப்பிஸ் பார்த்து செய்து இருக்கேன். அதிலும் எனக்கு நிங்க மறக்காமல் பதில் அளித்திருக்கிங்க. இப்ப தான் அந்த பக்கம் போக முடிவதில்லை. நல்ல ஒரு தளம்.
நிங்களுமா கர்நாடக சங்கிதம் , குட் என் கட்சி தான்.
வான் என்னற்ற திறமைகளோடு நல்ல ஒரு பக்குவமான வார்த்தகளோடு எழுதற உங்களை எங்களுக்கு தோழியாய கிடைத்தை நான் என்றென்றும் மறக்கமாட்டென். உங்கள் அன்பு தோழி விஜிசத்யா. சில விஷயங்கள் நானும் இந்த பதிவு மூலம் தெரிந்து கொண்டேன். வளர்க நட்பு.

'பரிவை' சே.குமார் said...

//உங்களின் ஒவ்வொரு பதிலும் பிரமிக்க வைத்தது. உங்கள் மேல் உள்ள மதிப்பை மேலும் கூட்டியது. வாழ்த்துக்கள்! //

Repeat Chitra...

மோகன்ஜி said...

நல்ல பதில்கள் மனோ மேடம்! உங்கள் பின்னூட்டத்தை என் நண்பர் பத்மநாபன் வலையில் கண்டு உங்கள் வலைப்பூவுக்கு வந்தேன்.. பாரதியின் அழகான வரிகளை எழுதியிருந்தீர்கள்.இன்னொரு பாரதி பக்தையை தொடர்பு கொள்வது சந்தோஷமாய் இருக்கிறது.

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_22.html

Unknown said...

உங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவியது இப்பதிவு. வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

அன்பு இலா!
அன்பான பதிவிற்கு நன்றி!
நிச்சயம் நேரில் விரைவில் சந்திப்போம். நானும் உங்களை சந்திக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

அன்பார்ந்த கருத்துக்கு மனமார்ந்த நன்றி காஞ்சனா!

மனோ சாமிநாதன் said...

கவிதைக்கும் அன்பான பதிவிற்கும் மனமார்ந்த நன்றி தினேஷ்குமார்!!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice comment krishnaveni!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி கீதா!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் மகிழ்வான நன்றி மகி!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள கோபி அவர்களுக்கு!

அன்பான பாராட்டுக்கு இதயப்பூர்வமான நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள அஸ்மா!

ரொம்ப நாட்களுக்குப்பின் சந்திப்பது மகிழ்வாக உள்ளது.
உங்கள் உடல் நலம் தற்போது தேவலாமா?
பாராட்டுக்கு அன்பான நன்றி அஸ்மா!

மனோ சாமிநாதன் said...

உங்களின் விரிவான பதிவு மிகவும் மகிழ்வை அளித்தது விஜி! நிச்சயம் நாம் விரைவில் சந்திப்போம் என நானும் நம்புகிறேன்.
உங்களின் ஈமெயில் இன்னும் எனக்கு வரவில்லை!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் மோகன்ஜி!
தங்களின் முதல் வருகைக்கும் அன்பான பாராட்டிற்கும் இதயங்கனிந்த நன்றி!
இளமைப்பருவத்தின் ஒவ்வொரு நிலையிலும் பாரதியின் ஆளுமை அதிகமிருந்தது. அதன் பாதிப்பு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி ஜிஜி!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஜெய்லானி!
தங்களின் பதிவிற்கும் வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்து வைத்ததற்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

இந்தப் பதிவை இண்ட்லியில் இணைத்து ஓட்டும் போட்ட அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கும் தவறாது ஓட்டளித்த தோழமைகள் kaarthikVlk, Jeylani, Chithra, Panithuli Sankar, Husainammaa, Asiya, Vilambi, Vivek, Arasu, Sudhir, tamilz, Balak, mounakavi, nanban, Bhavaan, Abthul kadhar, Paarvai, menakaa, RGpi3000-அனைவருக்கும் என் மகிழ்வு கலந்த அன்பு நன்றி!!

Ahamed irshad said...

உங்களின் இயல்பான பதில்கள் அழகு அக்கா..பக்குவப்பட்ட உங்கள் எழுத்தில் இது ஒரு மைல்கல்..வாழ்த்துக்கள்..

Jaleela Kamal said...

மனோ அக்கா அழகான முறை விளக்கி யுள்ளீர்கள்,என்னையும் ஞாபகம் வைத்து எழுதி இருக்கீங்க , நன்றி.
உங்கலை போல் நட்பு கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்.