முதலாம் முத்து:
பெண்கள் சம்பந்தமான சமீபத்திய மாத இதழ் ஒன்றில் ஒரு சுவாரஸ்யமான ஒரு விஷயத்தைப்படித்தேன்.
பங்களாதேஷ் உலகிலேயே வறுமையான நாடுகளில் ஒன்று. அங்கு பாதிக்கும் மேற்பட்டோர் படிப்பறிவில்லாது, கிராமங்களில் வசிக்கிறார்கள். கற்பனையில்கூட நினைத்துப்பார்க்க முடியாத அளவு ஒரு பழங்கால வாழ்க்கையை அவர்கள் வாழுகிறார்கள். அவர்கள் வாழ்க்கைத்தரத்தை மாற்ற அங்குள்ள ‘ D.Net” என்ற சமூக சேவை நிறுவனம் ஒரு அருமையான முயற்சியை ஆரம்பித்திருக்கிறது. இதற்கு இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ‘இன்ஃபோ லேடீஸ்’ என்ற பெயரில் வேலை கொடுத்து அவர்களுக்கு சைக்கிள், இண்டர்நெட் இணைப்புடன் கூடிய மொபைல் ஃபோன், லாப்டாப், டிஜிட்டல் காமிரா-இவைகளைக் கொடுத்து அவைகளில் தகுந்த பயிற்சியையும் அளித்து ஒவ்வொருத்தருக்கும் சில கிராமங்கள் என்று பிரித்துக்கொடுத்து அனுப்புகிறார்கள். ஒவ்வொரு பெண்ணும் தினமும் 10 கிராமங்களுக்காவது சென்று நூற்றுக்கணக்கானவர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்கிறார்கள்.
ஏதோ வானத்திலிருந்து வந்த தேவதையைப்போல இவர்கள் நடந்து கொள்ளுவதில்லை. இவர்களும் ஏதாவது ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களாயிருப்பதால் அவர்கள் மொழியிலேயே பேசுகிறார்கள். அவர்களது லாப்டாப்பில் அனைத்து தகவல்களும் வங்க மொழியிலேயே பதிவாகி இருப்பதால் அவர்களால் மக்களிடம் அவர்களின் பிரச்சினைகள் பற்றி சுலபமாகப் பேச முடிகிறது.
இல்வாழ்க்கைப் பிரச்சினைகள்-உதாரணத்திற்கு கணவன் மனைவியைத் தள்ளி வைத்து இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவது தெரிந்தால், இவர்கள் உடனேயே அந்த மனைவியை சந்தித்து, இந்த மாதிரி தவறான வழியில் போகும் கனவனுக்கு சட்டப்படி எந்த மாதிரி தண்டனைகள் காத்திருக்கின்றன என்று விளக்கி அவர்கள் பயத்தைப்போக்கி அவர்களுக்கு தன்னம்பிக்கையை விதைக்கிறார்கள். அவளுடைய கணவனையும் அவன் பெற்றோரையும் சந்தித்து ஜெயிலுக்கு எந்த மாதிரி தண்டனையுடன் போக நேரும் என்பதை விளக்கிச் சொல்கின்றனர். கனவன் பயந்து போய் மறுபடியும் மனைவியிடமும் குழந்தைகளிடமும் சேருகிறான்.
ஒரு விவசாயி தன் நிலத்தில் விளைந்த தக்காளி திடீரென்று வியாதி வந்தது போல சுருங்க ஆரம்பித்து விட்டது என்று கவலைப்படுகிறார். உடனே அந்த பெண் அந்த பழங்களை தன் டிஜிட்டல் காமிராவில் புகைப்படங்கள் எடுத்து ஈமெயில் மூலம் தன் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கிறாள். அங்கே பலதரப்பட்ட விஷயங்களில் அறிவில் மேம்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதற்கான காரணங்களை கண்டுபிடித்து, அந்தப் பெண்ணை தொலைபேசியில் கூப்பிட்டு சொல்கிறார்கள். அந்த ஏழை விவசாயிக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்கிறது. கிராமங்களில் ‘சிறுவர்களுக்கு எப்படி அடிப்படை பழக்க வழக்கங்களைக் கற்று கொடுப்பது, கல்வியின் அவசியம்'-இப்படி பல விஷயங்களை குறும்படமாக போட்டுக் காண்பிக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கும் வயதானவர்களும் அவரவர்களின் சிறு சிறு பிரச்சினைகளையும் இவர்கள் தனது லாப்டாப்பின் மூலமாகவும் டிஜிட்டல் காமிரா மூலமாகவும் தீர்த்து வைக்கிறார்கள். மருத்துவ உதவிகளும் மருத்துவர்களை அவ்வப்போது குழுக்களாக கிராமங்களுக்கு அழைத்து வந்து இவர்களது நிறுவனம் செய்கிறது. அதற்கு மிகச் சிறிய தொகையை இவர்கள் வசூலிக்கிறார்கள். வங்க அரசு இவர்களை ஊக்குவிப்பதுடன் அவ்வப்போது உதவவும் பாராட்டவும் செய்கிறது! இதையெல்லாம் படித்தபோது நம் தமிழ்நாட்டுக்கு எப்போது இந்த மாதிரி முன்னேற்றம் கிடைக்கும், அந்த கனவுலகம் சீக்கிரம் வராதா என்ற ஏக்கம் ஏற்பட்டது!
இரண்டாம் முத்து:
பல வருடங்களுக்கு முன் ஊரில் ஏற்பட்ட அனுபவம் இது. ஒரு நாள் விடியற்காலை வீட்டின் வாசலுக்கு வந்தபோது எதிரே இருந்த பள்ளத்தில் சுற்றிலும் சிலர் சூழ்ந்திருக்க வலிப்பு நோயால் வாயில் நுரையுடன் துடித்துக்கொண்டிருந்தார் ஒருவர். என் சகோதரி மகனைக் கூப்பிட்டு ஒரு இரும்புக்கம்பியைக் கையில் கொடுக்கச் சொன்னேன். உடனேயே சில நிமிடங்களில் வலிப்பு நின்று சாதாரணமானார் அவர். வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரைப்பற்றி விசாரித்தபோது ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் என்றும் வேலை தேடி வந்ததாகவும் சொன்னார். என் சகோதரியின் கணவரது வேட்டியையும் சட்டையையும் கொடுத்து அணிய வைத்து, சாப்பிட வைத்து கையில் பணமும் கொடுத்து ஊருக்கு உடனேயே திரும்பிப்போகச் சொன்னபோது அவர் ‘இன்னொரு உதவிம்மா’ என்றார். விவரம் கேட்டபோது. ‘ ஒரு வீணாகிப்போன டேப் கிடைக்குமா?’ என்று கேட்டார். அதன் டேப் சுருளை கையில் வைத்து மோர்ந்து கொண்டிருந்தால் வலிப்பு வராது என்று விவரித்தார். அதையும் கொடுத்தனுப்பியபோது மன நிறைவுடன், தெரியாத இந்தத் தகவல் ஆச்சரியத்தையும் கொடுத்தது!
46 comments:
அம்மா...
முத்துக்கள் இரண்டும் நன்று.
முதல் ஒன்று நல்ல முயற்சி... முயற்சி தொடர்ந்தால் நன்று.
இரண்டாவது உங்கள் நல்மனதுக்கு நன்றி மற்றும் டேப் விஷயம் புதிது.
முதல் மிக ஆச்சரியமான பகிர்வு.வாழ்க பங்களாதேஷ் !
இரண்டாவது உதவும் மனசு எல்லாருக்கும் வராது.பாராட்டுக்கள்.பகிர்வுக்கு நன்றி.
பகிர்வுக்கு நன்றி.
அருமையான முத்துக்குவியல். இரண்டாவது விஷயம் புதுசு..
பகிர்வுக்கு நன்றி. Good post!
இரண்டு முத்துமே அருமை அதிலும் முதல் முத்து தண்ணம்பிக்கையின் சிகரம் ...!!
”டேப்” என்றால் ஆடியோ கேசட் டேப்பா அக்கா? புது தகவல். இருந்தாலும், இது மருத்துவரீதியாக சரியான முறையாக இருக்காது என்று நினைக்கிறேன்; அவரது நம்பிக்கையாக இருக்கலாம் - இரும்பைக் கொடுத்தால் வலிப்பு நிற்கும் என்பதையும் மருத்துவர்கள் அவ்வாறாகத்தானே சொல்கிறார்கள்?
முத்துக்குவியல் சுவாரஸ்யம்.பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா!
வணக்கம் அம்மா
//இதையெல்லாம் படித்தபோது நம் தமிழ்நாட்டுக்கு எப்போது இந்த மாதிரி முன்னேற்றம் கிடைக்கும், அந்த கனவுலகம் சீக்கிரம் வராதா என்ற ஏக்கம் ஏற்பட்டது! //
தங்களை போல நல்லுள்ளம் படைத்த சிலர் பொதுசேவை செய்கிறார்கள் தன்னலம் பார்க்காமல்
இச்சிலர் பலராகும் காலம் வெகு விரைவில் வரும் என்று மனம் நம்புகிறது அம்மா.......
இளநெஞ்சில் விதைக்கப்படுகின்றன சில கிராமங்களில் ஒழுக்கங்கள்
http://marumlogam.blogspot.com/2010/09/blog-post_8581.html
அன்புச் சகோதரர் குமார்!
இந்த மாதிரி முயற்சிகூட நம் நாட்டில்-முக்கியமாக நம் தமிழகத்தில் இல்லையே என்பதுதான் என் வருத்தம்! பதிவிற்கு அன்பு நன்றி!!
பாராட்டிற்கும் பதிவிற்கும் அன்பு நன்றி ஆசியா!!
நான் செய்தது சாதாரண மனிதாபிமான செயல்தான்.
இதில் பாராட்டப்படுவதற்கு எதுவுமில்லை!
அன்பான நன்றி காஞ்சனா!!
பாராட்டிற்கு அன்பு நன்றி அமைதிச்சாரல்!!
பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி சித்ரா!
அன்புச் சகோதரர் ஜெய்லானி!
பாராட்டிற்கு அன்பார்ந்த நன்றி!
அன்புள்ள ஹுஸைனம்மா!
மருத்துவர்கள் இரும்பாலான பொருள்களை வலிப்பு நோயால் அவதிப்படுபவர்களுக்குக் கொடுப்பதினால் வலிப்பு நோய் சரியாகாது என்று பல ஆண்டுகளுக்கு முன்னேயே கூறியிருக்கிரார்கள்தான். ஆனால் அதுபோல செய்தால் வலிப்பு நிற்கிறதே! தமிழ்நாடு பரவலாக இந்தப்பழக்கம் இருந்துதானே வருகிறது!
நான் குறிப்பிட்டது ஆடியோ கேசட்தான். அவர் உடனேயே அந்த சுருளைப் பிரித்து எடுத்து முகர்ந்து கொண்டேதான் சென்றார். அதிலிருந்து வரும் ஏதோ ஒரு வாசனை
வலிப்பு நோயால் வரும் sensationஐ குறைக்கிறது போலிருக்கிறது!!
பாராட்டிற்கு அன்பு நன்றி ஸாதிகா!
அன்புள்ள தினேஷ்குமார்!
உங்களை மாதிரி இளஞர்கள் நாளைய உலகத்தின் மீது வைக்கும் நம்பிக்கை மகிழ்வாக இருக்கிறது! நிச்சயம் நாளைய உலகம் இந்த மாதிரி வலர்ச்சிகள் அடைந்த நல்லுலகமாகவே இருக்கும்!!
interesting information madam, great
அக்கா நல்ல பதிவு.நல்ல முயற்ச்சி. இரண்டாவது நல்ல மனம்.
யூ ஆர் தி க்ரேட்.
அக்கா உங்களை என் தொடர்பதிவில் அழைத்துள்ளென். வந்து கலந்து நிறய்ய விஷயங்களை தெரிந்துகொள்ள நானும் நம் தோழர்+தோழிகளும் ஆவலோடு வெயிட்டிங்.
மனோம்மா ரெண்டுமே நல்முத்துக்கள்.
முதல் செய்தியில் உள்ளது போல் நம்நாட்டில்...நடக்கணும்னு ஏக்கம் இருக்கு :(. கேரளாவில் இது போன்ற அமைப்புகள் இருக்கு. ஆனால் இந்த அளவு ஹைடெக்கா இல்லை.
இரண்டாவதில்... மனிதம் இன்னும் இருக்கிறது உங்களைப் போன்றவர்களின் ரூபத்தில்
மிக நல்ல பதிவு மேடம்
ரெண்டுமே நல்ல தகவல்கள் தான் சகோதரி!
வலிப்பு நோய்க்கு இரும்புக் கம்பியை கொடுக்கும் போது, சமயங்களில் உடம்பில் கீறல் படும் கம்பியாக கொடுக்க வேணாம் என்று சொல்வார்கள். அதை நாம் முன்னெச்சரிக்கையா எடுத்துக்கணும். அவசரத்தில், பதட்டத்தில் நாம் அப்படி செய்து விடும் வாய்ப்பு அதிகம். வாழ்த்துகள்!!
முதல் வருகை முத்துக்குவியலுக்குள், இவ்வளவு நாள் தெரியவில்லை . . . தமிழ்நாட்டிலும் ஒரு சகோதரர், தான் ஐக்கய அமெரிக்கத்தில் செய்யும் மென் பொருள் வேலையை விட்டு விட்டு, கிராமங்களுக்காக தன் வாழ்க்கையை அற்பனித்துக்கொண்டுள்ளார், அவர் விவரம் கிடைத்தவுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
முதல் செய்தி அறிந்த போது, சந்தோஷமாக இருந்தது..... பலர் பயன் பெற்று நல்வாழ்வு காண்பது மகிழ்ச்சிதானே!
டேப்பில் இப்படி ஒரு பயனா? ம்ம்ம்..... முற்றிலும் புதிய தகவல்.
Thanks a lot for the nice appreciation Krishnaveni!!
அன்பு விஜி!
பாராட்டுக்கும் தொடர்பதிவிற்கு என்னை அழைத்ததற்கும் மிகவும் நன்றி!!
விரைவில் என் கருத்துக்களை அதில் இங்கு எழுதுகிறேன்.
என்னைப்போலவே நீங்களும் ஏக்கமாக இருக்கு என்று எழுதியுள்ளது மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது கவி! எத்தனையோ அரசியல் அமைப்புகளும், சமூக சேவை நிறுவனக்களும் நம் தமிழகத்தில் இருக்கின்றன. யாருக்காவது இத மாதிரி ஆக்கப்பூர்வமான யோசனை தோன்றினால் போதும், எத்தனை கிராமங்கள் சுபிட்சம் பெறும்!
பாராட்டிற்கு அன்பு நன்றி மோகன்குமார்!!
அன்புச் சகோதரர் அப்துல் காதர்!
தகவல்களுக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி!!
அன்புச் சகோதரர் மார்க்கண்டேயன்!
முதல் வருகைக்கு அன்பு நன்றி!
அவசியம் அந்த நண்பரைப்பற்றி தகவல் தெரிந்தால் இங்கு மறுபடியும் எழுதுங்கள். ஆத்மார்த்தமாக தன்னலமற்ற சேவை செய்யும் அவரைப்பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அன்புள்ள சித்ரா!
கருத்துக்கு அன்பு நன்றி!!
‘டேப் சுருள்’ பற்றிய தகவல் எனக்கும் புதிதாகத்தான் இருந்த்து. அதனால்தான் அதைப்பற்றி இங்கு எழுதினேன், இந்த மாதிரி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது இதையும் கருத்தில் வைத்துக்கொள்ளலாமே என்று!
முதலாவது மிக நல்ல பகிர்வு. இரண்டாவதில் உள்ள தகவல் எனக்கும் புதிது.
நல்ல முத்துக்கள். இரண்டாவது முத்து படிக்க திகில் கதை மாதிரி இருந்தது
sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
மனோ மேடம்...
நலம் நலமறிய ஆவல்....
இது தான் பங்களாதேஷ் பற்றி நான் படித்த முதல் வலைப்பதிவு...
நல்லா டீடெயிலா எழுதி இருக்கீங்க...
வாழ்த்துக்கள் மேடம்...
ப்ரொஃபைல் ஃபோட்டோ புதுசா... நல்லா இருக்கு..
தாங்கள் தந்துள்ள இரண்டு தகவல்களும்
பயனுள்ள பகிர்வு.
நன்றி
பயனுள்ள பகிர்வு.. புதுமையான தகவல் வாழ்த்துக்கள் மேடம்
நல்ல தகவல்கள்..பயனுள்ள பகிர்வு.
அன்பான பாராட்டுக்கு மிகவும் நன்றி ராமலக்ஷ்மி
முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி சுனிதா!!
அன்புள்ல கோபி அவர்களுக்கு!
நலமாக இருக்கிறீர்களா?
பதிவைப்பற்றியும் புகைப்படம் பற்றியும் பாராட்டியதற்கு அன்பு நன்றி!
அன்புச் சகோதரர் அப்துல் பசர்!
முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி!!
முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி சினேகிதி!!
முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பார்ந்த நன்றி ஜிஜி!!
இந்த இடுகையினை ‘இண்ட்லியில்’ இணைத்து, ஓட்டும் போட்ட திரு.ஜெய்லானிக்கும், அன்புத் தோழமைகள் KarthikVK, Abdul kadhar, sramse, CJothi, V.Gopi, Suryakannan, Bhaavan, IdnKarthik, Tharun, Arasu, ganpath, Amalraj, Ambuli, Vilambi, Subam, Karthui6, kavisiva, Palapatti, Mohankumar, Jayanthi, Chithra, R.Gopi, Asra அனைவருக்கும் என் அன்பு நன்றி!!
பயனுள்ள பகிர்வு..
Post a Comment