Wednesday, 10 June 2015

சர்க்கரை நோய்!!!

சர்க்கரை நோய் பற்றிய கட்டுரைகளும் அலசல்களும் இதுவரை பல புத்தகங்களிலும் பதிவுகளிலும் வெளி வந்திருக்கின்றன.  அதனால் இதில் என்ன புதிய விஷயங்கள் இருக்கப்போகின்றன என்றும் தோன்றலாம். இதில் சர்க்கரை நோய் பற்றிய விபரங்களுடன் என் அனுபவங்களும் கற்றுக்கொண்ட படிப்பினைகளும் சற்று அதிகப்படியான தகவல்களுமாக சொல்ல முயன்றிருக்கிறேன். இது அனைவருக்கும், முக்கியமாக சர்க்கரை நோயால் அவதியுற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு மருந்தாக செயல்பட்டால் அதுவே இந்தப்பதிவு எழுதியதற்கான அர்த்தம் பூர்த்தியடைந்ததற்கான அர்த்தம்!

முதலில் சர்க்கரை நோய் பற்றி பார்ப்போம். இது நோயல்ல, இது ஒரு குறைபாடு என்றும் சொல்லப்படுகிறது. நம் உடலில் பிரதான உறுப்பான கணையத்தின் வால் பகுதியின் உட்புறத்தில் ”லாங்கர்ஹான்” திட்டுகள் என்னும் நாளமில்லாச் செல்களினால் ஆன திட்டுகள் சுமார் பத்து லட்சம் உள்ளன. இந்த லாங்கர்ஹான் செல்கள் “ஆல்பா” செல்கள் எனவும் “பீட்டா” செல்கள் எனவும் இருவகைப்படுகின்றன.  பீட்டா செல்கள் இன்சுலின் என்னும் திரவத்தை சுரக்கின்றன. இந்த இன்சுலின் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உடலில் உள்ள அனைத்து உயிர் அணுக்களிலும் சக்தியாக செலுத்தி பயன்படுத்த வைக்கிறது.  மேலும் நம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி சரியான விகிதத்திலும் வைத்திருக்கும். இந்த இன்சுலின் அளவு குறைந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறும். இது தான் நீரிழிவு அல்லது மதுமேகம் அல்லது சலரோகம் அல்லது ஆங்கிலத்தில் டயாபெடீஸ் அல்லது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது.





இதில் ”ஆல்பா” செல்கள் “குளுகோகான்” என்னும் ஹார்மோனையும், “பீட்டா” செல்கள் ”இன்சுலின்” என்னும் ஹார்மோனையும் சுரக்கின்றன. இந்த இரண்டு ஹார்மோன்களும் கீழ்ப்பெரும் சிரையினுள் சுரக்கப்பட்டுக் கல்லீரலை சென்றடைகின்றன. இந்த இரண்டு ஹார்மோன்களை தவிர “சோமடோஸ்டேசன்” என்ற ஹார்மோனும் கணையத்தால் சுரக்கப்படுகிறது.

இந்த மூன்று ஹார்மோன்களில்
இன்சுலின் திசுக்களுக்கு குளுகோஸை கொண்டு சேர்க்கிறது.
குளுகோகான் இன்சுலினுக்கு எதிர்மாறான தன்மை உடைய ஹார்மோன். ரத்தத்தில் சர்க்கரை குறைந்தால் கல்லீரலை தூண்டி அது சேமித்து வைத்திருக்கும் குளுக்கோஸை ரிலீஸ் செய்யுமாறு தூண்டும்.
சோமடோஸ்டேசன் மேலே சொன்ன இரு ஹார்மோன்களையும் தேவைப்படும் போது, சுரக்காமல் தடுக்கும்.

சர்க்கரை நோயின் வகைகள்:

முதலாவது வகை சர்க்கரை நோய் (Type1)

கணையம் பாதிக்கப்படுவதால் போதியளவு இன்சுலின் உற்பத்தி செய்யப்படாமல் ஏற்படுவது. சிறு குழந்தைகளில் ஏற்படும் நீரழிவு இந்த வகையானதாகும். இதற்கு மருந்தாக இன்சுலின் ஊசி வாழ்நாள் முழுவதும் ஏற்றப்பட வேண்டும்.

இரண்டாவது வகை சர்க்கரை நோய் (Type2)

இது இன்சுலினின் செயல்பாடு குறைவதால் ஏற்படுவது.
பெரியவர்களிலே ஏற்படுவது சாதாரணமாக இந்த வகையான நீரழிவாகும். இதற்கு ஆரம்ப காலத்தில் வாய்வழி மூலம் உட்கொள்ளப்படும் மாத்திரைகள், சிலசமயங்களில்
சில கட்டங்களில் இன்சுலின் ஊசி தேவைப்படலாம்.

கர்ப்பகால சர்க்கரை நோய்

இது தாய்மையடைந்த பெண்களுக்கு  மட்டுமே ஏற்படும் நீரழிவாகும். குழந்தை பிறந்தவுடன் நீரழிவு நோய் தானாக மறைந்துவிடும. ஆனாலும் குழந்தை பிறக்கும் வரை இன்சுலின் தேவைப்படலாம். இப்போதைய ஆய்வில், கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்கள் பலருக்கு பின்னாளில் சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.

இவையெல்லாம் உலக சுகாதார குழுமம் நிர்ணயித்த பழைய வகைகள். இப்போது இன்னும் சில வகைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

4. பிறவிக்கோளாறுகளால் களைய பீட்டா செல்கள் பாதிக்கப்படுவதல் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. கணையத்தில் கற்கள், கட்டிகள் போன்றவற்றாலும் சர்க்கரை நோய் உண்டாகிறது.

5. வைரஸ் போன்ற தீவிரமான தொற்று நோய்கள் கணையத்தை பாதிப்பதாலும் சர்க்கரை நோய் உண்டாகிறது.

6. சில மருந்துகளாலும் உண்டாகிறது.

7. சில மரபணுக்கோளாறுகளால் உண்டாகிறது.

8. அபூர்வமான நோய் எதிர்ப்பு சக்தி குறைவாலும் வருகிறது.

இவையெல்லாம் சர்க்கரை நோயின் பிரிவுகளாக உலக சுகாதாரக் குழுமம் தற்போது அறிவித்திருக்கிறது.

சர்க்கரை நோய் எதனால் ஏற்படுகிறது?

உடல் பருமனாலும் கணையத்தில் ஏற்படும் அழற்சியாலும் பரம்பரையின் சுழற்சியினாலும் அதிகம் மாவுப்பொருள்களை உண்பதாலும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சில கருத்தடை மாத்திரைகளாலும் சர்க்கரை நோய் ஏற்படுவதாக கண்டு பிடித்துள்ளார்கள். குடும்பத்தில் சர்க்கரை வியாதி இருந்தால் பெண்கள் கருத்தடை மாத்திரைகள் சாப்பிட ஆரம்பிக்குமுன் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்! மன நோய்க்கான மருந்துகள் உள்ளவர்கள், மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள், ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுபவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு மற்றவர்களை விட அதிகம். உயர் இரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு மற்றவர்களை விட மூன்று மடங்கு அதிகம். பரம்பரை என்னும்போது, தாய் தந்தை இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால் அவர்களின் குழந்தைக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு நூறு சதவிகிதம் இருக்கிறது. தாய், தந்தை யாருக்கேனும் ஒருத்தருக்கு சர்க்கரை நோய் இருந்தால் அவர்களின் குழந்தைக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு ஐம்பது சதவிகிதம் இருக்கிறது.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்:

பெரும்பாலும் இது ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்க முடிவது அபூர்வம். இது மூன்று முக்கிய அறிகுறிகள் காட்டும். அது வரை இருந்த சிறுநீர்க்கழிப்பு இரு மடங்காகும். இதன் காரணமாக அதிக பசி, அதிக சோர்வு, அதிக தாகம் எப்போதும் ஏற் படும். சில சமயம் அதிக சர்க்கரை சிறு நீரில் வெளியேறினால் சொல்ல முடியாத எரிச்சல் சிறு நீர்ப்பாதையில் ஏற்படும்.

சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகள்:

சர்க்கரையை நாம் கட்டுக்குள் வைத்துக்கொள்ளா விட்டால் தொற்று நோய்கள் சுலபமாக ஏற்படும். முக்கியமாக தோல், சிறுநீரகம் அடிக்கடி தொற்று நோயால் பாதிக்கப்படும். இதனால் இரத்ததில் வெள்ளை அணுக்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

ரெடீனாவில் சிறு சிறு இரத்தக்குழாய்கள் சேதமடையும். கண் பார்வை குறையும். [DIABETIC RETINOPATHY]

சிறுநீரக இரத்தக்குழாய்கள் தடித்து அதில் புரதம் கலந்து விடுகிறது. சிறுநீரக இரத்த சுத்தகரிப்பு இதனால் பாதிக்கப்படுகிறது. [ DIABETIC NEPHROPATHY]

நரம்புகள் மெதுவாக பாதிப்படைய ஆரம்பிக்கின்றன. முதலில் கால்களில் உணர்வு குறைதல், அடிக்கடி வலி ஏற்படுதல், நாளாக நாளாக இரத்த அழுத்தத்தையும் ஜீரணத்தையும் கட்டுப்படுத்தும் நரம்புகள் பலவீனமடையும். [ DIABETIC NEUROPATHY ]

அதிக சர்க்கரை வயிற்றுப்பகுதியையும் பாதிக்கிறது. இரப்பை அடைப்பு, ஜீரணம் ஆக உதவும் முக்கியமான நரம்பான வேகஸ் நரம்பு பாதிப்பு, அதைத்தொடர்ந்து அதிக வயிற்று வலி, வயிறு சம்பந்தமான கோளாறுகள் உண்டாகும்.

கடைசியாக மூட்டு வலி.

இத்தனை நோய்களையும் முறையான நடை பயிற்சி, தக்க மருந்துகள், சரியான உணவு என்று சர்க்கரை நோயைக்கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம் நம் பக்கம் வர விடாமல் செய்ய முடியும். அதற்கு முக்கியமாக வேண்டுவது மனக்கட்டுப்பாடு மட்டுமே.

சர்க்கரை நோயை எந்தெந்த வழிமுறைகள் மூலம் நம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, மற்றவர்களைப்போலவே நாமும் எப்படி மகிழ்வாக வாழலாம் என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்!

தொடரும்...
 

39 comments:

  1. நல்ல பதிவு சகோதரி
    வாசித்தேன்.

    ReplyDelete
  2. உபயோகமான தொடர்.

    ReplyDelete
  3. வணக்கம்
    அம்மா

    எல்லாம் யாவருக்கும் பயனுடைய முத்து குவியல்கள்..தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள கட்டுரை சகோதரியாரே
    தொட்ருங்கள் தொடர்கிறேன்
    நன்றி

    ReplyDelete
  5. ஒருபுறம் எச்சரிக்கையாகவும், மறுபுறம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியதாகவும் உள்ளது. நன்றி.

    ReplyDelete
  6. தேவைப்படும் தகவல்கள்... 20 வருடமாக இனிப்புடன் தொடர்கிறது எனது வாழ்க்கையும்...!

    ReplyDelete
  7. சர்க்கரை நோய் பற்றிய தெளிவான புரிதலைத் தரும் பதிவு. இதனால் பலருக்கும் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அதிகமாகும். நன்றி மனோ மேடம்.

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள பதிவு அக்கா. நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  9. சர்க்கரையினால் பலரும் துன்பப் படும் நேரத்தில் தருணம் அறிந்து தந்த பதிவு சிறப்பே. மிக்க நன்றி!

    ReplyDelete
  10. சர்க்கரை நோய் பற்றிய முக்கியமான தகவல்கள். மேலதிக தகவல்களுக்கு உங்களுடைய அடுத்த பதிவினை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  11. மிகவும் பயனுள்ள, விழிப்புணர்வூட்டும் பதிவு. இதன் தொடர்ச்சியான அடுத்த பகுதியையும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  12. மிகவும் விரிவாகவும்,விளக்கமாகவும் எழுதுறீங்க. பயனுள்ள பதிவு மனோக்கா. நன்றி

    ReplyDelete

  13. பயனுள்ள தகவல்கள் அருமை தொடர்கிறேன்.

    ReplyDelete
  14. #என் அனுபவங்களும் கற்றுக்கொண்ட படிப்பினைகளும் சற்று அதிகப்படியான தகவல்களுமாக சொல்ல முயன்றிருக்கிறேன்.#
    இதை ...இதைதான் நான் எதிர்ப்பார்க்கிறேன் :)

    ReplyDelete
  15. இன்றைக்கு தேவைப்படும் மிக மிக அவசியமான தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  16. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவை தந்து இருக்கிறீர்கள் அக்கா. நன்றி,

    ReplyDelete
  17. அம்மா !

    விரைவு உணவுகள் சர்க்கரை நோயை இன்னும் அதிகமாக்கும் இன்ரைய காலத்துக்கு மிக அவசியமான பதிவு.

    மருத்துவர் ஒருவரே விளக்குவது போல அவ்வளவு தெளிவான நடை.

    தொடருங்கள்...

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    ReplyDelete
  18. அருமையான பகிர்வு தீர்வு பற்றி அடுத்த பகிர்வில் அறியும் ஆவலில்!

    ReplyDelete
  19. நல்ல தகவல்.....இப்போது இந்தியாவிற்கு மிகவும் அவசியம்...ஆம் இந்தியா சர்க்கரை நோயின் தலைநகரமாக இருப்பதால்.....சர்க்கரை நோய் என்று சொல்லப்பட்டாலும் அது நோயல்ல...உடலில் உள்ள சிறு குறைபாடே அதை சரிவர நிர்வகித்தால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். சிறிதளவில் இருப்பவர்கள் மருந்துகளைக் கூட தவிர்த்திடலாம்....

    ReplyDelete
  20. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி வேதா!

    ReplyDelete
  21. கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

    ReplyDelete
  22. வாழ்த்துக்களுடன் கூடிய கருத்துரைக்கு அன்பு நன்றி ரூபன்!

    ReplyDelete
  23. வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

    ReplyDelete
  24. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

    ReplyDelete
  25. உங்களுக்கு 20 வருடங்களாக சர்க்கரை இருப்பது வருத்தமாக இருக்கிறது தனபாலன்! சர்க்கரையோடு அவதிப்படுபவர்களுக்குத்தான் உங்கள் துன்பம் புரியும். இந்தக் கட்டுரை எந்த விதத்திலாவது உங்களுக்குப் பயன்பட்டால் மகிழ்ச்சியடைவேன்!

    ReplyDelete
  26. அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி கீதமஞ்சரி! இந்த விழிப்புணர்வு கட்டுரை பலருக்கும் பயன்பட வேன்டுமென்பது தான் இந்தப்பதிவின் நோக்கம்!

    ReplyDelete
  27. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சாரதா!

    ReplyDelete
  28. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி இனியா!!

    ReplyDelete
  29. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

    ReplyDelete
  30. வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  31. வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பார்ந்த நன்றி கில்லர்ஜி!

    ReplyDelete
  32. உங்கள் எதிர்பார்ப்பின் படியே அதிக தகவல்கள் அடுத்த பதிவில் இருக்கும் சகோதரர் பகவான்ஜி! வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

    ReplyDelete
  33. முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி செந்தில்குமார்!

    ReplyDelete
  34. அழகிய பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி பிரியசகி!

    ReplyDelete
  35. இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி உமையாள் காயத்ரி!

    ReplyDelete
  36. இனிய பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சாமானியன்!

    ReplyDelete
  37. முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி தனிமரம்!

    ReplyDelete
  38. வருகைக்கும் கருத்துரைக்கும் அனு நன்றி துளசிதரன்!

    ReplyDelete
  39. வணக்கம் அம்மா, மனோ சாமிநாதன் !

    நல்லதோர் பதிவை இங்கே
    ...நயம்படத் தந்தீர்! பாலில்
    வெல்லமும் சேர்க்கத் தோணும்
    ...விருப்பமும் மறைந்தே போகச்
    சொல்லிய கருத்தில் ஆழ்ந்தே
    ...சுகநலம் காத்துக் கொள்வேன்
    வல்வினை போக்கும் கந்தன்
    ...வரமுனைச் சேரு மம்மா !

    இனித் தொடர்கிறேன் வாழ்த்துக்களோடு தங்கள் ஓவியத்தை கில்லர்ஜி பக்கத்தில் கண்டு மெய்மறந்து போனேன் நன்றி நன்றி !



    ReplyDelete