Monday, 12 November 2012

ஆல்ப்ஸ் மலைகளூடே ஒரு பயணம்!!-பகுதி- 6!!


 
                அன்புச் சகோதரர்கள், சகோதரிகள் அனைவருக்கும் இதயம் நிறைந்த  
                                தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
                         **************
ஆல்ப்ஸ் மலைகளூடே கடந்து வந்த பயணத்தின் இறுதி நாள்.. ..

மாவீரன் நெப்போலியனால் 200 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட ஆர்க்-டி-ட்ரியாம்பே என்ற அழகிய கட்டிடத்தைப் பார்த்தோம். நம் இந்தியா கேட் போல இருக்கிறது. இதில் பிரெஞ்சுப் புரட்சியில் போரிட்டு வீர மரணம் எய்தியவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த வளைவின் உச்சியில் இருக்கும் 30 கேடயங்களும் நெப்போலியன் போரிட்டு வென்ற நாடுகளைக் குறிக்கின்றன. இந்த இடத்தைச் சுற்றி அமைந்துள்ள பன்னிரெண்டு தெருக்களுக்கும் பிரெஞ்சு ராணுவத்தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இதன் உச்சியில் அமைந்துள்ள OBSERVATION CLOCK மூலம் பாரிஸ் முழுவதையும் பார்க்கலாம்!!

ஆர்க்-டி-ட்ரியாம்பே

ஆர்க்-டி-ட்ரியாம்பேயின் இன்னொரு தோற்றம்!!

ஆர்க்-டி-ட்ரியாம்பே- மிக அருகில் !
இறுதி நாளன்று, இந்த இடத்தையும் மறுபடியும் ஈஃபில் டவரையும் பார்க்கவும் ஷாப்பிங் செய்யவும் ஒரு தமிழரின் டாக்ஸியை ஏற்பாடு செய்திருந்தார் பாரிஸிலிருக்கும் எங்கள் நண்பரொருவர். அதனால் நிதானமாக எல்லாம் பார்த்து முடித்து, நண்பர்களுக்கும் எங்களுக்கும் அன்பளிப்புப்பொருள்கள் சில வாங்கி முடித்த போது மதியம் 12 மணி ஆகி விட்டிருந்தது.

ஸீன் ஆற்றுப்பாலத்தருகே அசத்திய சிற்பங்கள்!!

இருவர் மட்டுமே செல்லக்கூடிய கார்!
பாரிஸ் கடைத்தெருக்களில் குட்டி குட்டியாய் ஓடும் சிறு சிறு கார்களைப் பார்த்து அதைப்பற்றி விசாரித்தோம். இருவர் மட்டுமே அமர வசதியுள்ல அந்தக் கார் ஓட்ட லைசென்ஸ் தேவையில்லை என்றும் வீதிகளில் மட்டுமே அதை ஓட்ட முடியும் என்றும் ஹைவேக்களில் அதை ஓட்ட அனுமதி இல்லை என்றும் தமிழ் ஓட்டுனர் தகவல் சொன்னபோது ஆச்சரியமாக இருந்தது.
பசி வயிற்றைக் கிள்ள, எங்கேனும் தமிழ் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லச் சொன்னபோது, அவர் சிரித்தபடியே எங்களை அழைத்துச் சென்று ஒரு தெருவில் இறக்கி விட்டார். ‘ இங்கே பார்க்கிங் செய்ய முடியாது. சாப்பிட்டதும் என்னை அழையுங்கள்’ என்று சொல்லிச் சென்றார்.
அந்த வீதியில் நடந்த போது, பாரிஸ் என்ற உணர்வு மறைந்து போய் சென்னையில் இருக்கும் உணர்வு ஏற்பட்டது. அந்தளவிற்கு, தெரு முழுக்க தமிழ்ப்பெயர்களில் கடைகளும், ஹோட்டல்களும் நிரம்பியிருந்தன! அன்னபூர்ணா ஹோட்டல், கணேஷ் பவன், கிருஷ்ண பவன், செட்டிநாடு உணவகம் என்று வரிசையாக பெயர்கள்!! ஒரு வழியாக செட்டி நாடு உணவகத்தில் நுழைந்து மூன்று சாப்பாடுகளுக்கு ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தோம், சாதம், வற்றல் குழம்பு, சாம்பார், கறி வகைகள் என்று வர வர, என்னவோ புதுசாய் சாப்பாட்டைப் பார்க்கிற மாதிரி பிரமை ஏற்பட்டது. 8 நாட்களாய் ரொட்டி, கேக் வகைகள், வெண்ணெய், முட்டை என்று சாப்பிட்டு வரண்டு போயிருந்த நாக்கிற்கு தேவாமிர்தமாக அந்த சாப்பாடு கடகடவென்று உள்ளே இறங்கியது. நாங்கள் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தோம். இத்தனை ருசிசொயாக சாப்பிட்டதேயில்லையென்று கூடத் தோன்றியது!! ‘ சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா?” என்ற பாடல் தான் நினைவில் எழுந்தது.
உண்மை தான்! 
சரித்திரங்கள் பேசும் குடைவரை கோவில்கள், பிரமிக்க வைக்கும் சிற்பங்கள், புகழ் பெற்ற கோட்டைகள், அழகிய அரண்மனைகள், அருவிகள், ஆறுகள், பிரம்மாண்டமான மலைகள், நீர்த்தேக்கங்கள், ஓவியங்கள் என்று நம் இந்தியா முழுவதும் தங்கச் சுரங்கங்கள் கொட்டிக்கிடக்கின்றன! இந்திய சுற்றுலாத்துறையின் முழு கவனமும் அக்கறையும் முழுமையாக இவற்றில் பதிந்தால் இத்தனையும் வெளி நாட்டினர் மத்தியில் எந்த அளவு பகழ் பரப்பும்! எத்தனை பிரமிப்பைத்தரும், நாங்கள் இங்கே பிரமித்து நின்ற மாதிரி!!
 
பாரிஸை விட்டு விமானம் மேலோக்கிப் பறந்த போது இத்தனையும் நினைவில் எழ, மனதில் ஏக்கம் தான் சூழ்ந்தது!!

27 comments:

  1. 200 வருட பழமையான கட்டிடம் , அதில் உள்ள சிற்பங்கள் மிக வியப்பானவை..எங்க போனாலும் நம்மஊர் சாப்பாட்டை ஒரு இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்தால் வாழ்க்கையே வெறுத்த மாதிரித்தான் இருக்கும்..பதிவில அனுபவிச்சி எழுதிட்டீங்க..பகிர்விற்கு நன்றி மேடம்.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இதயங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  2. அருமையான பயண அனுபவம்! நன்றி! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. படங்கள் சூப்பர்...

    குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  5. குளிர்ச்சியான பயண அனுபவம் தந்தீர்கள் அம்மா..


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    என் மனம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete

  6. சரித்திரங்கள் பேசும் குடைவரை கோவில்கள், பிரமிக்க வைக்கும் சிற்பங்கள், புகழ் பெற்ற கோட்டைகள், அழகிய அரண்மனைகள், அருவிகள், ஆறுகள், பிரம்மாண்டமான மலைகள், நீர்த்தேக்கங்கள், ஓவியங்கள் என்று நம் இந்தியா முழுவதும் தங்கச் சுரங்கங்கள் கொட்டிக்கிடக்கின்றன! இந்திய சுற்றுலாத்துறையின் முழு கவனமும் அக்கறையும் முழுமையாக இவற்றில் பதிந்தால் இத்தனையும் வெளி நாட்டினர் மத்தியில் எந்த அளவு பகழ் பரப்பும்! எத்தனை பிரமிப்பைத்தரும், நாங்கள் இங்கே பிரமித்து நின்ற மாதிரி!..//

    ஆதங்கம் கொள்ளவைக்கும் பகிர்வுகள்..

    தங்களுக்கும் இனிய இல்லத்தார்க்கும் மனம் நிறைந்த தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    அருமையான பகிர்வு....

    ReplyDelete
  8. மிகவும் சுவாரச்சியமான தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள் .
    பாரிசுக்கு சென்று வருபவர்கள் எதை மறந்தாலும் சாப்பாட்டு
    விசயத்தை சொல்ல மறப்பதில்லை :) எல்லோரும் சொல்வதைக்
    கேட்டு எங்களுக்கும் ஒருமுறை பாரிசுக்கு சென்று வர வேண்டும்
    என்று ஆவல் உள்ளது விரைவில் நாமும் அங்கு செல்லவே
    உள்ளோம் .மிக்க நன்றி அம்மா சிறந்த படைப்பிற்கு .வாழ்த்துக்கள்
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இத் தீப
    ஒளித் திருநாள் என்றும் மகிழ்வை ஊட்டும் பொன்னாளாக மலரட்டும் !.....

    ReplyDelete
  9. கட்டுரையும் பகிர்ந்த படங்களும் அருமை அம்மா.

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_15.html

    ReplyDelete
  11. கண்ணையும் கருத்தையும் கவர்ந்த படங்கள். உங்கள் ஆதங்கம் எனக்குள்ளும்.

    ReplyDelete
  12. புகைப்படத்திலுள்ள இடம் இந்தியா கேட் மாதிரியே இருந்தது. பாரீஸில் செட்டிநாடு உணவகம். அருமையான சாப்பாடு ஆச்சரியமாக உள்ளது.

    அருமையான பயணம்.

    ReplyDelete
  13. பயணப் பகிர்வும் படங்களும் சூப்பர்.கருத்துப் பெட்டி திறக்க பலமுறை முயற்சித்து இன்று தான் கருத்திட முடிந்தது.முடிக்கும் பொழுது நல்ல கருத்தோடு முடித்தது மிகவும் அருமை.

    ReplyDelete
  14. விரிவான பின்னூட்டத்திற்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி ராதா!

    ReplyDelete
  15. பாராட்டிற்கும் தீபாவளி வாழ்த்திற்கும் அன்பு நன்றி சுரேஷ்!

    ReplyDelete
  16. பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் கந்தசாமி!

    ReplyDelete
  17. தீபாவளி வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் தனபாலன்!

    ReplyDelete
  18. வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி ப்ரியா!

    ReplyDelete
  19. கருத்துரைக்கு அன்பு நன்றி மகேந்திரன்!

    ReplyDelete
  20. கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி ராஜராஜேஸ்வரி!!

    ReplyDelete
  21. தீபாவளி வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் அன்பார்ந்த நன்றி ஆயிஷா!

    ReplyDelete
  22. வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி அம்பாளடியாள்!!

    ReplyDelete
  23. பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி குமார்!!

    ReplyDelete
  24. வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியிருப்பதைத் தெரிவித்ததற்கு என் அன்பு நன்றி ராஜராஜேஸ்வரி! உங்கள் மூலம் தகவல் தெரிந்ததும் தான் வலைச்சரம் சென்று நன்றி சொல்ல முடிந்தது!

    ReplyDelete
  25. கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் இனிய நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  26. கருத்துரைக்கு அன்பு நன்றி ஆதி!!

    ReplyDelete
  27. பாராட்டிற்கு அன்பு நன்றி ஆசியா!

    ReplyDelete