Monday, 5 November 2012

ஆல்ப்ஸ் மலைகளூடே ஒரு பயணம்!!-பகுதி- 5!!



பாரீஸ் நகரின் அழகு!
பாரீஸில் இரண்டு நாட்கள்தான் தங்கியிருந்தோம். இந்த இரண்டு நாட்களில் பாரீஸின் கலைப்பொக்கிஷங்கள் எதையுமே முழுமையாகப் பார்த்து விட இயலாது என்பது பிறகு தான் புரிந்து கொள்ள முடிந்தது.
டிஸ்னிலாண்ட் முகப்பு
முதல் நாள் டிஸ்னிலாண்ட் சென்றோம். இதுவுமே காலை 10 மணிக்குச் சென்று மாலை 5 மணி வரை அங்கிருந்தாலும் அதை முழுவதுமாகச் சுற்ற நேரம் பற்றாது போனது. கலையுணர்வு கலந்து மின்னிய கட்டிடங்கள், சிறு சிறு கடைகள், உணவகங்கள்- இவற்றில் ஒரு பகுதியைத்தான் பார்க்க முடிந்தது.
உள்ளே ஒரு அழகான வாயில்!
இது ஒரு கனவு மாளிகை!
இன்னொரு அழகிய முகப்பு!
 
டிஸ்னிலாண்ட் உள்ளேயுள்ள‌ டாய்லட்டின் தோற்ற‌ம்!
ஒரு தெருவின் முகப்பு!
தெருவில் வரும் அழகிய ரயில் வன்டி!

ரயிலில் ஒரு அழகு!

உள்ளே ஒரு கடையின் பிரம்மாண்டமான அழகு!

கடையில் உள்ள ஒரு அழகிய சிற்பம்!
பாரீஸைச் சுற்றிப்பார்க்க வேண்டுமென்றால் நன்கு நடக்க வேண்டும். சாதாரண கட்டிடங்கள் கூட கலையழகு கொண்ட முகப்புகளைத் தாங்கியுள்ளன. ஸ்விட்சர்லாந்திலாவது அங்கேயுள்ள மக்கள் சற்று ஆங்கிலம் பேசினார்கள். இங்கே, பாரீஸிலோ பிரஞ்சு மக்கள் ஆங்கிலம் பேசுவதில்லை. இதை டூர் ஆரம்பிக்கும்போதே எச்சரித்து சொன்னார்கள். அது தான் உண்மையாக இருந்தது. நல்ல வேலையாக, என் மகனின் படிப்பும் வேலையும் டூரிஸம் சார்ந்தது என்பதாலும் பிரெஞ்சும் அறிந்தவர் என்பதாலும் எங்களுக்கு எந்தப்பிரச்சினையும் எழவில்லை.
இங்கும் வானை முட்டும் கட்டிடங்களைப் பார்க்க முடியவில்லை. எல்லாமே பார்த்தவரையில் ஒரளவு உயர்ந்த மாடிக் கட்டிடங்கள் தான். பொதுவாய் பாரீஸை 24 மணி நேரமும் சுற்றிக்காட்டும் பஸ்கள் இருக்கின்றன. டிக்கெட் வாங்கிக்கொண்டால் எங்கு வேண்டுமானாலும் இறங்கி சுற்றிப்பார்த்து விட்டு மறுபடியும் அதே மாதிரி பஸ்ஸில் ஏறி வேறு இடம் சென்று
 
இறங்கிக்கொள்ளலாம். இந்த மாதிரி வசதி இங்கே துபாயிலும் உண்டு! பஸ்ஸில் நாம் உட்கார்ந்திருக்கும் இருக்கையிலேயே ஸ்பீக்கர் இருக்கிறது. ஹெட்ஃபோனும் இருக்கிறது. அதை எடுத்து காதில் பொருத்திக்கொண்டு, எந்த மொழி வேண்டுமோ அதைத் தட்டினால் அந்த மொழியில் முன்பே பதிவு செய்யப்பட்ட சுற்றுலா இடங்களின் தகவல்களை அந்தந்த இடங்கள் வந்ததும் மிகச் சரியாக நமக்கு விவரிக்கின்றது.
இங்கு பூமிக்கடியில் கார் நிறுத்தங்களுக்கான இடங்களும் ரயில்கள் செல்வதுமாக அமைந்திருப்பதால் தெருக்களில் கூட்ட நெருக்கடி என்பது இல்லை.
பாரீஸ் 105 சதுர கிலோ மீட்டர்கள் அளவுள்ல சிறிய நகரம் தான். சீன் ஆற்றின் இரு கரையிலும் தான் நகரின் முக்கிய கட்டிடங்கள் அதிகம் இருக்கின்றன. சரித்திர பின்னணி கொண்ட 32 பாலங்கள் இந்த நதிக்கு இருக்கின்றன. அழகிய பாலங்கள் அமமந்த ஒரே நதி உலகில் இது மட்டுமே!
சீன் ஆற்றின் இரு புறமும் மக்கள் கூட்டம் கூடமாக பேசிக்கொண்டும் உணவருந்திக்கொண்டும் இயற்கையை ரசித்துக்கொண்டும் அமர்ந்திருக்கிறார்கள். நமது அகண்ட காவேரி நினைவுக்கு வராமல் இல்லை. காவிரியின் கரையோரம் அமர்ந்து இயற்கை அழகை ரசிக்க நமக்கு எங்கே நேரம் இருந்திருக்கிறது?
 
மாலையில் ஈஃபில் டவரைப் பார்க்கச் சென்றோம். உலக அதிசயங்களில் ஒன்றான இது 986அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. 1889 ஆம் ஆண்டு அலெக்ஸாண்ட்ரே கஸ்டாவ் ஈஃபில் என்பவரால் ப்ரெஞ்சுப்புரட்சியின் நூற்றாண்டைக்குறிக்கும் ஒரு பொருட்காட்சிக்காக நிர்மாணிக்கப்பட்டது. இது மூன்று தளங்களைக் கொண்டுள்ளது. மேலே ஏற படிக்கட்டிடங்களும் உண்டு. கேபிள் கார் போன்ற அமைப்புடைய லிஃப்ட் வசதியும் உண்டு.



பல்லாயிரக்கணக்கான இரும்புத்தகடுகளையும் ஏழு மில்லியன் இரும்பு ஆணிகளையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இது. இங்கே, துபாயில் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான ‘பூர்ஜ் கலீஃபா’ வைப் பார்த்து விட்டதாலோ என்னவோ, ஈஃபில் டவர் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும்!

தொடரும்.. .. ..

26 comments:

  1. மிகவும் அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
  2. பார்வைக்கு விருந்தாக அமைந்துள்ளன படங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete
  4. அழகிய படங்கள், அருமையான பகிர்வு.தொடருங்கள் அக்கா.

    ReplyDelete
  5. ஒவ்வொரு படமும் பிரமிப்பா இருக்கு ... பாரீசின் தெருக்கள் எவ்வளவு சுத்தமா இருக்கு..! பூர்ஜ் கலீஃபா கட்டிடம் பற்றி டிஸ்கவரி சேனலில் பார்த்து வியந்திருக்கிறேன் ..என்ன ஒரு ஆச்சரியப்பட வைக்கும் தொழில் நுட்பம்..!

    ReplyDelete
  6. பிரமாதமான படங்கள் ரசிக்க வைத்தது... பகிர்வும் அருமை... நன்றி...

    ReplyDelete
  7. பார்ககும் போதே பரவசபடுத்துகின்றன படங்கள் & இடங்கள்

    ReplyDelete
  8. இரண்டு வருஷங்களுக்கு முன்கும்பலாக
    பத்துபேர் போயிருந்து பார்த்தோம். எல்லா இடமும் டூரிஸ்ட் பஸ்தான். சில இடங்களில் குடும்பத்தினர் வீல் சேரில் வைத்து,தள்ளியும் சுற்றிக் காட்டினர். பாரிஸ் பாரிஸ்தான்.பிரெஞ்சு இன்தியாவாக புதுச்சேரி இருந்த போது
    அவ்விடம் அருகில் தான் என் பிறந்த ஊர். பார்த்தவைகளெல்லாம் பாரிஸில், உங்கள் பதிவிலும் பார்த்து
    மிக்க ஸந்தோஷம்.பதிவு நன்றாக உள்ளது. அன்புடன் சொல்லுகிறேன்

    ReplyDelete
  9. படமும் தகவல்களும் உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  10. அழகிய படங்களுடன் பதிவு சூப்பர்ர்!!பிள்ளைகள் வளர்ந்த பிறகு தான் டிஸ்னிலேண்ட் போகவேண்டும்...

    ReplyDelete
  11. உங்கள் படங்களோட paris நேர்ல பார்த்த effect....

    ReplyDelete
  12. அழகிய படங்களுடன் பதிவு ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது. சென்னையிலிருந்தே பாரிசைச் பார்த்தேன்! காவேரி ஞாபகமா? காவேரியை எங்கே நம் மக்கள் ஜீவிக்க வைக்கிறார்கள்? ஊர் சுற்றிப் பார்க்கும் பஸ் அதுவும் வெவ்வேறு மொழிகளில் விளக்கங்களுடன், பூமிக்கு அடியில் பார்க்கிங்,.... இந்தியா எப்போது இதுமாதிரி விஷயங்களில் முன்னேறும்?

    ReplyDelete
  13. உங்கள் தளத்தின் மாற்றப்பட்ட டெம்ப்ளேட் நிறமும் கண்ணைக் கவர்கிறது!

    ReplyDelete
  14. //தமிழ் காமெடி உலகம்said...

    மிகவும் அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி....//.

    இனிய பாராட்டுக்கு அன்பு நன்றி மலர்!!

    ReplyDelete
  15. கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி ஸ்வராணி!

    ReplyDelete
  16. பாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஆசியா!

    ReplyDelete
  17. வருகைக்கும் ரசிப்பிற்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் கந்தசாமி!!

    ReplyDelete
  18. விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி ராதா!

    பெரும்பாலும் உலக அதிசய‌ங்கள், பிரமிக்க வைக்கும் ஹோட்டல்கள், வானுயர்ந்த கட்டிடங்கள் என்று நவீன தொழில் நுட்பங்கள் மிக்க பல இடங்களை இங்கே பார்த்திருப்பதாலோ என்னவோ, உலகின் அதிசயங்கள் பலவும் பிரமிப்பு தருவதில்லை!

    ReplyDelete
  19. படங்களை ரசித்துப் பாராட்டியதற்கு இனிய நன்றி சகோதரர் தனபாலன்!!

    ReplyDelete
  20. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பார்ந்த நன்றி கார்த்திக்!

    ReplyDelete
  21. அன்புள்ள‌ காமாட்சி அவர்களுக்கு!

    உங்களின் பாராட்டு மிக்க மகிழ்வைத்தந்தது. உங்களுக்கு என் அன்பு நன்றி!!

    ReplyDelete
  22. கருத்துரைக்கு அன்பு நன்றி ஆதி!1

    ReplyDelete
  23. பாரீஸில் இருக்கும் நீங்கள் என் பதிவைப் பாராட்டியது தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது மேனகா!

    ReplyDelete
  24. முதல் வருகைக்கும் அன்பான பாராட்டிற்கும் இனிய நன்றி கோமதி!

    ReplyDelete
  25. Template மாற்றியதற்கான பாராட்டிற்கும் பதிவை ரசித்து எழுதியதற்கும் இனிய நன்றி SRIRAM!

    //இந்தியா எப்போது இது மாதிரி விஷயங்களில் முன்னேறும்? //

    இந்தக் கேள்வி எப்போதும் இங்கே நல்ல விஷயங்களைப் பார்க்கும்போதும் பல வித முன்னேற்றங்களை ரசிக்கும்போதும் என் மனதில் ஏக்கத்துடன் எழுகின்ற கேள்வி தான்! பல வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் தமிழ் நாட்டில் எல்லா ஏர்போர்ட்டுகளும் கொஞ்சம் பாராட்டும்படி இருக்கிறது!

    ReplyDelete