Monday, 19 November 2012

ரசித்த முத்துக்கள்!!!

இன்றைய பதிவு ரசித்த முத்துக்களைத் தாங்கி வருகிறது. ரசனையில்லையென்றால் வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லை! இன்றைய மின்வேக வாழ்க்கையில் எதையுமே நின்று நிதானித்து ரசிக்கும் அளவுக்கு நேரமும் பலருக்கு இருப்பதில்லை. பொறுமையும் இருப்பதில்லை. இயற்கையழகும் புத்தகங்களும் திரைப்படங்களும் குழந்தையின் மென்சிரிப்பும் நம்மிடமிருக்கும் ரசனையுணர்வை என்றுமே வெளிக்கொணரத் தவறுவதில்லை! அளவுகோல்கள் தான் வித்தியாசப்படுகின்றன ஒவ்வொரு மனிதனிடமும்!

ரசித்த சிறுகதை:
24-10-12 தேவி இதழில் வெளி வந்த இந்த சிறுகதை என்னை மிகவும் நெகிழச் செய்தது!.
திருமணமான பிள்ளைகளுடன் வெளியூரில் ஒன்றாக இருக்கும் அளவு மனம் ஒப்பாமல் பெரியவரும் அவர் மனைவியும் தனிக்குடித்தனமாக ஒரு கிராமத்தில் வாழும் வாழ்க்கையை மிகவும் நளினமாகச் சொல்லுகிறது இந்தச் சிறுகதை! பெரியவர் மழைத்தூறலினூடே நடந்து செல்ல ஆசைப்படும்போது கதை ஆரம்பிக்கிறது. மனைவியின் தொடர்ந்த மறுப்பிற்கிடையே பிடிவாதம் பிடித்து மழைத்தூறலினூடே நடந்து செல்லும் அவர் குப்பைத்தொட்டியில் ஒரு நாய்க்குட்டியைக் கண்டு பிடித்து மனைவியிடம் கொண்டு வருகிறார். பாலூற்றிக்கொடுத்த அவர் மனைவியின் கால்களை நக்கியபடியே அவள் காலையே சுற்றி சுற்றி வருகிறது அந்த நாய்க்குட்டி. அதை அதன் தாயிடம் திரும்பக் கொண்டு விடும் எண்ணத்துடன் அவர் கிளம்ப, அவர் மனைவியும் அவருடன் கிளம்புகிறாள். வழியில் டீக்கடைக்காரர் ‘ என்ன இது ஆத்தாவும் இன்றைக்கு உங்களுடன் வந்துட்டுது?’ என்று கேட்கும்போது தான் அவருக்கு மனைவியை எங்கேயுமே தான் வெளியிலேயே அழைத்துச் செல்வதேயில்லை என்பது புரிகிறது. ‘ நானாவது இப்படி வெளியே அடிக்கடி நடந்து செல்கிறேன். எனக்கு மட்டும்தானா தனிமை? என்னுடனேயே வாழ்ந்து தேய்ந்து எனக்காவே இப்போதும் மூச்சு விடும் இவளை, வீட்டினுள்ளேயே 24 மணி நேரமும் அடைந்து கொண்டிருக்கும் இவளை தனிமை எத்தனை தூரம் கக்ஷ்டப்படுத்தும்? ஒரு வேளை பால் ஊற்றியதற்கே அந்த நாய்க்குட்டி அவளை சுற்றிச் சுற்றி வருகிறதே, அந்த நாய்க்குட்டிக்கு இருக்கும் நன்றி உணர்ச்சி கூட இல்லாமல்தானே இது வரை இருந்திருக்கிறேன்?’ என்று மனதிற்குள் குமைகிறார் அவர். அந்த நாய்க்குட்டியும் திரும்பப் போகாமல் கீழே விட்டும் அவள் காலையே சுற்ற, அவளின் விருப்பப்படி அந்த நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்து வருகிறார்கள் இருவரும். திரும்பவும் அவர்கள் வாழ்க்கை பழையப்டியே சென்றாலும் அவர்கள் தனிமை அந்த நாய்க்குட்டியால் மாறுகிறது. தனக்கும் பணிவிடைகள் செய்து, அந்த நாய்க்குட்டியையும் அன்போடு கவனிக்கும் அவளை அன்புடன் ரசிக்கும்போது, திரும்பவும் மழையை ரசிக்க இப்போதெல்லாம் அவர் நினைப்பதில்லை!!
                            @@@@@@@@@
குழந்தைகள் அறிவுத்திறனில் சில சமயங்களில் பெரியவர்களாக இருந்தாலும் பல சமயங்களில் அவர்கள் சிறு குழந்தைகள் தான் என்பதை பெரியவர்கள் உணர்வதேயில்லை! அப்படிப்பட்ட ஒரு பாட்டிக்கு ஒரு பேரன் கொடுக்கும் நெத்தியடி இது!
ரசித்த உரையாடல்:
பாட்டி: என்னோட பிறந்த நாளுக்கு என்ன பரிசு தரப்போறே?

பேரன்: ஃபுட் பால்

பாட்டி: என்னாலே ஓடியாடி விளையாட முடியாதே!

பேரன்: நீ மட்டும் எனக்கு பகவத் கீதை வாங்கித் தந்தாயே?
                                                         @@@@@@@@@@
ரசித்த வாசகம்:
உதிரும் மலருக்கு ஒரு நாள் மரணம்.
பேசாத அன்புக்கு தினம் தினம் மரணம்!
அதனால் என்றுமே உறவுகளை நேசியுங்கள்!
அன்பை சுவாசியுங்கள்!

 

24 comments:

  1. அவர்களின் அன்பு நெகிழ வைத்தது...

    சரியான நெத்தியடி...!

    சிறப்பான வாசகம்...

    ReplyDelete
  2. முத்துக்கள் அனைத்துமே அருமை. ரசித்த வாசகம் மிகவும் பிடித்தது.

    ReplyDelete
  3. நம்மை வெளிச்சப் படுத்திக் கொள்ள ஏராளமிருககிறது இப்புவியில்... முதிர்வயதிலும் புரிந்து கொள்ள தம்பதிகளிடையே அநேகமிருக்கிறது... ரசித்த முத்துக்கள் பிளந்த மாதுளையில் கண்ணைப் பறிக்கும் கொள்ளை அழகில்.

    ReplyDelete
  4. கதை,அதைவிட பாட்டி -பேரன் உரையாடல், தொடரும் வரிகள்... எல்லாமே அருமை.

    ReplyDelete
  5. முத்துக்கள் அருமை அம்மா.
    இப்ப குழந்தைகளிடம் பேச முடியவில்லை அம்மா...

    ReplyDelete
  6. ரசித்த முத்துக்கள் அனைத்தும் அருமை..பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  7. இன்றைய முத்துக்களில்
    உரையாடல் என்னை மிகவும் கவர்ந்தது அம்மா...
    வழக்கமாக என் பிள்ளைகளின்
    பிறந்தநாளுக்கு பொம்மைகள் பரிசளிப்பேன்...
    சென்ற வருடம் ஒரு சிறுகதைப் புத்தகம்
    பரிசளித்தேன்...
    அதை வாங்கியதும் அவன் முகம் போன
    போக்குதான் எனக்கு நினைவுக்கு வந்தது...

    ReplyDelete
  8. ரசித்த முத்துக்கள் அருமை. பாட்டி பேரன் உரையாடல் அருமை.

    ReplyDelete
  9. ரசித்தவாசகம் ரசித்தவரிகள் ரசித்தகதை எலாமே நல்லா இருக்கு

    ReplyDelete
  10. அன்பின் மனோம்மா,

    உண்மையே... ரசனை இல்லாது வாழும் வாழ்க்கை அர்த்தமில்லாது போகும் நாட்களாகும்.... தங்கள் ரசனை இதோ இங்கே....

    தாங்கள் ரசித்த முத்துகளாய் சிறுகதையில் ஆரம்பித்தது... ஹப்ப்ப்ப்ப்ப்பா எத்தனை துல்லிய உணர்வு....

    ஒரு குட்டி நாய்க்குட்டி ஒரே ஒரு முறை குடித்த பாலுக்காக நன்றி உணர்ச்சியுடன் கால் சுற்றிக்கொண்டிருக்க... இத்தனை காலமாக நம் நலன் மட்டுமே பார்த்து தன் நலனை பார்க்காது இருக்கும் மனைவியின் மீது கருணைப்பார்வையை திருப்ப ஒரு நாய்க்குட்டி இங்கே வந்து புரியவைக்க வேண்டியதாயிற்று....

    மிருகங்களிடமும் பக்‌ஷிகளிடமும் இருக்கும் நல்ல நல்ல விஷயங்களை மனிதன் கற்றிட ஏதுவான அருமையான ரசனைப்பகிர்வு....

    மனைவியை கணவன் ரசித்து மனைவியின் ரசனையை போற்றிட துவங்கிடும் நொடி... மனைவியின் வாழ்க்கையில் ஒரு அற்புதமான பிரகாசம் தோன்றிடும் நன்னாள்....

    ரசித்த மற்றொரு உரையாடல்....

    பாட்டி தனக்கு பிடித்ததை பேரனுக்கு பரிசாய் தர (பகவத்கீதை) பேரனும் தனக்கு பிடித்த ஃபுட்பால் தருகிறான்...

    பிறந்தநாள் பரிசாய் நாம் ஒருவருக்கு தரும் பரிசு அவர் விரும்பும் பரிசாய் இருந்துவிட்டால் உலகினை வென்றுவிட்ட சந்தோஷம் பரிசினைப்பெற்றவர் கண்களில் நாம் காணமுடியும்....

    எனக்கும் பிறந்தநாள் பரிசாக பாகவதம் கிடைத்தது.... தினமும் படிக்கிறேன்...

    அழகிய பகிர்வு மனோம்மா... அன்புநன்றிகள் பகிர்வுக்கு...

    ReplyDelete
  11. அன்புக்கான பகிர்வு ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்தது மனோம்மா...

    அன்பு ஒரு துளி கூடினாலும் அதனால் நன்மை மட்டுமே விளையும்...

    அன்பு ஒரு துளி குறைந்தாலும் அங்கே வருத்தமே அதிகமாகும்...

    அன்பை சுவாசிக்க சொன்னவிதம் மிக அருமை மனோம்மா..

    அன்புநன்றிகள் பகிர்வுக்கு...

    ReplyDelete
  12. இன்னும் நான் பதிவை படிக்கல பிறகு வருகிறேன்
    http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html

    இங்கு வாங்க

    ReplyDelete
  13. ரசித்த உரையாடலில் எத்தனை தத்துவம் உள்ளது.!!! அனைத்தும் அருமை சிஸ்டர்.
    இனிய நல்வாழ்த்து. கார்த்திகை தீப வாழ்த்தும்.!
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  14. விரிவான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி தனபாலன்!

    ReplyDelete
  15. பாராட்டுக்கு அன்பு நன்றி ஆதி!

    ReplyDelete
  16. அழ‌கு த‌மிழில் பின்னூட்ட‌ம்! அருமையான‌ க‌ருத்துரைக்கு இனிய‌ ந‌ன்றி நிலாம‌க‌ள்!

    ReplyDelete
  17. அருமையான உங்கள் பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  18. பாராட்டுக்கு அன்பு ந‌ன்றி குமார்! உண்மை தான் நீங்க‌ள் சொல்வ‌து! இப்போதுள்ள‌‌ குழந்தைக‌ளிட‌ம் ப‌ழ‌குவ‌த‌ற்கு ந‌ம‌க்கு அவ‌ர்க‌ளைக்காட்டிலும் அறிவுப்புல‌மை தேவைப்ப‌டுகிற‌து!

    ReplyDelete
  19. பாராட்டுக்கு அன்பார்ந்த‌ ந‌ன்றி ராதா!

    ReplyDelete
  20. விஜி! ரொம்ப‌ நாட்க‌ளுக்குப்பின் வ‌ருகை த‌ருகிறீர்க‌ள்! அத‌ற்கும் க‌ருத்துரைக்கும் ம‌கிழ்வான‌ ந‌ன்றி!

    ReplyDelete
  21. இனிய‌ பாராட்டிற்கு அன்பு ந‌ன்றி ல‌க்ஷ்மிம்மா!

    ReplyDelete
  22. இத்த‌னை பெரிய‌ பின்னூட்ட‌மும் அத‌ற்குப்பின்னாலுள்ள‌‌ உங்க‌ளின் அன்பும் அக்க‌றையும் பிர‌மிக்க‌ வைக்கிறது ம‌ஞ்சு! ஆயிர‌மாயிர‌ம் ந‌ன்றிக‌ள்!!

    ReplyDelete
  23. வாழ்த்துக்க‌ளுக்கும் பாராட்டுக்க‌ளுக்கும் அன்பு நன்‌றி வேதா!

    ReplyDelete
  24. வ‌ருகைக்கு இனிய‌ ந‌ன்றி ஜ‌லீலா!

    ReplyDelete