Wednesday, 4 August 2010

முத்துக்குவியல்

இது பல தரப்பட்ட முத்துக்களின் தொகுப்பு என்பதால் இப்பகுதி முத்துக்குவியலாகிறது.
முதலாம் முத்து:



தக்காளி, காரட்டில் புற்று நோயை எதிர்க்கும் சத்துக்கள் இருக்கின்றன. அதிலும் காரட்டில் இருக்கும் betacarotene என்ற சத்துப்பொருளை விட தக்காளியில் இருக்கும் lycopene என்ற சத்து இரண்டு மடங்கு அதிகமாக புற்று நோயை, அதிலும் நுரையீரல், சிறுநீரகச் சுரப்பிகளில் ஏற்படும் புற்று நோயை எதிர்க்கிறது என்று ஹார்வர்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்!! அதனால் விதைகளை நீக்கி தக்காளி, காரட் கலந்த சாலட் தினமும் உண்பது மிகவும் சிறந்தது.

இரண்டாம் முத்து:

மொட்டை அடிப்பது நல்லதா? நல்லதுதான் என்று மருத்துவம் கூறுகிறது. வருடத்திற்கொரு முறை மொட்டை அடிப்பதால் தலையில் உள்ள பொடுகு, பேன், கரப்பான், புழுவெட்டு, போன்ற நோய்க்கிருமிகள் அழிக்கப்படுகின்றன. மண்டையில் உள்ள கண்ணுக்குத் தெரியாத துவாரங்கள் வியர்வையையை நன்கு வெளியேற்ற வழி பிறக்கிறது. சிறு வயதினருக்கு முடியும் அடர்த்தியாக வளர்கிறது
மூன்றாம் முத்து:

2007-ஆம் ஆண்டு உச்சநீதி மன்ற நீதிபதி ஒருவர் , பள்ளிகளில் சாதியை குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டுமென்று மானவர்களைக் கட்டாயப்படுத்துதல் கூடாது; என்று குறிப்பிட்டார். அப்போதைய பத்திரிக்கைகள் எல்லாம் பாராட்டித் தீர்த்தன. ஆனால் இது இன்னும் தமிழ் நாட்டில் முற்றிலும் அழிந்து விட்டனவா என்பது சரியாகத் தெரியவில்லை. தமிழகத்தைப்பொறுத்தவரை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மலைச் சாதியினர்/தாழ்த்தப்பட்டோர், பிற வகுப்பினர் என்பதை வைத்துத்தான் அரசு சலுகைகளை அளிக்கிறது. உட்பிரிவுகள் குறிப்பிடப்படுவதில்லை என்று சொல்கிறார்கள். இப்போதைக்கு காகிதத்தில் அழிக்கப்பட்டால்தான் நாளடைவில் மனங்களிலிருந்து சாதி வேற்றுமை ஒழியும்.

நான்காம் முத்து:

குற்றாலத்திலிருந்து 37 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் கேரள எல்லையிலுள்ள தென்மலாவில் அழகிய ‘வண்ணத்துப்பூச்சி பூங்கா’ உள்ளது. 20 முதல் 25 டிகிரி செல்ஷியஸ் வெப்பமுள்ள, பூக்கள், தாவரங்கள் நிறையப்பெற்ற சீதோஷ்னத்தில்தான் வண்னத்துப்பூச்சிகள் வாழும். அப்படிப்பட்ட இடத்தில், இந்தியாவிலேயே முதல் முதலாக அமையப்பெற்ற Butterfly Park இது. இந்தியா முழுவதுமிருக்கும் 126 வகைகளுக்கும் மேற்பட்ட வண்னத்துப்பூச்சிகளை இங்கே கொண்டு வந்து வடிவமைத்திருக்கிறார்கள். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய இடம் இது.

ஐந்தாம் முத்து:

சில வருடங்களுக்கு முன் மனதை நெகிழ வைத்த சம்பவம் இது. நெருங்கிய உறவினர் ஒருவர் தன்னிடம் வேலை செய்த வயதான பென்மணிக்கு உரிய கூலிப்பணமான 3000 ரூபாயைத் தராமல் இழுத்துக்கொண்டே போக, பொறுமையிழந்த அந்த வயோதிகப் பெண்மணி மண் வாரி இறைத்து சாபமிட்டுச் சென்று விட்டது. இதைக் கேள்விப்பட்ட என் கணவர் அந்தப் பெண்மணியை வரச்சொல்லி 3000 ரூபாய் பணத்தைக் கொடுத்தார்கள். அந்தப் பெண்மணி கண் கலங்க அந்தப் பணத்தை வாங்கி எண்ணிப்பார்த்து விட்டு, 13 ரூபாயை திரும்பக் கொடுத்தது. ‘என்ன இது’ என்று கேட்டதற்கு ‘எனக்குச் சேர வேண்டியது ரூபாய் 2987 மட்டும்தான் அய்யா ’ என்றது. ‘பரவாயில்லை. வைத்துக்கொள்’ என்று பலமுறை சொன்னபோதும் மறுத்ததோடு அல்லாமல், என்னைக்கூப்பிட்டு ‘ நீங்கள் நன்றாக வாழவேண்டும். அந்த அய்யாவை நிறைய சாபமிட்டுப் பேசி விட்டேன். அந்த அய்யாவும் நல்லபடியாக வாழ வேண்டும் என்றது. அந்த ஏழையின் நேர்மையும் தன்மானமும் என்னை அன்று மிகவும் நெகிழ வைத்து விட்டது!!

28 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமை.

Chitra said...

எல்லா முத்துக்களும் அருமை. ஆனால், ஐந்தாம் முத்து, மனதை நெகிழ வைத்து விட்டது...

இமா க்றிஸ் said...

அட! இங்கயும் வண்ணாத்துப்பூச்சியா? ;)
நான் இந்தியாவுக்குப் போனால் கட்டாயம் போய்ப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.

ஜெய்லானி said...

//மொட்டை அடிப்பது நல்லதா? நல்லதுதான் என்று மருத்துவம் கூறுகிறது. வருடத்திற்கொரு முறை மொட்டை அடிப்பதால் //

ஓரே ஒரு சந்தேகம் அதாவது மொட்டை யாராவது நமக்கு அடிச்சாவா..? , இல்லை நாம் யாருக்காவது அடிச்சாவா..?

ஜெய்லானி said...

எல்லாமே முத்துக்கள்தான் அதுவும் அந்த ஐந்தாவது முத்து....பிக் பேர்ல்...!!

Unknown said...

Fantastic , awesome last one.

நேர்மை, அன்பு இவைகள் எல்லா துன்பங்களையும் எதிர்கொள்ளசெய்யும்

'பரிவை' சே.குமார் said...

எல்லா முத்துக்களும் அருமை.

Menaga Sathia said...

அனைத்து முத்துக்களும் சூப்பர்ர்..

தூயவனின் அடிமை said...

முத்துக்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. கடைசி முத்து ஒரு ஏழையின் நேர்மையையும் தன்மானத்தையும் வெளி உலகிற்கு வெளிச்சம் மிட்டு காட்டியுள்ளிர்கள்

GEETHA ACHAL said...

அனைத்து முத்துக்களும் சூப்பர்ப்...இந்தியா செல்லும் பொழுது வாய்ப்பு கிடைத்தால அந்த butterfly park செல்ல வேண்டும்...அக்ஷ்தா குட்டிக்கு பாட்டம்பூச்சி என்றால் கொள்ளை விருப்பம்..எனக்கும் தான்....கடைசி முத்து மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது...அருமை...

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி புவனேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

அன்பு சகோதரர் ஜெய்லானி!

வாழ்க்கையில் அடிக்கடி யாராலாவது மொட்டை அடிக்கப்பட்டுக்கொண்டுதானே இருக்கிறோம்? இதில் எதற்கு நாம் போய் யாரையாவது மொட்டை அடிக்க வேண்டும்?

அன்புக்கருத்துரைக்கு மிக்க நன்றி!

மனோ சாமிநாதன் said...

அன்பான பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி சித்ரா!

மனோ சாமிநாதன் said...

நானும் இந்த வண்ணத்துப்பூச்சி பார்க்கிற்கு சென்று வர வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன் இமா! அன்பான பதிவிற்கு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஸ்ரீதர்!

உண்மைதான். இதையே தான் பாரதியார்
‘ துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பி; அழியுமடி கிளியே’ என்று எழுதியிருக்கிறார்!
கருத்துக்கும் முதல் வருகைக்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் குமார்!

கருத்துக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

அன்பான பதிவிற்கு உளமார்ந்த நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் தூயவன்!

அருமையான கருத்துக்களுக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

மனமார்ந்த பாராட்டு மகிழ்வை அளித்தது கீதா!

அவசியம் இந்த வண்ணத்துப்பூச்சி பார்க்கிற்கு சென்று வந்து அனுபவங்களைச் சொல்லுங்கள். என் இதயங்கனிந்த நன்றி உங்களுக்கு!!

Krishnaveni said...

as always excellent post, i learnt butterfly garden during my undergraduate, my fav too. but butterfly park is new to me, sure i'll visit. the last one is really great, "maen makkal maen makkal thaan, sangu suttalum venmai tharum" isn't madam?

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice appreciation Krishnaveni!
Yes, 'kettaalum maen makkal maen makkale,
sangu suttalum venmai tharum!'
It is a pleasant surprise to see a young girl like you writes here one of the oldest Tamil ilakkiya pattu!! Hats off!

Asiya Omar said...

http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

மனோ சாமிநாதன் said...

மிகவும் அழகான விருதை அளித்த தங்கை ஆசியாவிற்கு வாழ்த்துக்களும் மனமார்ந்த நன்றியும்!!

பிரியமுடன் priya said...

முத்துகள் ஒவ்வொன்ட்டும் மிகவும் அருமை. பயனுள்ள முத்துகள்

PranisKitchen said...

really refreshing one

மனோ சாமிநாதன் said...

முத்துக்களின் அருமையைப் பாராட்டியதற்கு என் நன்றி முத்துக்கள் ப்ரியா!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice commment Prani!!

CS. Mohan Kumar said...

அடடா.. குற்றாலம் செல்லும் போது பட்டர்பிளை பார்க் பார்க்க முயற்சி செய்யணும் நன்றி