Monday, 13 January 2014

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

நம் தமிழ் மண்ணில் பொங்கல் கொண்டாடி யுகங்கள் ஆகி விட்டன. பாலைவனத்தில் தான் பல வருடங்களாகவே பொங்கல் என்றாகி விட்டது. பல இடங்களில் சிதறிக்கிடக்கும் உறவுகளை ஒன்று சேர்த்து சொந்த கிராமத்திற்கு வரவழைத்து பொங்கலைக் கொண்டாட  வேண்டும் என்று பல முறை நினைப்பதுடன் சரி. அதை செயலாக்க இன்னும் முடியவில்லை.

இங்கே முன்பெல்லாம் தமிழகப் பொருள்களை வாங்கவென்றே துபாய் சென்று வருவோம். இப்போதெல்லாம் ஷார்ஜாவிலேயே ' சென்னை மளிகை' என்று கடைகள் வந்து விட்டன. பண்டிகை தினங்களில் அததற்குத் தகுந்த மாதிரி பொருள்கள் வந்து விடும். மஞ்சள், பூஜை சாமான்கள், மாலைகள், வாழை இலைகள், மல்லிகைச் சரங்கள், அருமையான மதுரை குங்குமம் என்று கிடைத்து விடும். பொங்கல் சமயம் மஞ்சள்  கொத்து, இஞ்சிக்கொத்து, கரும்பு என்று வந்து விடும். விலையை மட்டும் யோசிக்கவே கூடாது. கிடைக்கிறதே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டும்.



மனைவி, குழந்தைகள் என்று ஊரில் இருக்க, இங்கே தனிமையில் வாடும் நண்பர்களை மட்டும் பொங்கல் சாப்பிட அழைப்போம். எல்லோருக்கும் அலுவலம் இருக்கும். யாருக்கும் இங்கே அவ்வளவு எளிதில் விடுமுறை கிடைத்து விடாது. அதனால் அனைவருக்கும் வசதியாக, விடியற்காலையிலேயே பொங்கல் செய்து விடுவேன். விடியற்காலை 4 மணிக்கெல்லாம் குளித்து நாதஸ்வர இசைப்பின்னணியில் பொங்கல் செய்ய ஆரம்பித்தால் 7 மணிக்குள் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், பொங்கல் குழம்பு என்று முடியும்போது நண்பர்கள் எல்லாம் வர ஆரம்பித்து விடுவார்கள்.   அப்புறம் சிலர் இட்லி கேட்டார்கள் என்பதால் சூடான இட்லியும் சட்னியுடன் செய்து விருந்தளிக்க ஆரம்பித்தோம். ரொம்பவும் நெருங்கிய நண்பர் ஒரு முறை கேட்டுக்கொண்டதால் நியதிகள், மரபுகள் மீறி இஸ்லமிய, கிறிஸ்துவ நண்பர்களுக்காக உருளைக்கிழங்கு வறுவலும், கோழி வறுவலும் டைனீங் டேபிளுக்கு வந்தது. வந்தவர்கள் மன மகிழ்வுடன் பசியாறிச்செல்ல வேண்டும். அவ்வளவு தான்.

இந்த முறை பேரன் முன்னிலை வகிப்பதால் அவருக்காக நேரத்தை முதன் முதலாக மாற்றி எல்லோரையும் போல் நண்பகலில் பொங்கல் வைக்கிறோம்!!

வலையுலக அன்புள்ளங்கள் அனைவரது இல்லங்களிலும்
பொங்கும் பாலென மகிழ்ச்சி பொங்க

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!







 

32 comments:

  1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய
    பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் அம்மா !

    ReplyDelete
  2. தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
    "//விலையை மட்டும் யோசிக்கவே கூடாது. கிடைக்கிறதே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள
    வேண்டும். //" - முற்றிலும் உண்மை. இங்கும் அதே நிலமை தான்.

    ReplyDelete
  3. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. நட்புகளுக்காக அதிகாலையில் எழுந்து அவர்களுக்கும் சேர்த்து உணவு தயார் செய்யும் உங்கள் நல்ல மனம் வாழ்க.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், மற்றும் நம் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. மலரும் நினைவுகள் பகிர்வதில் எப்பொழுதுமே சுகம் தான். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. // ஷார்ஜாவிலேயே ' சென்னை மளிகை' என்று கடைகள் வந்து விட்டன// அது என்ன நம்மாட்கள் சென்னை தவிர்த்து எங்கு கடை திறந்தாலும் சென்னை என்றே பெயர் வைக்கிறார்கள் :-) நீண்ட நாளைய டவுட்டு

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உங்கள் பேரனுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. பொங்கும் பாலென மகிழ்ச்சி பொங்க
    பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  11. Wish u a Happy Pongal to u & your family!!

    ReplyDelete
  12. மிக அருமையான பொங்கல் பதிவு அக்கா!...

    பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
    எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
    இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. யாவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  14. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய பொங்கல் தின நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
  15. அனைவருக்கும் உண்டி அளித்து பசிப் பிணி போக்கும்
    பாங்கே ஒரு உண்மையான பண்டிகை கொண்டாட்டம் தானே !
    வாழ்த்துக்கள் மேடம் !

    ReplyDelete
  16. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மன்ம் நிறைந்த நன்றி அம்பாளடியாள்!

    ReplyDelete
  17. வருகைக்கும் கருத்துரைக்கும் பொங்கல் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சொக்கன் சுப்ரமணிய‌ன்!

    ReplyDelete
  18. வருகைக்கும் இனிய பொங்க்ல் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி பாண்டியன்!

    ReplyDelete
  19. அன்பான கருத்துரைக்கும் பொங்கல் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  20. இனிய பொங்கல் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  21. கருத்துரைக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ஆசியா!

    ReplyDelete
  22. இனிய பொங்கல் வாழ்த்துக்களுக்கு அன்பார்ந்த நன்றி வெங்கட்!

    ReplyDelete
  23. அன்பான பொங்கல் வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றி சுரேஷ்!

    ReplyDelete
  24. பொங்கல் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சீனு!

    ReplyDelete
  25. பொங்கல் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சீனு!

    ஊரை விட்டு மிகத்தொலைவில் இருப்பதால் கடையின் பெயரிலாவது நம் ஊர் இருக்க வேண்டும் என்ற ஊர் பற்று தான் காரணம்! இங்கே சென்னை, தஞ்சாவூர், நாகை என்றெல்லம் இருக்கின்றன!

    ReplyDelete
  26. இனிய பொங்கல் வாழ்த்துக்களுக்கு அன்பார்ந்த நன்றி ராஜராஜேஸ்வரி!!

    ReplyDelete
  27. குட்டிக்கவிதைக்கும் உளமர்ந்த பொங்கல் வழ்த்துக்களுக்கும் ம்னம்ர்ந்த நன்றி இளமதி!

    ReplyDelete
  28. பொங்கல் வாழ்த்துக்களுக்குஅன்பு நன்றி மனோ!

    ReplyDelete
  29. இனிய பொங்கல் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  30. உண்மைதான் ஸ்ரவாணி! மற்ற‌வர்களுக்கு மகிழ்வு தருவதும் உணவளிப்பதும் தான் மிகப்பெரிய கொண்டாட்டம் என்பதில் நானும் உடன்படுகிறேன்! இனிய கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மகிழ்வான நன்றி !!

    ReplyDelete
  31. கொண்டாட்டங்கள் ,பண்டிகைகள் என்பதே உறவுகளுடனும் நட்புடனும் பழக ஒரு வாய்ப்புதானே..அருமையான பகிர்வு...

    ReplyDelete
  32. வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_23.html

    ReplyDelete