Tuesday, 27 November 2012

சமையலறை நிவாரணிகள்!!


நம் சமையலறையில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் சில பொருள்கள் நமக்கே தெரியாமல் பல பிரச்சினைகளுக்கு நிவாரணிகளாய் உதவிக்கொண்டிருக்கின்றன. அபப்டிப்பட்ட பொருள்கள் சிலவற்றைப்பற்றிய குறிப்புகள் இங்கே.. ..!!
1. எவர்சில்வர் காஸ் அடுப்பு, குளியலறையில் உள்ள மார்பிள் தரை, கண்ணாடி பாத்திரங்கள், கார் கண்ணாடி, பல் செட், டைனிங் டேபிள் இவற்றை சுத்தம் செய்ய வினீகர் பெரிதும் உதவுகிறது.
2. வினீகர் கலந்த நீரில் பாதங்கள் மூழ்கும் வரை அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு கழுவினால் கால் விரல்களிலுள்ல நகங்களில் மறைந்திருக்கும் அழுக்கு வெளியேறி, நகங்கள் சுத்தமாகின்றன.
 
3. வெற்றிலைக்கறை துணியில் பட்டால் அந்த இடத்தில் வினீகரை ஊற்றித் தேய்த்துக் கழுவினால் கறை மறைந்து விடும்.
4. அலுமினிய குக்கரின் உட்புறம் கறுப்பாக இருந்தால் சிறிது வினீகரைத் தடவி 15 நிமிடங்கள் கழித்து சிறிது நீர் ஊற்றிக் கொதிக்க விட்டால் கறை நீங்கி குக்கர் பளிச்சிடும்.
5. வினீகருடன் சாக் பவுடரைக் கலந்து பூசி வாஷ் பேசினைக் கழுவினால் கறைகள் நீங்கி வாஷ் பேசின் பளிச்சிடும்.
6. ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வினீகர் கலந்து ஃபிரிட்ஜைத் துடைத்தால் வாடை நீங்கி, கறைகள் நீங்கி பளிச்சென்று ஆகும்.
7. குழந்தைகளின் வெண்ணிற யூனிஃபார்ம்களைத் தோய்க்கும்போது, 2 ஸ்பூன் வினீகர் கலந்த நீரில் அலசி, பிறகு நீலம் போட்டால் துணிகள் தும்பைப்பூவாய் காட்சியளிக்கும்.
8. பச்சையாக மாறி விட்ட பித்தளைப்பாத்திரங்கள் வினீகரும் உப்பும் கலந்து தடவி, ஊறவைத்து, பிறகு தேய்த்துக்கழுவினால் பளிச்சென்றாகும்.
9. சமையலறையிலுள்ள அலமாரிகளின் தட்டுக்களை வாரம் இரு முறை வினீகர் கலந்த நீரால் துடைத்து வந்தால் பூச்சித்தொல்லைகள் உங்களை அண்டாது.
 
 
10. பாத்திரங்களிலுள்ள ஸ்க்ரூ துருப்பிடித்துக் கொண்டால், வினீகரை இரண்டு சொட்டு விட்டு, சிறிது நேரம் ழித்துத் திருகினால் ஸ்க்ரூவை சுலபமாக எடுக்க முடியும்!
11. ரப்பர் பாண்டுகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க சிறிது முகப்பவுடரைக் கலந்து வைக்க வேண்டும்.
12. குடி தண்ணீர் ரொம்பவும் கலங்கலாக இருந்தால் ஏழெட்டு துவரம்பருப்பை அரைத்துக் கலந்து விட்டால் தண்ணீர் தெளிவாகி விடும். ஒரு குடம் தண்ணீருக்கு இந்த அளவு துவரம்பருப்பு போதும்.
 
13. துவரம்பருப்பு வேகும்போது ஒரு தேங்காய்த்துண்டை நறுக்கிப்போட்டால் துவரம்பருப்பு வெண்ணெய் போலக் குழைந்து வேகும்.
14. ஃப்ளாஸ்கில் காப்பி வைத்து அடிக்கடி உபயோகிக்கிம்போது, அதை எத்தனை கழுவினாலும் தண்ணீர் உலர்ந்த பிறகு ஒரு வாடை அப்படியே தேங்கி நிற்கும். இதை நீக்க, நியூஸ்பேப்பரை சிறு துண்டுகள் செய்து அதில் போட்டு ஃப்ளாஸ்க் நிறைய நீர் விட்டு 12 மணி நேரம் வைத்திருந்து பிறகு கழுவி வைத்தால் அந்த வாடை இருக்கவே இருக்காது.
 
 
 

24 comments:

  1. வினிகர் புராணம் சூப்பர்.

    ReplyDelete
  2. விநிகருக்குத்தான் எத்தனை உபயோகங்கள்? நன்றி. எல்லாக் குறிப்புகளுமே உபயோகமானவை.

    ReplyDelete
  3. nantri thaaye!

    nalla visayangal....

    ReplyDelete
  4. வினிகருக்கு இத்தனை பயன்களா...

    நல்ல குறிப்புகள்.

    ReplyDelete
  5. பயனுள்ள அருமையான பதிவு
    அனைத்தும் இதுவரை அறியாத தகவல்கள்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  6. எல்லாமே பயனுள்ள குறிப்புகள் நன்றி உங்க மத்த ரெண்டு பதிவும் ஓபன் ஆக மாட்டெங்குதே. ஆல்ப்ஸ் பயணம் 2 டெங்கு காச்சல்.

    ReplyDelete
  7. எல்லாமே அருமையான குறிப்புகள். குறித்து கொள்கிறேன் அம்மா.

    எனக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது...

    மளிகை சாமான்களில் உடனே வண்டு வந்து விடுகிறது.மற்றும் சில பொருட்களில் பூஞ்சை... இதனை எப்படி தடுப்பது.... ஈரமில்லாமல் காற்று புகா டப்பாவில் தான் வைத்திருக்கிறேன். சில மாதங்களாக தான் இந்த தொந்தரவு.

    உபாயம் தெரிந்தால் சொல்லுங்களேன்.

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  9. சில பயன்கள் தான் தெரியும்... இத்தனை இருக்கா....?

    நன்றிங்க...

    ReplyDelete
  10. வணக்கம் அம்மா...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  11. நல்ல பயனுள்ள டிப்ஸ். கண்ணாடி கதவுகளை சுத்தம் செய்ய 1/2 கப் வினிகர் + 1 கப் தண்ணிர் கலந்து துடைத்தால் நல்ல பளிச். இது நான் இங்கு டி வி ஒரு தடவை பார்தது.
    செய்தேன் சூப்பர்.

    ReplyDelete
  12. பயன் தரும் நல்ல குறிப்புகள்.
    சில தெரிந்தவை. பல தெரியாதவை..:)

    தண்ணீர் தெளிவில்லாவிட்டால் பருப்பு சேர்க்கும் குறிப்பு தண்ணீரின் மணத்தை வித்தியாசப்படுத்திடாதோ...;)

    பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா!

    ReplyDelete
  13. பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் கந்தசாமி!

    ReplyDelete
  14. கருத்துரைக்கு இனிய நன்றி SRIRAM!

    ReplyDelete
  15. பாராட்டுக்கு மிக்க நன்றி சீனி!

    ReplyDelete
  16. கருத்துரைக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  17. பாராட்டிற்கு அன்பார்ந்த நன்றி சகோதரர் ரமணி!

    ReplyDelete
  18. கருத்துரைக்கு அன்பு நன்றி லக்ஷ்மிம்மா!

    ReplyDelete
  19. பாராட்டிற்கு அன்பு நன்றி !

    இங்கே வீடு ஷிப்ட் பண்ணிக்கொன்டிருந்த‌தால் உடனடியாக உங்களுக்கு பதில் எழுத முடியவில்லை ஆதி!

    பொதுவாய் ஒரு துன்டு வசம்பு அரிசி மற்றும் மளிகை சாமான்களில் போட்டு வைத்தால் வன்டு வராது என்பார்கள். காய்ந்த புதினா இலைகளை ஒரு துணியில் கட்டி அரிசி டப்பாக்களில் போட்டு வைக்கலாம். பூச்சி வராது. நன்கு காய்ந்த வற்றல் மிளகாய் ஒன்றிரண்டை எல்லா மளிகை சாமான்கள் உள்ள‌ டப்பாக்களிலும் போட்டு வைக்கலாம்.
    மளிகை சாமான்களை வாங்கி வந்ததும் பெரிய தட்டுக்களில் பரப்பி வைத்து இரன்டு நாட்கள் நல்ல வெயில் படும்படி காய வைத்தால் ரொம்ப நாட்களுக்கு பூச்சி வராமல் இருக்கும்./‌

    ReplyDelete
  20. பாராட்டுக்கு இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  21. வலைச்சரத்தில் என் வலைத்தளம் அறிமுகமானதை சிரமம் பாராது இங்கு வந்து தெரிவித்ததற்கு மனம் கனிந்த நன்றி தனபாலன்!

    ReplyDelete
  22. கருத்துரைக்கு அன்பு நன்றி விஜி! கண்ணாடிக் கதவுகளை சுத்தம் செய்யக் கொடுத்த குறிப்புக்கும் இனிய நன்றி!

    ReplyDelete
  23. பாராட்டுக்கும் கருத்துரைக்கும் முதல் வருகைக்கும் அன்பு நன்றி இளமதி!
    ஒரு குடம் தண்ணீருக்கு 10 பருப்புகள் என்பதால் தண்ணீரிம் மணத்தை வித்தியாசப்படுத்தி விட முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் பருப்பை தண்ணீர் விட்டு அரைக்காமல் பெளடராக கலந்தால் பிரச்சினையில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  24. உதவி கேட்ட எனக்கு சிறப்பான குறிப்புகளை தந்ததற்கு நன்றிம்மா. செயல்படுத்தி பார்க்கிறேன்.

    ReplyDelete