Monday, 27 January 2014

முத்துக்குவியல்-25!!!

குறிப்பு முத்து:

சில மாதங்களுக்கு முன் படித்த குறிப்பு இது! உண்மையில் நடைமுறையில் பலன் கொடுக்குமா என்று தெரியவில்லை! ஆனாலும் கடும் வெய்யிலில் வெளியே அலைய நேரிடும்போது இந்த குறிப்பு பலன் கொடுத்தால் உடம்புக்கு நல்லது தானே? முன்னாலேயே இது போல செய்து அனுபவம் கிடைத்தவர்கள் சொல்லுங்கள்!

அந்த குறிப்பு:

வெய்யில் நேரத்தில் வெளியே போகும் முன் ஒரு வெங்காயத்தை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஒரு தம்ளர் தண்ணீர் குடித்துச் சென்றால் எவ்வளவு அனல் அடித்தாலும் பாதிக்காது!

தகவல் முத்து:



மொபைல் ஃபோன் விழிப்புணர்வு:

புதிய மொபைல் வாங்கும்போது அதற்கான காரண்டி கார்ட், பில்லுடன் வாங்கவும்.
மொபைல் காணாமல் போனால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் IMEI எண்ணுடன் புகார் கொடுக்கவும்.
உங்கள் மொபைல் ஃபோனின் IMEI எண்னை தெரிந்து கொள்ள 83063 என்று டயல் செய்யவும்.
மொபைல் ஃபோன் காணாமல் போனால் அந்த எண்னை செயலிழக்கச்செய்ய உடனடியாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
உங்கள் மொபைல் ஃபோனில் உள்ள ப்ளூ டூத் இணைப்பை எப்போது செயல்பாட்டில் வைக்க வேண்டாம். செல்ஃபோன் தகவல்கள் உங்களை அறியாமல் மற்ற‌ செல்ஃபோனுக்குச் செல்ல வாய்ப்புண்டு.
உங்கள் மொபைல் ஃபோனை பழுது பார்க்கக்கொடுக்கும்போது சிம் கார்டு, மெமரி கார்டுகளை அப்புறப்படுத்தி விட்டுக்கொடுக்க வேன்டும்.
IMEI எண் பொறிக்கப்படாத செல்ஃபோன்களை வாங்க வேண்டாம்.

சந்தோஷ முத்து:



தஞ்சைக்கு சென்ற வாரம் வந்து சேர்ந்த போது, வழக்கம்போல குடும்ப நண்பரும் அவர் மனைவியும் வீட்டை சுத்தம் செய்திருந்ததில் வீடு பளிச்சென்றிருந்தது. இருந்தாலும் அதில் ஒரு வித்தியாசம் தெரிந்தது. யோசித்தபோது தான் எப்போதும் குளியலறையில் காணப்படும் பல்லியின் எச்சங்கள் எங்கும் காணப்படவில்லை என்பது புரிந்தது!   இரண்டு நாட்களுக்கு முன் சுத்தம் செய்து கழுவி விட்டிருந்தாலும் கூட, அந்த இரண்டு நாட்கள் இடைவெளியிலும்கூட பல்லிகள் எப்போதும் அசுத்தப்ப‌டுத்தியிருக்கும். இப்போது அந்த அசுத்தமேயில்லாமல் குளியலறை பளிச்சென்று இருப்பதைப்பார்த்ததும் சந்தோஷம் தாங்கவில்லை! காரணம், இதற்கு முன்பே முத்துக்குவியலில் எழுதியிருக்கிறேன். முட்டை ஒடுகள் சிலவற்றைக்கழுவி குளியலறையில் அங்கும் இங்குமாக வைத்து விட்டு ஷார்ஜாவிற்குச் சென்றிருந்தேன். அப்ப‌டி வைத்தால் பல்லிகள் வரவே வராது என்றும் எழுதியிருந்தேன். தோழி சொன்ன உபயம் இது! பல வருஷங்களுக்குப்பின் பல்லிகள் தொல்லையின்றி மனதுக்கு இப்போது மீகவும் சந்தோஷமாக இருக்கிறது!! நண்பரின் மனைவி அழைத்து வந்த வேலை செய்யும் பெண் முட்டை ஓடுகளைப்பார்த்து ' யாராவது மந்திரம் மாயம் செய்திருப்பார்களோ?' என்று அலறியது தனிக்கதை!!

ரசித்த குறுங்கவிதை:



எப்படி  அழைப்பது?

கண்ணுக்குள்
குளிர்ச்சியாக நுழைந்து
இதயத்தில் வெப்பத்தை
பரப்பும் உன்னை
எப்ப‌டி அழைப்பது?
குளிர்ந்த சூரியன் என்றா?
சூடான நிலவு என்றா?


அசத்திய முத்து:

தமிழ்ப்பெண் புலவர் ஒவையாரின் பாடல் ஒன்றை படிக்க நேர்ந்தது. அதன் அர்த்தம் தெரிந்த போது அசந்து போனேன். வாழ்வியல் பாடங்களையும் ஆழ்ந்த அர்த்தங்களையும் உவமானங்களுடன் கவிதைகளாய்ப்புனைவதில் அவருக்கு நிகரேது?

இதோ அந்தப்பாடல்!

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால்- யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.


பாடலின் கருத்து:

தூக்கணாங்குருவிக் கூடு, கறையான் புற்று, சிலந்திவலை, ஆகியவற்றை எல்லாராலும் செய்யமுடியாது. எல்லார்க்கும் ஒவ்வொன்றில் திறமை!  எனவே நானே வல்லவன் என்று தற்பெருமை கொள்ளுதல் தவறு!

31 comments:

  1. சூப்பர்ர் முத்துக்கள்,அருமை!!

    ReplyDelete
  2. வெங்காயம் பற்றிய குறிப்பு என்னுடைய ஏழாம் வகுப்பு ஆசிரியர் சொல்லியிருக்கிறார்..அவர் தான் செய்வதாகவும் சொல்லியிருந்தார்.
    அனைத்து முத்துகளும் அருமை. நன்றி.

    ReplyDelete
  3. மூன்றும் பயன் தரும் முத்துக்கள்... நன்றி... கவிதை அருமை... தற்பெருமை என்றும் அழிவைத் தரும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அருமை முத்துகள்.
    ஒளவையாரின் வான்குருவியின் கூடு3-4ம் வகுப்பில் மனப்பாடமாக்கியதும்
    மிகப் பிடித்ததும்.
    மிக்க நன்றி சகோதரி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  5. வெங்காயம் பாக்கெட்டில் போட்டால் ஸ்மெல் வருமே ?

    உபயோகமான முத்துக்கள், உங்கள் தோழி பயந்தது போல ஊரிலும் பலர் அலற வாய்ப்பு அதிகம்...!

    ReplyDelete
  6. முத்துக்கள் ஒவ்வொன்றும் அருமை சகோதரியாரே. அதிலும் ஔவையார் பாடல் அருமையோ அருமை
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  7. ரசனையான, பயனுள்ள முத்துக்கள். பகிர்வுக்கு நன்றி மேடம்.

    ReplyDelete
  8. ஒவ்வொன்றும் அருமையான முத்துகள். பகிர்வுக்கு நன்றிம்மா...

    ReplyDelete
  9. முட்டை ஓடு பல்லியை தடுக்கீறது என்று கேள்விப்பட்டு, ஓடுகள் வைத்துப் பார்த்தோம் அக்கா. ஆனால், பலன் இல்லை அக்கா. நீங்க எப்படி செஞ்சீங்கன்னு விபரமாச் சொல்லுங்கக்கா. பல்லி தொல்லைதான் பெரிய தொல்லை, ஊருக்குப் போகும்போது.

    ReplyDelete
  10. அருமையான முத்துக்கள். பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  11. அத்தனையும் நல்முத்து.....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  12. உங்க கூட பேசுகிற திருப்தியை உங்க பதிவுகள் தந்து விடுகின்றன சகோ...

    ReplyDelete
  13. அனைத்து முத்துகளும் மிக அருமை மனோ அக்கா.

    ReplyDelete
  14. மன்னிக்கவும் மனோ அக்கா , உங்களுக்கு போன் செய்ய முடியாமல் போய் விட்டது. அன்று வெள்ளி என்பதால் உங்கள் மெயிலை இரவு தான் பார்த்தேன், அந்நேரம் நீங்க பிளைட்டில் இருந்திருப்பீங்க.
    பிறகு மெயில் போடுகிறேன்.

    ReplyDelete
  15. சிதறிய முத்துக்கள் அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. உடனடி பாராட்டிற்கு அன்பு நன்றி மேனகா!

    ReplyDelete
  17. இந்த வெங்காயம் பற்றி நீங்கள் முன்னரேயே கேள்விப்பட்டதை எழுதி அதன் உபயோகம் சரியானதே என்று உறுதிபடச்செய்தத‌ற்கு அன்பு நன்றி கிரேஸ்!

    ReplyDelete
  18. வாழ்த்துக்களுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  19. ஒள‌வையாரின் பாடலை மிகச்சிறு வயதில் படித்து அதை இன்னும் ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு நான் தான் உங்களைப்பாராட்ட வேண்டும் வேதா!

    ReplyDelete
  20. அழகிய பின்னூட்டத்திற்கு இனிய நன்றி மனோ! உரிக்காத வெங்காயம் என்னும்போது அதிக ஸ்மெல் வர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  21. தமிழை ரசிப்பவர் நீங்கள். அதனால் ஒளவையாரின் பாடலை ரசித்து நீங்கள் பாராட்டியிருப்பதில் வியப்பில்லை சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  22. பாராட்டிற்கு அன்பு நன்றி ஆதி!

    ReplyDelete
  23. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி கீதமஞ்சரி!

    ReplyDelete
  24. ஹுஸைனம்மா! முட்டை ஓடுகளைக்கழுவி பல்லிகள் நடமாடும் இடங்களில்
    இரண்டு, மூன்று என வைத்தேன். பல்லிகள் நடமாட்டம் அறவே இல்லாமல் போனது. முட்டையின் வாசத்திற்கு பல்லிகள் ஓடிப்போய் விடும் என‌த்தெரிந்தது. இப்போது அவற்றை நீக்கி 20 நாட்களாகியும் இன்னும் பல்லிகள் இந்தப்பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. இதை என் தங்கையிடம் சொன்னபோது தான் நாஃப்தலின் உருண்டைகள்
    [ அந்துருண்டைகள்] அத‌ற்காக உபயோகிப்பதாகவும் பல்லிகள் வருவதில்லை என்றும் சொன்னார். ஆனால் இரண்டு மாத‌ங்களுக்கு ஒரு முறை புதிய உருண்டைகள் போட்டு வருவதாகவும் சொன்னார். இதையும் நீங்கள் செய்து பாருங்கள்.

    ReplyDelete
  25. பாராட்டிற்கு அன்பு நன்றி சொக்கன் சுப்ரமணியன்!

    ReplyDelete
  26. பாராட்டிற்கு அன்பு நன்றி வெங்கட்!

    ReplyDelete
  27. பரவாயில்லை ஜலீலா! கிளம்புவதற்கு முன் தகவல் தெரிவிக்கத்தான் மெயில் அனுப்பினேன்.
    பதிவிற்கான பாராட்டிற்கு அன்பு நன்றி!

    ReplyDelete
  28. அழகிய பின்னூட்டத்திற்கு இனிய நன்றி சுரேஷ்!

    ReplyDelete
  29. பாராட்டிற்கு அன்பு நன்றி நிலாமகள்! தஞ்சையில் தான் இருப்பதால் இனி அடிக்கடி பேசலாமே?

    ReplyDelete
  30. குளிர்ந்த சூரியன் என்றா?
    சூடான நிலவு என்றா?

    ரசிக்கவைக்கும் வரிகள்..

    பயனுள்ள முத்துகளுக்கு பாராட்டுக்கள்..!

    ReplyDelete