புதுக்கோட்டையில் வரும் ஞாயிறன்று நடைபெற இருக்கும் வலைப்பதிவர் திருவிழாவை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது! வரவிருக்கும் தீபாவளிக்கு முன்னதாய் புயல் வேகத்தில் வந்து கொன்டிருக்கும் இந்த புதிய தீபாவளி, பதிவர்களின் உற்சாகம் என்னும் மத்தாப்பூக்களுடனும் செயல்திட்டங்கள் என்னும் வாண வேடிக்கைகளுடனும் பிரகாசமாக உதயமாகப்போகின்றது! பற்பல போட்டிகள், புத்தக வெளியீடுகள், வலைப்பதிவர் கையேடு என்று அமர்க்களப்படுத்திக்கொன்டிருக்கின்றது! தமிழறிஞர்களும் பற்பல தலைவர்களுமாய் சங்கமிக்கப்போகிறார்கள்!
வலைப்பதிவர்களின் திருவிழாவிற்கு இனிய வாழ்த்து!
பரிசுகளைப் பெறப்போகும் வல்லவர்களுக்கு புதிய வாழ்த்து!
அரங்கேறும் நூல்களுக்கு நிறைந்த வாழ்த்து!
திரைக்குப்பின் இருக்கும் கடும் உழைப்பிற்கும் முயற்சிக்கும் உற்சாகத்திற்கும் மூலகாரணங்களாய் மின்னும் நட்சத்திரங்களுக்கு
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!



