குளோபல் வில்லேஜ்
அவர்களுடைய வலைத்தளத்தில் ‘ A WORLD WITHOUT
BORDER ‘ என்னும் வாசகம் அமைந்திருக்கும். அது உண்மை தான்!
ஒவ்வொரு ஸ்டாலையும் உலகின் ஒவ்வொரு நாட்டு மக்களும் ரசித்து அனுபவிப்பதுடன்
அந்தந்த நாட்டு பொருள்களையும் வாங்கிச் செல்வார்கள்!!
சென்ற
வருடம் வழக்கம்போல அக்டோபரில் குளோபல் வில்லேஜ் திறந்தது. இந்த வருடம் ஏப்ரலில் மூடியது.
ஒவ்வொரு வருடமும் 90க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் ஸ்டாலை பிரம்மாண்டமாக, அசத்தும்
அழகுடன் வடிவமைப்பது வழக்கம். அதே போல ஒவ்வொரு வருடமும் புதுமையான நிகழ்வுகளும்
பொழுது போக்கு அம்சங்களும் கூடுதலாய் அமைந்திருக்கும். எப்போதும் இந்திய ஸ்டால்
நம் நாட்டின் புகழ் பெற்ற ஏதேனும் கோட்டை
வடிவிலே தான் அமைந்திருக்கும்! இங்கே 200க்கும்
மேற்பட்ட உணவகங்கள் பல நாடுகளின் உனவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும். வாருங்கள், ஒவ்வொரு நாட்டையும் பார்க்கலாம்.
 |
இந்தியாவும் லெபனானும் எதிர் எதிரே-நடுவே கால்வாய் |
 |
செளதி அரேபியா |
 |
ஈரான் ஸ்டாலின் வெளிப்பக்கம் |
 |
ஈரான் ஸ்டால் நுழைவாயில்-உள்ளே கடைகள்!! |
 |
எகிப்து, பஹ்ரைன், துருக்கி |
 |
தாய்லாந்து, வியட்நாம் நாடுகளில் கால்வாய்களின் இரு புறமும் கடைகளும் கால்வாயிலேயே மிதக்கும் கடைகளும் உண்டு. இங்கும் அதே ஸ்டைலில் floating market அமைத்திருக்கிறார்கள். நுழைவாயிலில் இருக்கும் அலங்காரம் இது!!
மிதக்கும் படகுகளில் பழங்கள், இளநீர், ஸ்நாக்ஸ் வியாபாரம்!!
ரஷ்யா, யூரோப்
அமெரிக்கா, கொரியா
ஒரு பகுதி நாடுகளின் படங்களைத்தான் இத்துடன் இணைத்திருக்கிறேன். இவற்றை
பார்த்து, கடப்பதற்கே மூன்று மணி நேரம் ஆனதுடன் உடலும் களைத்து விட்டது. எந்த தடவையுமே
அனைத்து நாடுகளையும் பார்த்ததில்லை. அடுத்த குளோபல் வில்லேஜ் தொடங்கி விட்டது. இந்த
தடவையாவது நிறைய நாடுகளைப்பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்!!
மலேஷியா, இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் நாடுகளை பார்ப்பதற்கு ROAD OF ASIAவில் நுழைய வேண்டும்!!
|