Tuesday 24 August 2010

மந்தையில் சில கறுப்பாடுகள்!

உலகத்தில் வேறெந்தப்பதவியும் கடவுளுக்கு நிகராகப்பேசப்பட்டதில்லை. உயிரைக்காக்கும் தொழிலைக் கையிலெடுத்து பல வயிறுகளில் தினமும் பால் வார்க்கும் மருத்துவர்களுக்கு மட்டும்தான் அந்த சிறப்பு இருக்கிறது. அளவு கடந்த கருணையும் மனித நேயமும் இந்த மருத்துவத்துறையை அதிகம் மதிப்புள்ளதாக ஆக்குகிறது.



ஆனால் இன்றைய மருத்துவர்களில் எத்தனை பேர் தனது சிறப்பை உணர்ந்து மருத்துவம் செய்கிறார்கள்?


தவறுதலான அணுகுமுறைகள், கவனக்குறைவுகள், கருணையின்மை, எரிந்து விழுதல், பணத்தாசை என்று இன்னும் ஆயிரமாயிரம் காரணங்கள் இன்றைக்கு மருத்துவத் துறைக்கு கெட்ட பெயரை சம்பாதித்துக்கொண்டிருக்கின்றன.
 தனியார் மருத்துவமனையில் பணத்தைக்கொட்டினாலும் சரி, அரசு மருத்துவ மனையானாலும் சரி, உரிய சிகிச்சை நிறைய பேருக்குக் கிடைப்பதில்லை என்பது மட்டுமல்ல, தவறான சிகிச்சைகளும் நடந்து இன்றைக்கு பல்லாயிரம் மக்கள் அவதியுற்றுக்கொண்டிருக்கிறார்கள். கிடைத்த கசப்பான அனுபவங்களோ எந்த மருத்துவரிடமும் நம்பிக்கையின்மையுடனும் சந்தேகத்துடனும்தான் பேச வைக்கின்றன.


கடந்த ஜுன் மாத ‘சினேகிதி’ இதழில்கூட ஒரு நாலு வயது சிறுவனுக்கு நடந்த கொடுமை பற்றிய செய்தி வந்திருந்தது. அந்த வயதில் அவனுக்கு ஒரு சிறு அறுவை சிகிச்சை நடந்தபோது அவனுக்கு அளவுக்கதிகமாக அனஸ்தீஷியா கொடுக்கப்பட்டு விட்டதால் அவனின் கைகளும் கால்களும் செயலிழந்து விட்டன. அதோடு அவனுடைய பெற்றோரின் ஆயிரமாயிரம் கனவுகளும் செயலிழந்து போய் விட்டன. இன்றைக்கு 33 வயது வாலிபனாக இருக்கும் அவன் இன்னும் படுத்த படுக்கையாக இருக்கிறான். அவனுடைய பெற்றோர்தான் அவனை சக்கர நாற்காலியில் வைத்து அவனை எங்காவது அழைத்துச் செல்கிறார்கள். எத்தனை வேதனை அந்த பெற்றோருக்கும் அவர்களுடைய மகனுக்கும்!!

என் சினேகிதியின் கணவரின் வலது கை திடீரென்று செயலிழந்து போனது. பல விதமான பரிசோதனைகளுக்குப் பின் டாக்டர் ஒரு கையில் சிகிரெட்டுடனும் மறு கையில் ஜர்தா பீடாவுடனும் பேச ஆரம்பித்தார்.


“உங்கள் கணவருக்கு அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும் அதுவும் அதில் 30 சதவிகிதம்தான் வெற்றி கிடைக்கும்”!


என் சினேகிதி நிலை குலைந்து போனார். சக நண்பர்கள், உறவினர்கள் சிபாரிசு செய்த ஒரு நாட்டு வைத்தியரிடம் சென்றார். அவர் கொடுத்த மூலிகை எண்ணெயை ஒரு மாதம் தடவினார். செயலிழந்து போன கை முழுவதுமாக சரியானது!!


இன்னொரு சினேகிதி, கர்ப்பப்பை நீக்கம் செய்தவர், வயிற்று வலிக்காக வயிறு சம்பந்தமான நிபுணரிடம் சென்றார். அவர் தன் உதவியாளரிடம்[ ரேடியாலஜிஸ்ட்] ஸ்கான் பண்னச் சொன்னார். அவர் ஸ்கான் பண்ணிக்கொண்டே இப்படி சொல்கிறார்-“ என்ன டாக்டர்! இவர்களுக்கு கர்ப்பப்பையைக் காணோம், சினைப்பைகளையும் காணோம்?”


டாக்டர் சொல்கிறார்-“நல்லா தேடிப்பாரு, கிடைக்கும்”


படுத்துக்கொண்டிருந்த என் சினேகிதிக்கு பகீரென்று ஆனது. தனக்கு கர்ப்பப்பையைத்தானே அறுவை சிகிச்சையில் எடுத்தார்கள்! சினைப்பைகளை எப்போது எடுத்தார்கள்? அப்படி எடுத்திருந்தால் ஏன் அந்த டாக்டர் இதைச் சொல்லவில்லை? அதற்கு உரிய மருத்துவ சிகிச்சையும் ஏன் தரவில்லை? இப்படியெலாம் அவருக்கு படுத்திருந்த நிலையில் மனம் கலங்கியது.


அப்புறம் டாக்டர் சொன்னார் “சும்மா சொன்னேன். இவர்களுக்கு கர்ப்பப்பை நீக்கம் நடந்துள்ளதாக ஏற்கனவே சொல்லியிருக்கிறார்கள் ”


அவரிடமிருந்து வெளியே வந்ததும் என் சினேகிதி நேராகப்போன இடம் தனக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டரிடம். அவர் அமைதியாக ‘ அப்படி சின்னைப்பையை நீக்கம் செய்ய வேண்டிய நிலை இருந்திருந்தால் உங்களிடம் அனுமதி பெற்றுத்தான் செய்திருந்திருப்போம். உங்கள் ரிப்போர்ட்டில் ‘ கர்ப்பப்பை நீக்கம் மட்டும்தானே குறிப்பிட்டிருக்கிறோம்? என்று சொன்னார்.


ஆனாலும் இன்று வரை என் சினேகிதிக்கு சந்தேகம் தீரவில்லை.


10 வருடங்களுக்கு முன் அதிக காய்ச்சலினால் வீட்டுக்கு அருகிலுள்ள டாக்டரிடம் சென்றேன். அவர் சில மருந்துகளைக் கொடுத்து விட்டு மறு நாள் வரச்சொனார். மறு நாள் என்னைப்பரிசோதித்தவர் எனக்கு இரத்த அழுத்தம் மிக அதிகமாக இருப்பதாகக் கூறி ஏற்கனவே இரத்த அழுத்தத்திற்காக நான் எடுத்துக்கொண்டிருந்த மாத்திரையின் அளவை அதிகரித்தார். இப்படியே மறு நாளும் இன்னும் இரத்த அழுத்தம் குறையவில்லை என்று மறு நாளும் அதிகரித்தார். எனக்கு பயமாகி விட்டது. மேலும் காய்ச்சலும் குறைந்து நடக்கவும் முடிந்ததால் நகரின் மையத்திலுள்ள இதய மருத்துவரிடம் சென்றேன். அவரிடம் நடந்ததைச் சொன்னதும் மெதுவாகச் சிரித்து விட்டு வேறு மாத்திரைகள் கொடுத்தார். இரத்த அழுத்தம் நார்மலுக்கு வந்தது. அப்புறம் இங்கு வந்து என் இதய மருத்துவரிடம் எல்லாவற்றையும் சொன்னதும் அவருக்கு வந்ததே கோபம்! “ உங்கள் இதயத்துடன் எத்தனை தூரம் அந்த டாக்டர் விளையாடியிருக்கிறார் ! உங்கள் காய்ச்சலுக்குக் கொடுத்த ஒரு சிரப்பில் decongestent என்ற content உள்ளது. இந்த மாதிரி மருந்துகள் உடனேயே காய்ச்சலையும் ஜலதோஷத்தையும் சரியாக்கும். ஆனால் இரத்த அழுத்தத்தை அதிகரித்து விடும். இனி எந்த டாக்டரிடம் சென்றாலும் இந்த decongestent என்ற content உள்ள மருந்தோ மாத்திரைகளோ வேண்டாம் என்று சொல்லிக் கேளுங்கள் “ என்று சொன்னார். இது போல நமது வியாதிக்கு ஆராய்ச்சியெல்லாம் பண்ணி நாமே வைத்தியம் செய்து கொள்ள வேண்டிய நிலை இன்று பரவலாக ஏற்பட்டுள்ளது. படித்தவர்கள் இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்து கொள்ளலாம். கேள்விகள் கேட்கலாம். படிக்காதவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் நிலையை நினைத்தால்தான் பரிதாபமாக உள்ளது.


சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நண்பர் ஒருத்தருக்கு நேர்ந்த அனுபவம் இன்னும் மோசமானது. அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தபோது பக்கத்திலிருந்த உறுப்பையும் மருத்துவர் நீக்கி விட்டார். பின்னர் உடலில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் மருத்துவரை திரும்பவும் அவர் சந்தித்து காரணம் கேட்டபோது அந்த மருத்துவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?


“ ஒரு நாளில் எத்தனையோ அறுவை சிகிச்சை செய்கிறேன். ஒரு வேலை அந்த இடத்தில் சீழ் பிடித்திருந்து நான் அதை நீக்கியிருக்கலாம். எனக்கு நினைவில்லை. “!


அவர் அதிர்ந்து போய் “ எனக்கு இந்த விஷயத்தை அப்போதே நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா?” என்று கேட்க, அந்த மருத்துவர் ரொம்பவும் கூலாக, “ ஒருவேளை உங்கள் உறவினரிடம் சொல்லியிருப்பேன். அவர் சொல்லாமல் விட்டிருக்கலாம்’ என்றார்!


இதை எதிர்த்து கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போவதா? வழக்கு போடுவதா? இதில் அந்த மருத்துவருக்கு தக்க தண்டனை கிடைத்து விடுமா? காணாமல் போன உறுப்புகளுக்கு, அதனால் உடலில் விளைந்த சேதங்களுக்கு என்ன விதத்தில் நியாயம் கிடைக்கும்?


மருத்துவ/மருத்துவர்களிடமான பிரச்சினைகள் மறுபடியும் தொடரும்.. .. ..



26 comments:

'பரிவை' சே.குமார் said...

அம்மா...

நல்ல மருத்துவர்களுக்கு மத்தியில் புல்லுருவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். நீங்கள் குறிப்பிடுவது போல் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் அவர்களை காக்கும் கடவுளாக நினைக்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை பணமாகத்தான் பார்க்கிறார்கள்.

Chitra said...

இதை எதிர்த்து கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போவதா? வழக்கு போடுவதா? இதில் அந்த மருத்துவருக்கு தக்க தண்டனை கிடைத்து விடுமா? காணாமல் போன உறுப்புகளுக்கு, அதனால் உடலில் விளைந்த சேதங்களுக்கு என்ன விதத்தில் நியாயம் கிடைக்கும்?

...... The problem is, there is no standard procedure for all the hospitals to follow to record their medical care or treatments. Patient or his immediate family can be held of any valid information. That gives enough room for few doctors to be careless. mmmmmmm...... with people's health and life in mind, something must be done for everyone to get quality treatment.

ஹைஷ்126 said...

அன்பு அக்கா இன்றைய யதார்த்தம் இதுதான். என் மகனை (2 ஆம் ஆண்டு MBBS) என் மனைவி “உலக சமுதாய சேவா சங்கம்” திற்கு வேதாத்திரி மகரிஷின் அறிவு திருகோவிலில் நேர்ந்து விட்டுவிட்டார்.

அவனுடன் படிக்கும் மாணவர்கள் சிலரிடம் பேசும் போது:

அங்கிள் நான் ஆர்தோதான் படிப்பேன், என் அப்பா கஷ்டபட்டு 40 லட்சம் டொனேஷன் கொடுத்து இருக்கிறார், மேஜ்மெண்ட் சீட்க்கு வருடம் 4-5 லட்சம் பீஸ் இதை எல்லாம் நான் எப்படி திருப்பி சம்பாதிப்பது. என கேட்கும் போது பதில் சொல்ல முடியவில்லை.

ஏறக்குறைய 56 லட்சம் செலவு செய்து படிக்கும் அந்த மாணவனை இலவசமா வைத்தியம் பார்க்க சொல்ல முடியுமா? இப்படி இருக்கும் ஒரு மாணவனிடம் மனசாட்சியை பற்றி பேசலாம் ஆனான் அவனது அனுபவம் அதை விட் கொடுமையாக இருக்கிறது.

நமது நாட்டில் புரோப்ஷனல் எதிக்ஸ் என்பது எள்ளளவு கூட கிடையாது. ஒரு தடவை என மனைவி மிக மோசமான நிலையில் மருத்துவ மனைக்கு எடுத்து சென்றபோது, அவரை ICU வில் வைத்து விட்டு இரண்டு நாள் என்ன நடக்கிறது என்றே தெரியவில்ல். ஏக பட்ட பணத்தை மட்டும் பிடிங்கிக் கொண்டு இருந்தார்கள். இத்தனைக்கும் அந்த மருத்துவ மனையின் டீன் என் நண்பர்.

மூன்றாம் நாள் கோபம் எல்லையை மீற எலும்பு அறுவை சிகிச்சை அறையில் இருந்த அந்த மருத்துவரை வெளி அழைத்து ....( அடி உதவுற மாதிரி கன்சூமர் கோர்ட் உதவாது) அதன் பிறகு எல்லாம் நல்லபடியா முடிந்தது 20% கன்ஷசன் (5 நாட்களுக்கு 18000 ரூபாய்)

அதைவிட கொடுமை என் தம்பி ஒருவர் இருதய நுண்குழாய் அறுவை சிகிச்சை நிபுணர். அவர் வேலை செய்யும் மருத்துவ கல்லூரியில் உறவினரின் 18 வயது இளசு அரளி விதை அறைத்து குடித்து விட்டான் என அனுமதி செய்து இருந்தார்கள், அதற்கு உரிய மாற்று ஊசி 10000 ரூபாய். அந்த டாக்டர் சொல்லியும் நான் பணம் கட்டுகிறேன் இல்லை என்றால் என் சம்பளத்தில் கட் பண்ணி விடுங்கள் என சொல்லி ஊசி போடுங்கள் என்ற் பிறகும் பணம் கட்டும் வரை போடவே இல்லை. பணம் கட்டும் போது அவன் உயிருடன் இல்லை.

இதுதான் சென்னையில் சிறந்த இருதய நுண் அறுவை சிகிச்சை நிபுணரின் வார்த்தைக்கு உரிய மரியாதை அவர் வேலை செய்யும் மருத்துவ கல்லூரியில். பின் நாம் எம்மாத்திரம் ???

இன்னும் எத்தனையோ.....இதில் கண்டிப்பாக் விழிப்புணர்வு வேண்டும்

சிறப்பான பதிவு.

தினேஷ்குமார் said...

வணக்கம் அம்மா
//கடந்த ஜுன் மாத ‘சினேகிதி’ இதழில்கூட ஒரு நாலு வயது சிறுவனுக்கு நடந்த கொடுமை பற்றிய செய்தி வந்திருந்தது. அந்த வயதில் அவனுக்கு ஒரு சிறு அறுவை சிகிச்சை நடந்தபோது அவனுக்கு அளவுக்கதிகமாக அனஸ்தீஷியா கொடுக்கப்பட்டு விட்டதால் அவனின் கைகளும் கால்களும் செயலிழந்து விட்டன. அதோடு அவனுடைய பெற்றோரின் ஆயிரமாயிரம் கனவுகளும் செயலிழந்து போய் விட்டன. இன்றைக்கு 33 வயது வாலிபனாக இருக்கும் அவன் இன்னும் படுத்த படுக்கையாக இருக்கிறான்//

இத்தொடரை படிக்கும்போதே நான் அழுதுவிட்டேன்
அம்மா இதுவரை அவரின் பெற்றோர்கள் மனது என்ன பாடுபட்டதோ அத்துயரங்கள் எல்லாம் இப்பதிவு படிக்கும் போதே நானறிந்தேன்.

கடவுளாக மாறும் பாக்கியம் கிடைத்தால் எனக்கு {"அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்"} தெய்வம் இன்றே கொல்லும் எதிரில் நின்றே கொல்லும் என்று அச்சமயமே கொன்றுவிட வேண்டும் என்று தொன்றுகிறது............ இப்பாதகர்களை நினைத்தால்

http://marumlogam.blogspot.com

அம்மா என்னையும் உங்க பிள்ளையாக பாவித்ததற்கு நன்றி அம்மா

ஹுஸைனம்மா said...

சரியாகச் சொன்னீங்கக்கா, கறுப்பாடுகள் என்று. இம்மாதிரி சம்பவங்களைக் கேள்வியுறும்போது, எல்லா மருத்துவர்களையும் சந்தேகக்கண் கொண்டுதான் பார்க்கத் தோன்றுகிறது.

R.Gopi said...
This comment has been removed by the author.
R.Gopi said...

மனோ மேடம்....

மருத்துவர்களிடம் மனிதம் செத்து பல வருடங்களாகிறது.....

பணம்.... பணம்.... பணம்..... இந்த மூன்றெழுத்து மந்திரம் தான் மருத்துவமனையில் செல்லும்.... மனிதம் என்ற நாலெழுத்து மறைந்து போய் விடும்...

கருப்பாடுகளை களைய நாம் “ரமணா” வருவார் என்று நம்பியிராமல், நின்று கொல்லும் தெய்வத்திடமும் முறையிடுவோம்.... கடவுளிடம் கருணை இன்னமும் மிச்சமிருக்கிறது....

ஜெய்லானி said...

இதை படிக்கும் போதே எனக்கு தலையை சுற்றுது..

தூயவனின் அடிமை said...

சரியா சொன்னிங்க, சிலர் மருத்துவர் செய்யும் செயலால் ,பல நல்ல மருத்துவர்களையும் சந்தேயிக்கும் நிலை
ஏற்பட்டுள்ளது.

Krishnaveni said...

Parents and Doctors are god's representative to this beautiful world, they must do their duty like a devine work...a must read post, thanks madam. Some cases are really frightening and so sad to hear

senthil velayuthan said...

இதை எதிர்த்து கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போவதா? வழக்கு போடுவதா? இதில் அந்த மருத்துவருக்கு தக்க தண்டனை கிடைத்து விடுமா? காணாமல் போன உறுப்புகளுக்கு, அதனால் உடலில் விளைந்த சேதங்களுக்கு என்ன விதத்தில் நியாயம் கிடைக்கும்?

nothing will happen.

they will get a signature before any surgery,that if they needed any additional treatment they will do it, if the problem is complicated.also they will clearly specify that they already informed all side effects regarding surgery and medicine.

Asiya Omar said...

ஆமாம் அக்கா இதே மாதிரி ஆதங்கம் நிறைய எனக்கும் உண்டு,ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல,மிக்க வருத்தமானது.

sam said...

nothing will happen.

they will get a signature before any surgery,that if they needed any additional treatment they will do it, if the problem is complicated.also they will clearly specify that they already informed all side effects regarding surgery and medicine.

இதுல இன்னும் ஒரு கொடுமை. அந்த signature formல குட்டி குட்டியா எழுத்து இருக்கும். ஒரு சட்ட புத்தகத்த ஒரு பக்கதுல கொண்டு வந்திருப்பனுக. அதப் படிக்க ஒரு பூதக்கன்னடி வேனும். மகன admit பண்ணிட்டு எந்த அப்பாவுக்கு பூதக்கண்ணாடி தேட தைரியம் இருக்கும்........எல்லாமே ஒரு technicதான்.

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் குமார்!

நீங்கள் சொன்னதுபோல இந்த புல்லுருவிகள் இப்போது அதிகமாக பெருகி விட்டார்கள். படித்தவர்களே இத்தனை கஷ்டப்படும்போது, படிக்காத ஏழைகள், தாலியை அடகு வைத்து, வட்டிக்கு கடன் வாங்கி வைத்தியம் பார்க்கும் ஏழைகளை நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஹைஷ்!

நீங்கள் சொன்னதுபோல ஒரு இதய மருத்துவர், அதுவும் அவர் வேலை செய்கிற மருத்துவமனையிலேயே- அவருக்கே இப்படி பிரச்சினைகள் என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்? எல்லாமே சுய நலம் என்று மாறிப்போகும் உலகில் நியாயம் எங்கே கிடைக்கும்?
மருத்துவப்படிப்பிற்கு இவ்வளவு செலவு செய்கிற பெற்றோர்களும் சேவை மனப்பான்மையை கொஞ்சமாவது தங்களின் குழந்தைகள் மனதில் வளர்த்து விட வேண்டும்.
தங்களின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன போது நடந்த விஷயங்கள்தான் இப்போது எல்லோருக்கும் நடக்கிறது. நண்பரின் மருத்துவமனையிலேயே அப்படி என்றால் மற்ற மருத்துவ மனைகளில் கேட்கவே வேண்டாம்.

மனோ சாமிநாதன் said...

Dear Chithra!

I am also yearning for this ‘quality treatment’ which is very rare in our hospitals and clinics at present.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள தினேஷ்குமார்!

பிரச்சினைகள் அதிகமான இந்த உலகத்தில் இப்படி தினம் தினம் பாதிப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ‘இந்தியன்’ படத்தில் வருவதுபோல யாராவது வந்து இப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் தண்டனை தர மாட்டார்களா என்றுதான் மனம் ஏங்கிகுறது! ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அது சாத்தியமில்லை. ‘திருடனாய்ப்பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்று கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் சொன்ன மாதிரி மனித நேயமும் ஒழுக்க நெறிமுறைகளும் தன்னால் வர வேண்டும். அந்த நாள் என்று வருமென்றுதான் தெரியவில்லை!

மனோ சாமிநாதன் said...

ஆமாம் ஹுஸைனம்மா! முன்பெல்லாம் எந்த உடல் நிலைப் பிரச்சினை என்றாலும் மருத்துவமனைக்கு சென்று விட்டால் போதும் எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போதோ, ‘மருத்துவமனைக்குச் சென்று எல்லாம் சரியாகி ஒழுங்காக வீட்டுக்கு வந்து சேர வேண்டுமே’ என்று தோன்றுகிறது.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள கோபி அவர்களுக்கு!

“பணம்.... பணம்.... பணம்..... இந்த மூன்றெழுத்து மந்திரம் தான் மருத்துவமனையில் செல்லும்.... மனிதம் என்ற நாலெழுத்து மறைந்து போய் விடும்...”

அருமையான வார்த்தை! மருத்துவமனைக்கு மட்டுமல்ல, இன்றைய சுய நல உலகிற்கும் ஏற்ற பொருத்தமான வார்த்தை!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஜெய்லானி!

சிலரின் வேதனையான அனுபங்களை தெரிந்து கொள்ளும்போதும் மேலும் மேலும் அவற்றைப்பற்றி படிக்கும்போதும் எனக்கும் அடிக்கடி தலை சுற்றுகிறது!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் தூயவன்!

இதுதான் எனக்கும் வருத்தம் நமக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கயின்மையால் நல்ல மருத்துவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்!!

மனோ சாமிநாதன் said...

Dear Krishnaveni!

Thanks for the nice feedback. Patience, kindness and devotion are always in our heart. Any other damned feeling should not outclass these selfless qualities. Especially for a doctor, this is a 'must'!

மனோ சாமிநாதன் said...

Dear Mr.Senthil!

Yes, what you are saying is correct. They get the signature from either the patient or from their close ones before any surgery. We also sign it in haste and worries without going through the full contents. This is happening to every person who is suffering with a painful desease.
At least, in future, the patient must go through the contents of the agreement before signing it. Then only he can ask the questions.

மனோ சாமிநாதன் said...

ஆதங்கங்களும் அவலங்களும் எண்ணிக்கையில் அடங்காது ஆசியா! மக்களாக ஒன்று சேர்ந்து இவைகளுக்கு ஏதாவது வழி பண்ணினால்தான் உண்டு. ஒரு நோயாளியிடம் பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சேவையையும் ஒழுங்காகத்தராமல் கருனையற்று நடக்கும் மருத்துவர்களும் தானாகவே திருந்த வேண்டும்.

மனோ சாமிநாதன் said...

என் பதிவை இண்ட்லியில் இணைத்து ஓட்டளித்த திரு. ஹைஷ் அவர்களுக்கும் மேலும் மேலும் ஓட்டளித்து சிறப்பு செய்த நண்பர்கள் கந்தசாமி, ஜெய்லானி, குரு, அப்துல் காதர், கங்கா, asfersfm, tamilz, முகமது ஃபெரோஸ், கார்த்தி, கிருபன், அம்புலி. ஸ்வாசம், வேதா, வினோ, ராஜேஷ், இன்பதுரை, பாவை, சுதிர், இளங்கோ, ஆசியா, செளந்தர், செந்தில் வேலாயுதன், மேனகா, பூபதி, குமார் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!!

Vijiskitchencreations said...

மனோ அக்கா, இதை படித்ததும் எனக்கும் ஒன்று எழுத தோன்றுகிறது.
எங்களுக்கு நேர்ந்த ஒரு சம்பவம். என் குழந்தைக்கு 4 வயது இருக்கும் போது இங்கிருந்து நாங்க கிளம்புவதற்க்கு முன் காய்ச்சல் வந்து உடனே எக்ஸ்ரே, ப்ளட், யூரின் செக்கப் எல்லாம் செய்து அதன் ரிசல்டையும் கையில் எடுத்து சென்றோம்.
அங்கு சென்று டாக்ரிடம் இருமல்+பீவர் இருக்கிறது என்று சொன்னது எல்லா டெஸ்டும் எடுக்க சொல்லி விட்டு சென்றார். நாங்க சொன்னோம் நேற்று தான் நாங்க இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்துள்ளோம், அது வேறம்ம என் லேப்பில் எடுக்கனும் அப்ப தான் எனக்கு பார்க்க முடியும் என்று கரால்லா சொல்லிட்டார்.
வேறு வழியில்லாம் எடுத்தால் எல்லாமே நார்மல் என்று வந்ததும் நாங்க எடுத்து சென்றிருந்ததும் இதை வைத்து காட்டினோம் இத தானே நாங்களும் சொன்னோம், என்றதும் ஏம்மா இங்குள்ள ப்ரொசிஜர் படி இப்படிதான்ம்மா நான் மாற்றி கொள்ள முடியாது என்று சொல்லி எக்க சக்கமா பனவசூல் செய்துவிட்டார். இது நுங்கம்பாக்கத்தில் இருக்கும் புகழ்வாயந்த சில்ரன்ஸ் டாக்டர்.
என்ன சொல்வது, இன்றும் இதே தான் நடக்கிறாது என்ற மாற்றமும் இல்லை.
இந்தியாவை பொறுத்த மட்டில் ஒன்று அரசியல்வாதி யாரையாவது தெரிந்திருக்க வேண்டும், இல்லை சினி ஆர்டிஸ்ட், பெரிய பிஸினஸ்மேன் இதில் ஏதாவது இருந்தால் பிழைத்து கொள்ளலாம்.